புதன்கிழமைகளில் விநாயகர், சரஸ்வதி ஆகிய கடவுள்களை வழிபட்டால் நன்கு படிப்பு வரும்.
ஒரு ஜாதகத்தில் சந்திரன், புதன், குரு ஆகியவை நல்ல நிலையில் இருந்தால், ஜாதகர் நல்ல படிப்பாளியாக, அறிவாளியாக இருப்பார்.
ஜாதகத்தில் லக்னாதிபதி பலமாக இருந்தால், அவருக்கு நோய் வரும் வாய்ப்பு குறைவாக இருக்கும். தைரியத்துடன் இருப்பார். அதே நேரத்தில் 2-ஆம் பாவத்தில் பாவகிரகங்கள் இருந்தால், அவருக்கு படிக்கும் காலத்தில் சரியாகப் படிப்பு வராது. வீட்டிலிருக்கும் கடன் பிரச்சினையால் படிக்க இயலாத நிலை உண்டாகும். அதனால் அவர் இளம்வயதில் பல கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியதிருக்கும்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/wednesy.jpg)
ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதி அஸ்தமனமாக இருந்து, 2-ஆம் பாவத்தில் பாவகிரகம் இருந்தால், அவர் படிக்க முடியாமல் சிரமப்படுவார்.
ஒரு ஜாதகத்தில் சந்திரன் பலவீனமாக 12-ஆம் வீட்டில் இருந்து, 4 அல்லது 7-ல் பாவகிரகங்கள் இருந்தால், அவருக்கு சரியாகப் படிப்பு வராது. படிக்கும் காலத்தில் கஷ்டப்படுவார்.
11-ல் பலவீனமான சந்திரன் இருந்து, 2-லும், 6-லும் பாவகிரகங்கள் இருந்தால், அவருக்கு ஒழுங்காகப் படிப்பு வராது. ஜாதகத்தில் சுக்கிரன் அஸ்தமனமாக அல்லது நீசமாக இருந்து 2-ஆம் பாவம் கெட்டுப்போனால், படிக்கும் காலத்தில் அவருக்கு சரியாகப் படிப்பு வராது.
8-ல் சந்திரன் இருந்து, 12-ஆம் பாவமும் 2-ஆம் பாவமும் கெட்டுப்போனால், படிக்கும் காலத்தில் நோய் வரும். அதனால் அவர் சரியாகப் படிக்க முடியாமல் இருப்பார். வீட்டில் பணப்பிரச்சினை இருக்கும். சிலருக்கு புத்தகங்கள் வாங் கக்கூட இயலாதநிலை ஏற்படும்.
ஜாதகத்தில் லக்னத்தில் புதன் அஸ்தமனமாக இருந்து, 2-ல் செவ்வாய், 6-ல் சனி, 9-ல் ராகு இருந்தால் வீட்டில் வசதியில்லாத காரணத் தால், இளம்வயதிலேயே அந்த ஜாதகருக்கு படிக்கமுடியாத நிலை உண்டாகும். அறிவாளி யாக இருந்தாலும் படிக்க முடியாமல் சிரமப்படுவார்.
11-ல் சந்திரன், லக்னத்தில் புதன், 2-ல் பாவகிரகம், 3-ல் கேது இருந்தால், அவர் அறிவாளியாக இருப்பார். ஆனால் படிக்கும் காலத்தில் பல பிரச்சினைகள் ஏற்படும்.
வீட்டில் வசதி இருக்காது. உடல்நலம் சரியாக இருக் காது. படிக்கும் காலத்தில் பல தடைகள் உண்டாகும்.
ஜாதகத்தில், லக்னத்தில் நீசச் செவ்வாய், 4-ல் நீச சூரியன், 7-ல் சனி இருந்தால், அவர் இளம்வயதில் கடுமை யாக உழைக்க வேண்டிய திருக்கும். பணவசதி இருக் காது. படிக்கும்போது ஏதாவது பிரச்சினைகள் ஏற்படும்.
ஒரு ஜாதகத்தில் 11-ல் சந்திரன், 6-ல் சனி, 9-ல் ராகு இருந்தால், அவர் இளமையில் பல கஷ்டங்களைச் சந்திக்க வேண்டியதிருக்கும். சரியாகப் படிப்பு வராது. 2-ஆம் பாவத் தில் செவ்வாய், சுக்கிரன், 5-ல் குரு, 8-ல் சனி இருந்தால், அவர் இடைவெளிவிட்டுப் படிப்பார். படிக்கும் காலத் தில் பல பிரச்சினைகள் ஏற்படும்.
ஜாதகத்தில் 2-ஆம் பாவம் கெட்டுப்போய், 6, 8, 12-ல் பாவகிரகங்கள் இருந்தால், படிக்கும் காலத்தில் பல கஷ்டங்கள் இருக்கும். புதன், செவ்வாய், சுக்கிரன் 6, 7-ல் இருந்தால், சிலருக்கு படிப்பே வராது. ஞாபக மறதி அதிகமாக இருக்கும்.
செவ்வாய், சூரியன், புதன் லக்னத்தில் அல்லது 2, 7-ல் இருந்தால், படிப்பில் பிரச்சினை இருக்கும். 4-ல் சூரியன், 7-ல் சனி, 8, 11-ல் சந்திரன் இருந்தால், படிக்கும் காலத்தில் அவருக்கு படிப்பு சரியாக வராது. ஆனால் அறிவாளியாக இருப்பார். அனுபவ அறிவு இருக்கும்.
மேற்படிப்பு என்று கூறும்போது, ஜாதகத்தில் குரு பகவான் நல்ல நிலையில் இருக்க வேண்டும். குரு பகவான் அஸ்தமனமா கவோ நீசமாகவோ இருந்தால், மேற்படிப்பில் பல சிக்கல்கள் உண்டாகும். குரு பகவான் புதனையும் சந்திரனையும் பார்த்தால் நல்ல படிப்பாளியாக இருப்பார்.
பல பட்டங்கள் வாங்குவார். ஆனால், அவருடைய ஜாதகத்தில் 9-ஆவது பாவம் கெட்டுப்போனால் அல்லது அந்த இடத்தில் இரண்டுக்குமேல் பாவகிரகங்கள் இருந்தால், இளம்வயதில் கடுமையான பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியதிருக்கும்.
பரிகாரங்கள்
புதன்கிழமை காலையில் விநாயகர், சரஸ்வதி ஆகிய கடவுள்களை வழிபட வேண்டும்.
விநாயகருக்கு அறுகம்புல், தேங்காய், பூ, பழம் வைத்து "ஓம் கங்க் கணபதய நமஹ' என்ற மந்திரத்தைக்கூறி பூஜைசெய்ய வேண்டும். அறிவு வருவதற்காக சரஸ்வதியை வெண்ணிற மலர், வெண்ணிற ஆடை, தேங்காய், பூ, பழம் வைத்து, "ஓம் வாக் வாஹின்யே நமஹ' என்ற மந்திரத்தைக்கூறி பூஜை செய்யவேண்டும்.
இவ்வாறு தொடர்ந்து வழிபட்டுவந்தால் கல்வியில் இருக்கும் மந்தநிலை மாறும். அறிவுப்பிரகாசம் உண்டாகும்.
செல்: 98401 11534
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-05/wednesy-t.jpg)