கணவன்- மனைவி பிணைப்பென்பது புனிதமான முறையில், அக்னி தேவனின் சாட்சி யோடு, பெரியோர்கள், வேதியர்கள், உறவி னர்கள், நண்பர்கள் என பலரும் சேர்ந்து, மங்கள வாத்தியங்களுடன் அவரவர் சம்பிரதாய முறைப்படி மகிழ்வுடன் செய்து வைக்கும் சுபகாரியமாகும். இந்த நாளை என்றும் மறக்க முடியாது. பெண்ணை கன்னிகாதானம் செய்துகொடுக்கும் பெற்றோர்களும், மருமகளாக அடையும் பிள்ளை வீட்டாரும் இந்த விவாக நாளை வாழ்க்கையில் ஏற்படும் ஒரு நல்ல எதிர்காலம் என்று வரவேற்பார்கள்.
வளம் பெற்ற வாழ்க்கையாக அமையவேண்டு மானால் முதலிலில் மனப்பொருத்தம் மிகவும் அவசியம். உறவுமுறை போய்விடும் என்று நிர்பந்தப்படுத்தி விவாகம் செய்யக்கூடாது. பணத்திற்காக ஆசைகொண்டு, பெரிய இடமென்று விவாகம் செய்வதும் தவறு. மணமக்களின் எதிர்காலம் சிறப்பா
கணவன்- மனைவி பிணைப்பென்பது புனிதமான முறையில், அக்னி தேவனின் சாட்சி யோடு, பெரியோர்கள், வேதியர்கள், உறவி னர்கள், நண்பர்கள் என பலரும் சேர்ந்து, மங்கள வாத்தியங்களுடன் அவரவர் சம்பிரதாய முறைப்படி மகிழ்வுடன் செய்து வைக்கும் சுபகாரியமாகும். இந்த நாளை என்றும் மறக்க முடியாது. பெண்ணை கன்னிகாதானம் செய்துகொடுக்கும் பெற்றோர்களும், மருமகளாக அடையும் பிள்ளை வீட்டாரும் இந்த விவாக நாளை வாழ்க்கையில் ஏற்படும் ஒரு நல்ல எதிர்காலம் என்று வரவேற்பார்கள்.
வளம் பெற்ற வாழ்க்கையாக அமையவேண்டு மானால் முதலிலில் மனப்பொருத்தம் மிகவும் அவசியம். உறவுமுறை போய்விடும் என்று நிர்பந்தப்படுத்தி விவாகம் செய்யக்கூடாது. பணத்திற்காக ஆசைகொண்டு, பெரிய இடமென்று விவாகம் செய்வதும் தவறு. மணமக்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய, அவர்களின் விருப்பத்தை அறிந்துகொண்டு திருமணம் செய்துவைக்கவேண்டும்.
சிலர் சகுனங்கள் பார்த்தும், சாமுத்திரிகா லட்சணங்கள் பார்த்தும் திருமணம் செய்வார்கள். ஸ்ரீமத் ராமாயணத்தைப் படிக்கக் கேட்டு, அந்த சுபசகுனத்தைக் கொண்டும், மலர்களை அம்பாளின் சந்நிதியில் வைத்து சகுனம் பார்த்தும் செய்கிறார்கள். ஜாதகம் இல்லாதவர்களுக்கு இதுபோன்ற விஷயங்கள் உதவியாக இருக்கும். ஜோதிட சாஸ்திரத்தை அறிந்தவர்கள் ஜாதகங்களை முழுமையாக நம்பிச் செய்வார்கள்.
விவாகப் பொருத்தம் பார்ப்பவர்கள் தினம், கணம், ரஜ்ஜு, யோனி, ராசி ஆகிய ஐந்து பொருத் தங்கள் இருந்தால் திருமணம் செய்யலாம். இன்னும் சொல்லப்போனால் யோனி, ரஜ்ஜு, ராசி ஆகிய மூன்று பொருத்தங்கள் இருந்தாலே போதுமானது. இதனைக்கொண்டு திருமணம் செய்யலாம்.
