Advertisment

தடைகளைத் தகர்க்கும் செவ்வரளிப்பூ வழிபாடு! -டாரட் எம்.ஆர். ஆனந்தவேல்

/idhalgal/balajothidam/worship-red-lotus-breaks-down-obstacles-tarot-mr-anandavel

ன்றைய கால கட்டத்தில் திருமணம் என்பதும், திருமணத்திற் குப்பின் அமைதியும் சந்தோஷமும் எல்லாருக் கும் கிடைக்கும் என்பதை அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை. அதே போல அந்தந்த வயது களில் திருமணம் சிலருக்குத்தான் நடக்கி றது. பையனைவிட சற்று வயது பெண்ணுக்குக் கூடியிருந்தாலும் திருமணம் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கி றது. இவையெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும். திருமணம் முடிந்த கையோடு அனைவரும் எதிர்பார்ப்பது "வாரிசு' என்ற குழந்தைகளைத்தான். அப்படி ஓரிரு ஆண்டுகளில் வாரிசு உருவாகவில்லையென் றால் அவர்கள் நாடிச் செல்வது மருத்துவர்களைத் தான். அவர்களும் எல்லா விதமான பரிசோதனைகளையும் செய்தபிறகு எல்லாருக்கும் குழந்தை கிடைக்கும் என்ற உத

ன்றைய கால கட்டத்தில் திருமணம் என்பதும், திருமணத்திற் குப்பின் அமைதியும் சந்தோஷமும் எல்லாருக் கும் கிடைக்கும் என்பதை அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை. அதே போல அந்தந்த வயது களில் திருமணம் சிலருக்குத்தான் நடக்கி றது. பையனைவிட சற்று வயது பெண்ணுக்குக் கூடியிருந்தாலும் திருமணம் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கி றது. இவையெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும். திருமணம் முடிந்த கையோடு அனைவரும் எதிர்பார்ப்பது "வாரிசு' என்ற குழந்தைகளைத்தான். அப்படி ஓரிரு ஆண்டுகளில் வாரிசு உருவாகவில்லையென் றால் அவர்கள் நாடிச் செல்வது மருத்துவர்களைத் தான். அவர்களும் எல்லா விதமான பரிசோதனைகளையும் செய்தபிறகு எல்லாருக்கும் குழந்தை கிடைக்கும் என்ற உத்தரவாதத் தையும் தருவதில்லை. அப்படித் தரவும் முடியாது.

Advertisment

ss

சந்தோஷமான மணவாழ்க்கை அமைய 7-ஆம் வீட்டிற்குடையவர் 6, 8-ல் இருக்கக்கூடாது. 2-ஆம் வீட்டிற்கு அசுபர் பார்வையும் இருக்கக்கூடாது. மேலும் இரண்டு அசுப கிரகங்களுக்கிடையில் 7-ஆம் வீடு அமைந்தால், திருமணமானபிறகு வாழ்க்கை ஒரு பெரும் சுமையாகவும், வேதனை மிகுந்ததாகவும் இருக்கும். ஒரு கட்டத்தில் "ஏன் இவரைத் திருமணம் செய்துகொண்டோம்' என்று மனைவியும், "ஏன் இவளைத் திருமணம் செய்துகொண்டோம்' என்று கணவனும் சிந்திக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிடும்.

பெண்களின் ஜாதகத்தைப் பொருத்தவரை 8-ஆம் வீடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. 8-ஆமிடத்தில் அசுபர்களோ செவ்வாயோ இருந்தால் திருமணத்திற்குப்பின் பெண் விதவையாவாள் என்று ஜோதிட சாஸ்திரம் பேசுகிறது. இருந்தாலும் எட்டாமிடத்திலுள்ள கிரகம் எந்த நட்சத்திர சாரத்தில் இருக்கிறதென்று பார்க்கவேண்டும். அப்படியே பார்த்தாலும் ஒருசிலருக்கு பலனானது ஒத்துப்போனாலும், எல்லாருக்கும் ஒத்துப்போவதில்லை.

Advertisment

இப்போதெல்லாம் பொருத்தமான ஜாதகங்களே வந்தாலும், வசதி வாய்ப்புகளைக் காரணம் காட்டி அந்தந்த வயதில் பெண்களுக்குத் திருமணம் செய்யத் தயங்குகி றார்கள். இதனாலேயே ஒருசில பெண்களுக்கு உரிய வயதில் திருமணம் நடைபெறுவதில்லை.

ஜாதகம் ஒரு வழிகாட்டி மட்டுமே. அவரவருடைய "கர்மா'தான் அனைத்துக்குமே காரணம். விதி வலியதுதான். ஆனால் அத்தகைய இடர்களிலிருந்து மீண்டுவர இயற்கையோடு இணைந்து செல்வதுதான் நல்லது. படிப்போ- வேலையோ- அதற்கேற்ற ஊதியத்தை எதிர்பார்ப்பதுபோல தனக்கு வரப்போகிற கணவனும் தனக்கு ஏற்றவாறு அமைய விரும்பினால், வாரத்தில் வரும் பிறந்தநாளில் (ஞாயிறு முதல் சனிவரை) மாலை 6.00 மணியிலிருந்து 7.00 மணிக்குள் அமாவாசையிலிருந்து பௌர்ணமிக்குள் பிறந்தநாள் வந்தால், இருபத்தேழு செவ்வரளிப் பூவை எடுத்து வீட்டுப் பூஜையறையில் திருத்தணி முருகன் படத்தை வைத்து, நன்கு மனமுருகி பிரார்த்தனை செய்து, ஒவ்வொரு பூவாக எடுத்து முருகன் படத்தின் காலடியில் வைத்து வழிபாடு செய்யவும். அதேபோல பிறந்தநாள் பௌர்ணமியிலிருந்து அமாவாசைக்குள் வந்தால், இருபத்தேழு வெள்ளரளிப் பூக்களைக்கொண்டு செய்யவும். ஆக, பதினைந்து நாள் செவ்வரளிப் பூக்களையும், மீதி பதினைந்து நாள் வெள்ளரளிப் பூக்களைக் கொண்டும் வழிபாடு செய்வது முக்கியம்.

இப்படி வழிபாடு செய்த பூக்களை மறுநாள் காலையில் எடுத்து முள் இல்லாத பூஞ்செடிகளின் வேர்ப்பகுதியில் போட்டு அதன்மீது தண்ணீர் ஊற்றிவிடவேண்டும். இப்படி தொடர்ந்து செய்துவந்தால் பெண்களுக்கு விரைவில் பொருத்தமான மணமகன் கிடைப்பார். திருமணத்திற்குப் பின்பும் இதைத் தொடர்ந்து செய்வதாக இருந்தால் பிறந்த நாளுக்கு பதிலாக முகூர்த்த நாளைக் கணக்கில்கொண்டு செய்யவேண்டும். அப்படி செய்துவந்தால் திருமணத்திறகுப்பின் இழப்புகளும் தடைகளும் அவ்வளவாக இருக்காது. தலைக்கு வருவது தலைப்பாகையோடு போய்விடும்.

செல்: 96552 69723.

bala131224
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe