Advertisment

தொழிலில் உன்னதமடையும் யோகம்! -எஸ். விஜயநரசிம்மன்

/idhalgal/balajothidam/yoga-excel-business-s-vijayanarasimhan

ருவரின் தொழிலை நிர்ணயம் செய்வது ஜோதிடருக்கு சுலபமான வேலையல்ல. ஏனெனில், பெருகிவரும் நவீன தொழில்நுட்பங்களின் காரணமாக, தொழிலைப் பெறுவதில் ஏற்படும் போட்டி காரணமாக, மாறுபட்ட புதுப்புதுப் பிரிவுகளில் சிறப்புப் பயிற்சிபெறுதல் போன்ற, முனிவர்களின் காலத்திலில் லாத தொழில்களெல்லாம் உருவாகியுள்ள நிலையில், தற்காலத்திற்கேற்ப கிரகங் களுக்கான தொழில் காரகங்களை அனுமா னித்து, தொழில்நிலை காண புத்திக்கூர்மையுடன் பலன்காண வேண்டியது அவசியமாகிறது.

Advertisment

பொதுவாக, தொழில்நிலை என்றவுடனே நம் கண்கள் 10-ஆமிடம் மற்றும் அதன் அதிபதியை மட்டுமே நோக்கிச் செல்லும். ஆனால், அனுபவத்தில் 10-ஆம் பாவம் மற்றும் அதன் அதிபதியை மட்டும் கொண்டு தொழிலை நிர்ணயம் செய்வது, சில நேரங்களில் தவறான முடிவுக்குக் கொண்டுசெல்கிறது. எனவே, 2-ஆமிடத்தையும், அதன் அதிபதியையும் கருத்தில் கொள்ளவேண்டும்.

இரண்டாமிடம் பொதுவாக ஜாதகரின் பொருளாதார நிலையை சீர்தூக்கிப் பார்க்க உதவுகிறது. ஜாதகரின் வருமானத் திற்கான வழிமுறைகளையும் 2-ஆமிடம் மற்றும் அதன் அதிபதிமூலமாக அறியமுடியும். எனவே, தொழில்நிலையைக் காண 2-ஆமிடத்தையும் இணைத்துப் பார்ப்பது அவசியமாகிறது. 10-ஆம் பாவம் மற்றும் அதன் பலம், தொழிலில் ஒருவரின் உயர் நிலையையும், கௌரவத்தையும் குறிகாட்டுகிறது.

dd

Advertisment

உதாரணமாக, ஜாதகர் ஆசிரியர் தொழில்மூலம் வருமானம் அடைவாரென்று 2-ஆம் பாவம் காட்டினாலும், 10-ஆமிடமே அவர் ஆரம்பப் பாடசாலை ஆசிரியரா அல்லது கல்லூரியில் பேர

ருவரின் தொழிலை நிர்ணயம் செய்வது ஜோதிடருக்கு சுலபமான வேலையல்ல. ஏனெனில், பெருகிவரும் நவீன தொழில்நுட்பங்களின் காரணமாக, தொழிலைப் பெறுவதில் ஏற்படும் போட்டி காரணமாக, மாறுபட்ட புதுப்புதுப் பிரிவுகளில் சிறப்புப் பயிற்சிபெறுதல் போன்ற, முனிவர்களின் காலத்திலில் லாத தொழில்களெல்லாம் உருவாகியுள்ள நிலையில், தற்காலத்திற்கேற்ப கிரகங் களுக்கான தொழில் காரகங்களை அனுமா னித்து, தொழில்நிலை காண புத்திக்கூர்மையுடன் பலன்காண வேண்டியது அவசியமாகிறது.

