ந்த பூமியில் வாழும் மனிதர்களை அவரவர் நம்பிக்கையின் அடிப்படை யில் நான்கு வகையாகப் பிரிக்கலாம்.

இவை எல்லா நாட்டவர்க்கும் எல்லா மதத்தினருக்கும் பொருந்தும். அதாவது ஆஸ்திகர், ஆஸ்திக நாஸ்திகர், நாஸ்திக ஆஸ்திகர், நாஸ்திகர் எனலாம். முதலாமவர் "அவனன்றி ஒரு அணுவும் அசையாது' என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டு, அதன்படி தன் அன்றாட காரியங்களைச் செய்துகொண்டிருப்பார். இரண்டாமவர் வெளிப்புறத்தில் அதிக இறைநம்பிக்கை உள்ளவராகக் காட்டிக் கொண்டு அதற்கு எதிர்மறையான காரியங்களில் ஈடுபட்டுக் கொண்டிருப்பார். மூன்றாமவர் வெளியுலகுக்கு இறைநம்பிக்கை ஏதும் இல்லாதவர் போல காட்டிக்கொண்டு, உண்மையில் அதற்கு நேர்மாறான காரியங்களைச் செய்துகொண்டிருப்பார். நான்காமவர் நம்பிக்கை இல்லை என்ற கொள்கைப் பிடிப்பில் சிறிதும் மாறாது அதன்படி நடந்துகொள்வார்.

இவர்களுக்கெல்லாம் அந்த (இறை) நம்பிக்கை என்பதே ஆதார, அஸ்திவாரத் தூணாக விளங்குகிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம். "நம்பினார் கெடுவதில்லை; நான்கு மறை தீர்ப்பு' என்பதே வாழ்க்கையின் அடித்தளம்.

நம் முன்னோர் காட்டிய, வழி வழியாக வந்தவற்றில் நம்பிக்கை கொண்டு நடந்து கொள்கிறோம் என்பதே உண்மை. ஒவ்வொன்றிற்கும் காரண, காரியங்களைப் பார்த்துக் கொண்டு இருக்கமுடியாது. உதாரண மாக ஒரு பொருள் 100 ரூபாய் என்றால், மூன்று பொருட்களை வாங்க 300 ரூபாய் கொடுத்துவிடு கிறோம். அந்த 3ஷ்100=300 எப்படி வந்தது என்று யோசிப்பதில்லை. தேவையும் இல்லாதது. இரும்பு, காந்தத்தால் கவரப்படுதைப் போலத் தான் என்று கூறலாம். அப்படி பெரும் பாலோர் ஒப்புக்கொண்டு, நம்பிக்கை வைத்திருப்பதுதான் தெய்வ வழிபாட்டு முறைகள். சம்பத்தில் கல்லூரி பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்ற ஒரு அன்பர் பேசும்போது, தெய்வ வழிபாடு பற்றிய சாஸ்திர விவரங்களை எழுதுமாறு கேட்டுக்கொண்டார்.

Advertisment

இறை வழிபாடு பெரும்பாலோர் ரத்தத்தில் ஊறிய ஒன்று. இறை வழிபாட்டால் பல நன்மைகளை மனிதன் அடைய முடியும் என்பதே உண்மை. அதேசமயம் நமக்கென்று வரையறுக்கப்பட்ட பலவித கடமைகளை யும் செய்துகொண்டு, அவை நல்லபடியாக முடியவேண்டும் என்பதற்கு இறைவனுடைய திருவருளை வேண்டுவதே மனிதப் பண்பு. இந்த வழிபாடு மற்றும் பிரார்த்தனைக்கு நம்பிக்கை என்பது மிகவும் அவசியம் ஆகும். எந்த வழிபாடானாலும் அதில் மனம் லயித்து, நிலைப்படுத்திச் செய்தல் சிறப்பு. எல்லாரும் எல்லாக் கடவுளை யும் வணங்கி வரலாம் என்பது பொதுவிதி.

அதேசமயம் குறிப்பிட்ட மனிதர்களுக்கு, குறிப்பிட்ட கடவுளை வழிபாடு செய்வதே பொருத்தம் என்று நம் முன்னோர் வலியுறுத்து கிறார்கள். அந்த விவரங்களை இனி காணலாம்.

ஒன்றாம் எண்ணுக்கு உரியவர்கள்

Advertisment

(1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்கள்) ஞாயிற்றுக்கிழமைகளில் பிரார்த்தனை செய்வது விசேஷமாகும். முதலில் சூரியனை வழிபட்டுவரவேண்டும். தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்யலாம்; தெரிந்த ஸ்தோத்திரங்களை உச்சரிக்கலாம். பின்னர் சூரியனின் தேவதையான பரமேஸ்வரரை வழிபடவேண்டும். பிரதோஷ கால பூஜைகளில் பங்கு கொள்ளலாம். சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கலாம். வில்வ இலைகளாலும் சிவப்பு நிற மலர்களாலும் அர்ச்சனை, பூஜை செய்யலாம். கோதுமைப் பண்டம் நிவேதனம் செய்யலாம். வசதியுள்ளவர்கள் ஈஸ்வரனுக்கு நாகா பரணம் வெள்ளியில் செய்து அணிவிக்கலாம். இவற்றால் ஆரோக்கியமான சரீரபலம் கிடைக்கும்;

அந்தஸ்து உயரும். வாழ்வில் கௌரவம் கூடும். பகைவரை வெல்லும் துணிவும் துணிச்சலும் அதிகரிக்கும். தலைமைப் பொறுப்பும் வந்துசேரும்.

இரண்டாம் எண்ணுக்கு உரியவர்கள்

(2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்கள்) திங்கட்கிழமைகள் வழிபாடு செய்வது சிறப்பாகும். மூன்றாம்பிறைச் சந்திரனை தரிசிக்கலாம். சந்திரன் சக்தி தத்துவம் ஆதலால், பரமேஸ்வரி என்னும் அம்பாளை வழிபட்டு வரவேண்டும். சோமவார விரதம் இருக்கலாம். பௌர்ணமிப் பூஜைகளில் கலந்து கொள்ளலாம். அம்பாளுக்கு வெண்மை நிறப்பூக்களால் அர்ச்சனை, பூஜை செய்து, வெண்பொங்கல் நிவேதனம் செய்யலாம். இவற்றால் வாழ்க்கை ஒளிமய மாக அமையும். மனதிற்கு தெம்பும் சக்தியும் உண்டாகும். கற்பனை வளம் பெருகும். சுகமான வாழ்க்கை அமையும்.

மூன்றாம் எண்ணுக்கு உரியவர்கள்

(3, 12, 21, 30 தேதிகளில் பிறந்தவர்கள்) வியாழக்கிழமைகள் வழிபாட்டுக்கு உகந்தவை. சுபகிரகமான குரு பகவான் ஆதிக்கம் பெறுவதால், வேதம் படித்த பண்டிதர்களை வரவழைத்து உபசரிக்கலாம். ஸ்ரீதட்சிணா மூர்த்தி தெய்வத்தை வழிபடுதல் வேண்டும். திருச்செந்தூர் முருகப்பெருமானையும் வழிபடலாம். மஞ்சள் நிற ஆடையணிந்து வெண்மை நிறமலர்களால் இறைவனைப் பூஜிக்கலாம். பருப்பு பாயசம் நிவேதனம் செய்யலாம். இவற்றால் அறிவாற்றல் பெருகும். சந்தோஷமான வாழ்க்கை அமையும்.

சொத்து சுகங்கள் கிடைக்கும். நல்ல மணவாழ்க் கையும், மக்கட் செல்வமும் கிடைக்கும்.

நான்காம் எண்ணுக்கு உரியவர்கள்

(4, 13, 22, 31 தேதிகளில் பிறந்த வர்கள்) ஞாயிற்றுக்கிழமை மற்றும் செவ் வாய்க்கிழமைகளில் வழிபாடு செய்வது ஏற்றது. எண்ணின் நாயகன் ராகுவின் தேவதை யான ஸ்ரீதுர்க்கை அம்மனை வழிபட்டு வரவேண்டும். ஸ்ரீஆஞ்சனேய ஸ்வாமி யையும் வழிபடலாம். சகல விதமான மலர்களாலும் அர்ச் சனை, பூஜை செய்யலாம். சுண்டல் நிவேதனம் செய்யலாம். இதனால் பலரையும் ஈர்க்கும் சக்தி அதிகரிக்கும். பொன்னும் பொருளும் சேரும். அரசுப் பதவியும் கிடைக்கும். முன்னேற்றங்கள் உண்டாகும். சாதனைகள் புரியலாம்.

ஐந்தாம் எண்ணுக்கு உரியவர்கள்

(5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்கள்) புதன் கிழமை வழிபாடு செய்ய உகந்தது. புதன்கிரக அதிபதியான ஸ்ரீமன் நாராயணனை வழிபட்டு வரவேண்டும். விஷ்ணு சஹஸ்ர நாமப் பாராயணம் செய்யலாம். பகவத் கீதை ஸ்லோகங்களைப் படிக்கலாம். பசுக்களுக்கு அகத்திக்கீரை கொடுக்கலாம். துளசி மாலை மற்றும் மணம் கமழும் மலர்களால் ஆண்டவனை அர்ச்சனை, பூஜை செய்யலாம். இவற்றால் வாழ்வில் பல சிறப்புகள் கூடும், வாக்கு வண்மை அதிகரிக்கும். கல்வியில் உயர்வு பெறலாம். வியாபாரத்தில் செழிப்பு, அரசியல் செல்வாக்கு ஆகியவை கிடைக்கும். குடும்பம் சுபிட்சமாக அமையும்.

babA

ஆறாம் எண்காரர்கள்

(6, 15, 24 தேதிகளில் பிறந்தவர்கள்) வெள்ளிக்கிழமைகள் விரதமிருந்து வழிபாடு செய்தல் சிறப்பு. சுக்கிர கிரக அதிபதியான மகாலட்சுமியை வழிபாடு செய்தல் வேண்டும்.

அஷ்டலஷ்மிகளையும் வழிபடலாம். சுமங்கலிப் பிரார்த்தனை, பூஜை செய்யலாம்.

சுமங்கலிப் பெண்களை வரவழைத்து வெற்றிலை, பழம், பாக்கு, பூ, மஞ்சள், குங்குமம், மருதாணி போன்ற மங்களப் பொருட்களை வழங்கி அன்னமிட்டு உபசரிக்கலாம். வெண்தாமரை மலர் கொண்டு மகாலட்சுமியைப் பூஜை செய்யலாம். கோபூஜையும் செய்யலாம். இவற்றால் சகல ஐஸ்வர்யங்களும் வந்து சேரும். குறைகள் தீரும். இன்பமான வாழ்வு அமையும். மகிழ்வான திருமண வாழ்வு அமையும். சரீரம் பொலிவுடன் விளங்கும். கலைத்துறைகளிலும் பிரகாசிக் கலாம். திடீர் அதிர்ஷ்டம் வரலாம்.

ஏழாம் எண்ணினர்

(தேதிகள் 7, 16, 25லில் பிறந்தவர்கள்) திங்கட்கிழமைகள் விரதமிருப்பது விசேஷமாகும். கேது கிரக அதிபதியான ஸ்ரீ விநாயகப் பெருமானை வழிபட்டு வரவேண்டும். விநாயக கவசம் ஓதலாம். சதுர்த்தி அன்று விரதம் இருக்கலாம்.

