சென்ற இதழ் தொடர்ச்சி....
சோழிப் பிரசன்னம்
பார்க்க வந்தவர், ""என் தந்தைக்குத் தன் தந்தைமூலம் கிடைத்த சொத்துகள் எங்களை வாழவைத்தது. தாத்தாவின் இரண்டாம் திருமணத்தில் பிறந்த வாரிசுகள் பெயர் சொல்லும்படி வாழ்கிறார்கள். வாரிசில்லாத தாய்மாமன்வழிச் சொத்தை, பெற்ற அண்ணன்- தம்பிகளும், அவர்களின் வாரிசுகளான நாங்களும் கோடிக்கணக்கான சொத்துக்கு சொந்தக்காரர்கள் என்று மட்டும்தான் சொல்ல முடிகிறது. நிலையான- நிரந்தரமான தொழில் இல்லை. அடுத்த தலைமுறைக்கு ஆண் வாரிசில்லை'' என்பதுபோன்ற பல்வேறு ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
சோழி ராகுவின்மேல் நின்றதாலும், சோழி லக்னாதிபதி சுக்கிரன் அஷ்டமத்தில் நின்றதாலும், கர்த்தா எதிர்பார்த்து வந்த கேள்விக்கு சுபமான பலன்கள் நடக்க ஒரு வருடமாகுமென்று பலன் கூறப்பட்டது. மேலும் பிரசன்னத் தில் குரு, புதனுக்குத் திரிகோணத்தில் ராகு இருந்ததால், வாரிசில்லா சொத்தை வழங்கிய தந்தையின் தாய்மாமன் வட்டித் தொழில் செய்து பிழைப்பு நடத்தியிருக்கவேண
சென்ற இதழ் தொடர்ச்சி....
சோழிப் பிரசன்னம்
பார்க்க வந்தவர், ""என் தந்தைக்குத் தன் தந்தைமூலம் கிடைத்த சொத்துகள் எங்களை வாழவைத்தது. தாத்தாவின் இரண்டாம் திருமணத்தில் பிறந்த வாரிசுகள் பெயர் சொல்லும்படி வாழ்கிறார்கள். வாரிசில்லாத தாய்மாமன்வழிச் சொத்தை, பெற்ற அண்ணன்- தம்பிகளும், அவர்களின் வாரிசுகளான நாங்களும் கோடிக்கணக்கான சொத்துக்கு சொந்தக்காரர்கள் என்று மட்டும்தான் சொல்ல முடிகிறது. நிலையான- நிரந்தரமான தொழில் இல்லை. அடுத்த தலைமுறைக்கு ஆண் வாரிசில்லை'' என்பதுபோன்ற பல்வேறு ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
சோழி ராகுவின்மேல் நின்றதாலும், சோழி லக்னாதிபதி சுக்கிரன் அஷ்டமத்தில் நின்றதாலும், கர்த்தா எதிர்பார்த்து வந்த கேள்விக்கு சுபமான பலன்கள் நடக்க ஒரு வருடமாகுமென்று பலன் கூறப்பட்டது. மேலும் பிரசன்னத் தில் குரு, புதனுக்குத் திரிகோணத்தில் ராகு இருந்ததால், வாரிசில்லா சொத்தை வழங்கிய தந்தையின் தாய்மாமன் வட்டித் தொழில் செய்து பிழைப்பு நடத்தியிருக்கவேண்டும். திரும்பப் பணம் கொடுக்காதவர் களின் காலி நிலங்களை வலுக்கட்டாயமாகப் பிடுங்கியிருக்கவேண்டும். பிறரின் வயிற்றெரிச்சலில் வந்த சொத்தென்பதால் இவர்களின் தலைமுறை பாதிக்கப்பட்டுள்ளது என்று பலன் கூறப்பட்டது.
""ஆமாம்; என் தந்தையும் தன் தாய்மாமனுடன் சேர்ந்து வட்டித் தொழில் செய்திருக்கிறார்'' என்று கூறினார்.
தொடர்ந்து 12 வளர்பிறை துவாதசி திதிகளில் சாலையோரத்தில், குடிசைகளில் வசிப்பவர்களில் 21 பேருக்கு உணவு தானம் தண்ணீருடன் வழங்க ஆலோசனை வழங்கப்பட்டது.
அத்துடன் சொத்து கொடுத்த தந்தையின் தாய்மாமாவிற்கும் அவரது மனைவிக்கும் தொடர்ந்து 21 அமாவாசை திதிகளில் திதிகொடுக்க பரிந்துரைக்கப்பட்டது.
ஜனனகால ஜாதகத் தில் அஷ்டம, பாதக ஸ்தானத்திற்கு புதன், சனி, ராகு- கேது சம்பந்தமிருப்பவர்கள் வாரிசில்லா சொத்து அல்லது உயில் சொத்தைத் தவிர்த்தல் நலம். அல்லது ஆதரவற்ற முதியவர்கள் இல்லம், குழந்தைகள் காப்பகத்திற்கு, தொண்டு நிறுவனங்களுக்கு தானம் தருதல் புண்ணியப் பலனை அதிகப்படுத்தும். உழைக்காத பணம் ஒரு ரூபாயாக இருந்தால்கூட பலமடங்காக இழக்க நேரும்.
ஜனனகால ஜாதகத் தில் 5, 8-ஆம் பாவகத்திற்கு புதன், சனி, ராகு- கேது சம்பந்தமிருப்பவர்களுக்கு அதிர்ஷ்டப் பணம், உயில் சொத்து, வாரிசில்லா சொத்து பயன்தரும். அதைப் பயன்படுத்துபவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் சொத்தின் உரிமையாளர்களுக்கு நீத்தார் கடன் செய்துகொண்டே இருக்கவேண்டும்.
மனிதர்களாய்ப் பிறந்த அனைவரும் குல மற்றும் இஷ்ட தெய்வத்திற்கு நித்திய பூஜை செய்யவேண்டும். நேர்திக்கடன் வைத்து விட்டு செய்யாமலிருப்பது, கோவில் திருப்பணியைத் தொடங்கிவிட்டு பாதியில் விடுவது, கோவிலுக்குச் சொந்தமான சொத்துகளைத் திருடுதல், கோவில் சிலைகளைத் திருடுதல், கோவிலின் பெயரைச்சொல்லி வருமானம் பார்த்தல், கோவிலுக்குள் தகாத காரியங்கள் செய்தல் போன்ற குற்றங்கள் வாரிசுகளை வாழவிடாது. சாதுக்கள், ரிஷிகள், துறவிகள் மற்றும் பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம், தண்ணீர் வழங்குவது, ஆன்மிக மடங்களுக்கு உதவிசெய்தல், திருக்கோவில்களை சுத்தப்படுத்துதல், நோயாளிகளுக்கு உதவிசெய்தல் ஆகியவை வாரிசுகளின் வாழ்க்கையை வளமாக்கும்.
வயதான தாய்- தந்தையரை, தாத்தா- பாட்டியை முறையாகப் பராமரிக்கத் தவறுவது, இறந்தபின்பு அவர்களுக்கு திதி கொடுக்காமலிருப்பது, அண்டை அயலார், உற்றார்- உறவினர்களைப் பகைப்பது, தகாத வார்த்தைகள் பேசுவது, காமக்குற்றங்கள், மோசடி, பெண்ணை ஏமாற்றிக் கற்பழித்தல், உடன்பிறந்தோர் சொத்து அபகரிப்பு போன்றவை ஏழு தலைமுறையினரின் வாழ்க்கையையும் மிகவும் சிரமப்படுத்தும்.
வயதான தாய்- தந்தையரை, தாத்தா-பாட்டியை முறையாகப் பராமரிப்பது, இறந்தபின்பு அவர்களுக்குத் திதி கொடுப்பது, எல்லாரிடமும் நட்பு பாராட்டுவது, அன்பாகப் பேசுவது, பழகுவது போன்றவை ஏழு தலைமுறையினருக்கு மிகுந்த புண்ணியப் பலன்களை வாரி வழங்கும்.
கடந்துபோன வினாடியோடு நம் வாழ்க்கை முடியாமல், இன்று, இந்த நிமிடம், இந்த நொடியில் நாம் உயிரோடு இருப்பது நமக்குள்ளிருக்கும் இறையருள் என்பதை உணரவேண்டும். இதைவிட இறைவன் நமக்கு எதைக் கொடுக்கமுடியும்? ஒவ்வொரு வினாடியும் நம்மை உயிரோடு இருக்கச்செய்யும் இறைவனுக்கு நாம் நன்றி சொல்வதற்காகவே கோடிப் பிறவிகள் எடுக்கவேண்டும்.
அதைவிடுத்து காசு, காமம், சொத்து போன்ற விதிப்பபயன் மீறிய லௌகீக ஆசைகள் வாழ்வை நரமாக்குவதுடன் சந்ததியினரையும் பாதிக்கும். ஒவ்வொரு பாவத்திற்கும் ஒவ்வொரு விதமான பரிகாரங்கள் செய்யவேண்டும்.
அதேசமயம் திரும்ப வும் அதே பாவங் களைச் செய்யாமலிருக்க வேண்டும்.
அதனால் பாவம் செய்து பின் பரிகாரம் தேடி அலைவதை விட, மனப்பூர்வமாக இறைக் காரியங்களில் ஈடுபட்டு பிறவிக் கடனிலிருந்து மீள முயல வேண்டும். எனவே இறைவன் எனக்கு இதைக் கொடுக்கவில்லை அதைக் கொடுக்க வில்லை என்று புலம்புவதை தவிர்த்து, அவர் கொடுத்த அழியாத உயிரைக் கொண்டு நன்மை செய்து நம் ஆன்மா வைப் புனிதப்படுத்த வேண்டும். தூய பக்தி, நேர்மையான வாழ்வு, மனமார்ந்த தெய்வீக சேவை, சரணாகதி இவற்றால் மட்டுமே நிம்மதியாக வாழமுடியும்.
செல்: 98652 20406