Advertisment

பொதுவாக, தொழில்நிலை என்றவுடனே நம் கண்கள் 10-ஆமிடம் மற்றும் அதன் அதிபதியை மட்டுமே நோக்கிச் செல்லும். ஆனால், அனுபவத்தில் 10-ஆம் பாவம் மற்றும் அதன் அதிபதியை மட்டும் கொண்டு தொழிலை நிர்ணயம் செய்வது, சில நேரங்களில் தவறான முடிவுக்குக் கொண்டுசெல்கிறது. எனவே, 2-ஆமிடத்தையும், அதன் அதிபதியையும் கருத்தில் கொள்ளவேண்டும்.

இரண்டாமிடம் பொதுவாக ஜாதகரின் பொருளாதார நிலையை சீர்தூக்கிப் பார்க்க உதவுகிறது. ஜாதகரின் வருமானத் திற்கான வழிமுறைகளையும் 2-ஆமிடம் மற்றும் அதன் அதிபதிமூலமாக அறியமுடியும். எனவே, தொழில்நிலையைக் காண 2-ஆமிடத்தையும் இணைத்துப் பார்ப்பது அவசியமாகிறது. 10-ஆம் பாவம் மற்றும் அதன் பலம், தொழிலில் ஒருவரின் உயர் நிலையையும், கௌரவத்தையும் குறிகாட்டுகிறது.

dd

Advertisment

உதாரணமாக, ஜாதகர் ஆசிரியர் தொழில்மூலம் வருமானம் அடைவாரென்று 2-ஆம் பாவம் காட்டினாலும், 10-ஆமிடமே அவர் ஆரம்பப் பாடசாலை ஆசிரியரா அல்லது கல்லூரியில் பேராசிரியரா ஏன்பதை நிர்ணயிக்கிறது. 10-ஆமிடத்தின், அதன் அதிபதியின் பலம், லக்னாதிபதி பலம் இவற்றைப் பொருத்தே அவர் பேராசிரியரா- தலைமைப் பேராசிரியரா- பல்கலைக்கழகத் துணைவேந்தரா என்பதை நிர்ணயிக்க முடியும். ஜாதகர் ஆசிரியர் தொழில்மூலம் வருமானமடைவாரா என்பதை நிர்ணயிப்பது இரண்டாமிடமேயாம்.

ஜாதக பாரிஜாதத்தில் கூறியுள்ளபடி சூரியன், புதன், குரு மற்றும் சனி ஆகியோர் பல்வேறு தொழில்களுக்குக் காரகராகிறார்கள். சூரியன்- அரசர், அரசியல்வாதிகள்; புதன்- வணிகம், வங்கி, தொழிற்சாலை; குரு- விவசாயம், பக்தி மார்க்கம், மதம் மற்றும் கற்பித்தல்; சனி சேவை மற்றும் யாசித்தல் ஆகும். ஆனால் எப்படி இந்தத் தொழில்களுக்கான சரியான காரகரைக் கண்டறிவது? ஜாதகர் உத்தியோகம் செய்வாரா? வியாபாரமா அல்லது விவசாயம் செய்வாரா? இந்தக் கேள்விகளுக்கான முடிவுகள், இந்த நான்கு காரகர்களையும் ஒன்றாகக் கலந்து முடிவுக்கு வர இயலாது. இது குழப்பத்தையே உண்டாக்கும்.

இரண்டாம் வீடு: சொத்து மற்றும் வருமானம் வரும் வழிகளைக் குறிகாட்டுகிறது. ஏனெனில், 11-ஆம் வீடு 2-ஆம் வீட்டுக்கு 10-ஆம் வீடல்லவா? காலபுருஷனுக்கு 2-ஆம் வீட்டதிபதி சுக்கிரனாவார். எனவே, சுக்கிரனே பிரதான காரகராவார். 10 மற்றும் 11-க்குரியவர் சனி; கர்மகாரகரும் அடையாளங் காணப்படவேண்டியவருமாவார். சனி, சந்திரன் இணைவு எண்ணங்களில் நிலையற்ற தன்மையையும், உணர்ச்சிவசப்படுதலையும் மற்றும் கவலைகளுக்கும் காரணமாகிறது. வெவ்வேறு ராசிகளில் சனியின் நிலை, அந்த ராசியின் இயற்கை குணம், அதன் அதிபதியின் குணத்தைப் பொருத்தும் மாறுபடுகிறது.

இவ்வாறாக லக்னத்திலிருந்து 2-ஆமிடமும், 10-ஆமிடமும் ஜாதகரின் தொழில்மீதான கட்டுப்பாட்டையும், காலபுருஷனுக்கு 2, 10-ஆமதிபதிகளான சுக்கிரன் மற்றும் சனியும் வாழ்வாதாரத்திற்குக் காரகராகி றார்கள்.

ஜாதகத்தில் 10-ஆம் வீடு ஒருவரின் தொழில் நிலையைக் காண மிக முக்கியமான பாவகமாகும். ஆனால் தனத்தைக் குறிக்கும் 2-ஆம் வீட்டை ஒதுக்கிவிடக்கூடாது.

ஜோதிட மாணவர்கள் தொழில்நிலை யைக் காண்பதற்கான கீழ்க்கண்ட விஷயங் களை முழுவதுமாக உள்வாங்கிக்கொள்ளல் வேண்டும்.

*"தொழிலானது சேவையா- வியாபாரமா அல்லது விவசாயமா என ஒவ்வொரு கிரகத்தாலும் ராசியாலும் குறிகாட்டப்படுகிறது.

* தனயோகத்தின் பலமானது, ஒருவரின் தொழிலில் கௌரவத்தை நிச்சயிக்கும். 10-ல் செவ்வாய் பலமிக்க தனயோகத்துடன் இருக்க ஜாதகர் இராணுவ ஜெனரலாக, காவல்துறை உயரதிகாரியாக அல்லது மந்திரியாக இருப்பார். அதுவே பலமற்ற தன யோகமானால், அவர் ஒரு சாதாரண சிப்பாயாகவோ, காவலராகவோ மட்டுமே இருப்பார். தனயோகத்தை நிர்ணயிக்க 2, 11, 5, 9 ஆகிய பாவகங்கள், அதன் அதிபதிகள், அவர்களின் இணைவுகள், பார்வைகள் மற்றும் பரிவர்த்தனைகள் ஆகியவை காணப்படவேண்டும். தரித்திர யோகத்தைக் கொடுக்கக்கூடிய கிரகம், ஒருவரை பிச்சையெடுக்கக்கூட வைத்துவிடும். தனயோகமோ ஒருவரை அரசனாகவோ அல்லது அதற்கு இணையானவனாகவோ ஆக்கி விடும்.

* ஒரு கிரகத்தைமட்டும் வைத்து தொழிலை நிர்ணயிக்க முடியாது. ஒரு கிரகக் குழுக்களின் தாக்கம் மற்ற கிரகங்களுடனான இணைவு மற்றும் தொடர்பே அதைத் தீர்மானிக்கும். பாவங்களும் இதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. உதாரணமாக குரு, புதன், சுக்கிரன் ஆகியோர், குறிப்பிட்ட பாவகங்களுக்குத் தங்கள் தாக்கத்தை தரவேண்டும். ஒரு வக்கீலின் ஜாதகத்தில், தர்க்கம் மற்றும் வாதத்திறமைக்குக் காரகன் புதனின் தாக்கம் இருக்கவேண்டும். சுக்கிரன், துலா ராசியின் அடையாளம் தராசு, நீதிக்கும் நேர்மைக்கும் காரகர் குரு, நியாயத்திற்கும் உண்மைக்கும் காரகராவார்.

* 5 மற்றும் 6-ஆம் பாவங்களும், முக்கிய பங்குவகிக்கின்றன. 6-ஆம் வீடு வழக்கு விவகாரங்களையும், 5-ஆம் வீடு, சீர்தூக்கிப் பார்க்கும் சாதுர்யத்தையும், அறிவுப்பூர்வமாக வாதிடும் திறமையையும், தந்திரமாக உண்மையைத் திரித்துப்பேசும் திறமையையும் குறிக்கிறது.

நவீனகாலத்தில், ஒவ்வொரு கிரகமும் பல தொழில்களுக்கான காரகங்களைக் கொண்டுள்ளன. எனவே, தொழிலைத் தீர்மானிக்க பல காரணிகளைக் கருத்தில் கொள்ளவேண்டும். அவை: ப் 2 மற்றும் 10-ஆமதிபதியின் ராசிகள் மற்றும் அவை நவாம்சத்தில் இருக்கும் ராசிகள்.

* காரகர்கள், சுக்கிரன் மற்றும் சனியைக் கருத்தில் கொள்ளவேண்டும்.

* 2 மற்றும் 10-ஆம் பாவத்தைப் பார்க்கும் மற்றும் இருக்கும் கிரகங்கள், 2 மற்றும் 10-ஆம் பாவாதிபதிகள் நிற்கும் இடங்கள். இவை யனைத்தும் ஒருவரின் தொழில்நிலை காண அலசி ஆராயப்படவேண்டிய காரணி களாகும்.

இனி, ஒரு ஜாதகரின் தொழில்பற்றி அறிய, 2-ஆமிடத்தையும் இணைத்து எங்ஙனம் பலனறிவது என காண்போமா?

நடிகர் அமிதாப் பச்சன் ஜாதகம்: பிறந்த நாள்: 11-10-1942. நேரம்: மாலை 4.00 மணி.

கும்ப லக்னம். 2-ஆமதிபதி குரு ராசி மற்றும் நவாம்சத்தில் உள்ளார். 10-ஆமதிபதி செவ்வாய் 8-ல் உள்ளார். அவர் சந்திரனின் நவாம்சத்தில் உள்ளார். இது செவ்வாயின் நீச நவாம்சமாகும். யோகக்காரகன் சுக்கிரன் ராசியில் நீசமாகவும், சுய நவாம்சத்திலும் உள்ளார். 10-ஆம் வீட்டைக் கருத்திற்கொண்டு மட்டும் இவரது நடிப்புத் தொழிலை நிர்ணயிக்கமுடியாது. ஏனெனில் 10-ஆமதிபதி செவ்வாய் கன்னி ராசியிலும், நவாம்சத்தில் தனது நீச ஸ்தானத்திலும் உள்ளார். 10-ஆம் வீடு குருவின் பார்வை மற்றும் வக்ரசனியின் பார்வையும் பெறுகிறது. இவைமட்டுமே ஒரு சூப்பர் நடிகரின் தொழிலை நிர்ணயிக்கப் போதுமானதல்ல.

தற்போது, 2-ஆமிடம் மற்றும் 2-ஆமதிபதி யைக் கருத்தில் கொள்ளவேண்டும். 2-ஆமதி பதி குரு உச்சமாகி, 6-ல் உள்ளார். அவர் வர்க்கோத்தம நிலையிலுள்ளார். 2-ஆமி டத்தை சுக்கிரன், சூரியன், புதன் மற்றும் செவ்வாய் ஆகியோர் பார்க்கின்றனர். குருவின் பார்வையும் 2-ஆமிடத்தின்மீது விழுகிறது. இது பல்வேறுபட்ட வழிகளில் பல்வேறு மாறுபட்ட செயல்பாடுகளைச் செய்வதன் மூலமாக ஜாதகருக்கு வருமானம் வருவதைக் குறிகாட்டுகிறது.

சுக்கிரன் சுய நவாம்சத்திலும், சனி, ராசிக் கட்டத்தில் சுக்கிரனின் ராசியிலும் உள்ளனர்.

இவ்வாறாக சந்திரன் மற்றும் சுக்கிரனின் தாக்கம் இவரை ஒரு உன்னதமான முன்னணி நடிகராக்கியது. அனேக கிரகங்களின் மீதான புதனின் தாக்கம் இவரை ஒரு சிறந்த வியாபாரி யாகவும் ஆக்கியது.

செல்: 97891 01742

bala020922
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe