- ஒருவருக்கு வளமான வாழ்க்கைஅமைவதற்கு அவரின் ஜெனன கால ஜாதகமானதுபலமாக இருப்பது அவசியம். ஒருவர் எந்த சூழ்நிலையில் பிறந்திருந்தாலும், அவரது வாழ்க்கைத் தரமானது, அவர் வளர வளர அவருடைய வளர்ச்சிக்கேற்ப தானாகவே வளர்ந்து வரும். வாழ்வில் பல சாதனைகள் செய்யக்கூடிய வாய்ப்புகளும் சமுதாயத்தில் ஓர் உயர்வான அந்தஸ்தினையும் உண்டாக்கும். இவரது பெயரை அனைவரும் தெரிந்து கொள்ளக்கூடியஅளவிற்கு உன்னதமான உயர்வுகளைக் கொடுக்கும் புகழ் பெற்ற பலரது ஜெனன ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்தால் பலமான கிரக நிலைகள் அமைந்திருப்பதை அறிய முடியும்.
- ஒருவர் ஜாதகத்தில் கிரகங்கள் இடங்கள் மாறி மாறி அமைவது பரிவர்த்தனை யோகமாகும். உதாரணமாக சிம்மத்திற்கு அதிபதியான சூரியன் தனுசு ராசியில் அமையப் பெற்று, தனுசுவிற்கு அதிபதியான குரு சிம்மத்தில் அமையப் பெற்றால்பரிவர்த்தனை யோகமானது உண்டாகிறது. பரிவர்த்தனை பெறக்கூடிய இரு கிரகங்களும் ஒருவருக்கொருவர் நட்பு கிரகங்களாக இருப்பது நல்லது. நவகிரகங்களில் சூரியன், சந்திரன், செவ்வாய், குரு போன்றவை நட்பு கிரகங்களாகும். அது போல புதன், சுக்கிரன், சனி போன்ற கிரகங்களும் ஒருவருக்கொருவர் நட்பு கிரகங்களாகும்.
- பரிவர்த்தனை யோகத்தின் மூலமாக பரிவர்த்தனை பெற்ற இரு கிரகங்களும், தன் சொந்த வீட்டில் ஆட்சி பெற்றிருந்தால் என்ன பலனை உண்டாக்குமோ அது போன்ற நற்பலன்களை கொடுக்கும். உதாரணமாக, மேஷ லக்னத்திற்கு 4-ம் அதிபதி சந்திரன், 9-ம் வீடான தனுசில்அமையப் பெற்று 9-ம் அதிபதியான குரு 4-ம் அதிபதி சந்திரனின் வீட்டில் அமைந்து பரிவர்த்தனை யோகம் உண்டாகி இருந்தால் குருவும், சந்திரனும் தன் சொந்த வீடுகளில் ஆட்சிப் பெற்றிருந்தால் என்ன நற்பலன்களை தருவார்களோ அது போன்ற பலனை பரிவர்த்தனை யோகத்தால் உண்டாக்குவார்கள்.
- பரிவர்த்தனை யோகத்தால் சில தோஷங்களுக்கு கூட பரிவர்த்தனை யோகம் உண்டாகுமாயின் நீச தோஷமானது விலகி அக்கிரகம் ஆட்சி பெற்றதை போன்ற பலனை தருகிறது. செவ்வாய் தோஷம் உண்டானவர்களுக்கும் செவ்வாயானவர் பரிவர்த்தனைப் பெற்றிருந்தால் தோஷமானது விலகி நற்பலனை கொடுக்கிறது.அஸ்தங்கம் பெற்ற கிரகம் பரிவர்த்தனை பெற்றால் அஸ்தங்க தோஷம் விலகி நற்பலனை தரும்.
- நவகிரகங்களில் சர்ப கிரகங்களான ராகு, கேதுவைத் தவிர மற்ற 7 கிரகங்களுக்கும் சொந்த வீடானது. இருந்தாலும் அதிகபட்சமாக 6 கிரகங்கள் மட்டுமே பரிவர்த்தனை பெற முடியும். ஒருவரது ஜாதகத்தில் 6 கிரகங்கள் பரிவர்த்தனை பெற்றிருந்தால், அதனால் உண்டாகக்கூடிய அதிர்ஷ்டத்திற்கும் யோகத்திற்கும் எல்லையே இருக்காது. நம்முடைய முன்னாள் பாரதப் பிரதமர் இந்திரா காந்தி அம்மையாரின் ஜாதகத்தில் 6 கிரகங்களானது பரிவர்த்தனைப் பெற்றிருக்கும். இப்படி 6 கிரகங்களின் பரிவர்த்தனையால் அம்மை யார் பாரத நாட்டையே ஆண்டு உலக அளவில் பெயர், புகழ் அனைத்தையும் பெற்றார்.
- பரிவர்த்தனை யோகமானது இரு கிரகங்கள் அவரவரின் வீடுகளில் மாறி அமைவதாகும். இந்த பரிவர்த்தனை யோகத்தை போல சாரப் பரிவர்த்தனை யோகம் என்ற ஒன்றும் உண்டு. அதாவது கிரகங்கள் நட்சத்திர சாரப்படி ஒருவருக்கொரவர் மாறி இருந்தால் சார பரிவர்த்தனை யோகமாகும். உதாரணமாக, சனி பகவான் சுக்கிரனின் நட்சத்திரமான பூர நட்சத்திரத்தில் அமைந்து, சுக்கிரன் சனியின் நட்சத்திரமான அனுஷத்தில் அமைந்திருப்பது சாரப் பரிவர்த்தனை யோகமாகும்.
பரிவர்த்தனை யோகம்!
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-07/Untitled-2 yoga.jpg)
Advertisment