ஒருவர் கவலையுடன் இருக்கிறார் என்றால், அவர் அதிகமாக சிந்திக்கிறார் என்று அர்த்தம். ஒருவர் நிறைய சிந்திக்கிறார் என்றால், அவரு டைய ஜாதகத்தில் லக்னாதிபதி பலவீனமாக இருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
லக்னாதிபதி பலவீனமாக உள்ளவர் அதிக மாகக் கவலைப்படுவார். எதையும் சந்தேகத்துடன் பார்ப்பார்.
ஒருவரின் ஜாதகத்தில் 2-ஆம் பாவம் கெட்டுப்போய் அங்கு பாவகிரகங்கள் இருந் தால், அந்த ஜாதகர் எப்போதும் குடும்பத்தை எப்படிக் காப்பாற்றப் போகிறோம் என்ற கவலையிலேயே இருப்பார். 2-ஆம் பாவத்தில் செவ்வாய்- சூரியன், செவ்வாய்- ராகு, செவ்வாய்- சனி- ராகு, சூரியன்- சனி- ராகு ஆகிய கிரகச் சேர்க்கை இருந்தால், அந்த ஜாதகரின் குடும்பத்தில் வீண்விவாதம், சண்டை இருக்கும். அதன்காரணமாக ஜாதகர் எப்போதும் கவலையில் இருப்பார்.
3-ஆம் பாவாதிபதி பாவகிரகமாகி 2-ஆம் பாவத்தில் இருந்து, 6-ஆம் பாவத் திலும் பாவகிரகம் இருந்தால், அவர் எப்போதும் தன் குடும்பத்தைப்பற்றியே நினைத் துக்கொண்டிருப்பார். அவருக்கு சகோதரர் களின் தொல்லைகள் இருக்கும். அதிக பித்தம் காரணமாக தூக்கம் சரியாக வராது. அதனால் அவருக்கு கவலை உண்டாகும்.
4-ஆம் பாவாதிபதி நீசமடைந்தால் அல்லது 4-ல் சனி, கேது அல்லது ராகு, சனி இருந்தால், அவருடைய தாயின் உடல்நலம் பாதிக்கப்படும். வீட்டில் மகிழ்ச்சி இருக்காது. வீட்டில் வாஸ்து தோஷம் இருக்கும். அதன்காரணமாக ஜாதகர் கவலையில் மூழ்குவார்.
ஒரு ஜாதகத்தில் 5-ஆம் வீட்டிற்கு அதிபதி நீசமடைந்தால் அல்லது அஸ்தமனமாக இருந்தால் அல்லது 5-ல் கேது அல்லது நீச குரு இருந்தால், அவருக்கு பிள்ளைகளால் பிரச்சினைகள் உண்டாகும். சிலருக்கு வாரிசு இருக்காது. அதனால் அவர் கவலையுடன் இருப்பார்.
6-ஆவது பாவத்தில் பாவகிரகம் இருந்தால் நன்மை செய்யும். ஆனால் 6-ஆம் வீட்டின் அதிபதி அஸ்தமனமாக அல்லது நீசமாக அல்லது 6-ல் சனி இருந்து, லக்னத்தில் சூரியன் இருந்தால், அவருக்கு ரத்தம் சம்பந்தப்பட்ட நோய் இருக்கும். சிலருக்கு ரத்த அழுத்தம் இருக்கும். சிலருக்கு பித்தம் அதிகமாக இருக்கும்.
பகைவர்களால் பிரச்சினைகள் ஏற்படும்.
அதனால் சரியாகத் தூக்கம் வராது. எப்போதும் சிந்தனையுடனும் மனக்கவலையுடனும் காட்சியளிப்பார்.
7-ஆம் பாவாதிபதி அஸ்தமனமாக அல்லது நீசமாக இருந்தால், அவருக்கு தன் தொழில் பங்குதாரரால் பிரச்சினைகள் உண்டாகும். மனைவியாலும் தொல்லைகள் உண்டாகும். மனைவிக்கு கணவரால் பிரச்சினைகள் இருக்கும். அங்கு செவ்வாய்- சனி அல்லது ராகு- சனி அல்லது சனி- சூரியன்- செவ்வாய் இருந்தால் திருமணத் தடை இருக்கும். திருமணம் நடந்திருந்தால், அதற்குப் பிறகு பிரச்சினைகள் இருக்கும். வீட்டில் மகிழ்ச்சி இருக்காது. அதனால் ஜாதகர் எப்போதும் கவலையுடன் இருப்பார்.
8-ஆம் பாவாதிபதி பாவகிரகத்துடன் 8-ல் இருந்தால், இல்வாழ்க்கையில் சந்தோஷம் இருக்காது. கணவன்- மனைவி உறவு சரியாக இருக்காது. சிலருக்கு சிறிய அளவில் விபத்துகள் ஏற்படும். சிலருக்கு தொழிலில் அவ்வப்போது நஷ்டம் உண்டாகும். சந்திரன் 8-ல் இருந்து, அத்துடன் புதன், சூரியன், சுக்கிரன் அல்லது சந்திரன், செவ்வாய், சுக்கிரன் இருந்தால் தூக்கம் சரியாக வராது. சிலர் தூக்கத்தில் உளறுவார்கள்.
9-ஆவது பாவாதிபதி 8-ல் இருந்தால், அவருடைய வாழ்க்கையில் பல சிக்கல்கள் இருக்கும். 9-ஆவது வீட்டில் ராகு இருந்தால் 27 வயதுவரைக்கும் பலவிதக் கஷ்டங்களை அனுபவிப்பார். 9-ஆவது வீட்டின் அதிபதி பாவகிரகத்துடன் இருந்தால், சிலர் தந்தை யுடன் வாழமாட்டார்கள். தந்தைக்கு உடல்நல பாதிப்பு இருக்கும். அவர் அடிக்கடி பயணம் செய்யவேண்டியதிருக்கும். அதனால் மனக் கஷ்டங்கள் ஏற்படும்.
10-ஆவது பாவாதிபதி அஸ்தமனமாகவோ நீசமாகவோ இருந்தால் அவருக்கு தொழில் சரியாக நடக்காது. தாத்தாவால் மகிழ்ச்சி கிடைக்காது. 10-ஆம் பாவாதிபதி 6 அல்லது 8-ல் இருந்தால் சிலருக்கு கடன் பிரச்சினைகள் இருக்கும். அதன்காரணமாக கவலை உண்டாகும்.
11-ஆம் பாவாதிபதி நீசமாகவோ அஸ்தமனமாகவோ இருந்தால் தன் சகோதரர்களால் சந்தோஷம் கிடைக்காது. பண வரவு இருக்காது. சிலர் அதிகமாக சிந்திப்பார்கள். சிலருக்கு வயிறு சம்பந்தப்பட்ட நோய் இருக்கும். 11-ஆவது வீட்டிற்கு அதிபதி பாவகிரகத்துடன் இருந்தால், சிலருக்கு லாபம் கிடைக்கக்கூடிய நேரத்தில் பெரிய அளவில் நஷ்டம் உண்டாகும். அதனால் மன உளைச்சல் ஏற்படும்.
12-ஆம் பாவாதிபதி பாவகிரகத்துடன் 12-ல் இருந்தால் தூக்கம் சரியாக வராது. கணவன்- மனைவி உறவு சரியாக இருக்காது. அதனால் கவலை உண்டாகும்.
பரிகாரங்கள்
கவலை இல்லாமல் சந்தோஷமாக இருப் பதற்கு...
வாழும் வீட்டில் தேவையற்ற பொருட்களை சேர்த்து வைக்கக்கூடாது.
தினமும் இரவில் படுப்பதற்கு முன்பு தன் குலதெய்வத்தை வணங்கவேண்டும். சிறிது வெல்லம் சாப்பிட்டுவிட்டுத் தூங்குவது நல்லது.
தினமும் அரசமரத்திற்கு நீர் வார்க்க வேண்டும். அரசமரத்தைச் சுற்றிவந்து வழி படுதல் நன்று.
சனிக்கிழமை அரசமரத்திற்குக்கீழே ஒரு தீபத்தை ஏற்றவேண்டும்.
தினமும் சூரியனுக்கு நீர் வார்த்து வணங்குதல் நன்மை தரும்.
9-ஆவது வீட்டு அதிபதியின் ரத்தினத்தை அணியலாம்.
செல்: 98401 11534