சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்
வீடு
ஒவ்வொருவரும் தனக்கு சொந்தமாக ஒரு வீடு வேண்டுமென்று ஆசைப்படுவார்கள். உழைத்துப் பணம் சேமித்து, ஒரு வீடுகட்டத் தொடங்கும்போது ஜோதிடரிடம் சென்று நல்லநாள் பார்த்து, பண்டிதர்களைக் கொண்டு பூமிபூஜை செய்து, வாஸ்துநாள் பார்த்து வீடு கட்டத் தொடங்குகின்றனர். இவ்வாறு தொடங்குபவர்களில் சிலர் சரியாக வீட்டைக் கட்டி முடித்துவிடுகின்றனர். சிலர் முழுமையாக முடிக்கமுடியாமலும், சிலர் கட்டிய வீட்டை விற்கவும் நேர்கிறது. இன்னும் சிலர் வீடு கட்டும்போதே விபத்துகள் நேரிடுவது உள்ளிட்ட பல சிக்கல்களை சந்திக்கிறார்கள்.
இதற்கு வீடுகட்டத் தொடங்கிய முகூர்த்த நாளன்று கோட்சாரத்தில் நிலவிய கிரகநிலை களே காரணமாகும்.
வீடு, கட்டடம் ஆகியவற்றைக் குறிக்கும் உதாரண கிரகம் சுக்கிரன். வீடுகட்ட ஆரம்பிக்கும் முகூர்த்த நாளன்று கோட்சாரத்தில் சுக்கிரன் இருக்கும் நிலையை அறிந்து தொடங்க வேண்டும்.
அந்த நாளில் சுக்கிரனுக்கு 1- 5- 9, 3- 7- 11, 2- 12 ஆகிய ராசிகளில் குரு இருந்தால், எந்தவிதமான இடையூறுகள், தடைகள் இல்லாமல் நினைத்த படி வீட்டைக் கட்டிமுடித்து விடலாம். அந்த வீடு எவ்விதமான தோஷ பாதிப்புமில்லாத வீடாக அமைந்துவிடும்.
அந்த நாளில் சுக்கிரனுக்கு 1- 5- 9, 2 ஆகிய ராசிகளில் கேது இருந்தால், வீடுகட்ட பணத் தட்டுப்பாடு, கடன், தடைகள் போன்றவை ஏற்பட்டு, நினைத்தபடி வீடுகட்ட முடியாமல் தாமதமாகும். சுக்கிரனுக்கு 1- 5- 9, 2 ஆகிய ராசிகளில் ராகு இருந்தால் வீட்டின் உரிமை யாளருக்கு நோய்த் தாக்கம் அல்லது கட்டடத்திற்கு விபத்து உள்ளிட்ட சிக்கல்கள் நேரும்.
வாகனம்
இன்றைய நாளில் வசதி யுள்ளவர்கள், இல்லாதவர் கள், தொழில், வியாபா ரம் செய்பவர்கள் என எல்லாருமே தங்களுக் கென்று சொந்தமாக ஒரு வாகனம் வாங்கிக்கொள்கின்றனர். இந்த வாகனங்களை வாங்க அதிர்ஷ்டமான முகூர்த்த நாட்களை இங்கு காண்போம்.
புதிதாக வாகனம் வாங்கும் நாளில், வாகனங் களைக் குறிப்பிடும் உதாரண கிரகமான சுக்கிரனுக்கு 1- 5- 9, 3- 7 -11, 2- 12 ஆகிய ராசிகளில் குரு இருந்தால் வாகனங்கள் வாங்கலாம். அவை எந்தவிதமான பிரச்சினைகளையோ செலவு களையோ தராது. விபத்துகள் நேராது.
அந்த நாளில் சுக்கிரன் இருக்கும் ராசிக்கு 1- 5- 9, 2 ஆகிய ராசிகளில் கேது இருந்தால் வாகனங் கள் வாங்கக் கூடாது. அவ்வாறு வாங்கினால் அடிக்கடி பழுதாகும். செலவுகளைத் தரும்.
கடன் நெருக்கடி ஏற்பட்டு வாகனம் கை விட்டுப் போகக்கூடும் அல்லது வாகனத்தால் விபத்து போன்ற பிரச்சினைகளை சந்திக்க நேரலாம். தொழில் சம்பந்தப்பட்ட வாகனங் கள் என்றால் தொழில் தடையாகும்; வருமானமில்லாமல் போகும்.
சுக்கிரனுக்கு 1- 5- 9, 2 ஆகிய ராசிகளில் ராகு இருந்தால் அந்த வாகனத்தால் விபத்துகள், நஷ்டங்கள், வழக்குகளை சந்திக்க நேரும்.
கல்வி
அடுத்து ஒரு குழந்தை சிறப்பாகக் கல்விகற்று வெற்றிபெற, கல்வியைத் தொடங்கவேண்டிய முகூர்த்த நாள் பற்றிக் காண்போம். கல்வி, அறிவு போன்றவற்றைக் குறிப்பிடும் உதாரண கிரகம் புதன். குழந்தைகளைக் கல்வி கற்க பள்ளியில் சேர்க்கும் நாளன்று, புதனுக்கு 1- 5- 9, 3- 7- 11, 2- 12 ஆகிய ராசிகளில் குரு இருந் தால் கல்வி கற்கத் தொடங்கலாம். புதனுக்கு மேற்சொன்ன ராசிகளில் செவ்வாய் இருக்கும் நாட்களில் கல்விபயிலத் தொடங்கக்கூடாது. அவ்வாறு தொடங்கினால் கல்வியில் தடை உண்டாகும். புதனுக்கு 1- 5- 9, 2 ஆகிய ராசிகளில் கேது இருந்தால் கல்விபயிலத் தொடங்கக்கூடாது. அவ்வாறு பள்ளியில் சேர்த்தால் கல்வி தடைப்படும்.
தொழில்
ஒரு மனிதன் வாழ்க்கையில் உயர்வடைய ஏதாவதொரு தொழில், வியாபாரம் செய்யவேண்டும். அவ்வாறு செய்பவர்களில் சிலர் உயர்வு பெற்றுவிடுகின்றனர். சிலர் கை முதலை இழந்து கடனாளியாகிவிடுகிறார்கள். இதற்குப் பல்வேறு காரணங்கள் உண்டு. தொழில், வியாபாரம் ஆகியவற்றைக் குறிப்பிடும் உதாரண கிரகம் சனி. தொழில் ஆரம்பிக்கும் நாளன்று சனி இருக்கும் ராசிக்கு 1- 5- 9 அல்லது 3- 7- 11 அல்லது 2- 12-ஆவது ராசிகளில் குரு இருந்தால் தொழில், வியாபாரம் சுமுகமாக- ஏற்றமாக- எவ்வித பிரச்சினையுமில்லாமல் நடைபெறும். தொடக்கத்தில் சாதாரணமாக ஆரம்பித்தாலும் தொழில் படிப்படியாக உயர்வடைந்துவிடும். தொழில் தொடங்கும் நாளன்று சனிக்கு 1- 5- 9, 3- 7- 11 அல்லது 2- 12 ஆகிய ராசிகளில் சுக்கிரன் இருந்தால் தொழில், வியாபாரம்மூலம் பெருத்த ஆதாயம் கிடைக்கும். பொருளாதாரம் உயர்வடையும். சனிக்கு மேற்கண்ட ராசிகளில் புதன் இருந்தால் வியாபாரத்தில் நல்ல லாபம் கிட்டும். வியாபார உத்தி, யோசனைகள் சிறப் பாக செயல்படும். நண்பர்களால் உதவி கிட்டும். கூட்டுத்தொழில் நன்மை தரும். பல பொருட்களை வியாபாரம் செய்யலாம்.
சனி இருக்கும் ராசிக்கு 1- 5- 9, 3- 7- 11, 2- 12 ஆகிய ராசிகளில் செவ்வாய் இருந்தால் தொழில், வியாபாரத்தில் போட்டிகள் அதிகம் ஏற்படும். பலவிதமான எதிர்ப்புகளை சந்திக்க நேரிடும். பலரது தொழில் தடைப்பட்டு முடங்கிப் போகும். கடன் தொல்லைகள் உருவாகி சிரமம் தரும். சிலருக்கு முதலீடு செய்த பணம் மொத்தமும் போகக்கூடும். அந்த நாளில் சனி இருக்கும் ராசிக்கு 1- 5- 9, 2 ஆகிய ராசிகளில் கேது இருந்தால், அந்தத் தொழில் பலவித தடைகளை சந்தித்து முடங்கிவிடும். முதலாளியாக இருந்தவர் தொழிலாளியாக மாறிப் பிழைக்க நேரிடும். அதே நாளில் சனி இருக்கும் ராசிக்கு 1- 5- 9 ஆகிய ராசிகளில் ராகு இருந்தால், ஆரம்பித்த தொழில், வியாபாரம் முடங்கி, தரித்திர நிலையை உண்டாக்கிவிடும்.
தொழில், வியாபாரத்தில் நஷ்டங்களை சந்திப்பதற்கும், சரியான தொழில் அமையாமல் பல தொழில்களைச் செய்து பிழைப்பதற்கும், தொழி-ல் சம்பாதித்த பணத்தை விரயம் செய்வதற்கும், கூட்டாளிகளால் ஏமாற்றப் படுவதற்கும்- இன்னும் இதுபோன்ற அனைத் திற்கும் அவரது வம்ச முன்னோர்கள் காலத் திலும், அவரது முற்பிறவியிலும் ஏற்பட்ட பாமர சாபங்களே காரணமாகும்.
செல்: 99441 13267