Advertisment

சூரியனால் ஏற்படும் யோகங்களும் பரிகாரங்களும்!

/idhalgal/balajothidam/yogas-and-remedies-caused-by-surya

ரு ஜாதகரின் பலனை நிர்ணயம் செய்வதில் கிரக இணைவுகள் பெரும் பங்கு வகிக்கிறது. ஜாதகத்தை பார்த்துப் பலன் சொல்வதற்கு பல வழிமுறைகள் இருந்தாலும் கிரக இணைவுகளை பயன்படுத்திச் சொல்லும் பலன் 100% கை கொடுக்கும். நவகிரகங்களில் சுய ஒளி உடைய மூலக்கிரகம் சூரியனாகும். உலகிற்கு ஒளி வழங்கும் சூரியனுடன் சில முக்கிய கிரகங்கள் இணைவதால் ஏற்படும் யோகங்களையும் அதற்கான பலன்களையும் காணலாம்.

Advertisment

அமாவாசை யோகம்

சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இணைந்திருப்பது அமாவாசை யோகமாகும். சூரியன் சிவனின் அம்சம். சந்திரன் சக்தியின் அம்சம். இதை அர்த்த நாரீஸ்வரர் யோகம் என்றும் கூறலாம். சூரியன் எனும் ஆன்மாவும் சந்திரன் எனும் மனமும் இணைவதால் இந்த கிரகச் சேர்க்கை உள்ளவர் கள் ஞானம் உள்ளு ணர்வு நிறைந்தவர் களாகவும், வித்தியாச மான சிந்தனை உள்ளவர்களாக வும், உலகப்புகழ் பெற்றும் கவிதை, காவியம் எழுதி அசத்து பவர்களாகவும் இருப்பார்கள். சொல்லாலும் செயலாலும் ஒன்றுபடுவார்கள். எந்தத் துறையில் இருந்தாலும் அந்த துறையில் தனித் தன்மையுடன் சிறந்து விளங்குவார்கள்.

Advertisment

பரிகாரம்: அமாவாசை யோகத்தால் நற்பலன்களை அதிகரிக்க அமாவாசை திதியில் முன்னோர்களை வழிபடவேண்டும்.

தேஜோ அக்னி யோகம்

ஒரு ஜாதகத்தில் சூரியன், செவ்வாய் சேர்க்கையால் ஏற்படும் யோகம். சூரியன் தேஜஸை குறிப்பவர். செவ்வாய் அக்னி நெருப்பை குறிப்பவர். இந்த இரண்டும் இணைந்தால் அது தேஜோ அக்னி யோகமாகும். சூரியனும் செவ்வாயும் நட்பு கிரகங்கள். சூரியன் தனது நட்பு கிரகமான செவ்வாயின் மேஷ ராசியில் உச்சமாகி றார். இரண்டும் வெப்ப கிரகம் என்பதால் ஜாதகர் முன்கோபியாக இருப்பார். எதற்கும் பயப

ரு ஜாதகரின் பலனை நிர்ணயம் செய்வதில் கிரக இணைவுகள் பெரும் பங்கு வகிக்கிறது. ஜாதகத்தை பார்த்துப் பலன் சொல்வதற்கு பல வழிமுறைகள் இருந்தாலும் கிரக இணைவுகளை பயன்படுத்திச் சொல்லும் பலன் 100% கை கொடுக்கும். நவகிரகங்களில் சுய ஒளி உடைய மூலக்கிரகம் சூரியனாகும். உலகிற்கு ஒளி வழங்கும் சூரியனுடன் சில முக்கிய கிரகங்கள் இணைவதால் ஏற்படும் யோகங்களையும் அதற்கான பலன்களையும் காணலாம்.

Advertisment

அமாவாசை யோகம்

சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இணைந்திருப்பது அமாவாசை யோகமாகும். சூரியன் சிவனின் அம்சம். சந்திரன் சக்தியின் அம்சம். இதை அர்த்த நாரீஸ்வரர் யோகம் என்றும் கூறலாம். சூரியன் எனும் ஆன்மாவும் சந்திரன் எனும் மனமும் இணைவதால் இந்த கிரகச் சேர்க்கை உள்ளவர் கள் ஞானம் உள்ளு ணர்வு நிறைந்தவர் களாகவும், வித்தியாச மான சிந்தனை உள்ளவர்களாக வும், உலகப்புகழ் பெற்றும் கவிதை, காவியம் எழுதி அசத்து பவர்களாகவும் இருப்பார்கள். சொல்லாலும் செயலாலும் ஒன்றுபடுவார்கள். எந்தத் துறையில் இருந்தாலும் அந்த துறையில் தனித் தன்மையுடன் சிறந்து விளங்குவார்கள்.

