Advertisment

தலைவனாக்கும் தர்மகர்மாதிபதி யோகம்!

/idhalgal/balajothidam/yanam-yoga

ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்

சென்ற இதழ் தொடர்ச்சி...

முற்பிறவிப் புண்ணியத்தைக் குறிக்கும் உதாரண கிரகமான குருவும், தொழில், பதவி, ஜீவன நிலையைக் குறிக்கும் உதாரண கிரகமான சனியும் இணைந்து, தர்மகர்மாதிபதி யோகம் பெற்றுப் பிறந்த ஜாதகர்களில் பெரும்பாலோர், வறுமையான ஏழைக்குடும்பத்தில் பிறந்தவர்களாகவோ அல்லது இளம்வயதிலேயே தாய் அல்லது தந்தையை இழந்து, மூன்றாம் மனிதர் ஆதரவில் வாழ்ந்தவர்களாகவோ, முன்னோர் களின் பூர்வீக சொத்துகள் ஏதும் இல்லாமல், இளம் வயதிலேயே கஷ்டப்பட்டு வாழும் நிலையை உடை யவர்களாகவோதான் இருப்பார்கள் என்பது ஜீவநாடியில் சித்தர்கள் வாக்கு.

Advertisment

planets

இந்த யோக அமைப்புடன் பிறந்தவர்கள் தங்கள் சுயஅறிவு, தனித்திறமை, முயற்சி, உழைப்பால் உயர்ந்த நிலையை அடைந்தவர்களாகத்தான் பெரும்பாலும் இருக்கிறார்கள். இந்தப் பிறவியில் இவர்கள் அடைந்து அனுபவிக்கும் பதவி, பணம், தொழில், சொத்து, புகழ் என அனைத்தும், இவர்கள் சுயமாக சம்பா தித்ததாகத்தான் இருக்கும். இவர்கள் சம்பாதித்த சொத்தும் புகழும் இவர்கள் ஆயுளுக்குப் பிறகும் அழியாமல் இருக்கும்.

anna-kalaingarபெரிய செல்வந்தர்கள், பாரம்பரியமான பண்ணையார்கள், தொழில திபர்கள் குடும்பத்தில் தர்மகர்மாதிபதி யோகமுடைய குழந்தைகள் பிறப்ப தில்லை. இதற்குக் காரணம் வேறு. தர்மகர்மாதிபதி யோகத்துடன் பிறப் பவர்கள் பகுத்தறிவாலும், கடின உழைப் பாலும் மட்டுமே உயர்வடைவார்கள். பூஜை, யாகம், வழிபாடுசெய்து பணம், பதவி, புகழ் அடைபவர்கள் அல்ல. உலகமெங்கும் இந்த யோகமுடை யவர்கள் ஞான ஆதிக்கம் கொண்ட ஞாத்திகர்களாகத்தான் வாழ்கின்றனர்.

Advertisment

பிறப்பிலேயே இந்த யோகம் பெற்றவர்களின் உயர்வை மந்திரம், தசை, புக்தி, அந்தரம், கிரகங்கள், ஏவல், பில்லிலி, சூனியம் போன்ற எந்த சக்திகளாலும் தடுக்கமுடியாது. இதுபோன்ற சக்திகளையும், ஜோதிடத்

ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்

சென்ற இதழ் தொடர்ச்சி...

முற்பிறவிப் புண்ணியத்தைக் குறிக்கும் உதாரண கிரகமான குருவும், தொழில், பதவி, ஜீவன நிலையைக் குறிக்கும் உதாரண கிரகமான சனியும் இணைந்து, தர்மகர்மாதிபதி யோகம் பெற்றுப் பிறந்த ஜாதகர்களில் பெரும்பாலோர், வறுமையான ஏழைக்குடும்பத்தில் பிறந்தவர்களாகவோ அல்லது இளம்வயதிலேயே தாய் அல்லது தந்தையை இழந்து, மூன்றாம் மனிதர் ஆதரவில் வாழ்ந்தவர்களாகவோ, முன்னோர் களின் பூர்வீக சொத்துகள் ஏதும் இல்லாமல், இளம் வயதிலேயே கஷ்டப்பட்டு வாழும் நிலையை உடை யவர்களாகவோதான் இருப்பார்கள் என்பது ஜீவநாடியில் சித்தர்கள் வாக்கு.

Advertisment

planets

இந்த யோக அமைப்புடன் பிறந்தவர்கள் தங்கள் சுயஅறிவு, தனித்திறமை, முயற்சி, உழைப்பால் உயர்ந்த நிலையை அடைந்தவர்களாகத்தான் பெரும்பாலும் இருக்கிறார்கள். இந்தப் பிறவியில் இவர்கள் அடைந்து அனுபவிக்கும் பதவி, பணம், தொழில், சொத்து, புகழ் என அனைத்தும், இவர்கள் சுயமாக சம்பா தித்ததாகத்தான் இருக்கும். இவர்கள் சம்பாதித்த சொத்தும் புகழும் இவர்கள் ஆயுளுக்குப் பிறகும் அழியாமல் இருக்கும்.

anna-kalaingarபெரிய செல்வந்தர்கள், பாரம்பரியமான பண்ணையார்கள், தொழில திபர்கள் குடும்பத்தில் தர்மகர்மாதிபதி யோகமுடைய குழந்தைகள் பிறப்ப தில்லை. இதற்குக் காரணம் வேறு. தர்மகர்மாதிபதி யோகத்துடன் பிறப் பவர்கள் பகுத்தறிவாலும், கடின உழைப் பாலும் மட்டுமே உயர்வடைவார்கள். பூஜை, யாகம், வழிபாடுசெய்து பணம், பதவி, புகழ் அடைபவர்கள் அல்ல. உலகமெங்கும் இந்த யோகமுடை யவர்கள் ஞான ஆதிக்கம் கொண்ட ஞாத்திகர்களாகத்தான் வாழ்கின்றனர்.

Advertisment

பிறப்பிலேயே இந்த யோகம் பெற்றவர்களின் உயர்வை மந்திரம், தசை, புக்தி, அந்தரம், கிரகங்கள், ஏவல், பில்லிலி, சூனியம் போன்ற எந்த சக்திகளாலும் தடுக்கமுடியாது. இதுபோன்ற சக்திகளையும், ஜோதிடத்தையும்கூட நம்பமாட்டார்கள். ஆயுள்வரை எதிரிகள் இருப்பார்கள். ஆனால் இவர்களை வெல்லமுடியாது. தர்மகர் மாதிபதி யோகமுடைய ஒருவரை, அவரைவிட அதிக வலுவுள்ள தர்ம கர்மாதிபதி யோகம் உள்ளவரால்தான் தடுக்கமுடியும்; வீழ்த்தமுடியும்.

இந்த யோகத்துடன் பிறந்தவர்கள் தொழில், அரசியல், கலை, வியாபாரம், மருத்துவம், சட்டம் என எந்த துறையில் உயர்வடையவேண்டும் என்று பிறவி யில் அமைப்புள்ளதோ, அதனை அறிந்து செயல்பட்டால், தன் தனித் திறமையால் அதில் உச்சத்தை அடைவார்கள். பிறப்பிலேயே அந்த தொழில், அறிவு, திறமை, சக்தி அமைந் திருக்கும். தன் 30 வயதுவரை சாதாரண நிலையில் வாழ்ந்து, அதற்குமேல் தான் ஈடுபட்டுச்செய்யும் செயல்களில் வெற்றிடைந்து, படிப்படியாக புகழ், பொருள், பதவி என உச்சத்தை அடை வார்கள். இவர்கள் பிறக்கும்போது சாதாரண குடும்பத்தில் பிறந்திருந் தாலும், வாழ்வின் முடிவில் பிரபலமான மனிதராக மறைவார்கள். இருந்தாலும் இறந்தாலும் பேர்சொல்ல வாழ் பவர்கள் இவர்கள்தான்.

யோகங்களில் இந்த தர்மகர் மாதிபதி யோகமே முதல்நிலை ராஜயோகமாகும்.

உலகில் புகழ்பெற்ற மனிதர்களின் ஜாதகங்களை ஆராய்ந்து பார்த்தால் இதைப் புரிந்துகொள்ள முடியும்.

உதாரண ஜாதகம்- 1: முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாதுரை

annaஅறிஞர் அண்ணாவின் ஜாதகத்தில், அவரின் முற்பிறவி புண்ணியப் பலன்களைக் குறிக்கும் குருவுக்கு 9-ல் புண்ணியத்தை அனுபவிக்கச் செய்யும் சனி உள்ளது. இவர் தர்மகர்மாதிபதி யோகம் பெற்றவர்.

இவர் தன் இளம்வயதில் சிரமம் அடைந் தாலும், தன் அறிவு, பேச்சு, எழுத்துத் திறமையைக் கொண்டு செயல்பட்டு, மக்களிடம் செல்வாக்கு, மரியாதை பெற்று,

தி.க. என்ற கட்சியிலிலிருந்து விலகி தி.மு.க. என்ற கட்சியை ஆரம்பித்து, தமிழக மக்கள் ஆதரவுடன், மிகப்பெரிய கட்சியான காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி, தமிழகத்தின் உயர்பதவியான முதல்வர் பதவியில் அமர்ந்தார். இவரின் புகழ் இன்றுவரை இருப்பதற்குக் காரணம், இவர் தர்மகர்மாதிபதி யோகத்துடன் பிறந்ததால்தான். இவர் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்.

உதாரண ஜாதகம்- 2: முன்னாள் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி

kalaingarகலைஞர் கருணாநிதியின் பிறப்பு ஜாத கத்தில், இவர் தன் முற்பிறவிகளில் செய்த புண்ணி யத்தைக் குறிக்கும் குரு விருச்சிக ராசி யிலும், தொழில், பதவி, சொத்து, புகழ் தரும் சனி அதற்கு முன்ராசியான 12-ஆமிடம் துலாமிலும் உள்ளது. இவர் தர்மகர்மாதிபதி யோகத்துடன் பிறந்துள்ளார்.

இந்த யோக பலத்தால், இவர் தன் வாழ்வில் உயர்வை அடைய சந்தர்ப்பமும், சூழ்நிலையும் சாதகமாக அமைந்து பதவி, புகழ், பணம் என அனைத்தும் இவரைத் தேடிவந்தது.

இவருக்கு இயற்கையாக அமைந்த பகுத் தறிவால், தனக்குத் திறமை பேச்சு, எழுத்தில் உள்ளது என்பதையறிந்து, தான் இறக்கும்வரை தமிழக மக்களின் அறியாமை இருள் அகல பகுத்தறிவுக் கருத்துகளைப் பேசியும், எழுதியும் தமிழக மக்களின் உள்ளத்தைக் கவர்ந்து, எதிர்ப்புகளைக் கண்டு ஓய்ந்துவிடாமல், தனிப் பெருந்தலைவராக உயர்ந்தார். அரசியல், கலை, பேச்சு, நிர்வாகம், தலைமை என தான் ஈடுபட்ட எல்லா துறைகளிலும் ஓய்வில்லாமல் உழைத்து தமிழகத்தின் முதல்வரானார். ஜாதகத்தில் யோகம் இருந்தால் மட்டும் யோகத்தை அடைய முடியாது. அந்த யோகத்தை எப்படி வாழ்வில் அடைய வேண்டுமென்பதை தன் நடைமுறை வாழ்வில் செயல்பட்டு வாழ்ந்து யோகத்தை அடைந்தவர். யோகத்தை அடையும் வழிமு றையை நமக்கு உணர்த்தியவர்.

இவர் தன் முயற்சியால் அண்ணாவைப்போல் புதிதாகக் கட்சி தொடங்காமல், ஏற்கெனவே அண்ணாவாலும், இன்னும் பலராலும் உருவாக்கி வைக்கப்பட்ட தி.மு.க என்ற கட்சிக்குத் தலைவராகி சொந்தக்காரர் ஆனார். பிறர் உழைப்பால் உருவாக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு ஸ்தாபனத்தை தன் பூர்வபுண்ணியத்தால் அடைந்து, அதனை வழிநடத்தி கட்சியையும் காப் பாற்றினார்; தன்னையும் உயர்த்திக்கொண்டார்.

உதாரண ஜாதகம்- 3: முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவர்

mgrஎம்.ஜி.ஆர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் ஜாதகத்தில், தொழில், பதவியைத் தந்து, அனுப விக்கச் செய்யும் சனி கிரகம் கடக ராசியில் வக்ர நிலையில் குறிக்கப்பட்டுள்ளது. சித்த ஜோதிட முறையில் கிரகங்களுக்கு வக்ரம், அஸ்தமனம், பரிவர்த்தனை போன்றவை கிடையாது. எனவே சனிகிரகத்தை சிம்ம ராசியில் வைத்துப் பலனை நிர்ணயம் செய்யவேண்டும். மேலும் முற் பிறவிப் புண்ணியப் பலனைக் குறிக்கும் குரு கிரகம் மேஷ ராசியிலும், அதற்கு 5-ஆமிடமான சிம்ம ராசியில் சனியும் இருப்பதால் இவர் தர்மகர்மாதிபதி யோகத்துடன் பிறந்தவர் ஆவார்.

இவர் இளம்வயதில் தான் அடைந்த சிரமம், கஷ்டங்களை இவரே தன் சுயசரிதையில் மறைக்காமல் கூறியுள்ளார். தன் 30 வயதிற்குமேல் இந்த யோகத்தால், தான் ஈடுபட்ட அனைத்து தொழில், அரசியல் துறைகளில் வெற்றிபெற்று, மக்கள் மத்தியில் மிகப்பெரிய புகழடைந்தார். வாழ்வில் உச்ச நிலையை அடைந்தார். அரசியலில் இவர் தான் இருந்த தி.மு.க என்ற கட்சியைவிட்டு விலகி, தன் முயற்சியால் அ.தி.மு.க என்ற கட்சியைத் தொடங்கி, மக்களின் ஆதரவால் தமிழகத்தின் முதல்வராக ஆயுள்வரை பதவி வகித்தார். யோகத்தை இவர் தேடிப்போய் அடைந்தார்.

உதாரண ஜாதகம்- 4: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா

jayaஜெயலலிதாவின் பிறப்பு ஜாதகத்தில் தொழில், பதவி, புகழ், ஜீவனம் இவற்றைக் குறிக்கும் உதாரண கிரகமான சனி வக்ர நிலையில் கடகத்தில் குறிக்கப் பட்டுள்ளது. வேத ஜோதிடக் கணித முறையில் கூறுவதுபோன்று, கிரகங்களுக்கு வக்ரம் என எதுவும் கிடையாது.

கிரகங்கள் தங்கள் சுழற்சி வேகத்தைக் குறைத்துக் கொள்வதோ அதிகப்படுத்திக்கொள்வதோ முன்னோக்கிப் பின்னோக்கி நகர்வதோ சித்த ஜோதிட முறையில் இல்லை. எனவே சனியை சிம்ம ராசியில் வைத்துப் பலனறிய வேண்டும்.

ஜெயலலிதாவின் பிறப்பு ஜாதகத்தில் உதாரண கிரகமான குரு, சனிக்கு 5-ல் இருப்பதால், இவர் தர்மகர்மாதிபதி யோகத்தில் பிறந்தவர். இவர் தன் சுய உழைப்பின்றி, பெரிய சிரமமின்றி, எம்.ஜி.ஆர் தன் உழைப்பால் உருவாக்கி வைத்த அ.தி.மு.க. என்ற கட்சிக்குத் தலைவியாகி, மற்றவர்கள் உதவியால் தமிழக முதல்வராகி ஆட்சி செய்தார். யோகம் இவரைத் தேடிவந்து இவர் வாழ்வை உயர்த்தியது.

உதாரண ஜாதகங்களில் கூறப்பட்டுள்ளவர் களின் வாழ்வில், சித்தஜோதிட முறையில் தர்மகர் மாதிபதி யோகத்தினால் அடைந்த பதவி, தொழில், புகழ் ஆகியவற்றை மட்டுமே கூறியுள்ளேன். இவர்கள் வாழ்வில் உண்டான திருமணம், குடும்பம், புத்திர பாக்யம் போன்றவற்றின் நிலைக்கு வேறு காரணங்கள் உண்டு. அவற்றை இங்கு குறிப்பிடவில்லை.

இன்றைய நாளில் அரசிலியலில் ஈடுபட்டு பெரிய தலைவராகி சம்பாதிக்கலாம் என்று அலைந்து கொண்டிருப்பவர்கள், தனது ஜாதகத்தில் இந்த தர்மகர்மாதிபதி யோகம் இருக்கிறதா என்று முதலிலில் அறிந்துகொண்டு அரசியலிலில் ஈடுபடவேண்டும். யோகம் இல்லையென்றால், இருப்பதை அனுபவிப்பதே நல்லது.

அரசியல், கலை, மருத்துவம், தொழில், வியாபாரம், அரசு அதிகாரம், விவசாயம் என எல்லா தொழில் துறைகளிலும், புகழ்பெற்று வாழ்ந்தவர்கள், இன்றும் வாழ்ந்து கொண்டிருப் பவர்கள் அனைவரும் குரு, சனி இணைவு பெற்று தர்மகர்மாதிபதி யோகத்தில் பிறந்தவர்களா கத்தான் இருப்பார்கள்.

இந்த யோகத்தில் பிறந்துள்ளவர்கள் தங்களின் தனித்திறமைகளை அறிந்து, தனக்கு சரியான தொழிலை அறிந்து செய்யத் தொடங்கிவிட்டால் தர்மகர்மாதிபதி யோகம் செயல்படத் தொடங்கிவிடும். அவர்களை வாழ்வில் உன்னத நிலைக்கு உயர்த்திவிடும். சித்த ஜோதிடம் என்பது சாஸ்திரம், ஆன்மிகம் சார்ந்ததல்ல. இது ஆராய்ந்தறியும் அறிவியல் சார்ந்தது என்பது சித்தர்கள் வாக்கு.

செல்: 99441 13267

bala161118
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe