சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்
சனி- கும்பம்
சனி கும்ப ராசியில் சஞ்சரிக்கும் காலங்களில் அணு ஆயுதம், எரிவாயு, விஞ்ஞானத்துறை, விண்வெளித்துறை மேன்மையும், புதிய கண்டுபிடிப்புகளும் உண்டாகும். பொதுவாக எல்லா தொழில்களும் வளர்ச்சியும் சிறப்பும் அடையும். உப்பு, மருந்து, உணவுப் பொருட்கள், மது, சாராயம் உற்பத்தி குறையும்; விலை உயரும். பெட்ரோல் கிணறுகள், நிலக்கரிச் சுரங்கங்கள், இரும்பு, உருக்காலை உள்ள இடங்களில் விபத்துகள், உயிர்ச்சேதங்கள் உண்டாகும். நீர்நிலைகள் பாதிப்படையும். நல்ல குடிநீர் கிடைக்காது. ஏற்றுமதி- இறக்கு மதி தொழில் பாதிப்படையும்.
தாய்- சேய் நலக் காப்பகங்கள் சிரமங்களைச் சந்திக்க நேரும். பெண் களுக்கு அவமானம், அவமரியாதை உண்டாகும். இதை அவர்களே தேடிக் கொள்வார்கள். பிரபலமான பெண்மணி களில் ஒருவர் மரணமடைவார்.
சனி- மீனம்
கோட்சார நிலையில் சனி, மீன ராசியில் சஞ்சாரம் செய்யும் வருடங் களில் அரசியல்வாதிகளின் அந்தரங்க விஷயங்கள் அம்பலமாகும். அரசியல் தலைவர்களின் பெயருக்கு களங்கம் ஏற்படும். உலக அளவில் அரசியல் மாற்றங்கள் நிகழும். பழைய அரசியல் கட்சிகள் பலம் குறைந்து, புதிய அரசியல் கட்சிகளின் பலம் கூடும். புதிய அரசியல் தலைவர்கள் உருவாவார்கள். அரசியல் கட்சித் தலைவர்களில் ஒருவர் மரணமடைவார். உலகப்புகழ் பெற்ற மனிதர்களில் ஒருவர் மரணமடைவார்.
மதவாதிகள், பீடாதிபதிகள் அரசாங்கத் திற்கும், அரசியல்வாதிகளுக்கு, எதிராக செயல் படுவார்கள். நேரடியாக மோதல் உண்டாகி சிரமப்படுவார்கள். மதவாத அரசியல் முடிவு பெறும். இதனால் இவர்களுக்கு வருமானம் குறையும். சாதி, மதப் பிரச்சினைகள் சிலரால் தூண்டப்பட்டு அதிகமாகும். மக்கள் அமைதியை இழப்பார்கள். பல ஆலயங்கள், பீடங்கள் பராமரிப்பின்றி பாழடையும். வழிபாட்டுத் தலங்களுக்கு ஆபத்துகள், பிரச்சினைகள் உருவாகும். தீர்த்த யாத்திரை, புண்ணியஸ்தலம் என செல்பவர்களுக்கு பலவிதமான சிரமங்கள் உண்டாகும். மதத்தலைவர்களின் அந்தரங்க ரகசியங்கள் வெளிச்சத்திற்கு வரும். கண் நோய்களால் மக்கள் பாதிப்படைவார்கள். குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறையும்.
மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிகளும், பூமியிலுள்ள அனைத்து தேசங்களின் இருப்பிடத்தைக் குறிப்பிடுகின் றன. இந்த 12 ராசிகளும், கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு என்று, திசைக்கு மூன்று ராசிகள்வீதம் நான்கு திசைக்கும் பிரித்துக் கூறப்பட்டுள்ளது. ஒரு நாடு எந்த ராசிக்குள் உள்ளது என்பதை, அந்த நாட்டின் பெரும்பகுதி பாகங்கள் எந்த திசையிலுள்ள தீர்க்க ரேகைக்குள் வருகின்றன என்பதை கவனித்து அறிந்துகொள்ளலாம்.
குரு, சனி, ராகு, கேது கிரகங்கள் தங்களின் கோட்சார சுழற்சி நிலையில், எந்த ராசியில் சஞ்சாரம் செய்கின்றார்களோ, அந்த ராசி குறிப்பிடும் திசையிலுள்ள நாடுகளில் தங்களின் சஞ்சார காலம்வரை, தங்கள் கதிர்வீச்சு சக்தியால், முக்கிய நிகழ்வுகளைத் தந்துவிடுவார்கள்.
ராசி அதிபதிகள் மற்றும் நட்சத்திர அதிபதிகளின் காரகத்தை ஒட்டியே, குரு, சனி, ராகு, கேது அந்த ராசியிலுள்ள நட்சத்திரங்களில் சஞ்சாரம் செய்யும்போது நிகழ்வுகளை நிகழ்த்தும்.
இனி ராகு, கேது கிரகங்கள் கோட்சார நிலையில், 12 ராசிகளில் சஞ்சாரம் செய்யும் காலங்களில், அந்த ராசி குறிப்பிடும் பகுதி களில் என்னென்ன நிகழ்வுகளை உண்டாக்கு வார்கள் என்பதை சுருக்கமாக அறிவோம்.
ராகு- மேஷம்
மேஷ ராசியில் ராகு சஞ்சாரம் செய்யும் வருடகாலங்களில், மேஷ ராசி குறிப்பிடும் நாடுகளில் இராணுவம், காவல்துறை, தீயணைப்புத் துறையில் பணிபுரியும் உயரதிகாரிகளுக்கு பிரச்சினைகளும், அபாயகரமான விளைவுகளும் அதிகமாக உருவாகும். விவசாயம், தொழில் பாதிப்படையும். தீவிரவாதி ஒருவன் கொல்லப்படுவான். அந்த நாடுகளில் தீவிபத்து ஏற்பட்டு உயிர்கள் பலியாகும். புகழ்பெற்ற விளையாட்டு வீரர் ஒருவர் மரணமடைவார்.
ராகு- ரிஷபம்
ரிஷபத்தில் ராகு சஞ்சாரம் செய்யும் காலங்களில், இந்த ராசி குறிப்பிடும் தேசங்களில் பங்குச்சந்தையில் மோசடிகள் நடக்கும். பாமரமக்கள் பணத்தை இழப் பார்கள். பணம் சம்பந்தமான மோசடிகள், திருட்டுகள் அதிகமாகும். பெண்களுக்கு பாதுகாப்பு குறைந்து, பெண்கள் கடத்தல் அதிகமாகும். கலைத்துறையில் பிரபலமானவர்களில் ஒருவர் மரணமடைவார். பிரபலமான பெண்மணிகளில் ஒருவரும் மரணமடைவார்.
ராகு- மிதுனம்
மிதுன ராசியில் ராகு சஞ்சாரம் செய்யும் வருடங்களில், மனை, பிளாட், தோட்டம் என பூமி சம்பந்தமான மோசடிகள் அதிகம் நடக்கும். மக்கள் ஏமாற்றப்பட்டு பணத்தை இழப்பார்கள். நிலம், பத்திரப்பதிவுகளில் மோசடிகள் அதிகமாகும். கல்வி நிறுவனங் களில் மோசடிகள் அதிகமாக நடக்கும். கள்ள ரூபாய் நோட்டுகள், கடத்தல் வியாபாரங்கள் அதிகமாகும். உலகில் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவர் மரணமடைவார்.
ராகு- கடகம்
ராகு கடக ராசியில் சஞ்சாரம் செய்யும் காலங்களில் உணவுப் பொருட்களில் கலப்படம் அதிகம் செய்வார்கள். அதனால் விஷத்தன்மை உண்டாகி, உணவுமூலம் தொற்று நோய் பரவும். குடிநீர்மூலம் நோய் பரவும். இதனால் மரணங்கள் அதிகரிக்கும். விஷச்சாராயம் குடித்து மக்கள் பலியாவார்கள். அரசியலில் மிகவும் பிரபலமான பெண்மணி மரணமடைவார். பொது வாழ்வில், சமூக சேவைகளில் ஈடுபட்டுப் புகழடைந்த பிரபலமான பெண்மணிகளில் ஒருவர் மரணமடைவார்.
ராகு- சிம்மம்
சிம்ம ராசியில் ராகு சஞ்சாரம் செய்யும் காலங்களில், மிகப்பெரிய அரசியல் தலைவர் ஒருவரும், மிகப்பெரிய சமூக சேவகர் அல்லது புகழ்பெற்ற மனிதர் ஒருவரும் மரணமடைவார். மிகப்பெரிய அரசியல் தலைவர் ஒருவர் சிறையில் அடைக்கப் படுவார். அந்த நாட்டு ஆட்சி பீடத்தில் இருப்பவர்களுக்கு கஷ்டங்கள், உயிர் அபாயங்கள், பதவி இழப்பு என ஏற்படும்.