Advertisment

பரிகாரம்: அமாவாசை யோகத்தால் நற்பலன்களை அதிகரிக்க அமாவாசை திதியில் முன்னோர்களை வழிபடவேண்டும்.

தேஜோ அக்னி யோகம்

ஒரு ஜாதகத்தில் சூரியன், செவ்வாய் சேர்க்கையால் ஏற்படும் யோகம். சூரியன் தேஜஸை குறிப்பவர். செவ்வாய் அக்னி நெருப்பை குறிப்பவர். இந்த இரண்டும் இணைந்தால் அது தேஜோ அக்னி யோகமாகும். சூரியனும் செவ்வாயும் நட்பு கிரகங்கள். சூரியன் தனது நட்பு கிரகமான செவ்வாயின் மேஷ ராசியில் உச்சமாகி றார். இரண்டும் வெப்ப கிரகம் என்பதால் ஜாதகர் முன்கோபியாக இருப்பார். எதற்கும் பயப்படமாட்டார். அகங்காரம், அதிகாரம், உடல்வலிமை, அரசாங்க ஆதரவு, அரச உத்தி யோகம், அரசியல் பதவி, பெயர், அந்தஸ்து, சொத்து சுகம், கவுரவம் உள்ளவராக இருப்பார்.

பரிகாரம்: அதீத கோபத்தை கட்டுப் படுத்த செவ்வாய்க்கிழமை விநாயகரை வழிபடவேண்டும். அரச உத்தியோகம், அரசு வகை ஆதரவு கிடைக்க செவ்வாய்க்கிழமை சூரிய ஓரையில் சிவவழிபாடு செய்வது நல்லது.

புத ஆதித்ய யோகம்

சூரியனுக்கு முதல்வட்ட பாதையில் புதன் இருப்பதால் சூரியனின் வெப்பத்திற்கு ஈடு கொடுத்து, அதாவது சூரியனின் ஈர்ப்பு வீசை உள்ளிழுக்கப்பட்டு அழிந்துவிடாமல் புதன் தன் பாதையில் சுற்றிவரும்படி புதனின் கட்டமைப்பு அமைந்துள்ளது. சூரியனிடமிருந்து வெளிவரும் அனைத்து கதிர்களையும் தன்னகத்தே தேக்கிக் கொள்ளும் தன்மையை புதன் பெற்றுள்ளது. அதனால்தான் மனிதனின் நினைவாற்றலுக்கும் புத்திக் கூர்மைக்கும் பொது அறிவிற் கும் புதனையே காரக கிரகம் என்கிறோம்.

சூரியன் என்றால் ஆன்மா, புதன் என்றால் புத்தி. ஆன்மாவும் புத்தியும் இணையும்போது ஆன்ம பலம் பெருகும். ஆத்ம பலம், ஞானத்தை தரும். சூரியனுடன் புத்திகாரகன், வித்யா காரகன் புதன் சேரும்போது மனிதனுக்கு அளவில்லாத வாழ்வியல் ஞானம், ஆன்ம பலம், கல்வியில் தனித்துவம் ஏற்படுகிறது. அதேபோல் பலர் புத ஆதித்ய யோகம் கல்விக்கு மட்டுமே பலன் தருமென்று நினைக்கிறார்கள். புத ஆதித்ய யோகம் பெற்றவர்கள் எல்லாராலும் விரும்பப்படும் நகைச்சுவை உணர்வு, வசீகரத் தன்மை, இளமைத் தோற்றம் நிரம்பியவர்கள். இது மனிதர்கள் வாழ்வில் அனைத்து விதமான வெற்றியை வழங்கக்கூடிய யோகமாகும்.

பரிகாரம்: புதன்கிழமை வில்ல மாலை அணிவித்து சிவவழிபாடு செய்தல் நலம்.

s

தட்சிணாமூர்த்தி யோகம்

சூரியனும், குருவும் ஒரே ராசியில் இணைந்திருந்தால் பரமாத்மா, ஜீவாத்மா சம்யோகம் என்று பெயர். பரமாத்மாவை குறிக்கும் கிரகமான சூரியனும் ஜீவாத்மாவைக் குறிக்கும் கிரகமான குருவும் ஒரே ராசியில் இணைந்திருந்தால் தட்சிணாமூர்த்தி யோகம் என்றும் அழைக்கலாம். சிறந்த நுண்ணறிவு உடையவர்கள். தன் திறமையால் அறிவால் அனைவரையும் கவரும் திறன் படைத்தவர். தெய்வ நம்பிக்கை மிக்கவராக இருப்பார்கள். குலப்பெருமையைக் காக்கக்கூடியவராக இருப்பார்கள்.

உயர்கல்வி விருத்தி, சந்ததி விருத்தி, ஆண்வாரிசு உண்டு. குளம் வெட்டுதல், நீர்நிலைகள் அமைத்துக் கொடுத்தல், மரம் நடுதல், இயற்கை வளங்களை பாதுகாத்தல், கோவில் திருப்பணிகள் மேற்கொள்ளுதல் என பொதுவான செயல்கள் அனைத் திலும் ஆர்வம் அதிகரிக்கும். மகான்கள், ஞானிகள் மற்றும் பெரியோர்களின்மீது மரியாதையும் நம்பிக்கையும் உள்ளவராக இருப்பார்கள். நேர்மையான தன்னுடைய குலப்பெருமையைக் காக்கக்கூடிய புத்திரர்களை பெறுவார்கள். புத்திரர்களால் பெயரும் புகழும் அடைவார்கள். ஜாதகரின் தந்தை புகழ், செல்வம், யோகம் போன்றவைகளை அடைந்தவராக இருப்பார்.

பரிகாரம்: வியாழக்கிழமை சூரிய ஓரையில் மஞ்சள் வஸ்திரம் அணிவித்து தட்சிணா மூர்த்தியை வழிபடவேண்டும்.

காமேஷ்வரர் யோகம்

ஒரு ஜாதகத்தில் சூரியன், சுக்கிரன் இணைவதால் ஏற்படும் யோகம். சுக்கிரன் லௌகீக இன்பத்தை தருபவர். சுக்கிரன் லட்சமி அம்சம். சூரியன் ஈஸ்வரன் அம்சம் என்பதால் இதை விஜயலட்சுமி யோகம் என்றும் கூறலாம். ஆடம்பரம், லௌகீகத்தை குறிக்கக்கூடிய சுக்கிரன் கவுரவ கிரகமான சூரியனுடன் சேருவதால் ஜாதகர் சொத்து, சுகம். வீடு வாகனம், கவுரவம் நிறைந்தவர்.

இந்த கிரகச் சேர்க்கை சில அசவுகரியத் தையும் ஏற்படுத்தும். நெருப்பு கிரகமான சூரியன் சுக்ல விருத்தியை தரும் சுக்கிரனு டன் சேருவது கடுமையான புத்திர தோஷ மாகும். காலம் தாழ்ந்து குழந்தை பிறக்கும் அல்லது பெண் குழந்தை மட்டும் பிறக்கும்.

அல்லது பெண் வாரிசிற்கு பிறகு ஆண் வாரிசு உருவாகும். மேலும் கணவன்- மனைவிக் குள் மன பேதத்தையும் ஏற்படுத்தும். பெரும் பாலும் இந்த அமைப்பு ஆண்களையே குறிவைத்து தாக்கும். ஆண்களைவிட பெண்களுக்கு நிர்வாகத் திறனையும் ஆடம்பர தோற்றத்தையும் தருவதால் தம்பதியினரிடையே ஒற்றுமை குறைவுமிகும். இல்லற இன்பத்தை குறைத்து புத்திர தோஷத்தை ஏற்படுத்தும்.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை காலை 6.00 மணிமுதல் 7.00 மணிவரை சூரிய ஓரையில் கோதுமை பாயசம் செய்து மகாலட்சுமியை வழிபடவேண்டும். வெள்ளிக்கிழமை காலை 6.00 மணிமுதல் 7.00 மணிவரை சுக்கிர ஓரையில் சிவவழிபாடு செய்துவந்தால் புத்திர பாக்கியம் கிடைக்கும்.

சனீஸ்வர யோகம்

ஒரு ஜாதகத்தில் சூரியன், சனி ஒரே ராசியில் இருந்தால் சனீஸ்வர யோகமாகும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி குறைவு ஏற்படும். சூரியன் தந்தை. சனி மகன்.

ஆண் ஜாதகத்தில் இந்த கிரக சம்பந்தம் இருந்தால் தந்தை, மகனுக்குள் ஒற்றுமை குறைந்து அதிக பிரச்சினை ஏற்படும். இந்த கிரக சம்பந்தம் பெண்களைவிட ஆண் களையே அதிகம் பாதிக்கிறது. ஆண்களுக்கு மாமனாரின் செயல்கள் மன வருத்தத்தைத் தருகிறது. சமயங்களில் வீட்டோடு மாமனாரை வைத்து காப்பாற்றவேண்டிய சூழலும் நிலவுகிறது. ஆக, மாமனார்- மருமகன் உறவில் விரிசல். ஆனால் பெண்களுக்கு தந்தையின் அன்புக்கு இணையான மாமனார் கிடைக்கிறார். ஆண்களுக்கு இல்வாழ்க்கை பிரச்சினைய தரும். பெண்களுக்கு தகுதி குறைந்த வாழ்க்கை துணையே கிடைக்கும். ஆண்- பெண் இருவருக்கும் பித்ரு தோஷம், புத்திர தோஷத்தையும் காட்டும் கிரக சம்பந்தம்.

பரிகாரம்: சனிக்கிழமை கருப்பு உளுந்து, கருப்பு எள் உருண்டை தானம் வழங்க நிலைமை சீராகும்.

சரபேஸ்வரர் யோகம்

சூரியன், ராகு ஒரே ராசியில் இணைந்தால் அதை சரபேஸ்வரர் யோகம் எனலாம்.

சூரியன் தந்தை, ராகு சூரியனை கிரகணப் படுத்தும் வலிமைக்கொண்ட கிரகம் என்பதால் சூரியன், ராகு சம்பந்தம் தந்தை மகனை பிரிக்கும். சூரியன் பாகை முறையில் ராகுவை கடந்து நின்றால் பாதிப்பு குறையும். சூரியன் ராகுவை நோக்கி பயணித்தாலும், ராகு சூரியனை நோக்கிச் சென்றாலும் பாதிப்பு சற்று கூடுதலாகும். கண் பாதிப்பு இருக்கும். இது கிரகண அமைப்பு.

பரிகாரம்: நாகாபரணம் தரித்த சிவனை வழிபட, இன்னல்கள் விலகும்.

முனீஸ்வரர் யோகம்

சூரியனும் கேதுவும் ஒரே ராசியில் இணை வது முனீஸ்வர யோகம். இவர்கள் சாதுக்கள், சன்னியாசிகள் சாபம் நிரம்பியவர்கள். புத்திர தோஷம் தந்தை- மகன் கருத்து வேறுபாடு உண்டு. சூரியன் பாகை முறையில் கேதுவை கடந்து நின்றால் பாதிப்பு சற்றுக் குறையும். சூரியன் கேதுவை நோக்கி பயணித்தாலும், கேது சூரியனை நோக்கிச் சென்றாலும் பாதிப்பு சற்று கூடுதலாகும்.

பரிகாரம்: சனிக்கிழமை சாதுக்கள் மற்றும் முனிவர்களின் நல்லாசி பெறு வேண்டும். பொதுவாக ஒரு ஜாதகத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் இணைவ தால் சுபப் பலன்கள் உருவாகும் வாய்ப்பு குறைவு. அந்த கிரகங்களின் பாவக ஆதிபத்திய ரீதியாக சுபமும், அசுபமும் கலந்தே நடக்கும். சூரியனுடன் இணைந்த கிரகத்தால் அசவு கரியத்தை சந்திப்பவர்கள் உரிய வழிபாடு மற்றும் பரிகாரத்தைப் பயன்படுத்தி வெற்றி பெற வாழ்த்துகள்.

செல்: 98652 20406

bala230224
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe