தற்போதைய காலகட்டத்தில் மனிதர்களின் வாழ்வு மிகவும் பதற்றத்துடன் நகர்ந்துகொண்டிருக் கிறது. "கொரோனா' என்னும் கொடிய நோய் எங்கும் பரவி பயம்கொள்ளச் செய்கிறது. அது மூச்சுத்திணறலை ஏற்படுத்தி, நுரையீரல் செயல்பாட்டை முடக்கி, மனிதனின் வாழ்வு நிலையைக் கேள்விக்குறியாக்குகிறது. இந்த நோய் மார்பு மற்றும் நுரையீரலைத் தாக்கிக் காய்ச்சலை உண்டாக்கு கிறது.
மார்புப் பற்றிய செய்திகளைக் கடகராசியைக் கொண்டும், லக்னத்திற்கு 4-ஆம் பாவத்தைக் கொண்டும் ஆராய்ந்து தெளியலாம் என ஜோதிடம் உரைக்கிறது.
கிரகங்களுள் சந்திரன் ரத்தம், நுரையீரல், மனம், சிறுநீரகம், இதயம் பற்றி எடுத்துரைக்கும்.
நட்சத்திரங்களுள் புனர்பூசம் காது, தொண்டை, தோள், நுரையீரல், வயிறு, மார்பு, கல்லீரல் பற்றியும்; ஆயில்யம் தோள், நுரையீரல், உதர விதானம், ஈரல் ஆகியவை பற்றியும் எடுத்துரைக்கும்.
மூச்சுத்திணறல் ஏற்படுத்தும் கிரக அமைப்புகள் லக்னத்துக்கு ஏழில் சூரியன் இருக்க, சந்திரனுக்கு இருபுறமும் அசுபர் நிற்க, ஏழில் இருக்கும் சூரியன் லக்னத்தைப் பார்க்க, சந்திரன் பாவ கர்த்தாரி யோகம் பெற்றுப் பலமிழக்கும் நிலையில் இருப்பின், சந்திர தசை, புக்தியில் ஜாதகருக்கு மூச்சுத்திணறல் நோய் ஏற்படும்.
லக்னத்தில் பலவீனமான சூரியன் இருந்து,

லக்னத்தில் பலவீனமான சூரியன் இருந்து, அதனை செவ்வாய் பார்க்கும் அமைப்பு.
சூரியன் காலபுருஷனின் ஐந்தாம் அதிபதி; ஆரோக்கிய அதிபதி. செவ்வாய் காலபுருஷனின் எட்டாம் அதிபதி. பலவீனமான ஆரோக்கிய அதிபதியை செவ்வாய் பார்க்கும்போது மூச்சுத் திணறல் ஏற்பட வாய்ப்புண்டு.
கடகம் லக்னமாகி, அதில் செவ்வாய் இருந்து, அதனை சனி பார்த்தல்.
நீர் ராசியான கடகத்தில் செவ்வாய் நீசம் பெறுவார். அதனை நோய்க்காரகன் சனி பார்க்கும் போது மூச்சுத்திணறல் ஏற்படும்.
லக்னம் நீர் ராசியாகி அதன் அதிபதி 6, 8, 12-ல் இருத்தல். எந்த லக்னாதிபதியும் 6, 8, 12-ல் மறைவது ஏற்புடையதன்று. அதிலும், நீர் ராசிகளான கடகம், விருச்சிகம், மீனம் ஆகியவை லக்னமாகி, அதன் அதிபதிகள் 6, 8, 12-ல் மறையும்போது மூச்சுத் திணறல் கண்டிப்பாக ஏற்படும். அதேபோல, இந்த நீர் ராசிகள் லக்னமாகி, அதில் சனி, செவ்வாய் இணைந்தாலும் மூச்சுத்திணறலுக்கு வாய்ப்புண்டு.
நீர் ராசிகளுள் ஒன்று ஆறு அல்லது நான்காம் அதிபதியாகி, அவர்கள் பரிவர்த் தனையாகி இருப்பின் மூச்சுத்திணறலுக்கு வாய்ப்புண்டு. ஆறாம் அதிபதி நோய் வீட்டு அதிபதி. நான்காம் அதிபதி சுக வீட்டு அதிபதி. அந்த வீடுகளுள் ஒன்று நீர் ராசியாக இருப்பின் அங்கு நீர் சம்பந்தமான நோய் ஏற்படுவது இயல்பு.
நோய் ஏற்பட சில காரணங்கள்
காய்ச்சல்: நாயைக்கொண்டு பிறரைத் துன்பப்படுத்தினால் காய்ச்சல் ஏற்படுமாம். இதற்குப் பரிகாரமாக சிவன், விஷ்ணுவுக்கு அபிஷேகம் செய்வதும், துர்க்கை, ருத்ரனை வழிபடுவதும் சிறப்பு.
ருசியின்மை: தானம் செய்யும்போது பக்தியில்லாமல், பணிவில்லாமல் செய்தது காரணம். மேலும், நம்பிக்கைத் துரோகமும் காரணமாகும். மனமுவந்து தானம்செய்வது பரிகாரமாகும்.
கே. பி ஜோதிடப்படி, சந்திரன் ஆறாம் பாவக ஆரம்ப முனையின் உப நட்சத்திரமாக அமைந்தால் நீர், ரத்தம் சம்பந்தமான நோய் உண்டாகும். எட்டாம் பாவக உப நட்சத் திரமாக அமைந்தால் நீரினால் கண்டம், உடலிலுள்ள நீர், ரத்தம் குறைதல் போன்றவை உண்டாகும். இதே ஆறாம் பாவா திபதி ஆறாம் பாவக அதிகாரம் பெற்றால் உடல்நலப் பாதிப்பும், நோயை எதிர்க்கும் தன்மை இல்லாமையும் ஏற்படும். இவர்களால் மற்றவர்களுக்கு தொல்லை உண்டாகும்.
கொரோனா இடர் நீங்க சில பரிகாரங்கள்
"ஓம் நமோ பகவதே வாசுதேவாய
தன்வந்த்ரயே அம்ருத கலச ஹஸ்தாய
சர்வ ஆமய நாசனாய த்ரைலோக்ய நாதாய
ஸ்ரீ மகா விஷ்ணவே நமஹ'
என்னும் தன்வந்திரி மந்திரத்தைத் தினமும் காலையில் 27 முறை பாராயணம் செய்து மருந்தை உட்கொண்டால் விரைவில் குணம்பெறலாம்."
த்ரயம்பகம் யஜாமஹே
சுகந்திம் புஷ்டி வர்த்தனம்
உர்வாருகமிவ பந்தனாத்
ம்ருத்யோர் முக்ஷிய மாம்ருதாத்'
என்னும் எமபயம் போக்கும் மகாமிருத் யுஞ்சய மந்திரத்தைத் தினமும் காலை 16 முறை பாராயணம் செய்தால் சிவபெருமான் அருளால் தீர்க்காயுள் பெறலாம்.
கொரோனா நோய் நீர் சம்பந்தம் உடையது. எனவே, திங்கட்கிழமைதோறும் விரதமிருந்து, அம்பிகைக்கு வெள்ளை மலரால் அர்ச்சனைசெய்து, பால் சாதம் படைத்து,
"பத்மத்வஜாய வித்மஹே
ஹேமரூபாய தீமஹி
தன்னோ சோமஹ் ப்ரசோதயாத்'
என்னும் சந்திர காயத்ரி மந்திரத்தை 24 முறை பாராயணம் செய்தல் வேண்டும்.
நோய் தீர்க்கும் சில திருத்தலங்கள்
வைத்தீஸ்வரன் கோவில் சென்று வழிபடலாம். திருத்துறைப்பூண்டி ஸ்ரீப ஔஷதீவஸ்வரர் ஆலயம் நோய் தீர்க்கும் தலம். திருக்குடந்தை ஸ்ரீ நாகநாத சுவாமி திருக்கோவிலில் உள்ள ஜுரஹர கணபதிக்கு அர்ச்சனை செய்தால் காய்ச்சலால் ஏற்பட்ட பாதிப்பு நீங்கி சுகம் கிடைக்கும். காஞ்சியில் உள்ள சிவபெருமான் ஜுரஹரேஸ்வரருக்கு பாலபிஷேகம்செய்து, அந்தப் பாலை அருந் தினால் ஜுரம் குணமாகிறது.
காட்டூர் உத்திர வைத்திய லிங்கேஸ்வரர், திருவான்மியூர் மருந்தீஸ்வரர், ராஜபாளையம் வைத்தியநாத சுவாமி, தேனி- உத்தமபாளையம் வைத்தியநாதசுவாமி, சென்னை- திருக்கச்சூர் மருந்தீசர், திருக்கொண்டீஸ்வரம் ஜுரஹரேஸ் வரர், திருந்துதேவன்குடி கற்கடேஸ்வரர் (சந்திர தோஷம் நீங்க சிறந்த தலம் இது), பட்டுக் கோட்டை ஔஷதபுரீஸ்வரர், சென்னை- பூந்தமல்லி வைத்தியநாதர், கேரள மாநிலம் குருவாயூரப்பன் திருக்கோவில், ஸ்ரீ தன்வந்திரி திருக்கோவில், திருமலை ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் போன்ற தெய்வங்களை வணங் கினால் நம் நோய் தீரும். இவையன்றி, உங்கள் பகுதியிலுள்ள பழமையான ஆலயங்கள் சென்றும் வழிபடலாம். தற்போதைய சூழலில் ஆலயங்கள் சென்று வழிபடுவது இயலாததாக உள்ளதால் மனதால் வழிபடுவதும் ஏற்பு டையதே. சமயம் வாய்க்கும்போது அருகிலுள்ள ஆலயம் சென்று வழிபடுங்கள்.
நடக்கும் சார்வரி வருடம் முழுக்கவே மக்கள் சற்று கலவரத்துடன்தான் வாழவேண்டி யிருக்கும். ஆறாமிட தசை, புக்தி, அந்தரம் மற்றும் எட்டாமிட தசை, புக்தி, அந்தரம் நடப்பவர்கள்; ஏழரைச்சனி, அஷ்டமச்சனி நடப்பவர்கள்; நீச கிரக தசை, புக்தி, அந்தரம் நடப்பவர்கள்; மாரக தசை நடப்பவர்கள்; சந்திரன் கேமத்துருவ நிலையிலிருந்து அதன் தசை, புக்தி, அந்தரம் நடப்பவர்கள் என இவ்வகையில் உள்ளோர் சற்று கவனமாக இருத்தல் அவசியம். ராகு தசையில் சந்திர புக்தி அல்லது சந்திர தசையில் ராகு புக்தி நடப்பவர்களுக்கும் உடல்நலனில் கவனம் தேவை.
இயற்கை மருத்துவத்தின் துணையோடு, முன்னோர் சொன்ன ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றினால் இந்த பயமுறுத்தும் நோயிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.
செல்: 94449 61845