Advertisment

செய்வினை தோஷம் போக்கி சீர்மிகு வாழ்வு தரும் பிரத்தியங்கராதேவி வழிபாடு!

/idhalgal/balajothidam/worship-prathyangaradevi-which-gives-good-life-by-removing-evil-deeds

ம்மை வழிநடத்தும் கிரகங்களின் ஆசியினா லும், அனுசரிப்பினாலும், மனிதவாழ்வு மகத்தானதொரு நிலையினை எட்டிவிட எத்தனைத்து கொண்டிருக்கின்றது.

Advertisment

அதில் பல அளப்பரிய நிகழ்வுகளும், காலமாற்றத்திற்கு உட்பட்டு நம் கரம் சேர்கின்றது என்ற பொழுதிலும், ஒருசில சமயங்களில் நிகழும் நிகழ்வுகளும், அதன் தாக்கங்களும், நம்மையும் நம்மை சுற்றி உள்ளவர்களையும் கதிகலங்க செய்துவிடுகின்றது.

Advertisment

இந்த சூழ்நிலை அமைவதற்கான காரணங்களை ஆராயும்பொழுது, பெரும் பாலும் வினா அற்ற விடை யாகவும், விடையற்ற வினாவாக வும், திகழ்ந்து நமக்கு மேலும் வியப்பினையே தந்தலிக்கின்றது.

ஒரு சாதாரண மனிதனுக்கு இந்த நிலை பல குழப்பங்களை தருகின்றது. இது கோட்சார கிரகம் சார்ந்த விளைவா? அல்லது தசா புக்தி சார்ந்த விளைவா? இல்லை கண் திருஷ்டியா? அது வும் அல்லாமல் வேறு ஏதாவது செய்வினை சார்ந்த நிகழ்வா? என்கின்ற எண்ணில் அடங்காத கேள்விகள் எழுந்து இன்னலின் வசம் இட்டுச் செல்கின்றது.

இதற்கெல்லாம் என்ன தீர்வு என்று ஆராயும்போது, இது ஒரு வேலை செய்வினை சம்பந்தமான நிகழ்வாக இருக்குமானால், அதற்கு சில அறிகுறிகளை நம் சாஸ்திரமும், முன்னோர்களும், விட்டுச் சென்றதோடு நமது ஜனன ஜாதகத்திலும், பிரசன்னத் திலும், இதனை துல்லியமாக எடுத்துரைக்க முடியும்.

இந்த செய்வினை தோஷ மானது, அபிஷார தோஷம் என்று அறியப்படுகின்றது.

மந்திரம் மற்றும் மாந்திரீகம் பயன்படுத்தி தங்களுக்கு ஆதரவாக இல்லாதவர் களையும், மனதுக்கு பிடிக்காதவர்களையும், வதைக்கும் எண்ணத்தில் அவர்களது ஆயுள், ஆரோக்கியம், செல்வ வளர்ச்சி போன்றவற்றை தடுக்

ம்மை வழிநடத்தும் கிரகங்களின் ஆசியினா லும், அனுசரிப்பினாலும், மனிதவாழ்வு மகத்தானதொரு நிலையினை எட்டிவிட எத்தனைத்து கொண்டிருக்கின்றது.

Advertisment

அதில் பல அளப்பரிய நிகழ்வுகளும், காலமாற்றத்திற்கு உட்பட்டு நம் கரம் சேர்கின்றது என்ற பொழுதிலும், ஒருசில சமயங்களில் நிகழும் நிகழ்வுகளும், அதன் தாக்கங்களும், நம்மையும் நம்மை சுற்றி உள்ளவர்களையும் கதிகலங்க செய்துவிடுகின்றது.

Advertisment

இந்த சூழ்நிலை அமைவதற்கான காரணங்களை ஆராயும்பொழுது, பெரும் பாலும் வினா அற்ற விடை யாகவும், விடையற்ற வினாவாக வும், திகழ்ந்து நமக்கு மேலும் வியப்பினையே தந்தலிக்கின்றது.

