குரு நல்லவரா? கெட்டவரா?
கடந்த ஐந்து வாரங்களாக ஐந்துவிதமான குருவின் யோகங்கள் பற்றிப் பார்த்தோம். இதில் பலருக்கு ஏதாவது ஒரு யோகமாவது இருக்கும்.
சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட யோகங்கள் இருக்கும். "பாலஜோதிட' வாசகர்களில் பலர் தெளிவான ஜோதிட ஞானம் உள்ளவர்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை. உங்களில் யாராவது ஒருவர் குருவும் குருவின் பார்வையும் நன்மை மட்டுமே செய்யுமென்று ஆனித் தரமாகக் கூறமுடியுமா?
.ஆனால் குருபகவான் முழுமையான சுபர் அல்ல என்பதை பல உதாரண ஜாதகம்மூலம் என்னால் தெள்ளத் தெளிவாகக் கூறமுடியும்.
உதாரணமாக, குரு என்றால் குழந்தை, பணம், தங்கம், கோடிக்கணக்கான பணத்தைக் குறிக்கும் கிரகம். ஒரு ஜாதகத்தில் குரு பலமாக இருந்தால் அளவிற்கு அதிகமாகப் பணம் வைத்திருப்பார்கள். ஆனால் குழந்தைகள்மூலம் மன வேதனையைத் தருவார்.
நல்ல பண்பான பிள்ளைகளைத் தரும் குரு பகவான் அவர்களை நல்ல முறையில் வளர்க்கத் தேவையான பொருளாதாரத்தை வழங்கு வதில்லை.
ஒரு ஜாதகத்திலுள்ள எந்தவிதமான யோகங் களாக இருந்தாலும் நான்கு விதமாகவே பலன் வழங்கும்.
1. பொருள் காரகத்துவத்தை அபரிமிதமாக வழங்குதல். பொருள் காரகத்துவம் என்றால் தேவைக்கு அதிகமான பணம் மற்றும் சொத்து களை வழங்குதல்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/guru_80.jpg)
2. போதிய பண வசதி இல்லாவிட்டாலும் உயிர் காரகத்துவங்களால் அதீத அன்பைப் பெறுவது. அதாவது உற்றார்- உறவினர்கள், பெற்றோர்கள், மனைவி, மக்களின் அன்பு, மரியாதையைப் பெற்று மகிழ்ச்சியாக வாழ்வது.
3. உயிர் காரகத்துவம், பொருள் காரகத் துவம் இரண்டும் பரிபூரணமாகக் கிடைத்து நிம்மதியாக வாழ்வது. தேவைக்கு அதிகமான பணம், உபரியான சொத்துக்கள், சிறப்பான தொழில் அல்லது கௌரமான உத்தியோகம், நல்ல பெற்றோர்கள், அன்பான வாழ்க்கைத் துணை, அனுசரணையான பிள்ளைகள் என சகல ஐஸ்வர்யத்துடன் வாழும் வாழ்க்கை.
4. உயிர் காரகத்துவம், பொருள் காரகத் துவம் இரண்டுமின்றி வாழவேண்டிய நிலை. அடிப்படைத் தேவைக்குக்கூட திணறும் நிலை, உறவினர்களால் மன உளைச்சல். பூமியில் ஏன் பிறந்தோம் என்று நிர்பந்தத்திற்காக வாழ்தல் .
ஒரு ஜாதகத்தின் உள்கட்டமைப்பில் தோஷங்கள் பல இடம்பெற்றிருந்தால், அந்த ஜாதக தோஷங்களை நீக்கும் கிரகமாக , ஜாதகத்தில் அதிகப்படியாக நம்பப்படும் கிரகம் குரு. அந்த குருவே ஒரு ஜாதகத்தில் கெட்டால், கெடுபலன் வழங்கினால் நிலைமை எப்படியிருக்கும்.
ஒரு உதாரண ஜாதகத் தைப் பார்க்கலாம். 24-7-1984, 2.43 மணிக்கு சென்னையில் பிறந்தவர். ஆண் ஜாதகம். அவருக்கு நடப்பில் 8-11-2031 வரை குரு தசை; 20-5-2026 வரை சுக்கிர புக்தி.
ஜாதகர் நம்மை அணுகியபோது ஜாதகரி டம் "குழந்தைகள் மற்றும் பொருளாதாரத் தால் வாழ்நாள் முழுவதும் மன உளைச்சல் இருந்துகொண்டே உள்ளது' எனக் கூறிய வுடன், ஜாதகர் மனதைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுதார். "இந்த தசையில் தாங்கள் விரும்பியபடி அரசு வேலை கிடைத் திருக்கும். குறிப்பாக பேச்சை மூலதனமாகக் கொண்ட உத்தியோகத்தில் வாழ்வாதாரம் நடத்தும் வாய்ப்பு' என்று கூறினேன்.
ஜாதகர் தான் அரசு கல்லூரியில் விரிவுரை யாளர் என்றார்.
மேலும் "தான் ஓரளவு ஜோதிட ஞானம் உள்ளவன். நான் எப்பொழுது குரு தசை ஆரம்பமாகும் என்று ஆவலுடன் காத்திருந் தேன். 2, 5-ஆம் அதிபதி தசை என்பதால் குரு தசை பெரும் வாழ்வியல் மாற்றம் தரும் என்று பல ஜோதிடர்கள் எனக்குப் பலன் கூறியுள்ளார்கள். ஆனால் பலர் சுபப் பலன் கூறிய நிலையில் தாங்கள் மட்டும்தான் பொருளாதாரம், குழந்தையால் மன உளைச்சல் என உண்மையான நிலையை எடுத்துக் கூறியுள்ளீர்கள். எதைவைத்து குழந்தையாலும், பொருளாதாரத்தாலும் பாதிப்பு?' என்று அடுக்கடுக்காக கேள்வி கேட்டார்.
விருச்சிக லக்னத்திற்கு 2, 5-ஆம் அதிபதியான குரு ஆதிபத்தியரீதியாக அரசு உத்தியோகத்தை வழங்கியுள்ளது. ஜாதகர் ஏகாதசி திதியில் பிறந்தவர் என்ப தால் 2, 5-ஆமிடத்திற்கு திதி சூன்ய பாதிப்பு வலுவாக இயங்கியது. குருபகவான் வக்ரகதியில் தசை நடத்துகிறார். மேலும் ராகு- கேது அச்சிற்கு வெளியே குரு நின்று தசை நடத்துவதால் இந்த தசை ஆரம்பித்த வுடன் நிலையான- நிரந்தரமான அரசு உத்தி யோகத்தை வழங்கியுள்ளது. 5-ஆம் அதிபதி வக்ரம் என்பதால் அதிர்ஷ்டத்தை நம்பி பெரிய பணம், பொருள், இழப்பு. குழந்தைக்கு மிகப்பெரிய கண்டம் உண்டாகும். குரு லக்னரீதியாக விருச்சிக லக்னத்திற்கு 2, 5 ஆதிபத்தியம் பெற்றவர். 2, 5-ஆம் அதிபதி குரு 5-ஆமிடத்திற்கு 10-ஆமிடமான கர்மஸ்தானத்தில் உச்சம்பெற்ற கர்மாதிபதி சனி பார்வையில் ஆட்சி.
இந்த வாசகத்தை வாசகர்கள் மீண்டும் மீண்டும் படிக்கவும். குழந்தையைக் குறிக்கக் கூடிய 5-ஆமிடத்திற்கு 10-ஆமிடம் லக்னத்திற்கு 2-ஆமிடம். 10-ஆமிடம் என்பது தொழில் மற்றும் கர்ம ஸ்தானம். சனி, குரு சம்பந்தம் தர்மகர்மாதிபதி யோகம் என்றாலும், கர்மகாரகன் சனி பார்வையில் குழந்தையைக் குறிக்கக்கூடிய குருவை சனி பார்க்கிறார் குரு தசை ஆரம்பித்தவுடன் உத்தியோகம் என்ற சுபக்துவத்தை வழங்கி, பங்குச் சந்தையில் அதீத பொருள் இழப்பை ஏற்படுத்தியது. மேலும் ஒரு குழந்தையையும் இழந்தார். இதை எழுதும் என் மனம் எவ்வாறு சலனப்பட்டது என்பது எனக்கு மட்டுமே தெரியும். இதுபோல் பல உதாரண ஜாதகத்தை என் அனுபவத்தில் பார்த்திருக்கிறேன்.
மேலே எழுதியது இந்த ஜாதகத்திற்கான சூட்சுமபலன். இப்பொழுது வேறு முறையில் பலன் கூறுகிறேன். லக்னத்திற்கு 2-ஆமிடத்தில் நிற்கும் குருவின் 5-ஆம் பார்வை 6-ஆமிடமான ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில் பதிகிறது. 7-ஆம் பார்வை 8-ஆமிடம் எனும் அஷ்டம ஸ்தானத் தில் பதிகிறது. 9-ஆம் பார்வை 10-ஆமிடமான கர்ம ஸ்தானத்தில் பதிகிறது. குரு பார்வை பட்ட இடம் பெருகும். 6-ஆமிடத் திற்கு குருபார்வை பட்டால் கடன் பெருகும்.
8-ஆம் இடத்திற்கு குருபார்வை இருந்தால் வம்பு, வழக்கு, அவமானம், தீராத- தீர்க்கமுடியாத பிரச்சினை. 12-ஆமிடத்திற்கு குருவின் பார்வை இருந்தால் கட்டுங்கடங்காத விரயம், மீள முடியாத இழப்பு உண்டாகும். குருவின் பார்வை பட்ட பாவகத்தின் பலன்கள் அதிகரிக்கும். 6-ஆமிடத்திற்கு குரு பார்வை இருந்தால் கடன் பெருகும் என்ற இந்த கருத்தை நமது "பாலஜோதிட' இதழின் முன்னாள் ஆசிரியர் மறைந்த மதிப்பிற்குரிய திரு. சி. சுப்ரமணியம் அய்யா அவர்கள் பல இடங்களில் வலியுறுத்தியிருக்கி றார். 6-ஆமிடத்திற்கு குருவின் பார்வை பதிந்ததால் நல்ல உத்தியோகம் கிடைத்தும் கடன் ஏற்பட்டது. 10-ஆமிடமான கர்ம ஸ்தானத்திற்கு குரு பார்வை- ஜாதகர் தன் குழந்தைக்கு இறுதிக்கடன் செய்தார்.
சுய ஜாதகத்தில் குரு பலமாக இருந்தாலும் பலவீனமாக இருந்தாலும், மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்வதில் வல்லவரான இவர்கள் தங்கள் சொந்த பிரச்சினைக்கு அப்படி செய்யலாமா இப்படி செய்யலா என்று குழம்புவார்கள். முறையான திட்டமிடுதல் இல்லாமல் ஏற்ற- இறக்கமான வாழ்க்கை வாழுகிறார்கள்.
தனம் என்ற பணத்திற்கு, ஜாதகத்தில் குருவே பிரதானம். எந்த ஒரு ஜாதகத்திலும், எந்த ஒரு லக்னமாக இருந்தாலும், குரு, வலுவாக, கெடாமல் இருக்கும்போது, யாருடைய பணமாவது அவர்கள் கையில் வந்துவிட்டுதான் போகும். அவர்களிடம் பணம் இல்லாவிட்டாலும் பணம் புழங்குமிடங்களில் அவர்கள் இருப்பார்கள். எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் கடைசி நேரத்தில் பணம் கைக்கு வந்துவிடும்.
குரு பலம் குறைந்தவர்கள்
பிறறை ஏமாற்றிப் பணம் பறித்தல், போலிச் சாமியார், குழந்தை கடத்தல், பாலியல் வழக்கில் சிக்குதல், போக்சோ சட்டத்தில் சிறை தண்டனை அனுபவித்தல், மாணவர்களைத் துன்புறுத்திய வழக்கு என அசுப வழியில் பிரபலம் அடைகிறார்கள்.
நல்லவனின் நேர்மை, நாணயத்தில் தெரியும் என்பார்கள். என் கணிப்பில் குருபகவான் நல்லவர் என்ற போர்வையில் அசுபத்தை அசராமல் வழங்கும் கெட்டவரே. சூழ்நிலைக்கு ஏற்ப தன் பார்வை பலத்தால் நல்லதும் செய்பவர். ஒருவனுக்கு உலகில் வாழக் கொஞ்சம் பேங்க் பேலன்ஸ், பொன்னும் பொருளும் தேவை.
ஜாதகர் முறையாகச் சேர்த்து வைத்த பணம் என்றால் கட்டாயம் நல்வழியில் பாதுகாக்கப்படும். ஏனென்றால் குரு ஒழுக்கத்திற்கு முதலிடம் கொடுப்பார்.
அசுப வழியில் சேர்த்த செல்வத்தை தக்க நேரத்தில் பறிக்கவும் தயங்கமாட்டார். பெரும்பான்மையாக குரு ஆதிக்கம் பெற்ற பணக்காரர்கள் குருவின் அடியைப் பொறுக்க முடியாமல் செல்வந்தர் என்ற கௌரவப் போர்வையில் கடனாளியாக வாழுகிறார்கள்.
அதோடு ஒருவரின் குறிக்கோள், கொண்ட லட்சியத்திற்கு நல்ல பாதையைக் காட்டி வெற்றிக்கும் வழிவகுப்பார்கள் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. மனம் மட்டும் திடமாக இருந்தால் வெற்றியும் சாதனையும் நிச்சயம் உண்டு. குரு தன் கையில் மறைத்து வைத்த குச்சியுடன் ஒரு வழிகாட்டியாக நமக்குப் பின்னே நிற்பார்.
செல்: 98652 20406
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/07/2026-02-07t115543118z-newsdesk-2026-02-07-17-25-38.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-09/guru-t_2.jpg)