Advertisment

இளமைத் திருமணம் - முனைவர் முருகு பாலமுருகன்

/idhalgal/balajothidam/young-marriages-dr-murugu-balurumugan

ண்டைய காலங்களில் இளம்பருவத்திலேயே ஆண்- பெண்ணிற்குத் திருமணம் செய்வது முக்கிய கடமையாகக் கருதப்பட்டது. சொந்தங்கள் விட்டுப்போய்விடக்கூடாது என்பதற்காக, குழந்தைகள் பிறந்தவுடனேயே "இவள் என் மருமகள்; இவன் என் மருமகன்' என பேசி வைத்துக்கொண்டனர். வயதுக்கு வருவதற்கு முன்பே திருமணம் செய்து வைத்து புகுந்த வீட்டிற்கு அனுப்பிவைத்தார்கள். ஏனெனில் ஒரு பெண் ருதுவானபிறகு அவளை கன்னிகாதானம் செய்வது தவறு என கருதினார்கள். இம்மாதிரியான திருமணத்தால் பெண்ணிற்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் ஆணுக்கு மறுமணம் செய்ய அனுமதி உண்டு. ஆனால் ஆணுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் பெண்ணுக்கு மறுமணம் மறுக்கப்பட்டதால், அவளுக்கு இல்வாழ்க்கை சுகம் என்பதே இல்லாமல் போனது. இதற்கு இனங்களும் மதங்களும் காரணம் காட்டப்பட்டன. காலங்கள் மாற மாற அரசாங்கமே இளமைத் திருமணத்திற்குத் தடை விதித்தது.

Advertisment

murugan

ஆணுக்கு 21 வயதுக்கு மேலும், பெண்ணுக்கு 18 வயதுக்கு மேலும்தான் திருமணம் செய்யவேண்டும் என்ற சட்டம் வகுக்கப்பட்டது. எல்லா மதங்களிலும் இந்த முறையையே கடைப்பிடிக்கவேண்டும் என்ற விதியும் உள்ளது. ஆனால் இந்த சட்டதிட்டத்தை அனைவரும்

ண்டைய காலங்களில் இளம்பருவத்திலேயே ஆண்- பெண்ணிற்குத் திருமணம் செய்வது முக்கிய கடமையாகக் கருதப்பட்டது. சொந்தங்கள் விட்டுப்போய்விடக்கூடாது என்பதற்காக, குழந்தைகள் பிறந்தவுடனேயே "இவள் என் மருமகள்; இவன் என் மருமகன்' என பேசி வைத்துக்கொண்டனர். வயதுக்கு வருவதற்கு முன்பே திருமணம் செய்து வைத்து புகுந்த வீட்டிற்கு அனுப்பிவைத்தார்கள். ஏனெனில் ஒரு பெண் ருதுவானபிறகு அவளை கன்னிகாதானம் செய்வது தவறு என கருதினார்கள். இம்மாதிரியான திருமணத்தால் பெண்ணிற்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் ஆணுக்கு மறுமணம் செய்ய அனுமதி உண்டு. ஆனால் ஆணுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் பெண்ணுக்கு மறுமணம் மறுக்கப்பட்டதால், அவளுக்கு இல்வாழ்க்கை சுகம் என்பதே இல்லாமல் போனது. இதற்கு இனங்களும் மதங்களும் காரணம் காட்டப்பட்டன. காலங்கள் மாற மாற அரசாங்கமே இளமைத் திருமணத்திற்குத் தடை விதித்தது.

Advertisment

murugan

ஆணுக்கு 21 வயதுக்கு மேலும், பெண்ணுக்கு 18 வயதுக்கு மேலும்தான் திருமணம் செய்யவேண்டும் என்ற சட்டம் வகுக்கப்பட்டது. எல்லா மதங்களிலும் இந்த முறையையே கடைப்பிடிக்கவேண்டும் என்ற விதியும் உள்ளது. ஆனால் இந்த சட்டதிட்டத்தை அனைவரும் கடைப்பிடிக்கிறார்களா என்றால் கேள்விக்குறிதான். நடைமுறையில் இன்றும் 14, 15 வயதுகளிலும், ஆங்காங்கே வயது மறைக்கப்பட்டு ரகசியமாகத் திருமணங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.

