"ஈசனின் எழுத்தில் யார்க்கும் இரவலம் தொழுகைப் பள்ளி
கேசமதில் சடை சமாது சன்னியாசம் புலமை வித்தை
ஆசிரமம் தவசி வேடம் அமைந்தது காட்டும் அன்னார்
நீசரவு விரலின் கீழே நின்றது சனியின் மேடு.'
-கமல முனிவர்.
பொருள்: ஈஸ்வரன் படைத்த உலகில் வாழும் மனிதருக்கு, பாம்பு விரல் என்று அறியப்படும், நடுவிரலின் கீழ், இதய ரேகைக்கு மேல் எழும் மேடே, சனி மேடு. இந்த மேடு, தெய்வ நம்பிக்கை, துறவு, யாசகம், கலை, புலமை, வித்தை, தீர்க்க தரிசனம் போன்றவற்றைத் தெளிவாக விளக்கும்.
எல்லா மரங்களையும் குறுக்கு வாட்டில் அறுத்து பார்த்தால் பல வளையங்கள் இருக்கும். அதில் எத்தனை வளையங்கள் இருக்கிறதோ அத்தனை ஆண்டு வயதான மரம் என கூறலாம். அந்த வலையங்களின் அடர்த்தியைக்கொண்டு, வறட்சியான ஆண்டுகளையும், வளமான வருடங்களையும் புரிந்துகொள்ளமுடியும். பல கோடி வண்ணத்துப் பூச்சிகள் இருந்தா லும், ஒவ்வொன்றின் இறக்கையிலும் தீட்டப் பட்டுள்ள ஓவியங்கள் மாறுபடும். இயற்கை, தன் இரகசியக் குறிப்புகளை, எல்லா உயிர் களிலும், தனித்துவத்தை, தன் முத்திரை யாக பதிக்கிறது. அதைப் புரிந்து கொள்ளும் முயற்சிதான் அறிவின் தாகம்.
உடல் எனும் கோவிலில் வரையப்பட்ட கோலம்தான், கை ரேகையென்றால், அது மிகையாகாது. கைகளிலுள்ள செய்தி கடலளவு. ஆனால், நாம் கற்றதோ கையளவு தான்.
1. சுக்கிர மேடு, 2.கீழ் செவ்வாய் மேடு, 3. குரு மேடு, 4. சனி மேடு, 5. சூரிய மேடு, 6. புதன் மேடு, 7. மேல் செவ்வாய் மேடு, 8. செவ்வாய் சமவெளி, 9. சந்திர மேடு.
சனி மேடு
இது உள்ளங்கையில் நடுவிரலின் கீழே உள்ள பகுதியாகும். நவ கிரகங்களில், ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனீஸ்வரர்தான். இவர் நியாயவான், தர்மவான், நீதிமான் என போற்றப்படுகிறார். ஆயுள், ஆரோக்கியம், செல்வம், தொழில் ஆகியவற்றை அருள்பவர் சனீஸ்வர பகவான்தான். சாதாரண தொழிலாளியைக்கூட மிகப்பெரிய தொழிலதிபராக்கும் வல்லமை சனீஸ்வரருக்கு உண்டு.
* ஜாதகத்தில், சனி, துலாத்தில் உச்சம் பெற்றிருந்தாலோ, ஆட்சி பலத்தின் ஆளுமை அடைந்தாலும், சனி மேடு உயர்ந்திருக்கும். அரசியல் மற்றும் நீதித்துறையில் சிறந்து விளங்குவார்கள்.
* சனி மேடு தீர்க்கமாக அமைந்தால், மண்ணையும் பொன்னாக மாற்றும் திறமை உருவாகும். ஆனால், சுயநல வாதி களாகவும், தவறு செய்ய துணிந்தவர்களாகவும் இருப்பார்.
* சனி மேடும், செவ்வாய் மேடும், ஒரே அளவில் உயர்ந்திருந்தால், குற்றவாளிகளாக மாறும் வாய்ப்பு உண்டு.
* சனி மேட்டில் ஒரு ரேகை மட்டும் செங்குத்தாக அமைந்தவர், மிக மிக யோகசாலியாவார்.
* இரண்டு செங்குத்து ரேகைகள், இணைக்கோடுகளாக அமைந்திருந்தால், வாழ்க்கையின் மத்திய பகுதியில்தான் வசதியான வாழ்க்கை அமையும். ஒரே நேரத்தில் இரண்டுவித தொழில் அமையும்.
* சனி மேட்டில் உருவாகும், குறுக்கு ரேகை, தலையில் அடிபடுவதை உணர்த்தும்.
* சனி மேட்டில் சனி வளையம் இருந்தால், வெற்றி உண்டாகும்.
* சனி வட்டத்திலிருந்துமேல் நோக்கி சில, சிறு ரேகைகள் இருந்தால், அது "கோடீஸ்வர யோகம்' தரும்.
* சனி மேட்டில் கரும்புள்ளியோ இருப்பது தீய பலன் தரும்.
* சனி மேட்டின் குறுக்காக, ரேகை அமைந்திருந்தால் துரதிஷ்டத்தின் அறிகுறியாகும்.
* சனி ரேகை மணிக்கட்டின்மேல் பகுதியில் தொடங்கி சனி மேடு வரை செல்லும். அது முழுமை பெற்றவர்கள் அதிர்ஷ்டசாலிகள்.
* சனி மேட்டிற்கு செல்லும் சனி ரேகையில் முறிவு அல்லது தீவுக்குறி இருக்கக் கூடாது. அது வீழ்ச்சியைக் குறிக்கும்.
* குரு மேட்டிலிருந்து சனி மேட்டிற்கு ஒரு ரேகை சென்றால் செல்வ செழிப்பு உண்டாகும்.
* சனி மேடும், சுக்கிர மேடும் சற்று மேலெழுந்து காணப்பட்டால், வசதியான வாழ்க்கை அமையும்.
* சனி மேட்டில் திரிசூலக் குறி இருந்தால் விபத்துகள் நேரலாம்.
* இதய ரேகையிலிருந்து, வெட்டுப்படாத ரேகை, சனி மேட்டை அடைந்தால், செல்வமும், செழிப்பும் உண்டாகும்.
* சனி மேட்டில் சக்கரம் போன்ற வடிவம் அமைந்திருந்தால் அதிர்ஷ்டசாலியாக இருப்பார்கள்.
(தொடரும்)
செல்: 63819 58636