"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்பதைக் கேட்கும்போது, "என்ன பெரிய நோய்' என்னும் ஆணவமான தொனியில் இளமையில் பேசுவோம். ஆனால் தலைவலியும், வயிற்றுவலியும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்பதுபோல, தனக்கு நோய் தாக்கும்போதே அது எவ்வளவு பெரிய துன்பமென்பது தெரியவரும். இளமையில் வறுமை கொடிது என்பதுபோல, முதுமை யில் தனிமை கொடிது.

நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாய் தானும் துன்பப்பட்டு, தான் பெற்ற பிள்ளைகளையும் கஷ்டப்படுத்தி பலர் இறக்கிறார்கள்.

yogam

Advertisment

நோயுள்ள மாமனார்- மாமியாரை கவனிக் காத மருமகளை துரோகி என்றும், கவனிப்ப வர்களை, "சும்மாவா பார்க்கிறார்கள்; சொத்துக்காகதானே பார்க்கிறார்கள்' எனவும் ஏளனமாகப் பேசுவர். உண்மையில் இரண் டுமே தவறானது.

முதுமையில் யாரையும் சிரமப்படுத்தாமல், நடமாடி பேசிக்கொண்டிருக்கும்போதே மாரடைப்பால் மரணம் நேர்வது புண்ணியம் செய்தவர்களுக்கே வரம்போல் அமைகிறது. தாயார் உடல்நிலை சரியில்லாமல் படுத்தால், தாயாரையும் கவனிக்க முடியாமல்லி தாரத்திற் கும் பதில்சொல்ல முடியாமல் தவிக்கும் ஆண்கள் சாபம் பெற்றவர்களாக இருப்பார் கள். வயதானவர்களுக்கு நோய்வந்தால் அவர்களும் துன்பப்பட்டு, அவர்களைச் சார்ந்தவர்களையும் சிரமப்படுத்தவேண்டிய தாகிவிடுகிறது. அதற்காக நோயின்றி எந்த மனிதனின் வாழ்க்கையும் முடிவடையாது. இன்று ஒவ்வொருவரும் தன் வாழ்க்கையை வாழாமல், அடுத்தவரோடு ஒப்பிட்டு அவர் களின் வாழ்க்கையை வாழவே விரும்புகிறார் கள். இதனால் மனநோய் மக்களுக்கு அதிகரித்துவிட்டது. தன் பக்கத்தில் இருப்பவர் களுக்கு கேள்விப்படுகிற நோய் தனக்கும் வந்து விடுமோ என்கிற பயமே பலரை நோயாளி யாக்கிவிடுகிறது.

அந்தக் காலத்தில் தாய்மேல் பாசம் கொண்டவனைதான் திருமணம் செய்து கொள்ள பெண்கள் விரும்புவார்கள். தாய்ப் பாசம் கொண்டவனுக்குதான் குடும்பப்பற்று அதிகமிருக்கும் என்பதால், கட்டிய மனைவியைக் கைவிட மாட்டான் என்ற நம்பிக்கையுடன் பெண் கொடுப்பர். ஆனால் இன்று தாய்மேல் பாசம்கொண்டவனை

Advertisment

"அம்மா பிள்ளை என்றால் வரன் வேண்டாம்'

என்றும், "உங்க அம்மாதான் முக்கியமென்றால் அவளுக்கு தாலியைக் கட்டி குடும்பம் நடத்து; என்னை எதற்குத் திருமணம் செய்தாய்' என அருவருக்கத்தக்க கேள்வியும் கேட்டு அதற் கான நியாயத்தையும் சொல்கின்றனர்.

அம்மாவுக்குப் பணிவிடை செய்பவரை, "பொம்பளபோல் வேலை செய்றான்' என்றும், "திருநங்கைபோல இருக்கிறான்' எனவும் அவமானப்படுத்தி ஏளனப்படுத்துகிறார்கள்.

"என் சூழ்நிலை, என்னால் பெற்றோரைப் பார்க்க முடியவில்லை. என் உடன்பிறப்பு பார்த்துக்கொள்கிறார். அவருக்கு புண்ணியம் கிடைக்கவேண்டும். அவருக்கு நம்மால் முடிந்த உதவி செய்யவேண்டும்' என்னும் மனநிலையே பலருக்கு இல்லை. பெற்றோருக் குப் பணிவிடை செய்ய மனமில்லை என்பதை மறைத்தும், பெற்றோருக்கு கடமை செய்யும் உடன்பிறந்தவர்களுக்கு நற்பெயர் வரக்கூடாது என்றும் குடும்பத்தில் உள்ளவர்களே புரளி கிளப்புகிறார்கள் என்பதே மிகவும் வேதனையாக உள்ளது.

ஒவ்வொரு நாளும் பேசும் கடுஞ்சொல் லால் மன அழுத்தம் தாங்காமல் பல தாய்மார் கள் மனம் வெறுத்து, "மகன் நல்லா இருந்தா போதும்' என விலகிவிடுகிறார்கள். சில தாயார் மனம் தாங்காமல் தற்கொலையும் செய்துகொள்கின்றனர். இதில் பெண்களை விட ஆண்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகின் றனர். எந்தவொரு ஆணும், அப்பாவை கவனிக் கும் மகளை, தந்தை- மகள் உறவை இணைத் துக் கொச்சைப்படுத்திப் பேசுவதில்லை.

ஒரு பெண்ணுக்குக் கொடுக்கப்படும் கல்வி சமுதாயத்தில் நல்ல மாற்றத்தைத் தரும் என்றார்கள். ஆனால் இன்று பொறுமை, நிதானம், மனிதம், சகிப்புத் தன்மை பெண் களிடம் குறைந்துவிட்டது. பெண்கள் வேலைக் குச் சென்று வருமானம் ஈட்டியவுடன் ஆணவமாக நடக்கிறார்கள் என பேசுவதும் தவறு. வேலைக்கும் சென்று, குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் பிடித்த உணவை சமைத்துத் தந்து நல்ல பெயர் எடுப்பதெல்லாம் நடக்காத காரியம்.

குடும்பத்தில் யார் யாருக்கு எப்படிப்பட்ட நோய் வரும்- முதுமையில் பெற்றோர், மாமனார்- மாமியாரை தனியாகத் தவிக்க விடுவதால் உண்டாகும் தோஷத்திற்குப் பரிகாரம் உண்டா என்பது குறித்து இனி காண்போம்.

ஆறாமிடம்

ஒரு மனிதனுக்கு நோயைப்பற்றி அறிந்து கொள்ளுமிடம் ஆறாமிடம். ஆறில் அமர்ந்தி ருக்கும் கிரகம், ஆறாமதிபதி கிரகம், ஆறாமதி பதியுடன் இணைந்த, பார்த்த கிரகம், ஆறாமதி பதி பெற்ற சாரத்திற்கேற்ற நோய்தான் ஒருவருக்கு ஏற்படும். ஆறாமதிபதி நின்ற ராசிக் குரிய உடல் அவயங்களில் நோய் உருவாகும். பொதுவாக ஆறாமதிபதி தசாபுக்திக் காலங் களிலும், ஆயுள்காரகன் சனியின் பிடியிலிருக் கும்போதும் உடல்நிலையில் நோய், திடீர் விபத்தால் உடல்நலம் பாதிக்கப்படும்.

ஆறாமதிபதி கீழ்க்கண்ட ராசியாக வந்தால் நோய் தாக்கும் உறுப்புகள்:

மேஷம்: தலை, முகம், மூளை.

ரிஷபம்: உள்நாக்கு, கழுத்து, தொண்டை.

மிதுனம்: மூக்கு, நெஞ்சு, நுரையீரல், தோள்பட்டை, கை, விரல்.

கடகம்: வயிறு, மார்பு.

சிம்மம்: முதுகு, முதுகுத்தண்டு, இதயம்.

கன்னி: குடல் சார்ந்த பாதிப்பு.

துலாம்: கிட்னி, தோல் வியாதி.

விருச்சிகம்: ரத்தம், மர்ம ஸ்தானம், காது, மூலநோய்.

தனுசு: இடுப்பு, கல்லீரல், தொடை.

மகரம்: எலும்பு, முட்டி, பல், தோல்.

கும்பம்: கணுக்கால், காலின் கீழ்ப் பகுதி, ரத்த வியாதி.

மீனம்: நுரையீரல், குடல், கழிவுநீர், பாதம், கால் விரல்கள்.

ஆறாமிடத்தில் நிற்கும் கிரகங்களால் உண்டாகும் நோய்கள்:

சூரியன்: பித்தம், எலும்பு, உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய்.

சந்திரன்: சைனஸ், ஆஸ்துமா, நீர்சம்பந்தப்பட்ட நோய்.

செவ்வாய்: ரத்தப்புற்றுநோய், வெட்டுக்காயம், எலும்பு மஜ்ஜை, விபத்து, அறுவை சிகிச்சை.

புதன்: நரம்புத் தளர்ச்சி, வாயுத் தொல்லை, தோல்வியாதி.

வியாழன்: கழுத்து வலி, மூளை பாதிப்பு, ஜலதோஷம், சர்க்கரை வியாதி, உடல்நலக் குறைவு.

சுக்கிரன்: நீரிழிவுநோய், பிறப்புறுப்புக் கோளாறு, சிறுநீர் கழிப்பதில் பிரச்சினை.

சனி: விஷத்தால் பாதிப்பு, நரம்புநோய்.

ராகு: எலும்புமுறிவு, விஷம், எதிர் பாலினத்தவரால் நோய்.

கேது: ஜீரணக் கோளாறு, அறுவை சிகிச்சை, விஷ பாதிப்பு.

ஆறாமதிபதி பன்னிரண்டு இடங்களிலும் நிற்பதால் உண்டாகும் பலன்கள்:

ஒன்று

ஆறாமதிபதி லக்னத்தில் இருந்தால் அடிக்கடி நோய்வாய்ப்பட்டுக்கொண்டே இருப்பார். பயந்த சுபாவம் கொண்டவராக இருப்பார். எதையும் புரிந்துகொள்ளாமல் எதிர்த்துப் பேசுபவராகவும், யாரிடம் எப்படி பேசவேண்டும், எந்த நேரத்தில் எதைப் பேசவேண்டுமென தெரியாதவராக வும் இருப்பார். உண்மையை இவரிட மிருந்து எளிதாகப் பெற்றுவிடலாம்.

உற்றார்- உறவினர், நண்பர்களே எதிரியாக இருப்பர். பணவிஷயத்தில் கவனமாக இருக்கவேண்டும். கொஞ்சம் இரக்கப்பட்டா லும் ஏமாற்றிவிடுவர். ஜாமின் கையெழுத்து போடக்கூடாது. சுபகிரகப் பார்வை கெடுபல னைத் தடுக்கும். எதிரியால் ஜாதகரை வெல்ல முடியாது.

இரண்டு

ஆறாமதிபதி இரண்டில் இருந்தால் பொய் பேசுபவராகவும், சொன்ன சொல்லைக் காக்கமுடியாதவராகவும், நிலையான பேச்சின்றி, திடமான முடிவெடுக்கத் தெரியாமலும் இருப்பர். வாய்ப் பேச்சால் வம்பு வரும். குடும்பம் ஏதாவதொரு பிரச்சினையிலேயே இருக்கும். குடும்ப வாழ்க்கை கெடும். கடன்வாங்கி ஆடம்பரமாக வாழ்வார்கள். கண்டிப்புடன் குடும்பத்தை நிர்வகிக்கத் தெரியாதவராகவும், அவரது கட்டுப்பாட்டில் வைக்க முடியாமலும் தவிப்பர். ஆரம்பக் கல்வியில் மந்தத்தையும் தடை யையும் ஏற்படுத்தும். சுப கிரகப் பார்வை இருந்தால் ஓரளவு நேர்மையுடன், தனம், வாக்கு, செல்வம், செல்வாக்கு பெறுவர்.

மூன்று

ஆறாமதிபதி மூன்றில் இருந்தால் குடும்பத் தில் உடன்பிறந்தவர்களுடன் சண்டை, சச்சரவு, தொல்லை ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். கடனால் குடும்பத்தில் இடமாற்றம், அவமானம் உண்டாகும். பங்காளிப் பகை தோன்றும். தைரிய இழப்பு, சோம்பல்தனம் இருக்கும். பிறர் மதிக்கத்தக்க வகையில் பேசத் தகுதியில்லாத வராகவும், எதையும் வெளிப்படுத்தத் தயங்கு பவராகவும், கோழையாகவும் இருப்பார். வெளிப் பார்வைக்கு வீரமானவராகவும், உள்ளுக்குள் பயந்தவராகவும், நேரடியாக மோதாமல் உறவா டிக் கெடுக்கும் கொடியவராகவும் இருப்பர்.

நான்கு

நான்கில் ஆறாமதிபதி இருந்தால் உற்றார்- உறவினர் பகை உண்டாகும். வீடு, நிலம், சொத்து வகையில் பங்காளி- உறவினர் பகை வந்து கொண்டே இருக்கும். சொந்தங்களைவிட்டுப் பிரிந்திருத்தலே நல்லது. தாயாருக்கு உடல்நல பாதிப்பு, தாயால் அவமானம், தாயாரின் உறவுமுறை பாதிக்கப்படும். வாகனங்களால் நஷ்டம், வாகனங்களால் பாதிப்பு உண்டாகும். பணக்காரக் குடும்பத்தில் பிறந்தாலும், நாளுக்கு நாள் தேய்ந்து கடனாளியாக மாற்றும். நீதிமன்றப் படியேறும்நிலை வரும். பொதுவாகவே வாழ்வில் சந்தோஷங்கள் குறைவு. சுபகிரகப் பார்வை இருந்தால் பிறர் சொத்துகளை அனுபவிக்கும் யோகம் தரும். தன் பெயரில் சொத்துகள் இருக்காது; இருக்கக்கூடாது.

ஐந்து

பெற்ற பிள்ளைகளே எதிரியாக மாறுவர். பூர்வீகத்தில் வில்லங்கம் உண்டாகும். பூர்வீக நஷ்டமும், குலதெய்வக் குறையும் உண்டு. குல தெய்வத்தை வழிபட்டாலும் நன்மை நடக்காது. தெய்வத்தை நிந்தனைசெய்ய நேரும். குலதெய்வத்தை செய்வினை செய்து செயலிழக்க வைத்திருப்பர். தாய்வழி உறவினர், தாய்மாமன்மீது வழக்குபோடும் நிலை வரும். புத்திர தோஷத்தைத் தரும். கெட்ட எண்ணங்கள் உருவாக்கும். வாழ்க்கையில் கெடுதலே நடக்கும். ஈவு இரக்கமில்லாதவராக இருப்பர். இதய நோய்வரும். சுபகிரக இணைவு, பார்வை பலத்தைப் பொருத்து நேர்மை, நன்மைகள் உண்டு.

ஆறு

ஆறில் ஆட்சிபெறுவது நோய், எதிரி, கடனால் ஏதாவது கஷ்டம் தந்துகொண்டே இருக்கும். எதாவ தொரு விஷயத்தில் ஏதாவது வம்பு செய்துகொண்டே இருப்பர். கலகத்தை விரும்புவர். விலகிச் செல்பவர்களை யும் ஏதாவது ஒருவகையில் வம்பிழுத் துப் பிரச்சினை செய்வர். சுபகிரகப் பார்வை, இணைவு ஓரளவு பிரச்சினை யின்றி வாழ வகைசெய்யும். ஆறாமதி பதி பாவகிரகமாக இருந்து ஆறில் நின்றால்தான், "கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' வரும். நான்கு பேர் மதிக்குமளவு பெயர், புகழ், சம்பாத்தியம் கிடைக்கும். எதிரிகளால் திடீர் அதிர்ஷ்டம் கிட்டும். எதிரி களை வைத்தே முன்னேறுவர். எதிரிகள்முன்பு வாழ்ந்துகாட்டக் கூடிய அதிர்ஷ்டம் ஏற்படும்.

தொடர்ச்சி அடுத்த இதழில்...

செல்: 96003 53748