ஒரு சாதாரண மனிதனுக்கு இந்த நிலை பல குழப்பங்களை தருகின்றது. இது கோட்சார கிரகம் சார்ந்த விளைவா? அல்லது தசா புக்தி சார்ந்த விளைவா? இல்லை கண் திருஷ்டியா? அது வும் அல்லாமல் வேறு ஏதாவது செய்வினை சார்ந்த நிகழ்வா? என்கின்ற எண்ணில் அடங்காத கேள்விகள் எழுந்து இன்னலின் வசம் இட்டுச் செல்கின்றது.

இதற்கெல்லாம் என்ன தீர்வு என்று ஆராயும்போது, இது ஒரு வேலை செய்வினை சம்பந்தமான நிகழ்வாக இருக்குமானால், அதற்கு சில அறிகுறிகளை நம் சாஸ்திரமும், முன்னோர்களும், விட்டுச் சென்றதோடு நமது ஜனன ஜாதகத்திலும், பிரசன்னத் திலும், இதனை துல்லியமாக எடுத்துரைக்க முடியும்.

இந்த செய்வினை தோஷ மானது, அபிஷார தோஷம் என்று அறியப்படுகின்றது.

மந்திரம் மற்றும் மாந்திரீகம் பயன்படுத்தி தங்களுக்கு ஆதரவாக இல்லாதவர் களையும், மனதுக்கு பிடிக்காதவர்களையும், வதைக்கும் எண்ணத்தில் அவர்களது ஆயுள், ஆரோக்கியம், செல்வ வளர்ச்சி போன்றவற்றை தடுக்க முற்படுத்தப்படும் செயலை செய்வினை தோஷமாக வரையறுக் கப்படுகின்றது.

வேதங்கள் நான்கில், அதர்வண வேதத்தில் இதற்கு உண்டான வழிமுறைகளும், செயல்பாடுகளும், அளித்துள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் ஓஷோ உள்ளிட்ட பல நாணிகளும், இந்த செய்வினை உண்டு என்பதனை சில இடங்களில் வலியுறுத்தியுள்ளனர். அதோடு மாயன் காலங்களிலேயே செய்யப்பட்ட செய்வினை தொடர்பான ஆராய்ச்சியில் சில அறிஞர் களின் கருத்து நம்மை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

இந்த செய்வினை செய்வதற்கு, குறிப்பிட்ட நபரின் பாதசுவட்டும் மண், தலைமுடி, துணி போன்றவற்றை வைத்து செய்வதாகவும் மேலும் சம்பந்தப்பட்ட நபரின் உருவத்தை மாவினால் செய்து அதில் சில பொருட்களை சேர்த்து உருவேற்றி வதைப்பதன்மூலம் அந்த அந்த நபரின் உடல் சார்ந்த மற்றும் மனம் சார்ந்த வலிகளை அனுபவிப்பார் என்று நிகழ்காலத்தில் கூறப் படுகின்றது.

ஆனால் இவைகள் மட்டுமல்லாமல், பஞ்சபட்சியின் மூலமாகவும், அக்ஷர ஒளியின் மூலமாகவும், ஒருவரின் நிலையை மாற்றமுடியும் என்பது வியப்புக்குரியது என்றாலும், அது 100% உண்மையாகும்.

dev

ஒருவரின் ஜாதகத்தில் மனோகாரகன் என்று அழைக்கப்படும் சந்திரன் பலவீனப் பட்டு இருக்கும்போது, அவர்கள் செய்வினைக்கு ஆட்படாமலேயே அந்த நிலைக்கு உணர்வுரீதியாக தள்ளப்பட்டு விடுவார்கள். குறிப்பாக சந்திரன் ராகு, சந்திரன் கேது தொடர்பு இருப்பவர்கள் இந்த சிந்தனையிலேயே இருப்பார்கள். மேலும் ஐந்தாம் பாவகம் மனம் சம்பந்தப்பட்ட பாவகம் ஆகும். ஐந்தாம் அதிபதியின் நிலையும் இதில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஐந்தாம் அதிபதி மற்றும் சந்திரனின் தசா புக்தி காலங்களில், இந்தப் பிரச்சினை உருவெடுக்கும். பொதுவாக சந்திர தசையில் ராகு மற்றும் கேது புக்தி இந்த சூழ்நிலைக்கு வீரியம் அளித்து மனரீதியான உளைச்சலுக்கு ஆளாக்கிவிடும்.

அதனைத் தொடர்ந்து காற்று கிரகமான புதன் தசையில் ராகு புக்தியும், ராகு தசையில் புதன் புக்தியும், ஏதோ ஒரு நிகழக்கூடாத சூழ்நிலை நிகழ்வதாக மனதிற்கு உணர்த்திக்கொண்டே இருக்கும்.

ஒரு ஜாதகத்தையும், பிரசன்னத்தையும், கொண்டு செய்வினை தோஷம் உள்ளதா? என்பதனை அற்புதமாக எடுத்துவிடமுடியும். ஜாதகத்தில் பெரும்பாலான கிரகங்கள் ராகுவின் பிடியில் இருப்பது, செய்வினை தோஷத்திற்கு ஏற்ற ஜாதகமாக அமைகின்றது. சனிக்கு ஒன்று, ஐந்து, ஏழு, ஒன்பதாம் இடங்களில் சூரியன் அமர்வதும், ஆறாம் இடத்திற்கு குருவின் பார்வை இல்லாத நேரமும், பிறர் செய்வினை செய்வதற்கு ஏற்ற நேரமாகும். அதோடு மாந்தி, செவ்வாய், ராகு, சனி போன்ற கிரகங்களின் தொடர்பு ஆறாம் பாவகத்தோடும், எட்டாம் பாவகத்தோடும், தொடர்பு கொள்ளும்பொழுது அது செய்வினை தோஷம் கொண்ட ஜாதகமாக எடுத்துக்கொள்ளப்படுகின்றது.

பிரசன்னத்தில் பாதகாதிபதி மற்றும் ஆறாம் அதிபதியின் தொடர்பு, அதாவது ஆறாம் அதிபதி வீட்டில் பாதகாதிபதியும், பாதகாதிபதி வீட்டில் ஆறாம் அதிபதியும் அமர்வது மேலும் இருவரும் இணைந்து வேறு பாவகத்தில் அமர்வது, செய்வினை தோஷத்தை உறுதிப்படுத்தும்.

அதோடு பிரசன்னத்தில் கூறப்படும் மகா பாதகாதிபதி ஆறாம் பாவகத்தோடு சம்பந்தப்படும்பொழுது இந்த செய்வினை எடுக்கவே முடியாத சூழ்நிலைக்கு தள்ளப் படுகின்றது.

பிரசன்னத்தில் சூரியன், செவ்வாய், சனி, குரு போன்ற கிரகங்கள் சம்பந்தப்படும்போது ஒரு ஆணின் மூலமாகவும், சுக்கிரன், சந்திரன், புதன் சம்மந்தத்தில் வரும்பொழுது ஒரு பெண்ணின்மூலமாகவும், செய்வினை செய்யப்பட்டு இருக்கும்.

இதில் சனி தனித்து தொடர்புறும்பொழுது நீண்டநாட்களாக இந்த தோஷம் இருப்பதை கண்டறிய முடிகின்றது.

ராகு, கேது தொடர்பு கொள்ளும்பொழுது இவர்கள் ஆண் வீட்டில் இருந்தால் ஆணாகவும், பெண் வீட்டில் இருந்தால் பெண்ணாகவும் எடுத்துக் கொள்ளவேண்டும்.

முதலாம் பாவகமும், சூரியனும், பாதகாதிபதியோடு சம்பந்தப்படும்பொழுது தலை வாயில் மற்றும் உயர்ந்த இடங்களில் செய்வினை செய்திருப்பார்கள்.

செவ்வாய் தொடர்பு கொள்ளும்பொழுது விவசாய நிலம் அல்லது வீட்டின் தோட்டத்தில் இந்த நிகழ்வு நிகழ்ந்திருக்கும்.

இரண்டாம் இடம் தொடர்பில் வந்தால் உணவு மூலமாகவும், மூன்றாம் இடம் இணையும்பொழுது நடைபாதையிலேயும், செய்வினை புதைக்கப்பட்டு இருக்கும்.

இதேபோன்று பல கிரகங்களும், பாவகங்களும், தொடர்பில் வரும்பொழுது பலன்களும், நிகழ்வுகளும் மாறுபட்டு வரும்.

செய்வினை எல்லாருக்கும் எல்லா நேரங்களிலும் வைத்து விடவும் முடியாது என்பதுதான் உண்மை. முதலில் நபரின் குலதெய்வமும், அந்த ஊர் எல்லை தெய்வமும், உத்தரவு அளித்தால் இன்றி செய்வினை செய்து விடமுடியாது. மேலும் கிரகங்களின் பலவீனமும் இதற்கு பெரும் பங்கு வகிக்கின்றது.

செய்வினையால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு 12 வருடகாலமும், செய்வினை செய்தவர்களுக்கு 48 வருடகாலமும், இதன் வீரியமும் பாதிப்பும் இருப்பதாக கூறப் படுகின்றது. நிதர்சனத்தில் செய்வினை செய்தவர்களின் வாரிசுகளின் ஜாதகத்தில் மாந்தி ஒரு பெரும் இடர்பாட்டினை அமைத்துவிடுகின்றது.

இந்த சூழ்நிலையினால் பாதிக்கப் பட்டவர்களின் இல்லத்தில் சில அறிகுறிகள் சுட்டிக் காட்டப்படுகின்றது, அதில் சில வற்றை காண்போம். முதலில் உணவு நிறம் மாறுதல், உணவு சுவையாக அமையாமல் இருப்பது, வீட்டில் திடீரென துர்நாற்றம் வீசுவது, ஆந்தை திடீரென அலரும் சத்தம் கேட்பது, பசுமாடு இறப்பது, வளர்ப்பு பிராணிகள் இறப்பது, தொழிலில் திடீர் சரிவு, காரணமற்ற மரண பயம், செடிகள் மற்றும் மரங்கள் பட்டுப் போவது, கோவில் மற்றும் ஆன்மிக தலங்களுக்கு செல்வதற்கு அதீத தடை போன்ற சூழல் நம் கண் முன்னே நிகழும்.

அதோடு மட்டுமல்லாமல் பின் கழுத்து வலி, பாத எரிச்சல், ஒவ்வாமை தாம்பத்திய பாதிப்பு, வெற்றி வாய்ப்பு பலமுறை தவறுவது போன்றவை இவற்றைச் சார்ந்தே நிகழ்த்தப் படுகின்றது.

இந்த சூழ்நிலையில் இருந்து தற்காத்துக்கொள்ளவும், இதன் வீரியமும், வன்மமும் தாக்காதவாறு வாழ்க்கை செல்வதற்கும், பேரருள் கொண்ட அன்னை பிரத் தியங்கிரா தேவிக்கு அமாவாசை மற்றும் பௌர்ணமி காலங் களில் பொங்கலிட்டு படைக்க வேண்டும். படைக்கப்பட்ட பொருளினை கோவிலிலேயே விட்டுவிட்டு வந்துவிடவேண்டும்.

மேலும் காலத்தினை கையாளும் காலபைரவரை வழிபாடும், இதற்கு அருமருந்தாக அமையும். தேய்பிறை மற்றும் வளர்பிறை அஷ்டமி திதி வரும் நாளில் சிறிய அளவிலான வெண்பூசணியை இரண்டாக வெட்டி அதன் உள்பகுதியில் குழியாக உருவாக்கி அதில் மஞ்சள், குங்குமம் இட்டு சிவப்பு துணியில் 27 மிளகுகளை கட்டி தீபமேற்றிவர, இந்த தோஷத்தில் இருந்து விடுபடலாம்.

எல்லாவற்றையும்விட குலதெய்வத்தின் வழிபாடு இதற்கு அருமருந்தாக அமையும்.

செல்: 80563 79988

bala131023
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe