ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்
வேதஜோதிட முறையில், ஒருவரின் பிறப்பு ஜாதகத்திலுள்ள ஜென்ம லக்னத் திலிருந்து கணக்கிட்டு, அதற்கு 9-ஆமிடத்தை அவர் முற்பிறவிகளில் செய்த புண்ணியத்தால் இப்பிறவி வாழ்வில் அனுபவிக்கும் நன்மைகளைக் குறிப்பிடும் "பூர்வபுண்ணிய ஸ்தானம்' என்றும்; அதற்கு அடுத்த வீடான 10-ஆமிடம், இப்பிறவி வாழ்வில் முன்னேற்றமடைய, ஜீவனத்திற்காகச் செய்யும் தொழில், செயல்களைக் குறிக்கும் கர்ம, ஜீவன ஸ்தானம் என்றும் கூறுவர். லக்னத்திற்கு 9, 10-ஆமிடங்களுக்குரிய கிரகங்கள் ஜாதகத் தில் அமர்ந்துள்ள பாவம், சேர்க்கை, உச்சம், நீசம், ஆட்சி, அஸ்தமனம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு, இந்த தர்மகர்மாதிபதி யோகத்தைக் கணக்கிட்டுக் கூறுவார்கள் வேதமுறை கணித ஜோதிடர்கள்.
சித்தர் பெருமக்கள் கூறிய சித்த ஜோதிடமுறையில் மேற்கண்டவற்றை அடிப்படையாகக் கொண்டு பலன் கூறுவதில்லை.
சித்தர் பெருமக்கள் ஒருவரின் ஜாதகத் தில் உள்ள கிரகங்களை அவரவர் குடும்ப உறவுகள், தொழில், சமுதாய நிலை என இந்த பூமியில் உள்ளவற்றுக்கும் நாம் பயன்படுத்தி வாழும் பொருட்களுக்கும் உதாரணமாகக் கூறினார்கள்.
ஒருவரின் பூர்வ ஜென்ம புண்ணியத்தை குருவை உதாரணமாக வைத்தும், தொழில், வருமானம், பதவி, புகழ், ஜீவன நிலையை சனியை உதாரணமாக வைத்தும் பலன் கூறினார் கள். கணித வகுப்பில் ஆசிரியர் ஷ், ஹ்- என்று உதாரணமாகக் குறிப்பிடுவதுபோல, சூரியன், சனி, செவ்வாய் என கிரகங்களை உதாரணமாகக் கூறியுள்ளார்கள். மனிதர்களது நன்மை- தீமைகளுக்கு அவரவர் முற்பிறவி பாவ- சாப- புண்ணியப் பதிவுகள்தான் காரணம் என்பதே சித்த ஜோதிடத்தின் அடிப்படை.
சித்த ஜோதிடமுறையில்; பிறப்பிலேயே தர்மகர்மாதிபதி யோகம் பெற்றுப் பிறந்த வர்கள் யார்? இப்பிறவியில், முன்பிறவிகளில் செய்த புண்ணியப் பலனை அனுபவித்து, உயர்வான வாழ்க்கையை அடைபவர் யார் என அறிவோம்.
காலபுருஷ ராசிச்சக்கரத் தத்துவப்படி, ஜாதகத்தில் மேஷத்தை முதல் ராசியாகவும், முதல் லக்னமாகவும், இதற்கு 12-ஆவது ராசியான மீனத்தை கடைசி ராசியாகவும், கடைசி லக்னமாகவும் கொண்டு பலனறிய வேண்டும். பிறந்த நேரத்தை வைத்து லக்னம் குறித்து பலனறியும் முறையைப் பயன்படுத்தி சித்தர்கள் பலன் கூறுவதில்லை.
சித்த ஜோதிடமுறையில், ஒருவர் எந்த லக்னம், ராசி, நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலும், அவரின் பிறப்பு ஜாதகத்தில், மேஷ ராசிக்கு 9-ஆவது ராசி தனுசு தர்மபுண்ணிய ஸ்தானம் என்றும்; அதற்கு 10-ஆவது ராசியான மகரம் கர்ம, ஜீவன ஸ்தானம் என்றும்; இந்த ராசிகளின் அதிபதிகளான குரு, சனி ஆகிய இரண்டு உதாரண கிரகங்களும், ஒரே ராசியில் இணைந்திருந்தாலும், அல்லது சனி, குரு இரண்டும் ஒன்றுக்கொன்று 1, 5, 9, 7, 2, 12-ஆம் ராசிகளில் இருந்தாலும், அந்த ஜாதகர் இப்பிறவியில் தர்மகர்மாதிபதி யோகம் பெற்றுப் பிறந்தவர் ஆவார்.
இவர்கள் தங்கள் முன்பிறவி களில் செய்த புண்ணியங்களுக்கு உண்டான நற்பலன்களை இப்பிறவியில் பூரணமாக அடைந்து, அனுபவித்து, உயர்வான வாழ்வை அடையும் யோகசாலிலிகள் என்று சித்தர்கள் கூறுகிறார்கள்.
தர்மகர்மாதிபதி யோகம்தரும் கிரகங்களான குருவும் சனியும், ஒருவர் பிறப்பு ஜாதகத்தில் முறையாக அமைந்திருக்க வேண்டிய நிலையை அறிவோம்.
உதாரண ஜாதகம் -1
இந்த ராசிக்கட்டத்தில் தர்மகர்மாதிபதி யோகத்தைக் குறிக்கும் உதாரண கிரகங்களான குரு, சனி இரண்டும், இணைந்து ஒரே ராசியில் இருந்தாலும் அல்லது ஒன்றுக்கொன்று 1, 5, 9-ஆமிடங்களில் ஒரே நட்சத்திர மண்டலத்தில் இருந்தாலும் தர்மகர்மாதிபதி யோகம் தரும் அமைப்பாகும். இதுபோன்ற கிரக அமைப்பு மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிகளில் இருந்தாலும் இந்த யோகப் பலனைத் தரும்.
இதுபோன்று குருவும் சனியும் எந்த ராசிகளில் இருந்தால் இவரின் முன்பிறவி புண்ணியப் பலனால் தொழில், பணம், பதவி, புகழ் இவரைத் தேடிவருமா? அல்லது இவர் சுய உழைப்பு, அறிவு, முயற்சியால் தொழிலை தானே உருவாக்கி வாழ்வில் உயரவேண்டுமா என்பதை துருவமுறையில் துல்லிலியமாக அறிந்து செயல்பட்டு யோகத்தை அடையவேண்டும்.
உதாரண ஜாதகம் -2
இந்த ஜாதகத்தில் முற்பிறவி புண்ணியங்களைக் குறிக்கும் உதாரண கிரகமான குரு சிம்ம ராசியிலும், தொழில், பதவி, பணம், புகழைக் குறிக்கும் உதாரண கிரகமான சனி அதற்கு 2-ஆமிடமான கன்னியிலும் உள்ளது. சனிக்கு 12-ல் குருவும், குருவுக்கு 2-ல் சனியும் இருப்பது தர்மகர்மாதிபதி யோக நிலையாகும்.
இதுபோன்ற ஜாதக அமைப் புள்ளவர்கள், தங்களின் சுய திறமைகளை அறிந்து, அதனைத் தன் செயல்களில் முறையாகப் பயன்படுத்தி, வளர்த்துக் கொண்டு நடைமுறை வாழ்வில் தொழில், உத்யோகம், பதவி, பணம், ஆகியவற்றைத் தாங்களே தேடி அமைத்துக்கொள்ளவேண்டும். இதுபோன்ற அமைப்புள்ள வர்களுக்கு தங்கள் முன்னோர்கள் தேடிவைத்த சொத்து, தொழில் என எதுவும் இல்லாதபோதும், இவர்களாகவே உழைத்து செல்வம் சம்பாதித்து தனவந்தராக உயர்ந்த நிலையை அடைவார்கள். இவர்களால் உருவாக்கப்பட்ட தொழில், ஸ்தாபனம், சொத்துகளை இவர்களால் பெரிதாக அனுபவிக்க முடியாது. இவர் காலத்திற்குப்பின் யார், யாரோ அனுபவித்து வாழ்வார்கள்.
உதாரண ஜாதகம் -3
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sivan_28.jpg)
இந்த ஜாதகத்தில் முன்பிறவி புண்ணியத்தைக் குறிக்கும் குரு விருச்சிக ராசியிலும், இதற்கு 12-ஆமிடமான துலா ராசியில் தொழில், பதவி, ஜீவனத்தைக் குறிக்கும் சனியும் உள்ளது. குருவுக்கு 12-ல் சனி இருப்பது தர்ம கர்மாதிபதி யோகநிலைதான்.
இதுபோன்று பிறப்பு ஜாதக அமைப்பிருந்தால் அவருக்கு வாழ்வில், தொழில், பதவி, பணம், புகழ் தேடிவந்து அமையும். அல்லது இவர்களின் முன்னோர்களோ அல்லது வேறு யாரோ உருவாக்கிவைத்த தொழில் ஸ்தாபனம், சொத்துகள் இவருக்குக் கிடைத்து, இவர் அதனை அனுபவித்து மேன்மேலும் தன் சுய அறிவு, உழைப்பு, முயற்சியால் பல மடங்காகப் பெருகச்செய்து, உன்னத நிலையை அடைவார். இவர் சம்பாதித்த சொத்துகளை இவர் குடும்பத்தாரும், உறவுகளும், வாரிசுகளும், இவருக்கு வேண்டியவர்களும் அனுபவிப்பார்கள்.
உதாரண ஜாதகம் -4
இந்த ஜாதகத்தில் குரு இருக்கும் துலா ராசிக்கு 7-ஆமிடமான மேஷ ராசியில் சனி உள்ளது. காலபுருஷ சக்கரத்தில் இவையிரண்டும் ஒன்றுக்கொன்று எதிரெதிர் ராசிகளில் உள்ளன. இதுவும் தர்மகர்மாதிபதி யோகமுள்ள அமைப்புதான்.
இதுபோன்ற அமைப்புள்ளவர்களுக்கு இவரின் முற்பிறவி புண்ணிய பலன் செயல்பட்டு, தனக்கு சரியான தொழில் எதுவென்று அவரே அறிந்து கொள்ளச் செய்துவிடும். இவர் தன் சுய அறிவால் அதனைச் சரியாகப் புரிந்துகொண்டு அந்தத் தொழிலை சிறியதாகத் தொடங்கி விட்டாலும் அல்லது ஒரு சாதாரண பதவி கிடைத்துவிட்டாலும், அதன்பின்னர் பிறர் உதவி கிடைத்து, இந்த யோக பலத்தால் பெரிய நிறுவனமாக உயர்த்தி, வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவார்கள். பொதுவாக உலகில் மிக உயர்ந்த பதவிகளை வகித்தவர் கள், வகிப்பவர்கள், பெரிய தொழிலதிபர்கள் அனைவரும் இந்த தர்மகர்மாதிபதி யோகத்துடன் பிறந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள்.
தர்மகர்மாதிபதி யோகத்துடன் பிறந்தும், உதாரண கிரகங்களான குரு, சனியுடன், முற்பிறவி பாவப் பதிவுகளைக் குறிப்பிடும் உதாரண கிரகமான ராகுவும், வம்ச சாபங்களைக் குறிப்பிடும் உதாரண கிரகமான கேது வும் சம்பந்தம் பெற்றுவிட்டால், அவருக்கு யோக பலத்தால் நன்மைகள் கிடைத்தபோதும், அவற்றை முழுமையாக அனுபவிக்க முடியாமல் தடுக்கும். வாழ்வில் உயர்வடைய சந்தர்ப்பமும், சூழ்நிலையும், பிறர் உதவியும் கிடைத்தாலும், இவர்களின் அறிவற்ற நிலையால் பாவ- சாப தாக்கத்தால், இவர்களே கெடுத்துக்கொண்டு கஷ்டங்களை அடைவார்கள்.
கற்பனையிலும், ஏதோ ஒரு நம்பிக்கை யிலும் வாழ்ந்துகொண்டு கஷ்டப்படுவர்களும் இவர்கள்தான். பிறசக்திகள் நம்மைக் காப்பாற்றும் என்னும் நம்பிக்கையில் வாழ்ந்து, தானும் சிரமப்பட்டு, தன் பூர்வீகச் சொத்துகளையும் அழித்து, தன் குடும்பத்தாரையும், சிரமத்தில் வாழச்செய்து விடுவார்கள். இவர்கள் முற்பிறவி புண்ணிய பலனை வாழ்வில் அடைந்து கொள்ளத் தெரியாதவர்கள் எனலாம்.
தர்ம கர்மாதிபதி யோகத்துடன் பிறந்தவருக்கு யோகம் செயல்பட்டு, அவர் செய்யும் தொழில், உத்யோகம், வியாபாரம், அரசியல், இவற்றில் செல்வத்தை அள்ளித்தந்து செல்வந்தராக்கிவிடும். காலச்சக்கர சுழற்சி உயர் அதிகாரப் பதவியில் வைத்து அழகுபார்த்துவிடும். தொழில், அரசியலில் தலைமைப் பதவியைத் தந்து, அரசனைப்போல் புகழுடன் வைத்துவிடும். இதனைத்தான் அகத்தியர் "கருவில் அமைந்தாற்போல்' என்கிறார்.
இப்பிறவியில் ஒருவர் நல்லவரோ- கெட்டவரோ- அவர்கள் வாழ்வில் எழுச்சியையும், வீழ்ச்சியையும், நன்மை, தீமைகளை அனுபவிக்கும் நிலைக்கு அவரவரின் முன்பிறவி பாவ- சாப- புண்ணிய வினைப்பதிவுகள்தான் காரணம் என்பது சித்தர்களின் வாக்கு.
தர்மகர்மாதிபதி யோகம் பற்றிய இன்னும் சில விளக்கங்ளையும், இதுபோன்று தர்மகர்மாதிபதி யோகம் பெற்றுப்பிறந்து, தன் பகுத்தறிவு, திறமை, சுய உழைப்பால் இந்த யோகப்பலனை அடைந்து, வாழ்வில் உயர்ந்தவர்கள் சிலரைப்பற்றி அறிவோம்.
(தொடர்ச்சி அடுத்த இதழில்)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-11/sivan-t.jpg)