பெற்றோர் தங்கள் மகன் அல்லது மகளுக்குத் திருமணப் பொருத்தம் பார்க்கும் பொழுது, பல ஜாதகங்களைப் பார்ப்பதால் பாதி ஜோதிடர்களாகி, பலன் சொல்லுமளவிற்குத் தயாராகிவிடுகிறார்கள். ஆனால் அரைகுறையாக ஜோதிடத்தைத் தெரிந்துகொண்டு சுயமாக முடிவெடுப்பதால் நல்ல வரன்கள் தட்டிப்போக வாய்ப்புண்டு. நாம் என்னதான் ஜோதிடம் அறிந்தவராக இருந்தாலும் நம் ஜாதகம், நம் குடும்ப உறுப்பினர்கள் ஜாதகத்தை பிற ஜோதிடர்களிடம் காண்பித்துப் பலன்கள் தெரிந்துகொள்வதுதான் சிறப்பு. இனி சில ஜோதிடக் குறிப்புகளைப் பார்ப்போம்.

கல்வி கிரகம் புதன் ஜாதகத்தில் பலம் பெற்றால் படிப்பில் முதன்மை பெறுவார்கள் என்பது ஜோதிடவிதி. ஆனால் புதனின் வீடுகளான மிதுனம், கன்னியில் ராகு- கேது, சனி, செவ்வாய், சூரியன் இருந்தால் படிப்பில் தடைகள் ஏற்படும். கற்ற கல்வியானது வேலை, தொழில் செய்யும்பொழுது பயன்படாமல் போய்விடும். சனி இரண்டாமிடத்தில் இருந் தாலும், பார்த்தாலும் கல்வி தடைப்படும் வாய்ப் புகள் உருவாகும். இரண்டில் செவ்வாய் இருந் தாலும், பார்த்தாலும் கல்வியில் பாதிப்பு வரலாம்.

ki

எந்த ஒரு ஜாதகத்திலும் சூரியனுக்கு கேந்திரத்தில் (1, 4, 7, 10-ல்) ராகு இருந்தால் மிக கவனமாக இருக்கவேண்டும். வம்பு, வழக்கு வர வாய்ப்புகள் அதிகம். குற்றம் செய்து, குற்றவாளியாக காவல் நிலையத்திற்குச் செல்லவேண்டுமென்று அவசியமில்லை. சாமானிய மனிதர்கள் நல்ல விஷயத்திற்காகப் போராடினாலும் காவல் நிலையத்திற்கு குற்றவாளியாகச் செல்லநேரிடுகிறது. மேற்கண்ட கிரக அமைப்புகள் இருந்தால் வழக்குகள் வரும். எட்டாமிடம் மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பமாக இருந்து, சூரியன், செவ்வாய், குரு ஆகியோரில் ஒருவர் ஆட்சி, உச்சம்பெற்றால் காவல் நிலைய வழக்குகள் வர வாய்ப்புகள் அதிகம்.

லக்னத்திற்கு 8-ஆம் அதிபதியான கிரகம் எதுவோ அது ராசிக்கும் லக்னத்திற்கும் 1, 4, 7, 10-ல் இருந்தால் வழக்குத் தொல்லைகள் வரலாம். எந்த ஒரு ஜாதகத்திலும் லக்னாதி பதியைவிட எட்டாம் அதிபதி வலிலிமை பெறக் கூடாது. அவ்வாறிருந்தால், ஜாதகத்தில் யோக நிலைகள் இருந்தாலும் ஜாதகர் படாதபாடு படவேண்டியிருக்கும். பிறரால் வஞ்சிக்கப்படுவது, உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்காமல்போவது, பிறர் இவரைப் பயன்படுத்திக்கொண்டு பின்னர் கருவேப்பிலைபோல் தூக்கியெறிவது போன்ற நிலைகள் ஏற்படும். அதிலும் தீய கிரகங்களின் தசாகாலங்களில் வாழ்க்கையே வேண்டா மென்று சொல்லுமளவுக்கு நெருக்கடிகளை சந்திக்கவேண்டியிருக்கும்.

எந்த ஒரு ஜாதகத்திலும் இரண்டாமிடம் வலிலிமைபெற்றால்- சுபகிரகங்கள் இருந்தால், கையில் பணம் சரளமாகப் புரளும். வங்கி சேமிப்பு அதிகரிக்கும். மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். அதேபோல் 12-ஆமிடம் வலிலிமைபெற்றால்- 12-ல் சுபர்கள் இருந்தால், கேட்ட இடத்தில் பண உதவி கிடைக்கும். பெரிய அளவில் வசதி வாய்ப்புகள் இல்லாதவர்களாக இருப்பார்கள். ஆனால் அவர்களை நம்பி எவ்வளவு பெரிய தொகையையும் கடனாகக் கொடுப்பார்கள். அல்லது அவர்கள் கொடுக்கும் பணத்தைத் திரும்பத் தரவேண்டாமென்று பெருந்தன்மை யாகக்கூறி புண்ணியத்தை சம்பாதிப்பார்கள்.

அதேசமயம் புதனோடு சூரியன், சனி, ராகு- கேது, செவ்வாய் சம்பந்தப்பட்டால், வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்தமுடியாத சூழ்நிலை உருவாகிவிடும். கடன்தொகை ஏறிக்கொண்டே இருக்கும்.

எந்த ஒரு ஜாதகத்திலும் 12-ஆமிடத்தில் ஒரு பாவகிரகம் உச்சம் பெற்றால், அந்த கிரகத்தின் தசை வரும் காலத்தில் மகனையோ மகளையோ இழக்க நேரிட்டு புத்திரசோகத்தைத் தரும்.

தனுசு ராசியில் சூரியன், செவ்வாய் சனி, ராகு- கேது அமர்வது சிறப்பல்ல. சூரியன், செவ்வாய் ஒருவகையில் யோகம் கொடுத்தாலும், பிள்ளைகள் வகையில் தீராத பிரச்சினைகள், மனக்காயங்களை ஏற்படுத்தும். சிலசமயம் தலைக்குனிவு தரும். மீன ராசியில் பாவகிரகங் களான சூரியன், செவ்வாய், ராகு- கேது இருந்தால், பெற்றோரின் ஒத்துழைப்பு, பெற்றோரின் ஆசிகள் இல்லாமல் போகும். ஒருகட்டத்தில் பெற்றோரே எதிராக இருக்கும் சூழ்நிலை உருவாகும். இந்த அமைப்பைதான் முன்னோர் சாபம் என்று சொல்வார்கள். மீன ராசியில் இதுபோன்ற கிரகங்கள் இருந்தால் முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உதவிசெய்து புண்ணியங்களைத் தேடிக்கொள்ளலாம்.

ஆண்கள் ஜாதகத்தில் லக்னத்தில் செவ்வாய் இருந்தால், ஏதாவது ஒருகட்டத்தில் மனைவிமீது அர்த்தமற்ற, தேவையற்ற சந்தேக குணம் வந்துவிடும். அதேசமயம் ரிஷபம் அல்லது துலாம் ஏழாம் வீடாக அமைந்து, சனியும் செவ்வாயும் சேர்ந்திருந்தால், கணவனுக்குத் தெரிந்தே மனைவி துரோகம் செய்வாள். கணவனால் கட்டுப்படுத்த முடியாது.

எந்த ஒரு ஜாதகத்திலும் பாவகிரகங்கள் 2 அல்லது 10-ல் இருந்தால், எவ்வளவு வருமானம் வந்தாலும் கடன்பெறும் சூழல் உருவாகும். வறுமை வாட்டி வதைக்கும். லக்னாதிபதி ஏழாமிடத்தில் இருந்தால் பணக்காரர்கள் வீட்டில் திருமணம் நடக்கும். அல்லது கணவன்- மனைவி வந்தபிறகு செல்வச் செழிப்பு ஏற்படும். பிறப்பு ஜாதகத்தில் பத்தாம் அதிபதி இருக்கும் இடத்திற்கு கோட்சார சனி வரும்பொழுது தாயாருக்கு உடல் பாதிப்பு, கண்டங்கள் வர வாய்ப்புகள் அதிகம்.

பொதுவாக மூன்று, நான்கு, ஐந்து என கூட்டுகிரகங்கள் ஒரே ராசியில் 6, 8, 10, 12-ஆமிடங்களில் இருந்தால் திருமணம் நடப்பதில்லை. பலவகையில் முற்பட்டாலும் கடைசிவரை திருமணத்தை நடத்தவிடாமல் சந்நியாசி யோகத்தைத் தந்துவிடும்.

லக்னாதிபதியாக வரும் கிரகம் 6, 8, 12-ல் மறைந்துவிட்டால், முதல் தர ஜாதகமில்லை என்று சொல்லப்பட்டாலும், அந்த கிரகம் 1, 5, 9-ஆம் அதிபதியின் சாரம் பெற்றால் முதல் தர யோக ஜாதகம் என்ற நிலை வந்துவிடும். 4, 7, 10-ஆம் அதிபதி சாரம் பெற்றால் இரண்டாம் நிலை ஜாதகம் என்ற நிலை வரும். 2, 11-ஆம் அதிபதி சாரம் பெற்றால் மூன்றாம் நிலை ஜாதகம் என்ற நிலைக்குத் தள்ளப்படும்.

செல்: 98403 69513