மேலை நாடுகளில் வாழும் மக்கள் இளம்வயதில் திருமணம் செய்துகொள்ளாவிட்டாலும், அவர்களின் கலாச்சாரப்படி உடல் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளத் தயங்குவதில்லை.

Advertisment

நமது கலாச்சாரத்தில் தற்போதுள்ள சூழ்நிலையில் மன வளர்ச்சி, உடல் வளர்ச்சி இல்லாமல் திருமணங்கள் செய்வதில்லை. சரியான வயதில் திருமணம் செய்தால் போதும் என்ற நடைமுறைக்கு வந்துவிட்டனர்.

தக்கவயதில் திருமணம் நடைபெறுவதற்கு ஜோதிடரீதியாக கிரகங்கள் பலம்பெற்று அமைந்திருப்பதே காரணம். திருமணத்திற்குரிய 7-ஆம் வீடும், களத்திரகாரகன் சுக்கிரனும், குடும்ப ஸ்தானமான 2-ஆம் வீடும் முக்கிய பங்கு வகிக்கின்றன. லக்னாதிபதியும் 2, 7-ஆம் வீட்டின் அதிபதிகளுடன் பலம் பெற்று அமைந்தாலும் இளம்வயதில் திருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

ஜென்ம லக்னத்திற்கோ, சந்திரா லக்னத்திற்கோ 7-ஆம் அதிபதி ஆட்சி, உச்சம் பெற்றோ, கேந்திர ஸ்தானங்களான 1, 4, 7, 10-ஆம் வீடுகளிலோ, திரிகோண ஸ்தானங்களான 1, 5, 9-ஆம் வீடுகளிலோ அமையப் பெறுவது, சுபர் சேர்க்கை, பார்வை பெறுவது, சுபகிரகங்களின் சாரம் பெறுவது போன்றவற்றின்மூலமாக தக்கவயதில் திருமணம் நடைபெறும் பாக்கியம் உண்டாகும்.

நவகிரகங்களில் சுபகிரகங்களான குரு, சுக்கிரன், வளர்பிறைச் சந்திரன், சுபர்சேர்க்கைப் பெற்ற புதன் போன்றவை 7-ஆம் வீட்டில் அமையப்பெற்றாலும், 7-ஆம் அதிபதி சுபகிரகச் சேர்க்கைப் பெற்று, அச்சுபகிரகங்களின் தசாபுக்தி திருமணவயதில் நடைபெற்றாலும் இளமையிலே திருமணம் நடைபெறும் வாய்ப்பு உண்டாகும். 7-ஆம் அதிபதி பலம் பெறுவது மட்டுமின்றி ஆண்களுக்கு சுக்கிரனும், பெண்களுக்குச் செவ்வாயும், சுபகிரகச் சேர்க்கை, பார்வை பெற்றாலும், சுபகிரக நட்சத்திரத்தில் அமையப்பெற்றாலும் இளம்வயதில் திருமணம் நடக்கும். சுபகிரகங்களில் முக்கிய கிரகமான குரு தான் இருக்கும் இடத்திலிருந்து 5, 7, 9 ஆகிய வீடுகளைப் பார்வை செய்வார். சுபகிரகமாகிய குருவின் பார்வை குடும்ப ஸ்தானமான 2-ஆம் வீட்டிற்கோ, 2-ஆம் அதிபதிக்கோ, ஆண்களுக்கு சுக்கிரனுக்கோ, பெண்களுக்குச் செவ்வாய்க்கோ இருக்குமேயானால் தக்கவயதில் திருமணம் நடைபெறும் வாய்ப்பு உண்டாகும்.

ஜென்ம லக்னத்திற்கோ, சந்திரா லக்னத்திற்கோ 2, 7-ஆம் வீட்டின் அதிபதிகளும், சுக்கிரனும் சுபகிரகச் சேர்க்கையுடன் கேந்திர, திரிகோண, லாப ஸ்தானங்களில் பாவ கிரகங்களின் தொடர்புகள் இல்லாமலிருந்தாலும், 1, 2, 7-ஆம் வீட்டின் அதிபதிகள் 6, 8, 12-ல் மறையாமல் அமைந்திருந்தாலும், பலமிழக்காமல், வக்ரம் பெறாமல் இருந்தாலும் இளம்வயதில் திருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

திருமண வயதை அடைந்த ஆண்- பெண்ணுக்கு ஜென்ம லக்னத்திற்கு நட்பு கிரகங்களுடைய தசாபுக்தி நடைபெற்றாலும், கேந்திர திரிகோணாதிபதிகளின் தசாபுக்தி நடைபெற்றாலும், சுபகிரகங்களின் தசாபுக்தி நடைபெற்றாலும் இளம்வயதில் திருமணம் நடைபெறும்.

திருமண வயதை அடைந்த ஆண்- பெண் இருவருக்கும் இளம்வயதில் பாவகிரகங்களின் தசை நடைபெற்றாலும், சுக்கிரனின் புக்தியோ, சுக்கிரனின் நட்சத்திரங்களில் அமையப் பெற்ற கிரகங்களின் புக்தியோ நடைபெற்றாலும் தக்க வயதில் திருமணம் கைகூடும்.

ஜென்ம லக்னத்திற்கோ, சந்திரா லக்னத்திற்கோ 2, 7-ல் பாவிகள் அமைந்து, அதன் தசாபுக்திகள் திருமணத்திற்காக முயற்சிகள் மேற்கொள்ளும் காலங்களில் நடைபெற்றால், திருமணம் கைகூட இடையூறுகள் ஏற்படும்.

ஜாதகத்தில் யோகங்கள் இருந்தாலும் குடும்பச் சூழ்நிலை காரணமாக சிலர் திருமணத்தைத் தள்ளிப் போடுகின்றனர். ஒருவரின் ஜாதகத்தில் 2, 7-ஆம் பாவங்கள் சிறப்பாக இருந்தால் குடும்பச் சூழ்நிலைக்கு ஏற்றவாறு திருமணம் செய்யலாம். படிப்பு, பொருளாதார நிலை, உடன்பிறப்புகளின் நிலை ஆகிய காரணங்களுக்காக திருமண முயற்சிகளைத் தள்ளி வைப்பதென்றால், அந்த வரனுக்கு 2, 7-ல் பாவ கிரகங்கள் அமைந்து, அதன் தசை மூன்றிலிருந்து ஐந்து வருடங்களுக்குள் வருமென்றால், அந்த தசை வருவதற்கு இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு முன்பே திருமணம் செய்துவைத்துவிட்டு, அதற்குள் ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்வது நல்லது.

உதாரணமாக, ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 7-ஆம் வீட்டில் கேது இருந்து, கேதுவின் தசை 25 வயதில் வரும் என்றிருந்தால், அந்தப் பெண்ணுக்கு 21, 22 வயதிலேயே திருமணம் செய்துவைப்பது நல்லது.

அதுபோல ஒரு ஆணின் ஜாதகத்தில் 7-ஆம் வீட்டில் கேது இருந்து, கேதுவின் தசை 28 வயதுவரை நடைபெற்றால், அந்த ஜாதகருக்கு எவ்வளவுதான் வாய்ப்புகள் வந்தாலும் கேது தசை முடிந்தபிறகுதான் திருமணம் செய்யவேண்டும். இல்லையென்றால் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்.

செல்: 72001 63001

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe