Advertisment

பிரம்மஹத்தி தோஷம் போக்கும் வழிபாட்டுப் பரிகாரங்கள்! -ஆர். மகாலட்சுமி

/idhalgal/balajothidam/worship-remedies-cure-brahmahadhi-tosham-r-mahalakshmi

ஜோதிட உலகில் ஆயிரக் கணக்கான யோகங்களும் தோஷங்களும் உள்ளன. தோஷங்களில் முதன்மையா னது- மகாபாதகம் தரும் தோஷம் எதுவெனில் அது பிரம்மஹத்தி தோஷமாகும்.

Advertisment

இராமாயணத்தில் தசரத மாமன்னன் பார்வையற்ற அந்தணத் தம்பதியரின் மகனைக் கொன்றதும், இராமபிரான் வேத அறிவு நிரம்பிய இராவணனைக் கொன்றதும் பிரம்மஹத்தி தோஷமாகும்.

thosam

முனிவர்கள், அந்தணர் களைக் கொள்வதாலும், குருவைக் கொல்வதாலும், குரு பத்தினியை அடைவதாலும், தாயாரைக் கொல்வதாலும், தங்கம் திருடுவதாலும், பசுவைக் கொல்வதாலும் பிரம்மஹத்தி தோஷம் ஏற்படும்.

சனி, குரு சேர்க்கை அல்லது குரு, ராகு சேர்க்கை சண்டாள யோகம் எனப்படும். குரு, சனி, ராகு ஆகியவர்கள் 1, 5, 9 எனும் திரிகோண இணைப்பில் இருப்பின் அது பிரம்மஹத்தி தோஷமாகும். குருவும் ராகுவும் சேர்க்கை பெற்று அல்லது கோணத்தில் இருப்பின் அதுவும் இதே தோஷத்தைக் குறிக்கும்.

தற்போதைய கிரக கோட்சார நிலையில் ராகு ரிஷபத்திலும், குருவும் சனியும் மகரத்திலும் உள்ளனர்.

பிப்ரவரி 18 அன்று செவ்வாய் ரிஷபத்திற்கு மாறி அங்குள்ள ராகுவுடன் இணைகிறார். ஏப்ரல் 13 வரை ராகுவுடன் தங்கியிருப்பார். செவ்வாய், ராகு மற்றும் குரு, சனி ஆகியோர் திரிகோண அமைப்பில் உள்ளனர்.

செவ்வாய் பிப்ரவரி 18 முதல் மார்ச் 9 வரை கிருத்திகை நட்சத்திரத்திலும், பிறகு ஏப்ரல் 2 வரை ரோகிணி நட்சத்திரத்திலும், ஏப்ரல் 13 வரை மிருகசீரிட நட்சத்திரத்திலும் சென்று, பின்னர் ரிஷப ராசியையும் ராகுவையும் விட்டு நகர்வார்.

ஆக, பிரம்மஹத்தி தோஷத்துடன் செவ்வாயும் சேர்

ஆக, பிரம்மஹத்தி தோஷத்துடன் செவ்வாயும் சேர்கிறார். எனினும் குருவின் 5-ஆம் பார்வையை செவ்வாய், ராகு பெறுகின்றனர். இவர்கள் அனைவரும் நிற்கும் வீடு நில ராசி தத்துவமாகும். மேலும் செவ்வாய், ராகு மூல தத்துவத்திலும்; குரு, சனி தாது தத்துவத்திலும் உள்ளனர். குருவின் பார்வை செவ்வாய், ராகுவுக்குக் கிடைப்பதால் அவர்களது அதீத தீமைகள் அடங்கியிருக்கும்.

இன்னொருவகையில் பிரம்மஹத்தி தோஷம் அல்லது குரு சண்டாள யோகம் உண்டாவதால் பலன்கள் எதிர்மறையாக அமையும்.

என்ன பலன்கள் விளையும்?

இரு கிரக சேர்க்கைகளும் நில ராசியில் அமைந்துள்ளன. எனவே நிலம் சார்ந்த பாதிப்புகள் ஏற்படலாம்.

இளம்பெண்களுக்கு பாதிப்பு வரக்கூடும். எனினும் சுக்கிரனின் வீட்டில் செவ்வாய் என்னும் மங்களகாரகன் இருப்பதால், இளம்பெண்கள் சட்டென்று முடிவெடுத்து சற்று இனக் கலப்பாயினும் திருமணம் செய்துகொள்வர்.

அடாவடி செய்யும் உங்கள் சகோதரருக்கு ஏதாவது கசப்பான அனுபவத்தைத் தந்து திருத்துவார்.

நிறைய கட்டடங்கள் கட்டப்படும். கட்டடத் தொழிலாளர்களின் நலனில் அக்கறை தேவை.

வாக்குமூலம் தொழில்செய்யும் வழக்கறிஞர், ஜோதிடர்கள், மதப் பிரசாரகர்கள், சொற்பொழிவாளர்கள், ஆசிரியர்கள், குறி சொல்பவர்கள் போன்றவர்கள் கவனமாக இருத்தல் அவசியம்.

அரசியல் பேச்சாளர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

அரசியல் தலைவர் ஒருவருக்கு விபத்தில் ரத்த காயம் ஏற்படக்கூடும். மத போதகர் ஒருவர் தற்கொலைக்கு முயல்வார்.

சில அரசியல்வாதிகள் அரசியல் தளத்தை விட்டே அகன்றுவிடுவர். பெண் அரசியல் வாதிகள் பழிபாவம் சுமப்பர். தொழில் நடக்கும் இடங்களில் பளுதூக்கும் இயந்திரங் களை மிக எச்சரிக்கையாகக் கையாளவும். விபரீதங்களைத் தடுக்க முயலவேண்டும்.

குரு ஆத்மாவைக் குறிப்பார். ராகு, சனி மரணத்தைக் குறிப்பர். செவ்வாய் விபத்து, ரத்தத்தைக் குறிப்பார். இந்த கிரகங்கள் திரிகோணங்களில் நின்று தொடர்பு பெறும்போது என்னென்ன விபரீத விளைவுகள் நேருமென்று கணக்கிட்டுச் சொல்ல இயலவில்லை. ஏனெனில் குருவும் சனியும் காலபுருஷனின் கர்ம ஸ்தானத்திலும், செவ்வாயும் ராகுவும் காலபுருஷனின் மாரக ஸ்தானத்திலும் நின்று தொடர்புகொள்கின்றனர்.

சில இடங்களில் நிலச்சரிவு, நிலநடுக்கம் ஏற்படலாம். ஆயினும் குரு பார்வை இருப்பதால் தவிர்க்கப்படவும் கூடும்.

ரிஷப ராசியானது அயர்லாந்து, ஹாலந்து, ஜார்ஜியா, ரஷ்யாவின் சில பகுதிகள், இந்தியாவில் உத்தரப் பிரதேசம், பீகார், ஆக்ரா, மதுரா, அயோத்தி ஆகியவற்றையும்; தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களையும் குறிக்கும்.

மகர ராசியானது அல்பேனியா, பல்கேரியா, கிரீஸ் நாடுகளையும்; இந்தியாவில் டார்ஜிலிங், அஸ்தினாபுரம், உத்தரப்பிரதேசம், போபால், இந்தூர் உள்ளிட்ட சில பகுதிகளையும்; தமிழகத்தில் நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி என சில இடங்களையும் குறிக்கும். எனவே இப்பகுதிகளில் சற்று நிலநடுக்கம் ஏற்படலாம்.

சில இடங்களில் ஆட்சியாளர்கள் அராஜகம் செய்வர். வாகன விபத்துகள் அதிகரிக்கலாம். இதற்குக் காரணம், மார்ச் 8 முதல் ஏப்ரல் 2 வரை செவ்வாய் ரோகிணி நட்சத்திரத்தில் செல்கிறார். அதே நேரத்தில் ராகுவும் அதே ரோகிணி நட்சத்திரத்தில் நகர்கிறார். செவ்வாயும் ராகுவும் ஒரே நட்சத்திரத்தில் பயணம் செய்யும்போது விளைவுகள் விரும்பத்தகாததாக அமையும். ரோகிணி என்பது சந்திர ச;ôரம். சந்திரன் பயணங்களைக் குறிப்பவர். மேலும் மக்கள் தண்ணீர் சம்பந்தமாகவும் கவனமாக இருத்தல் அவசியம். நீர் சார்ந்த விபத்துகள் ஏற்படக்கூடும்.

சனி, ராகுவின் கோணப் பார்வை இயற்கை சீற்றங்களை அதிகரிக்கும். செவ்வாய், ராகு, சனி ஆகியோரின் சம்பந்தமானது குற்றங்களை அதிகரிக்கும். கொலைகளும் நடக்கும். என்கவுன்டர்களும் நடக்கும். காவல், இராணுவத் தளபதிகள் மிக கவனமாக இருத்தல் வேண்டும். தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் நேரலாம்.

குரு தெய்வ சாபத்தையும், சனி பசு சாபத்தையும் குறிப்பர். எனவே பசுக்களுக்கு பல நன்மைகள் செய்வது அவசியம். யானைகளைப் பாதுகாக்க வேண்டும்.

திரிகோண சேர்க்கையில் சுபர்கள் இருந்தால் பற்பல நற்பலன்கள் நடக்கும். ஆனால் தற்போதைய கோட்சாரத்தில் குருவைத் தவிர மற்ற மூவரும் பாவ கிரகங்கள். எனவேதான் விளைவுகள் சற்று எதிர்மறையாக இருக்குமோ என்று எண்ண வேண்டியுள்ளது. இருந்தாலும் குரு சம்பந்தம் இருப்பதால் அவர் காப்பாற்றுவார் எனும் நம்பிக்கையும் உள்ளது.

ஏப்ரல் 13 அன்று செவ்வாய் இந்த கூட்டணியிலிருந்து விலகி மிதுனத்திற்கு மாறிவிடுவார். ஏப்ரல் 5-ஆம் தேதி குரு பகவான் அதிசாரமாக கும்ப ராசிக்குச் செல்கிறார். எனவே அதுவரையில் மக்கள் தங்கள் நலத்தையும் நாட்டு நலனையும் அக்கறையாகப் பார்த்துக்கொள்ளவேண்டும்.

பரிகாரங்கள்

இராமேஸ்வரத்தில் சிறப்புப் பூஜைகள் செய்வது நன்று. திருச்சி உத்தமர் கோவில் பிரம்மாவுக்கு சிறப்பு வழிபாடு செய்தல் நலம்.

கருடாழ்வாருக்கு சிறப்பு அர்ச்சனை, சனிபகவான் சந்நிதியில் முக்கிய வழிபாடு செய்தல் நன்று.

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், கீழவடையல் கிராமத்திலுள்ள தான்தோன்றிநாதர் கோவிலை பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் தலமாக காஞ்சிப் பெரியவர் குறிப்பிட்டுள்ளார். அங்கும் சிறப்புப் பூஜை நடத்தலாம்.

திருவிடைமருதூர் மகாலிங்கர் ஆலயம் இந்த தோஷத்திற்கு உரித்தான சிறப்புத் தலம். அங்கு வழிபட்டால் தோஷம் விலகுவது உறுதி.

பசுவதை செய்த பாவம் தீர கரூர்; அந்தணர் குற்றம் விலக திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில்; பிரம்ம தோஷம் விலக திருக்கோடிக்கரை; சனி, ராகு தோஷம் நீங்க எட்டியத்தளி சிவன் கோவில் மற்றும் அனைத்து காளி, நரசிம்மர் கோவில்களிலும் உலக நன்மையை முன்னிட்டு சிறப்புப் பூஜைகள் செய்யவேண்டும்.

மார்ச் 27 முதல் ஏப்ரல் 2 வரை செவ்வாய் ரோகிணி 4-ஆம் பாதத்தில் செல்வார்.

அப்போது அவர் அம்சத்தில் நீசமடைவார். எனவே இந்த காலகட்டத்தில் அனைவரும் மிக கவனமாக நடந்துகொள்ளவும். அதிக கூட்டத்தைத் தவிர்த்தல் நன்று. எல்லா மதத்தினரும் தங்கள் தெய்வத்தை நன்கு பிரார்த்திக்கவும். செவ்வாய், ராகு ரோகிணி நட்சத்திரத்தில் செல்லும்போது பெருமழை பெய்யவும் வாய்ப்புள்ளது.

சித்தர்களை வணங்கவும். சீரடி சாய்பாபா, ஸ்ரீராகவேந்திரர், காஞ்சிப்பெரியவர் மற்றும் தங்கள் ஊரிலுள்ள சித்தர்கள் ஜீவசமாதி, பிருந்தாவனம், மடம் போன்ற இடங்களில் விளக்கேற்றி வழிபடவும்.

செல்: 94449 61845

bala190221
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe