சௌபக்கியங்களைப் பெருக்கும் ரிஷபாரூடர் வழிபாடு! -கே. குமார சிவாச்சாரியார்

/idhalgal/balajothidam/worship-rishabharudar-enhances-pleasures-k-kumara-sivacharya

யிரோட்டமுள்ள தெய்வப் படங்களைக் காணும் நாம் அதிலுள்ள உட்பொருளைக் காணத் தவறிவிடுகிறோம்.

சிவபெருமான் ரிஷபத்தில் அமர்ந்திருக்கும் தெய்வீகக் காட்சியைக் கண்டால் "ஈஸ்வரா.... மகாதேவா' என்று வணங்குவோம். அதேசமயம் அந்தப் படத்திலுள்ள பொருட்கள், ரிஷபம், அணிக்கலன்களிலுள்ள வியப்பூட்டும் ஆன்மிகச் செய்தியைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஆதிசங்கரர் அம்பாளின் இருப் பிடத்தை "மணித்வீபம்' என்ற பொருளில் அழகுறக் காட்சிப்படுத்தினார். அம்பிகை யின் அழகு வர்ணனையை ஸ்வயம்வரகலா மந்திரப் பகுதியாக 44 துதிகளாக வெளியிட்டார் துர்வாச மகரிஷி.

அருணாகிரிநாதர் முருகப் பெருமானை வர்ணித்தார் திருப்புகழ் மாலையாக. ஈசன் விடைவாகனராய்த் தோன்றும் காட்சியை அறிந்து வணங்கிட ஆனந்தம் கூடுமே!

dd

ரிஷபம்: வேதங்கள் நான்கும் கால்களாகத் தாங்கிக்கொண்டு, அம்மையப்பர் இன்றி இந்த உலகமில்லை என்று உணர்த்துகிறது. விலங்கினது மனதின்மேல் இறைவன் குடிகொண்டால் ஆணவம், கன்மம், மாயைகள் மறைந்து, நமது மனம் தூயதாக அமையும். இவரை ஆகம மூலமந்திரங்களைக்கொண்டு கதிரவன் சாயும் காலத்தில் துதித்தால் கிடைக்கும் பலனையே பிரதோஷகாலப் பலன் பாடல் உணர்த்துகிறது. துன்பம் நீங்கி இன்பம் பெறுவர்; தோஷங்கள் அகன்று சுகம் பெறுவர்; வறுமைகள் அகன்று செல்வம் பெறுவர் என்பதே அதன் எளிய பொருள்.

நேத்திர ஆபரணம்: ரிஷப தேவருக்குத் தலைப் பகுதியில், கொம்புகளின் கீழாகப் பூட்டப்பட்ட நகையானது, விலங்கு மனதில் கோபம், மதம், மாச்சர்யம் ஆகிய தோஷங்கள் நீங்கி சித்தம் சுத்தமடைந்திடவும், மனதை ஒரு கட்டுக்குள் கொண்டுவரவும் செய்கிறது. ஆன்ம பலமும் வீ

யிரோட்டமுள்ள தெய்வப் படங்களைக் காணும் நாம் அதிலுள்ள உட்பொருளைக் காணத் தவறிவிடுகிறோம்.

சிவபெருமான் ரிஷபத்தில் அமர்ந்திருக்கும் தெய்வீகக் காட்சியைக் கண்டால் "ஈஸ்வரா.... மகாதேவா' என்று வணங்குவோம். அதேசமயம் அந்தப் படத்திலுள்ள பொருட்கள், ரிஷபம், அணிக்கலன்களிலுள்ள வியப்பூட்டும் ஆன்மிகச் செய்தியைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஆதிசங்கரர் அம்பாளின் இருப் பிடத்தை "மணித்வீபம்' என்ற பொருளில் அழகுறக் காட்சிப்படுத்தினார். அம்பிகை யின் அழகு வர்ணனையை ஸ்வயம்வரகலா மந்திரப் பகுதியாக 44 துதிகளாக வெளியிட்டார் துர்வாச மகரிஷி.

அருணாகிரிநாதர் முருகப் பெருமானை வர்ணித்தார் திருப்புகழ் மாலையாக. ஈசன் விடைவாகனராய்த் தோன்றும் காட்சியை அறிந்து வணங்கிட ஆனந்தம் கூடுமே!

dd

ரிஷபம்: வேதங்கள் நான்கும் கால்களாகத் தாங்கிக்கொண்டு, அம்மையப்பர் இன்றி இந்த உலகமில்லை என்று உணர்த்துகிறது. விலங்கினது மனதின்மேல் இறைவன் குடிகொண்டால் ஆணவம், கன்மம், மாயைகள் மறைந்து, நமது மனம் தூயதாக அமையும். இவரை ஆகம மூலமந்திரங்களைக்கொண்டு கதிரவன் சாயும் காலத்தில் துதித்தால் கிடைக்கும் பலனையே பிரதோஷகாலப் பலன் பாடல் உணர்த்துகிறது. துன்பம் நீங்கி இன்பம் பெறுவர்; தோஷங்கள் அகன்று சுகம் பெறுவர்; வறுமைகள் அகன்று செல்வம் பெறுவர் என்பதே அதன் எளிய பொருள்.

நேத்திர ஆபரணம்: ரிஷப தேவருக்குத் தலைப் பகுதியில், கொம்புகளின் கீழாகப் பூட்டப்பட்ட நகையானது, விலங்கு மனதில் கோபம், மதம், மாச்சர்யம் ஆகிய தோஷங்கள் நீங்கி சித்தம் சுத்தமடைந்திடவும், மனதை ஒரு கட்டுக்குள் கொண்டுவரவும் செய்கிறது. ஆன்ம பலமும் வீரியங்களும் ஆற்றல் பலவும் நிறைந்ததாகக் காட்சிதருகின்றது. ரிஷபத்தின் தோற்றம் எல்லா ஆலயங்களிலும், அவரது நாக்கு வெளியில் நீட்டி வளைந்தபடி தெரியும். நாவினைக்கட்டி, புறங்கூறுகிற வார்த்தைகளைப் பேசாமல், நல்ல சொற்களையே வெளிப்படுத்தவேண்டும்.

ஜோதிட மர்மத்தையும் காலவிதானம் பற்றியும் "நந்திவாக்கியம்' என்ற பெயரில் இவர்தான் மகிபதி மன்னனுக்கு உரைத்தார். அதன் வழிவந்ததே கோள்களின் அசைவுப் பலன்கள். ஜோதிடம் கூற நினைப்போர் நந்தி வாக்கியத்தைப் படித்தால் நல்லபலன் உரைக்கலாம் என்பது ஒருவித ரகசியம்.

இரண்டு கொம்புகள்: உடல் முழுவதும் தெய்வ லட்சணங்களைத் தாங்கி நிற்கின்ற ரிஷபத்தின் தலைக்கு மேல் இரண்டு கொம்புகள் கரிய நிறத் தில் அமைந்துள்ளன. பாவம் செய்த ஆத்மாக்களே இரு கொம்புகளாக அவதரிக்கின்றன என்பது வேறுவகை. இங்கு சொல்லப்படுவது, மனிதனுக்குள்ள அசுர மனமே ஒருகொம்பு; மற்றொன்று ஆபத்துகளை எதிர்க்கப் பயன்படுகிற வேலாயுதம். இதை சமயமறிந்து பயன்படுத்துதல் தர்மமாகிறது.

ரிஷபரது கண்டமாலை: பலவகை கலைகள், வர்ணம், பதம், மந்திரம், தத்துவம், புவனம், கலா போன்ற ஒப்பரிய அத்வாக்களாக அவரது கண்டத்தில் அமைந்துள்ளன. புவனத்தை வெல்லும்- புரிந்துணரும் சக்தியும் ஞானமும், கலையறிவும் நந்திதேவரை வழிபடுவதால் பெற்றுவிடமுடியும் என்பதை அறிதல் வேண்டும்.

அவர் வால்பகுதியில் கீழ் தலைமுடி போன்ற கருமுடிகள் உள்ளன. இறைவன் வழிநடத்த வாழ்வின் எல்லா சுழற்சி களையும் கடந்து புவியில் சேரும் இந்த உடம்பு, அடித்தாலும் வலியில்லாத முடிபோன்று ஆகிவிடுகிறது. ஆன்மா மட்டும் இறைவனிடம் அடைக்கலமாகி மலங்களைப் புறந்தள்ளிவிட வேண்டும் என்று உணர்த்துகிறது.

ஈசனின் தலைபாகம்: வலப்புறம் சந்திரனையும் இடப்புறமாகச் சூரியனையும் ஆபரணமாகக்கொண்டு, ரத்தினங் கள் பதித்த மாணிக்கப் பரலோடு கூடிய மகுடத்தை அணிந்துள்ளனர்.

சூரியன் உயிர்கள் ஜீவிக்க ஒளியைத் தந்து, மக்களின் நோய்களை விலக்கும் ஆரோக்கிய அதிபர். வெற்றி நாயகனாய் விடைவாகனரின் சிரசில் அமர்ந்துள்ளார்.

சந்திரன் அழகு மிகுந்தவன். வணங்கு பவர்களுக்குப் புகழ் மிகுந்த வாழ்வைத் தருபவன். நல்ல பதவிகளை அளிப்பவன். ஈசனது சிரசில் எழில் தோற்றத்துடன் அமர்ந்திருப்பதைக் காணமுடிகிறது.

மூன்று நேத்திரங்கள்: இச்சை, காமம், கிரியை ஆகியவையே மூன்று கண்கள். உலக ஜீவன்களின் விருப்பங்களை நிறைவேற்ற வலக்கண்ணிலிருந்து திருவருளைத் தருகிறார். தன் ஞானக் கண்ணால் ஆய்ந்தறியும் குணத்தை மனிதனுக்கு வழங்க இடக்கண்ணைத் திறந்தருள்கிறார்.

மூன்றாவதாக நெற்றிக் கண்ணிலிருந்து எப்போதும் ஒருவித ஆக்கசக்தி வந்துகொண்டே இருக்கிறது. அதன் காந்தசக்தி கண்ணுக்குப் புலனாகாத தீமைகளை அகற்றி, தெளிந்த மனத்தோடு செயல்படும் கிரியா ஊக்கியைத் தருகிறது.

கண்டமாலையில் நவமணிகள்: ஒன்பதுவிதமான பதவிகளோடு நவமணிகள் உருவில் நவகிரகங்கள் அமர்ந்து அணி செய்கின்றன. ஈசனது மனக்கட்டளைக்கேற்ப பக்தர்களுக்குப் பலன்களைத் தருகின்றனர். ஆதவன் முதல் அரவன் கேதுவரை நற்பலன்களே கொடுத்திட சிவபெருமானுக்கு எட்டு கரங்கள் இருப்பதாகக் காமிகம் என்ற சிவாகமம் கூறுகிறது. திரிசூலம், கட்வாங்கம், சக்தியாயுதம், நீலோத்பலம், நாகம், டமருகம், மாதுளங்கனி, அட்சமாலை தரித்து அபய, வரதக் கைகளை உடையவராக விளங்குகிறார்.

சக்தியும் சிவனும் சேர்ந்த உருவாகச் சித்தரிக்கப்படும்போது இந்த ரூபம்.

இறைவன் அணிந்திருக்கின்ற வஸ்திரங் கள், நம்மை ஆகாயம் போர்த்திக் காக்கும் நிலையைக் காட்டுகின்றன. வலதுக்காலைத் தொங்கவிட்டு இடக்காலை மேலே மடக்கிய படி மகிழ்வான சுகாசனம்மேல் அமர்ந்தி ருக்கிறார். இத்தனையும் இருக்கும் தெய்வ உருவை வணங்கினால் இறுதிவரை மகிழ்ச்சியே. கணவன்- மனைவி அன்யோன்ய பாவமே இல்வாழ்க்கையில் முக்கிய அங்கம் என்று குறிப்பால் சொல்ல, தேவி ஈசனுக்கு இடப்பாகத்தில் அமர்கிறாள்.

அம்பிக்கையின் அழகு: மகுடத்தில் நான்கு பக்கங்களிலும் ரத்தினங்கள் பதிக்கப் பட்டு, அவை சக்தியின் வெளிப் பாட்டைக் காட்டுகின்றன. நவசக்தி களாகிய வாமா, ஜ்யேஷ்டா, ரௌத்ரீ, காளி, பலவிகரணீ, கலவிகரணீ, பலப்ரமதணீ, சர்வ பூததமணீ, மனோன் மணீ ஆகியவர்கள் சுற்றிலும் அலங்கரித்த படி நிற்க, இவர்களைப் பார்த்தாலே தோஷங்கள் அனைத்தும் விலகும்.

தேவிக்கும் மூன்று கண்கள் இருக்கின் றன. வலக்கண் திருமகளின் அம்சமாகவும், இடக்கண் துர்க்கையின் அம்சமாகவும், வகிட்டின் திறவாத கண் ஞானம் தரும் கலைவாணியின் அம்சமாகவும் விளங்கி, முறையே செல்வத்தையும் வீரத்தையும் பட்டறிவையும் நமக்கு அளிக்கின்றன. இதுபோல இன்னும் பல தத்துவங்களும் அடங்கியுள்ளன.

வழிபடுவதால் என்ன பலன்?

பூஜையறையில் பலவகை மூர்த்தங் களின் படங்களை வைத்திருந்தாலும், ஒவ்வொரு வீட்டு வரவேற்பறையிலும் கிழக்கு முகமாக ரிஷபாரூடர் என்னும் காளைமேல் அமர்ந்த சக்திசிவ அம்சம் மாட்டப்பட்டிருக்கவேண்டும். இந்தப் படத்தை காலையில் கண்விழித்து முதலில் யார் காண்கிறார்களோ, அவர்களுக்கு வாழ்க்கையில் துன்பங்கள் துவண்டோடி, சௌபாக்கியங்களே மிகுந்துவரும்.

வழிபாட்டு முறையைத் தெரிந்து கொண்டு, திங்கட்கிழமை ஜென்ம நட்சத் திர நாளில் இப்படத்தை தரிசித்து வணங்கு பவர்களுக்கு வாழ்வில் இடர்கள் நெருங் காது. பஞ்சாட்சர மந்திரங்களால் பூஜை செய்திட பொருளாதார பலம் வந்து சேரும். அதிகாலை வேளையில் ஸ்ரீருத்ரம் ஒலிக்கவிட்டு நறுமணம் மிக்க தூபப் புகை இடுவதால் துர்சக்திகள் அகன்றுவிடும்.

திங்கட்கிழமை ஸ்ரீருத்ரம், பௌர்ணமி யில் பஞ்ச சுக்தங்கள் என்ற புருஷ சுக்தம், ஸ்ரீசுக்தம், துர்க்கா, விஷ்ணு, நாராயண சுக்தங்களை ஒலிக்க விடலாம். சிவனது அஷ்டோத்திரம் வில்வத்தாலும், தேவியின் அர்ச்சனையை குங்குமத்தாலும் செய்து, எளிமையாக வழிபட்டு வளம் காணுங்கள்.

கைகூப்பியபடி இடபாரூடரின் தியானத்தை மூன்றுமுறை அட்சரம் பிசகாமல் சொல்லி வழிபட்டால் வாழ்க்கையில் நல்வழி பிறக்கும்.

"ஓம் ஸவ்யேஸ்யாத வக்ரதுண்டான் வித கனக கரோ கோபதேர் மஸ்தகஸ்தம்

வாமஸ்யார்தம் சுபக்ஷம் சுகர கரயுதம் வாமகட்யாம் ததானம்/

ப்ருஷ்டே சோஷ்ண ப்ரசன்னம் த்ரிணயந ஸகிதம் பத்தவேணீ கிரீடம்

வாமே கௌர்யா ஸமேதம் பசித சுபகரம் தம் வ்ருஷாரூட மீசம்//'

இதன்பொருள்: வலது கையை விநாயரின் தும்பிக்கைபோல வைத்துக் கொண்டு, ரிஷபத்தின் மத்தகத்தில் வலது முட்டியை வைத்திருப்பவரும், உஷ்ணத் தால் ஏற்பட்ட செந்நிறத் தழும்பு உடைய வரும், மூன்று கண்களோடு, முடித் திரளால் அமைக்கப்பட்ட கிரீடத்தைக் கொண்டவரும், கௌரி தேவியோடு காட்சிதருபவரும், விபூதி பூசி சுபங்கள் தரவல்ல திருமேனியோடு விளங்குபவரு மான ரிஷபாரூடரை வணங்கி நலம் பெறுவோம்.

bala080121
இதையும் படியுங்கள்
Subscribe