சென்ற இதழ் தொடர்ச்சி...
ஆறாமதிபதி ஒன்றுமுதல் ஆறு பாவங்கள்வரை நின்ற பலன்களை கடந்த இதழில் கண்டோம். மற்ற பாவப் பலன்களை இங்கு காண்போம்.
ஏழு
ஆறாமதிபதி ஏழில் இருந்தால் திருமணத் தடை, திருமணத்திற்குப்பிறகு பிரிவு, பிரச்சினை, களத்திர தோஷம், களத்திர நஷ்டம் உண்டாகும்.
தொழில்வழி நண்பர்கள் எதிரியாக மாறிவிடுவர்.
நண்பர்களுக்கு தொழில் வைத்துக் கொடுத்து விட்டு விலகிவிடுவர். நண்பர்களை ஏமாற்று தல், நண்பர்களிடம் ஏமாறுதல் என இரண்டும் நடக்கும். மனைவியால் மட்டுமின்றி, மனைவி வழி சொந்தங்களாலும் கஷ்டத்தையும், நஷ்டத்தையும், அவமானத்தையும் அடைவர். ஏழாமிடம் ஆறாமதிபதியால் கெடுவதால் குடும்பம், திருமணம், தொழில்வரை பாதிப்புகளே உண்டாகும். சுபகிரகப் பார்வை, சேர்க்கையால் சில நன்மைகள் ஏற்பட்டாலும், மனைவி யுடன் தொல்லையான வாழ்க்கையே தொடரும்.
எட்டு
ஆறாமதிபதி எட்டில் மறைவது தொல்லைகளையே அதிகம் தரும். எதற்கெடுத்தாலும் பிரச்சினை, பிரிவு, அவமானம் ஏற்படும். நன்மைகள் அரிதாய் அமையும். நோய் உடலை வாட்டும். நோய்க்காக கடன்பட நேரும். வீட்டி-ருக்கும் பொருட்கள் காணால் போகும். தாய்- தந்தைக்கும் உகந்தவரல்லர். யாரையாவது ஒருவரை இழக்க நேரும். தன்னை அனாதையாக எண்ணுமளவு கஷ்டத்தையடைவர். கடன்சுமை பலரைப் பகைவராக மாற்றும். வாழ்க்கையை வெறுத்து தற்கொலை சிந்தனைகளைக் கூட சிலநேரம் தரும். சிலர் சிறையில் காலம்கடத்துவர். சுபகிரகப் பார்வை ஓரளவு கஷ்டத்தைக் குறைக்கும். வெளி நாட்டு வாழ்க்கை ஓரளவு நற்பலனைத் தரும்.
ஒன்பது
ஒன்பதில் ஆறாமதிபதி நின்றால் தந்தைக்கு பாதிப்பு, தந்தையால் பாதிப்பு ஏற்படும். தந்தைவழி சொத்துகள் ஏதாவது ஒருவகையில் வில்லங்கத்தையும் நஷ்டத் தையும் கஷ்டத்தையும் தரும். நீதிமன்றம், வழக்கு என அலைக்கழிக்கும். நியாயமா கக் கிடைக்கவேண்டியது கிடைக்காது. பாக்கியக் குறையைத் தரும். நம்பிக்கை துரோகம் ஏற்படும். அதனால் மனம் வெறுக் கும். யார்மீது பாசம், பற்றுக்கொண்டிருக்கி றோமோ அவர்களே கெடுதல் செய்வர். அதனால் மனம்வெறுத்து கெட்ட பழக்க வழக்கங்கள், பிறரைப் பழிவாங்குதல், பிறர் வாழ்வது பொறுக்காமல் கெடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவர். சுபகிரகப் பார்வை பெற்று பலம்பெற்றால், ஏமாற்றத்தை மறந்து முன்னேறி சாதிப்பர்.
பத்து
ஆறாமதிபதி பத்தில் இருந்தால் தொழி-ல் பல்வேறு பிரச்சினைகளை சந்திப்பர். சரியான வயதில் தொழில் அமையா மல் கஷ்டப்படுவர். படித்ததற்கேற்ப வேலை கிடைக்காது. கிடைத்த வேலை எதுவும் நிலைக்காது. வேலையில் ஏதாவது தொல்லை இருந்துகொண்டே இருக்கும். நிரத்தர மில்லா வேலை, இடமாற்றம், மேலதிகாரி களின் தொடர்தொல்லை, வேலையில் நாட்டமில்லாமல் திரிவது, குடும்பத்தில் இருப்பவர்களுக்கு மன உளைச்சல் தருவது, குடும்பத்தவர்களால் நோய், எதிரி, கடனால் அவதிப்படுவது, மனைவியுடனான பிரச் சினையால் மாமியாரால் அசிங்கப்படுவது என வாழ்க்கையில் பற்பல பெரும் நெருக்கடிகளை சந்திப்பர். இயற்கைக்கு முரணானவற்றிலும், அரசாங்கத்திற்கு எதிரான காரியங்களிலும் துணிந்து இறங்கு வர். இவரால் வீட்டிற்கும் நாட்டிற்கும் கேடு தான். சுபகிரக வலுப்பெற்றால் யாருக்கும் தெரியால் மறைமுகத் தொழி-ல் ஈடுபட்டு சொகுசான வாழ்க்கை வாழ்வர்.
பதினொன்று
ஆறாமதிபதி பதினொன்றில் இருந்தால் வாழ்க்கையில் கிடைக்கும் லாபமான விஷயங்கள் அனைத்தும் வீணாகவே போகும். மூத்த சகோதர- சகோதரி ஸ்தான மென்பதால் அவர்களால் நஷ்டம், அவர் களுக்கும் நஷ்டம் ஏற்பட்டு ஜாதகரையே இம்சை செய்வர். எவ்வளவு சம்பாதித் தாலும் ஏதாவது விரயம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். ஆடம்பரப் பொருட் கள் வாங்குவதால், அத்தியாவசியப் பொருட்களுக்கு பற்றாக்குறை இருந்து கொண்டே இருக்கும். தொழில் கூட்டாளி களுடன் லாபப் பங்குப் பரிவர்த்தனையில் பிரச்சினை, பிரிவு ஏற்படும். உடன்பிறந்தவர் நோயால்- கடனால் அகப்பட்டுக்கொண்டு, ஜாதகருக்கு நன்மையில்லையென்றா லும் நஷ்டத்தையே தருவர். சொத்து விஷயங் களில் உடன்பிறந்தவர்களின் பிடிவாதத்தால் நீதிமன்றப் படியேறவேண்டியிருக்கும். நல்லவர்கள்போல் நடித்து ஏமாற்றுவர். சுபகிரகப் பார்வை, சேர்க்கை இருந்தால் கெட்டவர்களைக் கண்டறிந்து விலகி விடுவர்.
பன்னிரண்டு
ஆறாமதிபதி பன்னிரண்டில் இருந்தால் எதிரிகளால் ஏதாவது தொல்லை இருந்து கொண்டே இருக்கும். நிம்மதியாகத் தூங்க முடியாது. அடிக்கடி இடமாற்றம் ஏற்படும். அடுத்தடுத்து பிரச்சினை செய்து மன உளைச்சலைத் தந்துகொண்டே இருப்பர். கடன் கொடுத்தால் வாங்கமுடியாமலும், வாங்கினால் கொடுக்கமுடியாமலும் அவதிப் பட நேரும். உடனிருந்தே கெடுக்கும் துரோகிகள் அதிகம் இருப்பர். நம் முன்னால் ஒன்றும், பின்னால் ஒன்றும் பேசி செயல் பட்டு கஷ்டத்தைத் தருவர். நம்மால் பயனடைந்தவர்கள் விரோதியாக இருப்பர். வீண் செலவுகளும், வீண் அலைச்சலும் உடல் நிலையை பாதிக்கும். சந்தோஷங்களை முழுதாய் அனுபவிக்கமுடியாமல் போகும் நிலைவரும். சுபகிரகப் பார்வை, சேர்க்கை மனதிற்கினிய மறைமுக சந்தோஷங்களைத் தரும். நோய்தரும் ஆறாமதிபதி தசாபுக்திகள் மேஷம், மகர லக்னத்திற்கு புதன் தசாபுக்தி; ரிஷபம், தனுசு லக்னத்திற்கு சுக்கிர தசாபுக்தி; மிதுனம், விருச்சிகத்திற்கு செவ்வாய் தசாபுக்தி; துலாம், கடகத்திற்கு குரு தசாபுக்தி; கும்பத்திற்கு சந்திர தசாபுக்தி; மீனத்திற்கு சூரிய தசாபுக்தி; சிம்மம், கன்னி லக்னங்களுக்கு சனி தசாபுக்திக் காலங்களில் நோய் உண்டாகும் வாய்ப்புகள் அதிகம். ஆறாமிடம், ஆறாமிடத்தில் நின்ற கிரகம், ஆறாமதிபதியுடன் இணைந்த- பார்த்த கிரகங்களின் வலுத்தன்மையைப் பொருத்து நோயும் நோயின் தாக்கமும் ஏற்படும். இன்று பெரும்பாலானவர்களுக்கு நீரிழிவு நோய்தான் பெரிய சவாலாக இருக்கிறது. குரு, சுக்கிரன், சந்திரன் நீர் ராசிகளான கடகம், விருச்சிகம், மீனத்தில் நின்றால் நீரிழிவு நோய் உண்டாகிறது. கிரக வ-மையைப் பொருத்து அதன் வீரியமும், 6, 8-ஆமதிபதி தசாபுக்திகளின் வலுத்தன்மையைப் பொருத்து நோய்த் தாக்கமும் இருக்கிறது. குரு, செவ்வாய், ராகு பாதிப்பு புற்றுநோய் தருகிறது. ஆறில் சந்திரன், ராகு இணைவு, சந்திரன் நீசம் ஏற்பட்டு, 3, 5, 7, 8-ல் குரு, ராகு எந்த வீட்டில் இணைவுபெறுகிறதோ அந்த இடத்தின் உறுப்புகளில் புற்றுநோய் வருகிறது. சனி நீசம்பெற்றாலும், சூரியன், செவ்வாய், ராகு- கேது ஐந்தில் இருந்தாலும் வயிற்றுவ- பிரச்சினை, கர்ப்பப்பையில் பிரச்சினை ஏற்படுத்தும். சந்திரன், செவ்வாய் பலம்குறைந்தால் ஜீரணமண்டலம் பாதிக்கும். ஏனென்றால் சந்திரன் மனநிலை காரகன். மனநிலை சரியில்லாமல் இரவில் தூங்காம-ருந்தால் உட-ல் வெப்பம் அதிகமாகி ஜீரணம் தடைப்படும். அதனால் மலச்சிக்க-ல் நோய் தொடங்கி அனைத்து நோய்களும் வந்துவிடும். அதனால்தான் "எது நடந்தாலும் மனதை விட்டுவிடக்கூடாது' என தைரியம் சொல்வர். சந்திரன், ராகு, சனி வெண்குஷ்டத்தையும், மூன்றாமிடம், புதன் பலம்குறைந்து தசாபுக்தி நடந்தால் ஆஸ்துமா சம்மந்தப்பட்ட வியாதியையும், சனியால் பக்கவாதம், முடக்குவாதத்தையும் தரும். இரண்டாமதிபதி 6, 8, 12-ல் மறைந்தால் பேச்சை பாதிக்கும். 6, 8-ல் சந்திரன், ராகு- கேது இருப்பது சளித்தொல்லையைத் தரும். பொதுவாக பாவகிரகங்கள் லக்னம், ராசியைப் பார்ப்பது, 6, 8-ஆமிடத்தின் கெட்டநிலை உடல்நலத்தையும் ஆயுளையும் பாதிக்கும்.
ஆறாமதிபதி தோஷம்
இன்று பெற்றோருக்குப் பணிவிடை செய்வது புண்ணியம் என்பதையெல்லாம் பலரும் ஏற்றுக்கொள்வதில்லை. "நமக்கும் முதுமையில் நோய் வரும். நாம் எப்படி பெற்றோரை கவனிக்கிறோமோ அதே போல்தான் நம் பிள்ளைகள் நம்மை கவனிப்பார்கள்' என நினைப்பதில்லை. 'எனக்கு கொடியநோய் வராது. என்னைப்போல் இல்லாமல், என் பிள்ளைகள் என்னைக் கைவிடமாட்டார்கள். அதைமீறி வந்தால் வரட்டும். எதையும் பார்த்துக்கொள்வோம். இன்றைய சந்தோஷம்தான் எனக்கு முக்கியம்' என வாழ்கின்றனர். தொடர் தோல்விகளால் மனம் நொந்துபோகக்கூடாது என்பதற்காக, "நேற்று என்பது முடிந்து போனது. நாளை என்னவாகுமோ யாருக்கும் தெரியாது. அதனால் இன்று மட்டும்தான் நிஜம். எனவே இன்றைய நாளை சந்தோஷமாகக் கொண்டாடு' என்று, ஊக்குவிப்பதற்காக