Advertisment

உலகியல் ஜோதிடம்! -ஆர். மகாலட்சுமி

/idhalgal/balajothidam/worldly-astrology-r-mahalakshmi

லகிலுள்ள மனிதர்களுக்கு, அவரவர் பிறந்த நேர ஜாதகத்தைக் கொண்டு, அவரவரின் ஜோதிடப் பலன் கூறப்படுகிறது. இது தனிமனித ஜாதகப் பலனாகும். இது தவிரவும் சில ஜோதிடப் பலன்கள் கூறப் படுகின்றன.

வர்ஷப் பிரசன்னம்: இது மழை வருவது, மழையின் அளவு பற்றிக் கூறும்.

Advertisment

வாஸ்து சாஸ்திரம்: இது வீடு கட்டுவது, வீட்டின் அமைப்பு எந்த திசையில் எந்த பயன்பாடு வரவேண்டும், வீட்டிற்கு பூமிபூஜை போடு வது, நிலைப்படி வைப்பது என ஒரு வீடு கட்டுமானம் பற்றிக் கூறும்.

ரத்தின சாஸ்திரம்: நவரத்தினக் கற்களையும், நவகோள்களையும் இணைத்து, யார், எந்தக் கற்களை அணிவது உசிதமெனக் கூறப்படுவது.

ஹஸ்த ரேகா சாஸ்திரம்: இது கைரேகைகளின் அமைப்பைக் கொண்டு ஜோதிடம் கூறும் முறையாகும்.

Advertisment

எண் கணித ஜோதிடம்: இது ஒன்று முதல் ஒன்பதுவரையுள்ள எண்களுக்குரிய கிரகங்களைக்கொண்டு பலன் கூறுதல்.

நஷ்டப் பிரசன்னம்: இது திருட்டுப் பற்றி அறிய உதவும்.

ரோகப் பிரசன்னம்: நோய் பற்றி அறியலாம்.

கூபாப் பிரசன்னம்: கிணறு, குளம் போன்ற நீராதாரங்களைப் பற்றிக் கூறும்.

தேவப் பிரசன்னம்:

லகிலுள்ள மனிதர்களுக்கு, அவரவர் பிறந்த நேர ஜாதகத்தைக் கொண்டு, அவரவரின் ஜோதிடப் பலன் கூறப்படுகிறது. இது தனிமனித ஜாதகப் பலனாகும். இது தவிரவும் சில ஜோதிடப் பலன்கள் கூறப் படுகின்றன.

வர்ஷப் பிரசன்னம்: இது மழை வருவது, மழையின் அளவு பற்றிக் கூறும்.

Advertisment

வாஸ்து சாஸ்திரம்: இது வீடு கட்டுவது, வீட்டின் அமைப்பு எந்த திசையில் எந்த பயன்பாடு வரவேண்டும், வீட்டிற்கு பூமிபூஜை போடு வது, நிலைப்படி வைப்பது என ஒரு வீடு கட்டுமானம் பற்றிக் கூறும்.

ரத்தின சாஸ்திரம்: நவரத்தினக் கற்களையும், நவகோள்களையும் இணைத்து, யார், எந்தக் கற்களை அணிவது உசிதமெனக் கூறப்படுவது.

ஹஸ்த ரேகா சாஸ்திரம்: இது கைரேகைகளின் அமைப்பைக் கொண்டு ஜோதிடம் கூறும் முறையாகும்.

Advertisment

எண் கணித ஜோதிடம்: இது ஒன்று முதல் ஒன்பதுவரையுள்ள எண்களுக்குரிய கிரகங்களைக்கொண்டு பலன் கூறுதல்.

நஷ்டப் பிரசன்னம்: இது திருட்டுப் பற்றி அறிய உதவும்.

ரோகப் பிரசன்னம்: நோய் பற்றி அறியலாம்.

கூபாப் பிரசன்னம்: கிணறு, குளம் போன்ற நீராதாரங்களைப் பற்றிக் கூறும்.

தேவப் பிரசன்னம்: கோவில், தெய்வம் பற்றி அறியலாம்.

இவை அனைத்துமே ஏறக்குறைய தனிமனித சம்பந்தம் அல்லது குறிப்பிட்ட பகுதி குறித்த பலாபலன்களைப் பற்றிக் கூறுவதாகும்.

ஆனால் உலகில் ஒரே நேரத்தில் பல மனிதர்களுக்கும் நடக்கப் போவதை அறிவது உலகியல் ஜோதிடமாகும். இதனை ஆங்கிலத்தில் "முண்டேன் அஸ்ட்ராலஜி' (ஙன்ய்க்ஹய்ங் ஆள்ற்ழ்ர்ப்ர்ஞ்ஹ்) என்பர்.

சரி; நமது ஜோதிடர்கள் இதைப் பயன் படுத்துவது இல்லையா எனக் கேட்டால், அதை அவ்வப்போது பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறோம்.

தினப்பலன், மாதப்பலன், வருடப்பலன், முக்கிய கிரகங்களான குரு, சனி, ராகு- கேது பெயர்ச்சிப் பலன் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

மேலும் நாடுகள் சம்பந்தப் பட்ட போர் நிலை, யுத்த களேபரம், விலைவாசி அதிர்வு, பூமி அதிர்ச்சி, பெருமழை, அதீத வெப்பம், பங்கு வர்த்தகம், அரசியல் மாற்றம், தேர்தல் முடிவுகள், நோய்த்தாக்கம் என இவைபோனற் பலவித எதிர்காலப் பலன்களை, பெருவாரி யான மக்கள் சம்பந்தப்பட்ட மாறுபட்ட நிகழ்வுகளைக் கூறுவதுதான் உலகியல் ஜோதிடம்.

dd

இந்தியா

இனி இந்தியாவின் ஜாதகத்தைக் காண்போம். இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த நாள்தான் இந்தியாவின் ஜாதகமாகும்.

