ராமருக்கு லட்சுமணன், பரதன், சத்ருக்னன் என்று மூன்று இளைய சகோதரர்கள் இருந்தார்கள். அவர்களால் இராமருக்கு சுகமா என்றால் சுகமே.

அவர்களுக்குள் கருத்து வேறுபாடு என்பதே இல்லை. அண்ணனுக்கு தம்பிகளின்மேல் பாசம். தம்பிகளுக்கும் அண்ணன்மேல் பாசம், மரியாதை...

நம் அனைவரின் ஜாதகத்திலும் சகோதர ஸ்தானம் இதேபோல் இருக்கவேண்டும் என்றுதான் ஆசை! ஆனால் நிஜத்தில் பார்த்தால் அந்த பாக்கியம் எல்லாருக்கும் கிடைப்பதில்லை. இளைய சகோதர ஸ்தா னத்தைக் குறிக்கக்கூடிய 3-ஆமிடத்தைப் பற்றி சற்று தெரிந்துகொள்ள ஒரு உதாரண ஜாதகத்தைப் பார்ப்போம்.

bb

Advertisment

இந்த உதாரண ஜாதகருக்கு 3-ஆமிடம், அது சம்பந்தப்பட்ட கிரகங்களைப் பற்றி மட்டும் பார்க்கப் போகிறோம். இளைய சகோதரனைக் குறிப்பிடும் 3-ஆமிடத்தின் அதிபதி எவ்வாறு இருக்கிறார் என்று பார்த்தால், சுக்கிரன் தன் வீட்டுக்கு 3-ஆமிடத்தில் அமர்ந்து பாவாத்பாவக முறைப்படி மறைவு ஸ்தானத்தில் அமர்ந்திருக் கிறார். அவர் நீசமோ, வக்ரமோ அடையாத காரணத்தினால் இளைய சகோதரன் எதிரியாக இல்லை. ஆனால் சுமையாக இருக்கிறார்.

அடுத்து 3-ஆமிடத்தைப் பார்ப்போம். விரய ஸ்தானாதி பதி சந்திரன் 3-ஆமிடத்தில் அமர்ந்து 3-ஆமிடத்தைப் பார்க்கிறார். பலருக்கும் வரும் சந்தேகம் என்ன வென்றால், சிம்ம லக்னத்திற்கு சந்திரன் நன்மை தானே செய்யும்? எவ்வாறு தீமை செய்கிறது என்பது. இதற்கான காரணம் என்னவென்றால், அமாவாசைக்கு நெருங்கிய தேய் பிறைச் சந்திரன், தீய கிரகங்களான சனி, கேதுவுக்கிடையில் அகப் பட்டுக்கொண்டார்.

இப்படி 3-ஆமிடம் பாதிக்கப் பட்டிருந்தாலும், இந்த ஜாத கருக்கு யோக காரகனாகிய செவ்வாய் 9-ஆமிடத்தில் ஆட்சியாக அமர்ந்து 3-ஆமிடத்தைத் தனது 7-ஆம் பார்வையால் பார்த்து இளைய சகோதர ஸ்தானத்தை ரட்சிக்கிறார். இந்த காரணத்தினால் இவர் சுமையாக இருக்கிறார்; எதிரியாக இல்லை.

Advertisment

"தம்பி உடையான் படைக்கு அஞ்சான்' என்ற பழமொழிக்கேற்ப இளைய சகோதரம் அமைய வேண்டும் என்றால், மிக எளிமையாகச் சொல்வது என்னவென்றால், எந்த லக்னமாக இருந்தாலும் சரி- அதற்கு நன்மை செய்யும் கிரகங்கள் 3-ஆமிடத்தோனுடனும், அதன் அதிபதியுடனும் தொடர்புகொண்டால் அவருக்கு இளைய சகோதரம் சுகமே.

-ஆர். பரசுராமன்

செல்: 90801 23711