உடலே உன் வீடு (21)

/idhalgal/balajothidam/your-body-your-home-0

Your body is your home

"அங்கையில் உலகில் யார்க்கும் அஞ்சாமை மம்தை கோபம்

பங்கமில் பெருமைக் காமம் படையில் பட்டாளச் சேவை

வங்கணம் கபடு சூது வஞ்சகம் காட்டும் அன்னார்

திங்களின் மேடு தந்த செவ்வாயின் மேடுதானே!!'

-கமல முனிவர்.

பொருள்: சந்திர மேட்டுக்கு மேலும், இதய ரேகைமுடியும் இடத்திற்கு கீழும், அரை அங்குல நீளத்தில் தோன்றுவது செவ்வாய் மேடு. அந்த மேடு, செருக்கு, கோபம், அஞ்சாமை, பெருமை, காமம், அதிகாரம், வஞ்சகம், சூது, கள்ளம், கபடு, காவல், ஏவல், படைப்பட்டாள சேவை ஆகிய வற்றைக் குறிக்கும். ஒரு விதைக்குள் ஒரு மரம் உள்ளது என்பதை சிந்திக்க முடியுமேயல் லாது, காணமுடியாது. அதேபோல், நம் வாழ்க்கையின் நிகழ்வுகளை கைரேகைமூலம் காணலாமென்பது விந்தையான உண்மை. கருவில் உருவாகி கல்லறை வரை நம்முடன் பிரியாமலிருப்பது கைரேகை மட்டுமே. மேல

Your body is your home

"அங்கையில் உலகில் யார்க்கும் அஞ்சாமை மம்தை கோபம்

பங்கமில் பெருமைக் காமம் படையில் பட்டாளச் சேவை

வங்கணம் கபடு சூது வஞ்சகம் காட்டும் அன்னார்

திங்களின் மேடு தந்த செவ்வாயின் மேடுதானே!!'

-கமல முனிவர்.

பொருள்: சந்திர மேட்டுக்கு மேலும், இதய ரேகைமுடியும் இடத்திற்கு கீழும், அரை அங்குல நீளத்தில் தோன்றுவது செவ்வாய் மேடு. அந்த மேடு, செருக்கு, கோபம், அஞ்சாமை, பெருமை, காமம், அதிகாரம், வஞ்சகம், சூது, கள்ளம், கபடு, காவல், ஏவல், படைப்பட்டாள சேவை ஆகிய வற்றைக் குறிக்கும். ஒரு விதைக்குள் ஒரு மரம் உள்ளது என்பதை சிந்திக்க முடியுமேயல் லாது, காணமுடியாது. அதேபோல், நம் வாழ்க்கையின் நிகழ்வுகளை கைரேகைமூலம் காணலாமென்பது விந்தையான உண்மை. கருவில் உருவாகி கல்லறை வரை நம்முடன் பிரியாமலிருப்பது கைரேகை மட்டுமே. மேலைநாடுகளில் கைரேகை மாற்றங்களைக்கொண்டு நோயறியும் ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன. மனதின் எண்ண ஓட்டத்திற்கேற்றார்போல் கைரேகைகளில் சிலமாற்றங்கள் உண்டாகின்றன என்பதே விஞ்ஞானிகளின் கருத்து.

செவ்வாய் மேடுகள்:

நமது கையில் இரண்டுவகையான செவ்வாய் மேடுகள் இருக்கின்றன. கீழ் செவ்வாய் மேடு மற்றும் மேல் செவ்வாய் மேடு எனப்படும். இது தவிர, உள்ளங்கையின் மத்திய பாகம், செவ்வாயின் சமவெளியாகும்.

மேல் செவ்வாய் மேடு:

சந்திர மேட்டிற்கு மேல்பகுதியிலும், கீழ் செவ்வாய் மேடு சுக்கிர மேட்டிற்கு மேல்பகுதியில் இருக்கும். மேல் செவ்வாய் மேடு சந்திர மேட்டிற்குமேல் இதய ரேகைக்கு கீழே அமைந்திருக்கும் பகுதியே மேல் செவ்வாய் மேடு. இது மேஷ ராசியின் குணாதிசயத்தைக் கொண்டிருக்கும். இந்த மேட்டின் அமைப்பைக்கொண்டு ஒருவரின் உடல் வலிமையை அறியலாம்.

இந்த மேடு, நடு வயதில், அளவுக்கு அதிகமாக பருத்திருந்தால், உயர் ரத்த அழுத்தத்தையும், அதிக பள்ளமாக இருந்தால், குறைந்த ரத்த அழுத்தத்தையும் காட்டும்.

மேல் செவ்வாய் மேடு, நல்ல முறையில் அமைந்தவர்கள், மருத்துவர் களாகவோ, விளையாட்டு வீரர்களா கவோ, கட்டட பொறியியல் வல்லுனர்களாகவோ, பாதுகாப்புத் துறையிலோ, தொழில்புரிவார்கள். இந்த மேடு, உடன்பிறந்தவர்களின் ஆரோக்கியத்தையும் சுட்டிக் காட்டும்.

மேல் செவ்வாய் மேட்டில், நேர் கோடாக உருவாகும், ஒற்றை ரேகையின் கூர்முனை, புதன் மேட்டை நோக்கியிருக்க, ஜாதகரின் தரகு, ரியல் எஸ்டேட் மொத்த கொள்முதல் வியாபரத்தைக் குறிக்கும். சந்திர மேட்டை நோக்கி, திரும்பியிருந்தால் கலைத்துறையில் வெற்றியைக் காட்டும். சூரிய மேட்டை நோக்கியிருந்து, சூரிய மேடும் வலுத்திருந்தால், அரசு, உயர் அதிகாரி யாவார்.

மேல் செவ்வாய் மேட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட நேர்கோடுகள் உருவானால், சொந்தங்களால், வஞ்சிக்கப்படுவார். முரட்டுத்தனமான குணம் உடையவர்.

மேல் செவ்வாய் மேட்டில் உருவாகும், படுக்கைக் கோடுகள், படுபாதாளத்தில் தள்ளிவிடும்.

கரும்புள்ளி மேல் செவ்வாய் மேட்டில் அமைந்தால், விபரீத மரணத்திற்கு வழிகாட்டும்.

நட்சத்திர குறி, மேல் செவ்வாய் மேட்டில் இருக்க, சுயநலவாதிகள். தான் வாழ பிறரைக் கெடுப்பார்.

முக்கோண குறியீடு மேல் செவ்வாய் மேட்டில் இருக்க அதிக மன உறுதி உடையவர்கள். எடுத்த முடிவை ஒருபோதும் மாற்றிக் கொள்ளமாட்டார்கள்.

இந்த மேட்டில் வலைப்பின்னல் போன்ற குறியிருந்தால் குற்றச் செயல்களில் ஈடுபடும் மனம் உடையவர்கள்.

இந்த மேட்டின் தன்மையை வைத்து தாய்வழி மற்றும் பூர்வீக சொத்து வருவதை அறியலாம்.

கீழ் செவ்வாய் மேடு:

ஆயுள் ரேகைக்கு சற்று மேல், குரு மேட்டிற்கு கீழ் அமைந்திருக்கும். இந்த மேடு, விருச்சிக ராசியின் குணா திசயத்தைக் கொண்டது.

கீழ் செவ்வாய் மேட்டின் அமைப்பை வைத்து மனைவிமூலம் வரும் சம்பத்துகளும் சொத்து, வீடு, வாகனம் கிடக்கும் வாய்ப்பை அறியலாம்.இந்த மேடு, மனதின் எண்ண ஓட்டத்தையும், அவர் மனதில் மறைந்திருக்கும் இரகசியத்தையும் தெரிவிக்கும்.

கீழ் செவ்வாய் மேட்டில் கரும்புள்ளி இருந்தால், காதல் தோல்வியால், விபரீத முடிவையெடுக்கும் எண்ணம் உண்டாகும்.

செவ்வாயின் சமவெளி:

உள்ளங்கையின் மத்திய பகுதியே, செவ்வாயின் சமவெளியாகும். இது உள் குழிந்து பெரும் பள்ளமாக இருப்பவர்கள், அதிக, பய உணர்வு கொண்டவராகவும், அதிஷ்டம் இல்லாதவராகவும் இருப்பார்கள்.

(தொடரும்)

செல்: 63819 58636

bala jothidam 050724
இதையும் படியுங்கள்
Subscribe