எம்பெருமான் திருச்செந்தூர் முருகனை நினைத்து தினசரி வணங்கிவந்தால் நல்ல வரன் அமையும்.
திருமணத்தடை
ஆண்- பெண் ஜாதகங்களில் லக்னத்திலிருந்து 3, 7, 9-ஆம் இடங்களில் பாவகிரகங்கள் இருந் தாலும், லக்னத்திற்கு 7-க்குரியவன் தசை நடந்தாலும் திருமணம் தடைப்படும், பெற் றோர்கள் மன சஞ்சலம் கொள்வார்கள். இப்படிப்பட்ட ஜாதகர்கள் பரிகாரங்கள் செய்து கொள்வது அவசியம். முக்கியமாக சுமங்கலிலிப் பிரார்த்தனை செய்யவேண்டும். மகாலட்சுமி, கௌரி ஆகியோரைப் பூஜை செய்யவேண்டும். அம்பாளுக்கு அபிஷேகங்கள் செய்யவேண்டும். சுமங்கலிலிகளுக்கு விருந்தளித்து அவரவர் சக்திக்கு ஏற்றவாறு ஆடை தானம் செய்து, வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், பூக்களுடன் தட்சி ணையும் கொடுத்து நமஸ்கரித்து அவர்களின் ஆசிர்வாதத்தையும் பெற்றால் திருமணம் தடையில்லாமல் நடந்தேறும்.
பரிகாரம்
கன்னிப் பெண்கள் வளர்பிறை வெள்ளிக் கிழமையன்று ஆரம்பித்து, தொடர்ந்து எட்டு வெள்ளிக்கிழமைகள் மகாலட்சுமி பூஜையை வீட்டிலேயே செய்யலாம்.
ஐந்து முகம்கொண்ட குத்து விளக்கை நன்றாக சுத்தம் செய்து, ஐந்து தீபங்களைப் பிரகாச மாக ஏற்றிவைத்து, அந்த தீப ஒளியில் மகாலட் சுமியை வணங்கி, பால், பால் பாயசம் அல்லது சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை நிவேதனம் செய்து, ஐந்து சுமங்கலிலிகளுக்கு முடிந்த அளவு தாம்பூலம் கொடுத்து, அன்று ஒருவேளை உணவு மட்டும் உண்ணவேண்டும். எட்டாவது வெள்ளிக்கிழமையன்று 12 வயதுக்குட்பட்ட இரண்டு சிறுவர்களை அஸ்வினி குமாரர் களாக பாவித்து, அன்று காலை அவர்களை எண்ணெய் ஸ்நானம் செய்துகொள்ளச் செய்து, தூய ஆடை அணியச் செய்து, திலகம் கொடுத்து, பூஜைக்குப்பின் திருப்தியாக உணவளித்து தீர்த்தப் பாத்திரமும், தட்சிணையும் கொடுத்து வாசல்வரை கொண்டுவிட்டு வரவேண்டும்.
பின்பு ஐந்து சுமங்கலிலிகளை ஆராதித்து தீபஜோதியில் மகாலட்சுமியை வணங்க வேண்டும். இப்படிச் செய்தால் தடைப்பட்டு வரும் விவாகம் நடக்கும்.
இந்த தினங்களில் ராமாயணம் பால காண்டம் 73-ஆவது சர்க்கமான ஸீதா விவாகப் பகுதியை மும்முறை பாராயணம் செய்துவர வேண்டும். அல்லது ஸ்ரீமத் பாகவதத்தில் பத்தாவது ஸ்கந்தத்தில் ருக்மணி கல்யாண வைபவத்தைக் கூறும் சர்க்கத்தை இரண்டுமுறை பாராயணம் செய்து, அவலும் வெண்ணெயும் நிவேதனம் செய்யவேண்டும். இந்த முறைகளைத் தவறாமல் செய்தால் கன்னிப் பெண்களுக்கு திருமணமாகி சகல சௌபாக்கியங்களும் உண்டாகும் என்பது நிச்சயம். இது ஒரு அனுபவப் பரிகாரம்.
செல்: 94871 68174