அறுகம்புல் மாலை தொடுத்து அணி வித்துப் பூஜை செய்யலாம். கொழுக் கட்டை சுண்டல் நிவேதனம் செய்யலாம். இவற்றால் எல்லா செல்வங்களும் கிடைக்கப்பெறும். சுபிட்சமான வாழ்க்கை அமையும். வெளிநாட்டுப்பயணம் ஏற்படலாம். ஞானமார்க்கத்தில் ஈடுபாடு உண்டாகும். நட்பு நலம் பெருகும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்பு வரும்.

எட்டாம் எண்ணினர்

(தேதிகள் 8, 17, 26லில் பிறந்த வர்கள்) சனிக்கிழமைகள் வழிபாடு செய்ய ஏற்றவை. சனி பகவானை வணங்குதல் சிறப்பு தரும். சந்நிதியில் எள் தீபம் ஏற்றி, கருங்குவளை மலர்களால் பூஜை செய்யலாம். எள் சாதம் நைவேத்யம் செய்யலாம். அதிதேவதையான வேங்கடேஸ்வர பெருமாளையும் ஆஞ்சநேய ஸ்வாமி யையும் தொடர்ந்து வழிபாடு செய்வது பொருத்தமாகும். ஐயப்ப ஸ்வாமியையும் வணங்கி வரலாம். சபரிமலை யாத்திரை மேற்கொள்ளலாம். இவற்றால் வாழ்க் கையில் ஒளி உண்டாகும். உடல் வலிமை பெற்று, நோய்கள் வராது. குழுத் தலைமைப் பொறுப்பு கிடைக்கும். விவசாயம், இரும்பு வியாபாரம் மேன்மை தரும்.

ஒன்பதாம் எண்காரர்கள்

(9, 18, 27 தேதிகளில் பிறந்தவர்கள்) செவ்வாய்க்கிழமைகள் விரதம் மேற்கொள்வது சிறப்பு தரும். செவ்வாய் கிரக அதிபதியாம் முருகப் பெருமானை வழிபடுவதும், கந்த சஷ்டி கவசம் ஓது வதும் சிறப்பு தரும். வேலையும் வழிபாடு செய்யலாம். சிவப்பு நிற மலர்களால் அர்ச்சனை, பூஜை செய்யலாம். சஷ்டியன்று விரதம் இருக்கலாம். இவற்றால் உடல் பலம், மனோபலம் அதிகரிக்கும். பெருந் தன்மை நிறைந்திருக்கும். அரச பதவிகள் வந்துசேரும். ஆற்றல், துணிவு அதிகரிக்கும். ஆளுகின்ற திறமையும் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.

இறுதியாக எளிமையானதொரு தியானமுறை இதோ... அந்தந்த எண் காரர்கள் தத்தம் எண்களுக்குரிய தெய்வங்கள் அல்லது தங்களுக்கு விருப்பமான தெய்வங்களின் திருவருவங்களுக்குமுன் அமர்ந்து கொள்ளவேண்டும். அந்த திருவுருவத்தை உள்வாங்கி இரு புருவங் களுக்கும் இடையே உள்ள நெற்றிப் பொட்டில் நிலைத்து நிற்கச் செய்யவேண்டும். பின் இரு கண்களையும் மூடிக்கொண்டு அந்த திருவுருவத்தையே நினைத்து 5 முதல் 10 நிமிடம் வரை, அமைதியாக தியானத் தில் ஈடுபடவேண்டும். வேறு எந்த வித சிந்தனையும் கூடாது. இப்படி முறையாகச் செய்தால் புத்துணர்ச்சி பெறுவதை நன்கு உணரமுடியும். அலைபாயும் மனதை அடக்கி ஒரு முகமாக நிலைப்படுத்தி, அன்றாட காரியங்களில் அதிக கவனத் துடன் ஈடுபட்டு அவற்றில் வெற்றிபெற இதுவே முதல்படி என்றால் மிகையா காது; முயற்சி செய்துபாருங்கள். வெற்றிபெறுவீர்கள்.

செல்: 74485 89113