இப் பூவுலகில் நம் பிள்ளைகள் நன்கு படித்து கல்விமானாகி, ஒரு மருத்துவராக, பொறியாளராக, ஆட்சியராக, இன்னும் பலவாக உயரவேண்டுமென்னும் ஆசை, கனவில்லாத பெற்றோர்களும் உண்டோ?
ஒரு ஜாதகர் கல்வியில் சிறந்து விளங்குவாரா? எந்தத்துறையில் அவர் பிரகாசிப்பார் போன்ற கேள்விகளுக்கு இந்தக் கட்டுரையின்மூலம் பதில் காணலாம்.
எவரெவரோ என்னென்னவோ படித்துவிடுகின்றனர். வசதியில்லாத குடும்பத்தில் பிறந்தவர்களும், தன் ஒளிமிக்க அறிவால் தெருவிளக்கில் படித்துத் தெளிவடைந்து, கிரகங்களின் வலிமையால் தேர்ச்சிபெற்று, தேசநலன் காத்து நாடுபோற்றும் நல்லவர்களாக, வல்லவர்களாகத் திகழும் நிலையைப் பல ஜாதகங்களில் பார்க்கிறோம். இதற்குக் காரணமென்ன? வித்யா காரகன் புதன் சிறப்பாக அமைந்த ஜாதகங்கள் சிறப்படைகின்றன. நற்கல்வியின் உச்சத்தை அடைகிறார்கள். 2-ஆமதிபதி ஆட்சி, உச்சம் பெற்று, சுப கிரகங்களின் பார்வை பெறின் இன்னும் சிறப்பே.
ஒரு ஜாதகத்தில், ஜாதகரின் கல்விபற்றிய நிலை அறிய 2, 4, 5, 11-ஆம் பாவங்களின் நன்னிலைகளை ஆராயவேண்டும். இத்துடன் 8, 12-ஆம் பாவங்கள், பாவாதிபதிகள் சம்பந்தம்பெற கல்வி சிறக்காது- இருக்காது என்பதை அறியவேண்டும். 2-ஆம் பாவம் ஜாதகரின் ஆரம்பக் கல்வி நிலையை உரைக்கும். 2-ஆமிடம் பள்ளிப் பருவத்தையும், 4-ஆமிடம் இளங்கலைக் கல்வியையும், பட்டயப் படிப்பு ஆகியவற்றையும் குறிக்கும். 2, 9, 11-ஆம் பாவத்தொடர்பு- பிஎச்.டி எனும் மிக உயர்ந்த கல்வியையும், 2, 11-ஆம் பாவத்தொடர்பு ஆராய்ச்சிப் படிப்பையும் குறிக்கும்.
அடுத்து ஜாதகருக்குப் படிப்பின் நிலை எங்ஙனம் இருக்குமென்பதைப் பார்ப்போம். ஜாதகத்தில் 6, 8, 12-ல் ராகு இருந்து, ராகு தசையில் ஜாதகருக்குப் படிப்பே வராது.
சந்திரன், ராகு இணைவிருக்க, அவருக்கு நல்ல படிப்பு வரும்.
புத

புதன், செவ்வாய் இணைவால் படிப்பில் ஜாதகருக்குத் தடைகள் ஏற்படும்.
ஜாதகத்தில் 2, 5, 11-ஆமிட சம்பந்தம் ஏற்படும்போது ஜாதகர் முதுநிலைப் பட்டம் பெறுவார்.
இனி, பலவகை கிரக இணைவுகள் மூலமாக, எவருக்கு எவ்விதக் கல்வி அமையும் என்பதைக் காண்போமா...
ஜாதகத்தில் 4, 9, 11-ஆம் பாவங்கள் தேர்வுகளில் வெற்றியையும், நான்காமதிபதி 4, 9, 11-ஆம் பாவத் தொடர்பு உயர்கல்வியில் தேர்ச்சியையும் குறிகாட்டும்.
தொழிற்கல்வி அமையவேண்டுமெனில் சந்திரன், செவ்வாய் அல்லது சூரியன், செவ்வாய்- ராகு- கேது தொடர்பு அவசியம்.
4, 9, 11 மற்றும் சூரியன் தொடர்பு (கன்னி, சிம்மம், விருச்சிகம், மீன லக்னம் ஜாதகமாகக் கொண்டவர்களுக்கு) மருத்துவக் கல்வி சாத்தியப்படும்.
சூரியனோடு குரு இணைய பொது மருத்துவராகவும்;
புதன் இணைய நரம்பியல் நிபுணராகவும்; செவ்வாய் இணைய அறுவை சிகிச்சை நிபுணராகவும்; சனி இணைய எலும்பு முறிவு - பல் நிபுணராகவும்; சுக்கிரன் இணைய கண் மருத்துவர் மற்றும் சிறுநீரக மருத்துவ நிபுணராகவும்; சுக்கிரன், சந்திரன் இணைய காது, மூக்கு, தொண்டை (ஊசப) நிபுணராகவும்;
சுக்கிரன், ராகு இணைவு எக்ஸ்ரே, ஸ்கேன் நிபுணராகவும் ஆவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு.
ஜாதகத்தில் குரு, செவ்வாய், சூரியன் இணைவு ஆயுர்வேத மருத்துவரை உருவாக்கும். அதுவே குரு, சூரியன், சனி இணைவு ஹோமியோ மருத்துவரையும்; சூரியன், குரு, சித்த வைத்தியரையும்; சூரியன், புதன், குரு இணைவு தத்துவ ஞானியையும் உருவாக்கும் எனலாம்.
சூரியன், புதன் இணைந்தால் விஞ்ஞானி, நிபுணத்துவம் பெறுவர்.
தொழில் பாவமான 10-ஆமிடத்துடன் புதன் தொடர்புகொள்ள ஜாதகர் எழுத்தாளராவார். 10-ஆமிடத் துடன் சுக்கிரன் தொடர்புகொள்ள கவிஞராவார்.
10-ஆமிடத்துடன் குரு தொடர்புகொள்ள தத்துவஞானியாவார்.
அடுத்து, பாவங்களில் கிரகங்கள் இருக்கும் நிலையைப் பொருத்து ஜாதகர் எப்படியிருப்பார் என்று பார்ப்போம்.
ஜாதகத்தில் லக்னத்தில் சந்திரன் இருக்க ஜாதகர் பக்திமானாகவும், ஞானம் மிக்கவராகவும், ஆசாரமுடையவராகவும் இருப்பார். புதன் இருக்க இனிய வாக்கும், சாத்திரமறிந்தவராகவும்; குரு இருக்க புத்திக்கூர்மை உடையவராகவும், அறிஞராக வும், பண்டிதராகவும் இருப்பார்.
சனி இருக்க நினைவாற்றல் அற்றவராக இருப்பார்.
இரண்டாமிடத்தில் சந்திரன் இருக்க நல்ல படிப்பும்; புதன் இருக்க நல்வாக்கு, கல்வியுடையவராகவும்; குரு இருக்க அறிவுக்கூர்மை உடையவராகவும் இருப்பார்.
மூன்றாமிடத்தில் புதன் இருக்க சிறந்த அறிவுள்ளவராகவும்; குரு இருக்க கூர்மதி உடையவராகவும்; சனி இருக்க கல்வியில் தடை, படிப்பில் மந்தகதி உடையவராகவும் இருப்பார். சனிபலம் பெற ஞானமுண்டு. கேது இருக்க ஞானம், வித்தை உடையவராக இருப்பார்.
நான்கில் சுபர் இருக்க இளங்கலைக் கல்வி சிறப்பாக இருக்கும்.
ஐந்தில் சந்திரனிருக்க நற்புத்தியும் கல்வித்திறனும் உடையவராகவும்; புதன் இருக்க ஞானவிருத்தி, நற்கல்வியாளராகவும்; குரு இருக்க நற்புத்தி, சாஸ்திர ஞானமுடையவராகவும் இருப்பார்.
ஒன்பதில் புதன் இருக்க பண்டிதராகவும் அறிஞராகவும்; குரு இருக்க நல்லறிவு உடையோராகவும் இருப்பார்.
பத்தில் புதன் இருக்க ஞானியாகவும்; கேது இருக்க விவேகமிக்கவராகவும் இருப்பார்.
பன்னிரண்டில் குரு இருக்க புத்திசாலியாகவும்; கேது இருக்க ஞானமுடையவராகவும் இருப்பார்.
பாவகாதிபதிகள் மாறிநின்ற பலன்கள்
லக்னாதிபதி பலம்பெற்று 2-ல் இருக்க வாக்குவண்மை, கல்வி கேள்விகளில் தேர்ச்சிபெற்றவராக ஜாதகர் திகழ்வார்.
லக்னாதிபதி 4-ல் பலம்பெற்றிருக்க கல்வியில் உயர்ந்த நிலையடைவார்.
இரண்டாமிடத்ததிபதி லக்னத்தில் இருக்க அறிவாளியாகவும், பட்டம்பெற்று உயர்பதவி அடைபவராகவும் இருப்பார்.
இரண்டாமதிபதி மூன்றில் பலமற்றிருக்க கல்விஞானம் இல்லாதவராகவும், கல்வி கற்க சந்தர்ப்பம் அமையாதவராகவும் இருப்பார்.
இரண்டாமதிபதி 10-ல் பலமுடன் இருக்க கல்வியில் சிறந்தவராகவும், சாஸ்திர ஆராய்ச்சியாளராகவும், வாதத் திறன் உள்ளவராகவும், ஆசிரியர், ஆச்சாரியாராக வும் திகழ்வார்.
மூன்றாமதிபதி லக்னத்தில் பலம் பெற்றிருக்க சினிமா, நாடகம், நாட்டியம், சங்கீதம் என சகலகலா வல்லவராக இருப்பார்.
நான்காமதிபதி லக்னத்திலிருக்க (பலமுடன்) கல்வித்திறன் மிக்கவராக இருப்பார்.
ஐந்தாமதிபதி லக்னத்தில் பலமுடன் இருக்க புத்தி, வித்தை, கல்வியிற் சிறந்தவராக இருப்பார்.
ஐந்தாமதிபதி 4-ல் இருக்க படித்தவர்களின் நட்பு கிடைக்கும்.
ஐந்தாமதிபதி 5-ல் இருக்க ஜாதகரின் குழந்தைகள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவர்.
ஐந்தாமதிபதி 6-ல் இருக்க புத்தியற்றவராகவும், நினைவாற்றல் இல்லாதவராகவும் இருப்பார். ஐந்தாமதிபதி 9-ல் இருக்க சிறந்த கல்வி மற்றும் ஒளிமயமான எதிர்காலம் உண்டு.
பத்தாமதிபதி லக்னத்தில் பலம்பெற்றிருக்க ஞானமிக்கவராக இருப்பார்.
பத்தாமதிபதி 2-ல் பலமுடன் இருக்க வாக்குவண்மை, பேசும்திறன் இருக்கும்.
பத்தாமதிபதி 5-ல் பலமுடன் இருக்க சாத்திரம் அறிந்த பண்டிதராவார்.
பன்னிரண்டாம் அதிபதி 2-ல் இருக்க கல்வியில் ஆர்வமும் ஊக்கமும் இருக்காது.
இனி எந்த நிலைக்கு, என்ன படிப்பு ஏற்படும் என்பதைப் பார்ப்போம்.
மேஷம், விருச்சிகம், செவ்வாய், சந்திரன் பலம்பெற்றிருக்க மின்னியலிலும்; மிதுனமும், செவ்வாயும் பலம்பெற இலக்கியம் மற்றும் தகவல் தொடர்புத் துறையிலும்; புதன், குரு, மிதுனம், விருச்சிகம் பலம்பெற வானொலி, கம்பியில்லா தகவல் தொடர்பும்; காற்று ராசிகளான மிதுனம், துலாம், கும்பம்- சூரியன், குரு, புதன் பலம்பெற ஏரோ நாட்டிக்கல், ஏவியேஷன் ஆகிய துறைகளிலும் சிறந்து விளங்குவர்.
மீனம், தனுசு, குரு, சந்திரன்- சுக்கிரன் தொடர்பு பெற கடல் வழிக்கான துறை, வாகனக் கல்விவியிலும்; மீனம், தனுசு, குரு, சந்திரன்- செவ்வாய் தொடர்புபெற கடற்படையிலும்; மீனம், தனுசு, குரு, சந்திரன்- புதன் தொடர்புபெற வணிகம் மற்றும் பொறியியல் துறையிலும் சிறப்புப் பெறுவர்.
புதன், குரு பத்திரிகைத் துறையிலும் (ஜர்னலிசம்); மேஷம், செவ்வாய், குரு, சுக்கிரன் தொடர்பு ஆட்டோமொபைல் துறையிலும்; சுக்கிரன், சூரியன்- குரு தொடர்பு சினிமாத் துறையிலும்; பலம்மிக்க சுக்கிரன், புதன், சந்திரன்- சனி தொடர்புபெற பொறியியற் கல்வியிலும்; சூரியன், புதன்- குரு தொடர்பு பட்டயப் படிப்பு, ஆசிரியர் கல்வி ஆகியவற்றிலும்; சூரியன், சனி, புதன்- செவ்வாய் அல்லது ராகு தொடர்பு சட்டப்படிப்பிலும்; சூரியன், புதன்- சுக்கிரன் தொடர்பு வணிக நிர்வாகம் (MBA), கணினியியல் (PGDCA) ஆகிய துறைகளிலும் மாணவர்கள் சிறந்து விளங்குவர்.
புதன் வலுவுடன் இருந்தாலன்றி பட்டப் படிப்பு சாத்தியமாகாது. புதன் வலுவுடன் இருந்தாலும், 2-ல் தீய கிரகம் இடம்பெற படிப்பில் தடை ஏற்படும். புதன் பலத்துடன் இருந்தாலும், லக்னாதிபதி பலமற்று 11-ல் இருக்க பட்டப்படிப்பு கேள்விக் குறியாகும். ஆயினும் தொழிற்கல்வி கைகொடுக்கும்.
ரிஷபம், துலாம், மகரத்திற்கு புதன் நலந்தரும் கிரகமாகும். மிதுனம், கன்னிக்கு நன்மை- தீமை கலந்து தரும் கிரகமாகும். கடகம், மீனம், தனுசு, விருச்சிகம், சிம்மம், மேஷம் ஆகிய ராசிகளில் தீங்கு செய்தாலும், 2 -ஆமதிபதி பலம்பெற நற்கல்வி அமையும்.
ஜாதகரின் கல்விநிலை பற்றிய இந்தக் கட்டுரை உங்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்குமென எண்ணி முடிக்கிறேன்.
செல்: 97891 01742