சொல்லப்படும் தத்துவங்களையெல்லாம் தனக்கு ஏற்றாற் போல் மாற்றிக்கொண்டு, குடும்பத்தில் யாரோ எப்படியோ போகட்டுமென வாழ்க்கையை சுயநலமாய் வாழ்ந்து கெடுத்துக்கொள்கின்றனர். இன்று செய்யும் செயல்தான் நாளைய தன் வாரிசுகளுக்கான பலன் என்பது தெரியவில்லை. அதை சொல்-க்கொடுக்கவேண்டிய பொறுப்பு இன்றைய பெற்றோருக்குண்டு என்பதை மறந்து, தானும் கெட்டு தலைமுறையையும் கெடுக்கிறார்கள். பெற்றோர்களைத் தவிக்கவிடுபவர்களுக்கு ஏழேழு ஜென்மத்திற்கான பாவம் வந்துசேரும். ஏழு தலைமுறை வாரிசுகள் புத்திர தோஷம், களத்திர தோஷம், இளமையில் வறுமை, இருந்தும் அனுபவிக்கமுடியா நோயால் பாதிக்கப்படுவர். பெற்ற பிள்ளைகளின் இறப்பைப் பார்க்கும் சூழலும் ஏற்படும். அதேபோல் மாமனார்- மாமியாரைத் தவிக்கவிடுபவர்களின் வாரிசுகள் உடல் அல்லது புலன்களில் குறைபாட்டுடனோ, திருநங்கையாகவோ ஏதாவது குறையுடன் பிறந்து மனவேதனை தருவர். கோவில் கோவிலாகச் சென்றாலும் தீராத நோய் தொற்றும். புத்திரர்களால் கண்ணீர் சிந்தி மனம்வெறுத்து இறப்பர். மேலோகத்திலும் அதிகபட்ச தண்டனை பெறுவர். சாப விமோசனம் பெறமுடியாமல் தவிப்பர்.
பரிகாரம்
பெற்றோர்களை கவனிப்பவர்கள் நன்றாக வாழவேண்டும். அப்போதுதான் அதைப் பார்த்து தலைமுறை திருந்தும். நல்லது செய்பவர்கள் வாழ்க்கையில் தோற்றுப்போவதால்தான் பலர் நல்லவற்றை ஒதுக்கவேண்டிய சுயநலச்சூழல் இன்று வந்துவிட்டது. நாம்செய்த வினை நம் பிள்ளைகளை பாதிக்கும் என்னும் சித்தாந்தம், கடமை, நன்றி ஆகியவற்றை இந்த தலைமுறை மறக்கிறார்கள். அதனுடைய பலனை அடுத்த தலைமுறையில் பட்டுத் தெரிந்துகொள்வார்கள். அதுவரை பாசம், பந்தம், சொந்தம் இதெல்லாம் கடந்துபோகவேண்டுமென அறிவுரை சொல்-க் கொண்டிருப்பர். உறவு களைப் பகைத்து, ஊரோடு ஒத்துவாழாமல் போனால் பெற்ற பிள்ளைகளாலும் கைவிடப்பட்டு அனாதையாக்கப்படும் நிலை வரும். பிள்ளைகளைப் பெற்று வளர்த்து ஆளாக்கித் திருமணம் செய்து வைத்து பேரன்- பேத்தியைப் பார்க்கத்தான் ஒவ்வொருவரின் முயற்சியும் போராட்டமும் இருக்கிறது. ஒரு பெரிய நோய், அத்தனைக் கனவுகளையும் ஒரே நாளில் அழித்துவிடுகிறது. தன் பிள்ளைகளுக்குக் கடமையைச் செய்துமுடிக்காமல் இறந்துபோகும் சூழல் அமையும்போதுதான் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை பலர் உணர்கிறார்கள். அப்போது மனம் மட்டும் நொறுங்கிப் போவதில்லை. பலரின் குடும்பமும் சிதைந்துபோய்விடுகிறது. நம் முன்னோர்கள் வாதம், பித்தம், கபம் அடிப்படையில்தான் வியாதி ஏற்படுமென கண்டறிந்துள்ளனர். 'நோய்நாடி நோய் முதல்நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்' என்பதை உணர்ந்து, பெற்றோர் கள் தன் உடல் நலத்திற்கேற்ற- வாழும் சுற்றுச்சூழலுக்கேற்ற உணவுப் பழக்கத்தைத் தானும் கடைப்பிடித்து, பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுப்பதுதான் மிகச்சிறந்த பரிகாரமாகும்.
செல்: 96003 53748