ராகு- கன்னி
கன்னி ராசியில் ராகு சஞ்சாரம் செய்யும் காலங்களில், புகழ்பெற்ற எழுத்தாளர் ஒருவர் மரணமடைவார். கல்வி நிறுவனங்களில் மோசடிகள் அதிகம் நடக்கும். கல்வித்துறை அதிகாரிகள் ஆதரவுடன் போலி கல்வி நிலையங்கள் அதிகமாகும். கள்ள ரூபாய் நோட்டுகள் அதிகம் புழக்கத்தில் வரும். பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் பல மோசடிகளைச் செய்வார்கள். நிலம் சம்பந்தமான மோசடிகள் அதிகம் நடக்கும். அரசுத் தூதர்கள் உயிருக்கு ஆபத்து உண்டாகும்.
ராகு- துலாம்
துலா ராசியில் ராகு சஞ்சாரம் செய்யும் வருடங்களில், நிதி நிறுவனங்களில், வங்கியில் பண மோசடிகள் நடக்கும். பணம் போட்ட மக்கள் ஏமாற்றப்படுவார்கள். பெண் கடத்தல்கள் அதிகமாகும். சூதாட்ட மையங்கள், விபச்சார விடுதிகள், சட்டத்திற்குப் புறம்பான தொழில்கள் அதிகமாகும். நோய்த்தாக்கம் அதிகரிக்கும். கலைத்துறையைச் சேர்ந்த பிரபலமான ஒருவர் மரணமடைவார்.
ராகு- விருச்சிகம்
விருச்சிக ராசியில் ராகு சஞ்சாரம் செய்யும் காலங்களில், முக்கியமான தீவிரவாதி ஒருவன் கொல்லப்படுவான். தீவிரவாதிகள் ஒடுக்கப்படுவார்கள். புகழ்பெற்ற விளையாட்டு வீரர்களில் ஒருவரும், மதத்தலைவர் ஒருவரும் மரணமடைவார். தீவிபத்தில் பொருள் சேதம், உயிர்ச்சேதம் ஏற்படும். இராணுவம், காவல்துறை, தீயணைப்புத்துறைகளில் முக்கியமான அதிகாரிகள் அபாயத்தை சந்திப்பார்கள்; சிரமங்களை அடைவார்கள்.
ராகு- தனுசு
தனுசு ராசியில் ராகு சஞ்சாரம் செய்யும் வருடங்களில், மதக் கலவரங்கள் ஏற்பட்டு அந்த நாட்டில் அமைதி குலையும். மதத்தலைவர்களில் புகழ்பெற்ற ஒருவர் மரணமடைவார். நீதித்துறையின் செயல்கள் சந்தேகத்திற்குரியதாகும். நீதிமன்றங்கள்மீது மக்கள் நம்பிக்கை இழப்பார்கள். நீதி, சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுப் போகும். சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் மக்கள் மத்தியில் அதிகமாகும்.
ராகு- மகரம்
மகரத்தில் ராகு சஞ்சாரம் செய்யும்போது, பெரும்பாலான இடங்களில் மழை குறைந்து வறட்சி ஏற்படும். தொழில்கள் முடங்கும். அரசாங்கத்தாலும், முதலாளிகளாலும் தொழிலாளர்கள் சிரமப்படுத்தப்படுவார்கள். வேலையில்லா திண்டாட்டம் அதிகமாகும். தொழில்துறையும், அரசும், அதிகாரிகளும் பல மோசடிகளைச் செய்வார்கள்.
ராகு- கும்பம்
கும்ப ராசியில் ராகு சஞ்சாரம் செய்யும் காலங்களில், விஞ்ஞானம் வளர்ச்சியடையும். புதிய கண்டுபிடிப்புகள் நிகழும். அணுகுண்டு சோதனைகள் நடக்கும். உலக அழிவைத்தரும் புதிய ஆயுதங்கள் செய்யப்படும். விண்வெளித் துறையில் வளர்ச்சி ஏற்பட்டு, புதியனவற்றைக் கண்டுபிடிப்பார்கள்.
ராகு- மீனம்
மீன ராசியில் ராகு சஞ்சாரம் செய்யும் வருடங்களில், மதவாதிகள் தூண்டுதலால் மதக்கலவரங்கள் உண்டாகும். மதத்தலைவர் ஒருவர் மரணமடைவார். புண்ணிய ஸ்தலம், தீர்த்த யாத்திரைகள் செல்பவர்களுக்கு விபத்துகள், உயிர் அபாயங்கள் ஏற்படும். நாட்டில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு அமைதி குலையும்.
இனி ஒவ்வொரு ராசியிலும் கோட்சார கேது சஞ்சாரம் செய்யும் காலங்களில், அந்த ராசிகள் குறிப்பிடும் நாடுகளில் என்ன நிகழ்வுகள் நடைபெறும் என்பதை சுருக்கமாக அறிவோம்.
கேது- மேஷம்
மேஷ ராசியில் கோட்சார கேது சஞ்சாரம் செய்யும் வருடங்களில், தீவிரவாதிகளுக்கு நெருக்கடிகள் அதிகமாகும். இராணுவம், காவல்துறை, தீயணைப்புதுறை உயரதிகாரி கள், விளையாட்டு வீரர்கள் வழக்குகளில் சிக்குவார்கள். புற்றுநோய், மூலநோய், ரத்தம் சம்பந்தமான நோய்களால் மக்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். ஆண்களின் ஆண்மைக் குறைவைச் சுட்டிக்காட்டி, பல பெண்கள், கணவனிடம் விவாகரத்து கோரி வழக்கு தொடுப்பார்கள். பூமி, நிலம் சம்பந்தமான வழக்குகள் அதிகமாகும். விவசாயம் சார்ந்த தொழில்கள் பாதிப்படையும்.
கேது- ரிஷபம்
ரிஷப ராசியில் கேது சஞ்சாரம் செய்யும் காலங்களில், பண மோசடி, காசோலை மோசடி, சொத்து சம்பந்தமான வழக்குகள், விவாகரத்து வழக்குகள் அதிகமாகும். கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் வழக்கு களில் சிக்கிக் கொள்வார்கள். பிரபலமான பெண்மணி வழக்கில் சிக்குவார். மருத்துவ மனைகளில் கருக்கலைப்பு அதிகம் நடக்கும்.
கேது- மிதுனம்
மிதுன ராசியில் கேது சஞ்சாரம் செய்யும் காலங்களில், கல்வி நிறுவனங் கள் பல தடைகளையும், வழக்குகளையும் சந்திக்கும். ஆசிரியர்கள், மாணவர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகைத் துறையைச் சேர்ந்தவர்கள் பல தடைகளையும், வழக்குகளையும் சந்திப்பார்கள். ஆண்கள்- பெண்களிடையே காதல் உறவுகள் தடைப்படும்; பிரிந்துவிடுவார்கள். நாடு, மாநிலம், மாவட்டங்கள் பிரிந்து புதிய பகுதிகள் உருவாகும். சொத்து சம்பந்தமான வழக்குகள் அதிகமாகும்.
கேது- கடகம்
கடக ராசியில் கேது சஞ்சாரம் செய்யும் காலங்களில், நதிநீர் சம்பந்தமான பிரச்சினைகள், வழக்குகள் உண்டாகும். உலகளவில் விஷத்தன்மையுள்ள மருந்துகள், உணவுப் பொருட்களுக்குத் தடை விதிக்கப்படும். கண்நோய், மனநோய், பாதிப்புகள் உண்டாகும். அரசியல் அல்லது பொதுவாழ்வில் பிரபலமான பெண்மணி வழக்குகளில் சிக்கிக்கொள்வார். புகழ்பெற்ற அம்மன் ஆலயங்கள் பாதிப்படையும்.
கேது- சிம்மம்
சிம்ம ராசியில் கேது சஞ்சாரம் செய்யும் காலங்களில், அரசியல்வாதிகள், பிரபலமான மனிதர்கள் வழக்குகளில் சிக்கிக்கொள்வார்கள். அரசியல் கட்சிகளிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். கூட்டணிக் கட்சிகளிடையே பிளவு ஏற்படும். அரசு ஊழியர்களின் செயல்களுக்கு பலவிதமான தடைகள் விதிக்கப்படும்.
தொடர்ச்சி அடுத்த இதழில்...
செல்: 99441 13267