பெண் சாபம் தீர்க்கும் எந்திர வழிபாடு!

/idhalgal/balajothidam/worship-machine-solves-female-curse

சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்

ரு குடும்பத்தில் பில்லி, சூனியம், ஏவல், வஞ்சனை போன்ற செய்வினை தோஷங்கள் செயல்பட, முற்பிறவிகளில் வம்ச முன்னோர்கள், குடும்பத்தில் வாழவந்த பெண்களையும் பிறந்த பெண்களையும் வதைசெய்து வருந்தச்செய்த பாவமே காரணமாகும். இப்பிறவியில் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்களின் ஆன்மா பழிதீர்க்கும் வெறியில் தண்டனையாகத் திரும்பத் தாக்கும். நிகழ்வே செய்வினையாக செயல்படுகிறது. உயிருடன் இருக்கும் வரைதான் ஒருவர் உறவினர் உரிமை கொள்ளமுடியும். இறந்துவிட்டால் உறவற்ற ஆவிதான். பெண்சாபம் 18 விதமாக செய்வினையாக செயல்பட்டு வாழ்வில் சிரமங்களைத் தரும். இவை ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமாகச் செயல்படும். முற்பிறவிகளில் பெண்களுக்குச் செய்த பாவங்களையும், அது இப்பிறவியில் தரும் பலன்களையும் இங்கு காணலாம்.

ee

பெற்ற தாயை பசியும் பட்டினியுமாக அலையவிட்ட பாவம்; உடன்பிறந்த சகோதரிகளை கவனிக்காமல் ஒதுக்கிவைத்தது; கட்டிய மனைவியை ஒதுக்கிவிட்டு வேறு பெண்களிடம் சுகம் அனுபவித்தது; வீட்டிற்கு வந்த மனைவியை வாழவிடாமல் விரட்டியது; தன்னை விரும்பிய மங்கையிடம் சுகம் அனுபவித்தபின் தன்னலம் பேசி ஒதுக்கிக் கைவிட்டது; பண்ணைக்கு வேலைசெய்ய வந்த பெண்ணைப் படுக்கைக்கு அழைத்துக் கெடுத்தது; இரண்டு மனைவியரில

சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்

ரு குடும்பத்தில் பில்லி, சூனியம், ஏவல், வஞ்சனை போன்ற செய்வினை தோஷங்கள் செயல்பட, முற்பிறவிகளில் வம்ச முன்னோர்கள், குடும்பத்தில் வாழவந்த பெண்களையும் பிறந்த பெண்களையும் வதைசெய்து வருந்தச்செய்த பாவமே காரணமாகும். இப்பிறவியில் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்களின் ஆன்மா பழிதீர்க்கும் வெறியில் தண்டனையாகத் திரும்பத் தாக்கும். நிகழ்வே செய்வினையாக செயல்படுகிறது. உயிருடன் இருக்கும் வரைதான் ஒருவர் உறவினர் உரிமை கொள்ளமுடியும். இறந்துவிட்டால் உறவற்ற ஆவிதான். பெண்சாபம் 18 விதமாக செய்வினையாக செயல்பட்டு வாழ்வில் சிரமங்களைத் தரும். இவை ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமாகச் செயல்படும். முற்பிறவிகளில் பெண்களுக்குச் செய்த பாவங்களையும், அது இப்பிறவியில் தரும் பலன்களையும் இங்கு காணலாம்.

ee

பெற்ற தாயை பசியும் பட்டினியுமாக அலையவிட்ட பாவம்; உடன்பிறந்த சகோதரிகளை கவனிக்காமல் ஒதுக்கிவைத்தது; கட்டிய மனைவியை ஒதுக்கிவிட்டு வேறு பெண்களிடம் சுகம் அனுபவித்தது; வீட்டிற்கு வந்த மனைவியை வாழவிடாமல் விரட்டியது; தன்னை விரும்பிய மங்கையிடம் சுகம் அனுபவித்தபின் தன்னலம் பேசி ஒதுக்கிக் கைவிட்டது; பண்ணைக்கு வேலைசெய்ய வந்த பெண்ணைப் படுக்கைக்கு அழைத்துக் கெடுத்தது; இரண்டு மனைவியரில் ஒரு மனைவிமேல் கோபம்கொண்டதால் அவள் மாண்டுபோன தோஷம்-

ஜாதகர் பெண்ணானால், மாமியாரை வீட்டைவிட்டு விரட்டியது; மருமகளைக் கொடுமைப்படுத்தி வாழவிடாமல் துரத்தி அவளை மாண்டுபோகச் செய்தது; கள்ளப் புருஷனிடம் சுகம் அனுபவித்து, கள்ள உறவால் கர்ப்பமடைந்து பிள்ளை பெற்றுக்கொண்டது; மனநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணை கவனிக்காமல் மரணமடையச் செய்தது; கர்ப்பிணிப் பெண்களை கவனிக்காமல் கைவிட்டு அந்தப் பெண் கர்ப்பத்துடன் மாண்டுபோனது; குடும்பத்தில் ஏதாவது ஒரு காரணத்தால் பெண்கள் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்துகொண்ட பாவம்...

இதுபோன்ற பாவம், கொடுமைகள் ஒரு குடும்பத்தில் கணவன் அல்லது மனைவியின் முன்னோர் கள் காலத்தில் நடந்திருந்தால், பாதிக்கப்பட்ட பெண்ணின் சாபம், அவளது ஆன்மாவின் கோபம் அந்த வம்சத்தினரின் வாரிசுகள் வாழ்வில் அடிவான இடிபோல் அம்பாய் இறங்கி சிரமங்களை, தடைகளைத் தந்து அனுபவிக்கச் செய்யும்.

இந்த பெண்சாபமுள்ள குடும்பத் தில் வாழவந்த பெண்களுக்கும் பிறந்த பெண்களுக்கும் நிம்மதியில்லாத வாழ்க்கைதான் அமையும். பாதிக்கப்பட்டு இறந்தபோன பெண்ணின் ஆன்மா என்னவிதமான பாதிப்பைத் தருமென்று பார்ப்போம்.

குடும்பத்தில் பிள்ளைகளுக்குத் திருமணத் தடை, புத்திர பாக்கியக் குறைவு, கர்ப்பப்பை நோய், கருக் கலைதல் அல்லது இவர்களே கலைத்தல், பெண்களுக்கு முன்கோபம், ஆணவம், அகங்காரம், கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடு, பிரிவு, விவாகரத்து போன்றவை நிகழும்.

அமாவாசை, பௌர்ணமி என இரவுநேரப் பூஜைகளுக்கு விரும்பிச் செல்லுதல்; மாரி, காளிபோன்ற தனித்த அம்மன் ஆலயங்களுக்கு விரும்பிச் செல்லுதல்; கோழி, ஆடுபோன்ற உயிர்பலியிடும் கருப்பு தேவதை ஆலயங்களுக்கு அடிக்கடி செல்லுதல்; பெண்சாபம், ஆவி தாக்கமுள்ள பெண்கள் கோவிலில் பிரார்த்தனை செய்யும்போது உடலில் ஒருவித சிலிர்ப்பு, அசைவு, ஆட்டம் உண்டாகுதல்; கண்களிலிருந்து கண்ணீர் வருதல்; சில பெண்கள் உணர்ச்சிவசப்பட்டு அருள் வந்ததுபோல ஆடுதல்; சிலருக்கு கனவுத் தொல்லை; சரியாக உறக்க மின்மை போன்றவை ஏற்படும். கணவர் வீட்டாருடன் உறவு சரியாக இருக்காது. மாதவிடாய்க் கோளாறு, தாம்பத்தியம் குறைதல், "யாரோ எனக்கு சூனியம் செய்துவிட்டார்கள்' என பயத்தில் புலம்புவது- இதுபோன்ற இன்னும் பல சிரமங்களை அனு பவித்து வாழ்வார்கள்.

பெண் சாபமுள்ள குடும்பத்தினர் ஜோதிடர்கள், பூசாரிகள், குடுகுடுப்பைக் காரர்கள், அருள்வாக்கு சொல்பவர்கள், சோழி பார்ப்பவர்கள் என பலரிடமும் கேட்கும்போது, அவர்கள் "ஒரு மரணமடைந்த பெண்ணின் ஆன்மா கன்னி தெய்வமாக உங்கள் வீட்டிலுள்ளது' என்று கூறி, சில பரிகாரங்களையும் சொல்வார்கள். ஆனால் எதைச் செய்தாலும் துன்பங்கள் குறையாது.

உண்மையில் அந்தப் பெண்ணின் ஆன்மா தெய்வநிலை கொண்டதல்ல; வம்சத்தில் மனம் வெறுத்து மாண்டுபோன பெண்ணின் ஆன்மாவாகும். இந்த ஆவியின் தாக்கம், தான் அனுபவிக்க முடியாத மகிழ்ச்சி, சுகங்களை இவர்கள் அனுபவிக்கக்கூடாதென்று, அவர்கள் வம்சதத்தினர் மகிழ்ச்சிடைய முடியாதபடி தடைகளை ஏற்படுத்தும் என்பதே உண்மை.

இத்தகைய பெண்சாபத் துன்பங்களிலிருந்து விடுபட, எந்தவிதமாக இந்த பெண் சாபம் உருவானது- அதன் கோபம் என்ன என்பதைக் கண்டறிந்து, அந்த ஆன்மாவின் கோபத்தைத் தணித்து சாந்தியடையச் செய்ய, முறையான முன்னோர் வழிபாடு, முறையான எந்திரப் பிரார்த்தனைகளைச் செய்தால்மட்டுமே அந்த ஆன்மா சாந்தியடைந்து, கோபம் நீங்கி தெய்வமாக இருந்து குடும்பத்தை உயர்த்தும்.

எவரிடம் நாம் கடன் வாங்கினோமோ அவரிடம்தான் வாங்கியதைத் திரும்பச் செலுத்தவேண்டும். அப்போதுதான் கடன் நிவர்த்தியாகும். அவ்வாறில்லாமல் எங்கோ அலைந்து ஏதேதோ செய்துகொண்டிருந்தால் கடன் தீராது. அதுபோன்றுதான் பாவக் கடனையும் யாரிடமிருந்து பெற்றோமோ அவர்களிடம்தான் தீர்த்து சாபநிவர்த்தி அடையவேண்டும். சாபம் தந்தவரால்தான் நிவர்த்தியும் தரமுடியும்.

சூனியம் விலக்கும் எந்திரம்

இங்கு தரப்பட்டுள்ள எந்திரத்தை செப்புத் தகட்டில் எழுதி, தூய சந்தனம், அத்தர், கஸ்தூரி, ஜவ்வாது ஆகியவற்றைப் பன்னீரில் கரைத்து, அட்சரத்திலும் பூஜைசெய்யும் அறையிலும் தெளித்து, ஒரு வெள்ளைத் துணிவிரித்து மல்லிகை மலர்களைத் தூவி அதன்மீது எந்திரத்தை வைக்கவும். இன்னுமொரு சிறிய தகட்டில் இந்த எந்திரத்தை வரைந்து பூஜையில் வைக்கவும். ஒரு மண் கலயத்தில் தண்ணீர் ஊற்றி பூஜையில் வைத்து, சாம்பிராணி தூபம் காட்டி ஊதுவத்தி கொளுத்திவைத்து, இங்கு தரப்பட்டுள்ள மூலமந்திரத்தை 2,367 முறை கூறி பிரார்த்தனை செய்யவும். பூஜை முடிந்தபின் சிறிய தகட்டினை தாயத்து போல் உருட்டி ஒரு வெள்ளிக் குப்பியில் அடைத்து இடுப்பில் கட்டிக்கொள்ளவும். கலயத்திலுள்ள நீரைக் குடித்துவிடவும். பெரிய எந்திரத்தை கண்ணாடி பிரேம்போட்டு படுக்கையறையில் மாட்டிவைக்கவும். தினமும் ஊதுவத்தி கொளுத்தி மூலமந்திரம் சொல்லி பிரார்த்தனை செய்யவும். தினமும் கலயத்தில் நீர் ஊற்றி, இந்த சக்கரத்தை கண்களால் அந்த நீரில் எழுதி, இருபத்தோரு முறை மூலமந்திரம் சொல்லி ஜெபித்து, அந்த நீரை அருந்தவும். ஏவல், சூனியத் தாக்கம் படிப்படியாகக் குறையும்; மனபயம் நீங்கும்.

மூல மந்திரம்

"தச்சது வாக்கிய சத்துரு சூனியந் தானறுத்து

நச்சது வாக்கிட நடத்திய கோவருள் நாகங்கொண்ட

குச்சது வாகி மூன்றெழுத் தட்சரவான்மை யென்னை

வச்சுரு வாக்கு முஹையதீனென் றட்சர வாய்மை கொண்டே.'

செல்: 99441 13267

bala050321
இதையும் படியுங்கள்
Subscribe