இந்தியா சுதந்திரம் பெற்றது 15-8-1947 அன்று அதிகாலை 12-1-42. இதன்படி இந்தியாவின் லக்னம் ரிஷபம், ராசி கடகம். நமது இந்தியாவின் ஜாதகத்தில் லக்னத்துக்கு 3-ஆமிடத்தில் சந்திரன், புதன், சுக்கிரன், சூரியன், சனி என ஐந்து கிரகங்களின் கூட்டணி உள்ளது. இதில் சனி, செவ்வாய் ஆகிய இரு கிரகங்களும், லக்னத் தின் 5-ஆமிடத்தைப் பார்வையிடுவதால், ஒழுக்கமென்பது சிறிது சிறிதாகக் கெட்டு லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. போலும்.

நடப்பு சந்திர தசை. இது தொழில் வளம், பிறநாடுகளிடம் மதிப்பு, மரியாதை என அனைத்தும் கொடுக்கும். எனினும் இந்த சந்திர தசை, இந்தியாவில் எதைச் செய்தாலும் அதை மறுபடியும் செய்யும் சூழ்நிலையை உண்டாக்கும். பணிபுரிவோர் அரசாங்கத்தை எப்போதும் குறைகூறும் நிலை உருவாகும். அடுத்து 2025-ல் வரும் செவ்வாய் தசை ஆட்சி மாறுதலைக் கொடுக்கும் நிலையுண்டு. இந்திய ஜாதகம், காலசர்ப்ப யோக ஜாதகம். அதனால்தான் வேற்றுமையில் ஒற்றுமை என்ற தத்துவம் செயல்படுகிறது.

இந்திய ஜாதகத்தில் ஸ்திரம் மற்றும் நிலம் சார்ந்த ரிஷபத்தில் லக்னம் விழுந்திருக்கிறது. அதனால்தான் என்ன பிரச்சினை வந்தாலும் சற்றும் தொய்வில்லாமல், ஸ்திரத்தன்மை யோடு உள்ளது. கடக ராசி நீர் மற்றும் சரத் தன்மை கொண்டது. அதில் ராசி அமைந் துள்ளதாலும், நிறைய கிரகங்கள் இருப்ப தாலும், இந்தியா வேகமான, பரபரப்பான செயல்பாடுகள் கொண்டதாகவும், அவ்வப் போது அரசு, அரசு அலுவலர்களால், இழுத்துப் பிடித்து தாமதப்படுத்துவதாகவும், அதையும்மீறி மிக விரைவான ஓட்டம் ஓடும் நாடாகவும் இந்தியா விளங்குகிறது.

இலங்கை

இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தது 4-2-1948. பதவியேற்ற நேரம் காலை 7.30 மணி.

இலங்கையின் லக்னாதிபதி சனி 6-ஆமிடத்தில் உள்ளார். இடம்கொடுத்த சந்திரன் நீசபங்கம். ஒருவேளை இந்த கிரக அமைப்பால்தான் இந்த நாடு எப்போதும் சண்டைபோடுகிறது போலும். குரு, சனியைப் பார்த்து பிரம்மஹத்தி தோஷம் உண்டாக்குகிறார். சனிபகவான், ராகுவை நோக்கி சண்டாள யோகம் தருகிறார். எல்லாவற்றுக்கும்மேல் சனி, சூரியன் பார்வை. இந்த நாடு வெளிநாட்டுடன் எல்லாம் சண்டை போடாது. உள்ளூரிலேயே ஒருவரையொருவர் அடித்து, கொலையும் செய்கிறார்கள். லக்னாதிபதி சனி 6-ல் அமர்வது, அவர்களே அவர்களுக்குத் தொல்லை கொடுப்பார்கள் எனக் கூறுகிறது. செவ்வாய் லக்னத்தைப் பார்த்து,

அரசாங்கத்தை எப்போதும் எதிர்ப்புணர்வு இருக்குமாறு பார்த்துக்கொள்கிறார். நடப்பு ராகு தசை.

சனியின் பார்வைக் கட்டுக்குள் உள்ள ராகு நாட்டை தாறுமாறு செய்து கொண்டிருக்கிறார். நடப்பு ராகு தசையில் சனி புக்தி 15-9-2022 முதல் ஆரம்பம். இக்காலகட்டத்தில், அங்கேயே பிறந்த, பூர்வீக இனத்தைச் சேர்ந்த, வலிமையான, சற்றே குறுக்கு புத்தியும் திருட்டுத்தனமும் உள்ள ஒருவர், குறுக்குவழியில் இதர நாடுகளின் துணை மற்றும் உதவியோடு அரசியலில் நுழைந்து ஆட்சியைப் பிடிப்பார். அவர் சற்று குள்ளமாக, கறுப்பாக, கல்வி குறைபாடுடையவராக அமைவார்.

இவ்விதம் அனைத்து நாட்டு ஜாதகப் பலனையும் கூற இயலும். முக்கியமாக அரசியல்வாதிகள் பதவி ஏற்கும் நேர காலக்கணிதம்- அந்த நாடு, மாநில அரசு நிலையைத் தெளிவுபட எடுத்துரைக்கும். இதுபோன்று அரசியல் நிலைமை நன்றாகத் தெரிவதால், இது அரசியல்வாதிகள் கட்சிவிட்டு கட்சி தாவுவதற்கு ஏதுவாக இருக்கும்.

bala041122
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe