எல்லாரும் முடிந்தவரை உழைத்து முன்னேறவேண்டுமென்று விரும்புகிறோம்.குந்தித் தின்றால் குன்றும் வற்றும் என்பர். எவ்வளவு சொத்திருந்தாலும் உட்கார்ந்து சாப்பிட்டால் எவ்வளவு நாள் இருக்கும் என்பது பழமொழி. எவ்வளவு பணக்காரராக இருந்தாலும் உழைத்தால்தான் எதிர்கால வாழ்க்கை நன்றாக இருக்கும். நாம் உழைக்கத் தயாராக இருந்தாலும் சில நேரங்களில் உழைப்பு பயனில்லாமல் போய்விடுகிறது. அது ஏனென்றால் நம் உழைப்புக்கு சமுதாயத்தில் உண்டாகும் எதிர்ப்புதான். சிலருக்கு எதிரி களால் ஏற்படும் தொல்லைகளை சமாளிப் பதே முக்கியச் செயலாகி, அவர் தனது சொந்தத் தொழிலைச் செய்யமுடியாமல் போய்விடு கிறது. இவ்வளவு கொடுமையான எதிர்ப்பு யாருக்கு- யாரால்- எப்போது ஏற்படும் என்பதைக் காணலாம்.
ஜோதிடரீதியாக, ஜனன லக்னத்திற்கு 6-ஆமதிபதி அதிபலம் பெற்று, ஜென்ம லக்னாதிபதி பலமிழந்து காணப்படும் ஜாத கருக்கு எதிர்ப்பு ஏற்படுகிறது. ஜென்ம லக்னத் திற்கு 6-ஆம் வீட்டை வைத்து எதிர்ப்பு பற்றியும், எதி
எல்லாரும் முடிந்தவரை உழைத்து முன்னேறவேண்டுமென்று விரும்புகிறோம்.குந்தித் தின்றால் குன்றும் வற்றும் என்பர். எவ்வளவு சொத்திருந்தாலும் உட்கார்ந்து சாப்பிட்டால் எவ்வளவு நாள் இருக்கும் என்பது பழமொழி. எவ்வளவு பணக்காரராக இருந்தாலும் உழைத்தால்தான் எதிர்கால வாழ்க்கை நன்றாக இருக்கும். நாம் உழைக்கத் தயாராக இருந்தாலும் சில நேரங்களில் உழைப்பு பயனில்லாமல் போய்விடுகிறது. அது ஏனென்றால் நம் உழைப்புக்கு சமுதாயத்தில் உண்டாகும் எதிர்ப்புதான். சிலருக்கு எதிரி களால் ஏற்படும் தொல்லைகளை சமாளிப் பதே முக்கியச் செயலாகி, அவர் தனது சொந்தத் தொழிலைச் செய்யமுடியாமல் போய்விடு கிறது. இவ்வளவு கொடுமையான எதிர்ப்பு யாருக்கு- யாரால்- எப்போது ஏற்படும் என்பதைக் காணலாம்.
ஜோதிடரீதியாக, ஜனன லக்னத்திற்கு 6-ஆமதிபதி அதிபலம் பெற்று, ஜென்ம லக்னாதிபதி பலமிழந்து காணப்படும் ஜாத கருக்கு எதிர்ப்பு ஏற்படுகிறது. ஜென்ம லக்னத் திற்கு 6-ஆம் வீட்டை வைத்து எதிர்ப்பு பற்றியும், எதிர்ப்பு யார்மூலம் ஏற்படும் என்பதையும் கூறமுடியும். பொதுவாக 6-ஆம் வீட்டின் அதிபதியைவிட ஜென்ம லக்னாதி பதி பலம்பெற்றிருந்தால் எதிர்ப்பில்லாமல் இருக்கும். அதுபோல 6-ஆம் வீடு உபஜய ஸ்தானம் என்பதால், 6-ல் சனி, செவ்வாய், சூரியன், ராகு போன்ற பாவ கிரகங்கள் அமையப்பெற்றால் எதிர்ப்பை சமாளிக்கும் வலிமை, எதிரிகளைப் பந்தாடும் பலம் உண்டாகும். 6-ஆமதிபதி பலமிழந்து காணப் பட்டாலும், 6-ஆம் வீட்டை சனி, செவ்வாய் போன்ற பாவிகள் பார்வை செய்தாலும் எதிரிகளை சமாளிப்பதே மிகப்பெரிய வேலையாகிவிடும். அதிலும் குறிப்பாக சனி பார்வை 6-ஆம் வீட்டிற்கு இருந்தால் வாழ்வில் எதிரிகளால் மிகப்பெரிய பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.
பொதுவாக யாரால் எதிர்ப்பு உண்டாகு மென பார்க்கும்போது, ஜென்ம லக்னத்திற்கு 6-ஆம் வீட்டிலுள்ள கிரகமும், 6-ஆமதிபதி சேர்க்கைபெறும் கிரகமும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஒருவர் ஜாதகத்தில் ஜென்ம லக்னாதிபதி பலமிழந்து 6-ஆமதிபதியுடன் இணைந்திருந்தாலும், 6-ல் அமையப்பெற்றா லும் ஜாதகரே அவருக்கு எதிரியாகவும், அவரின் செயல்பாடுகளே அவரின் முன்னேற் றத்திற்கு இடையூறாகவும் அமைந்துவிடுகிறது.
6-ஆம் வீட்டின் அதிபதியைவிட ஜென்ம லக்னாதிபதி பலம்பெறுவது மிகவும் உத்தமம். லக்னத்திற்கு 2-ஆமதிபதி பலமிழந்து, 6-ஆமதி பதியுடன் இணைந்திருந்தால் குடும்பத்தில் உள்ளவர்களே எதிரியாக மாறும் நிலை, கொடுக்கல்- வாங்கலில் ஏற்பட்ட பிரச்சினை எதிர்ப்பாக மாறும் சூழ்நிலை, கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியாத சூழ்நிலையால் எதிர்ப்பு உண்டாகும் அமைப்பு ஏற்படும்.
அதுபோல் ஜென்ம லக்னத்திற்கு 3, 6-க்கு அதிபதிகள் இணைந்து, 3-ஆமதிபதி பலமிழந்திருந்தால் சகோதர- சகோதரிமூலம் எதிர்ப்பு உண்டாகிறது. 3, 6-க்கு அதிபதியுடன் பலமிழந்த செவ்வாய் சேர்க்கை உண்டானா லும், செவ்வாய் வக்ரகதியில் இருந்தாலும் உறுதியாக சகோதரனுடன் பகைமை உண்டாகும். சகோதரர் இல்லையென்றால் பங்காளியுடனாவது எதிர்ப்புண்டாகும்.
ஜென்ம லக்னத்திற்கு 4-ஆமதிபதி பலமிழந்து 6-ஆமதிபதியுடன் சேர்க்கை பெற்றால் நெருங்கிய நண்பர்களே எதிரி யாகும் சூழ்நிலை, 4, 6 அதிபதியுடன் சந்திரன் இணைந்தால் தாயே எதிரியாகும் அமைப்பு, தாய்வழி உறவினர்கள் எதிரியாகும் சூழ்நிலை உண்டாகும்.
அதுபோல ஜென்ம லக்னத்திற்கு 5-ஆமதி பதி பலமிழந்து 6-ஆம் வீட்டில் அமையப் பெற்றாலும், 6-ஆமதிபதியுடன் இணைந் திருந்தாலும் பங்காளிகள் மற்றும் புத்திரர்கள் எதிரியாகும் சூழ்நிலை உண்டாகும்.
பொதுவாக 7-ஆம் வீட்டை களத்திர ஸ்தானம் என்றும், கூட்டுத் தொழில் ஸ்தானம் என்றும் கூறுவார்கள். 6-ஆமதிபதியுடன் 7-ஆமதிபதி இணைந்து பாவிகள் பார்வைபெற்றால், கைப்பிடித்த மனைவியே எதிரியாகும் சூழ்நிலை உண்டாகும். குறிப்பாக 7-ஆமதிபதி பலமிழந்து 6-ஆமதிபதியுடன் இணைந்து, உடன் சுக்கிரன் பலமிழந்து இருந்தாலும், வக்ரம் பெற்றிருந்தாலும் வாழ்நாள் முழுவதும் மனைவியே எதிரியாக இருக்கும் சூழ்நிலை உண்டாகும். 6, 7-க்கு அதிபதி சேர்க்கைபெற்று, 7-ஆமதிபதி பலமிழந்தால் கூட்டாளிகள் எதிரியாக மாறும் சூழ்நிலை உண்டாகிறது.
தந்தை ஸ்தானமான 9-ஆம் வீட்டின் அதிபதி பலமிழந்து 6-ஆமதிபதியுடன் இணைந்தால் தந்தையும், தந்தைவழி உறவினர் களும் எதிரியாக மாறும் சூழ்நிலை, 6, 9-க்கு அதிபதிகள் சேர்க்கையுடன் சூரியன் இணைந் தால் உறுதியாக தந்தையால் மிகப்பெரிய எதிர்ப்பை எதிர்கொள்ளநேரிடும்.
தொழில் ஸ்தானமான 10-ஆமதிபதி பலமிழந்து 6-ல் அமைந்தாலும், 6-ஆமதிபதி யுடன் இணைந்திருந்தாலும் செய்யும் தொழிலில் எதிர்ப்பு, உத்தியோகத்தில் இருந்தால் சக ஊழியர்கள் எதிர்ப்பு என பல்வேறு சோதனைகளை சந்திக்கநேரிடும்.
11-ஆமதிபதி பலமிழந்து 6-ஆமதிபதி சேர்க்கைபெற்றால் மூத்த உடன்பிறப் புடனும், நெருங்கிய உறவினர்களுடனும் எதிர்ப்பைச் சந்திக்க நேரிடும்.
பொதுவாக 6-ஆமதிபதியுடன் சேர்க்கை பெறும் கிரகத்தின் இயல்புக்கேற்ப எதிர்ப்புகள் ஏற்படும் என்றாலும், 6-ஆம் வீட்டை குரு போன்ற சுப கிரகங்கள் பார்வை செய்தால் எதிர்ப்பை சமாளிக்கும் திறன் ஏற்படும். எதிர்ப்புகள் இருந்த இடம் தெரியாமல் மறையும்.