"திருமணம் என்பது புனிதமானது; ஆயிரம் காலத்துப் பயிர் என்று, காலங்காலமாகச் சொல்லி வருகிறார்கள். திருமணம் என்னும் பந்தத் திற்கு நம் நாட்டில் மட்டும் ஏன் இவ்வளவு பெரிய முக்கியத்துவம் தருகிறார்கள்? வெளி நாடுகளில் பலரைத் திருமணம் செய்து, பலரோடு வாழ்ந்து, பலருக்கு குழந்தைகள் பெற்று, அவர்களை வளர்த்து, பல அறிவியல் கண்டுபிடிப்புகள் படைத்து, உலகை அனுபவித்து, சந்தோஷமாக வாழ்ந்து கொண்டுதானே இருக்கிறார்கள்? ஒழுக்கக்கேடாக வாழ்ந்தால் மேலோகத் திலும், நம் நாட்டிலும் நமக்கு தண்டனை, அவமானம், கேவலம்! ஆனால் வேறு நாட்டு மக்களுக்கு இங்கும் தண்டனை இல்லை; மேலோகத்திலும் தண்டனை இல்லையா? நம் நாட்டில் சொல்லப்படும் "ஒருவனுக்கு ஒருத்தி' என்னும் திருமண பந்தத்தால் என்ன பயன்?
ஊருக்காக, உலகத்துக்காக திருமணத்தால் ஏற்படும் கஷ்டத்தை ஏற்று சகித்துக்கொண்டு ஏன் வாழவேண்டும்? பிடிக்காத நபருடன் வாழ்வதைவிட பிடித்த நபர்களுடன் ஏன் வாழக்கூடாது?' என்பதே இன்றைய தலைமுறையின் கேள்வியாக உள்ளது. "வெளிநாடுகளில் பிடிக்கவில்லை என்றால் விலகிக்கொள்ள எந்தத் தடையும் இல்லை. வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே திருமணம் செய்யவேண்டும்; அது தான் எதிர்காலத்திற்கு நல்லது என சில பழமை வாதிகள் முட்டுக்கட்டை போடுகிறார்கள். எங்களுக்கு சுதந்திரம் வேண்டும்' எனவும் எதிர்பார்க்கிறார்கள்.
பெண்களுக்கான அடக்குமுறை நம் நாட்டில் தான் அதிகம். இங்கு பெண்கள் ஆண்களால் பலவற்றை சகித்து வாழவேண்டி உள்ளது. பிடித்த பெண்களுடன் வாழ ஆண்களுக்கு இருக்கும் சுதந்திரம் பெண்களுக்கு இல்லை. ஆண் பல பெண்களுடன் தொடர்பு வைத்தால் ஆண்மை நிறைந்தவன் என்றும், பெண் சில ஆண்களுடன் தொடர்பு
"திருமணம் என்பது புனிதமானது; ஆயிரம் காலத்துப் பயிர் என்று, காலங்காலமாகச் சொல்லி வருகிறார்கள். திருமணம் என்னும் பந்தத் திற்கு நம் நாட்டில் மட்டும் ஏன் இவ்வளவு பெரிய முக்கியத்துவம் தருகிறார்கள்? வெளி நாடுகளில் பலரைத் திருமணம் செய்து, பலரோடு வாழ்ந்து, பலருக்கு குழந்தைகள் பெற்று, அவர்களை வளர்த்து, பல அறிவியல் கண்டுபிடிப்புகள் படைத்து, உலகை அனுபவித்து, சந்தோஷமாக வாழ்ந்து கொண்டுதானே இருக்கிறார்கள்? ஒழுக்கக்கேடாக வாழ்ந்தால் மேலோகத் திலும், நம் நாட்டிலும் நமக்கு தண்டனை, அவமானம், கேவலம்! ஆனால் வேறு நாட்டு மக்களுக்கு இங்கும் தண்டனை இல்லை; மேலோகத்திலும் தண்டனை இல்லையா? நம் நாட்டில் சொல்லப்படும் "ஒருவனுக்கு ஒருத்தி' என்னும் திருமண பந்தத்தால் என்ன பயன்?
ஊருக்காக, உலகத்துக்காக திருமணத்தால் ஏற்படும் கஷ்டத்தை ஏற்று சகித்துக்கொண்டு ஏன் வாழவேண்டும்? பிடிக்காத நபருடன் வாழ்வதைவிட பிடித்த நபர்களுடன் ஏன் வாழக்கூடாது?' என்பதே இன்றைய தலைமுறையின் கேள்வியாக உள்ளது. "வெளிநாடுகளில் பிடிக்கவில்லை என்றால் விலகிக்கொள்ள எந்தத் தடையும் இல்லை. வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே திருமணம் செய்யவேண்டும்; அது தான் எதிர்காலத்திற்கு நல்லது என சில பழமை வாதிகள் முட்டுக்கட்டை போடுகிறார்கள். எங்களுக்கு சுதந்திரம் வேண்டும்' எனவும் எதிர்பார்க்கிறார்கள்.
பெண்களுக்கான அடக்குமுறை நம் நாட்டில் தான் அதிகம். இங்கு பெண்கள் ஆண்களால் பலவற்றை சகித்து வாழவேண்டி உள்ளது. பிடித்த பெண்களுடன் வாழ ஆண்களுக்கு இருக்கும் சுதந்திரம் பெண்களுக்கு இல்லை. ஆண் பல பெண்களுடன் தொடர்பு வைத்தால் ஆண்மை நிறைந்தவன் என்றும், பெண் சில ஆண்களுடன் தொடர்பு கொண்டால் ஒழுக்கங்கெட்டவள் என்றும் பேசுகிறார்கள். ஆச்சரியம் என்னவென்றால் பெண்களைக் கேவலமாகப் பேசுவது அருகிலிருக்கும் பெண்களாகவே இருக்கிறார்கள்.
நம்நாட்டில் எந்தவொரு திருமணமான பெண்ணும் கணவனைவிட்டு வேறொரு வருடன் செல்ல விரும்புவதில்லை. கணவன், கணவனாக நடந்துகொள்ளாதபோதும் சகித்து வாழ்பவர்கள்தான் அதிகம். அன்றாடம் ஊடகங்களில் கேள்விப்படுவதுபோல் கள்ளக் காதலுக்கு பெண்கள் அலையவில்லை. எங்கோ எந்த காரணத்திற்காகவோ நடக்கும் சில முறையற்ற உறவுகள் பெரிதாக்கப்பட்டு, நம் பெண்களை நாமே அசிங்கப்படுத்திக் கொள்கிறோம். ஒழுக்கம் தவறி நடக்கிறார்கள் என்றால் ஒரே நாளில், ஒரே காரணத்தால் நடக்காது. நடைமுறையில் இவையனைத்தும் இருந்தாலும், ஜாதகப்படி பெண்கள் ஏன் தடம் மாறுகிறார்கள் என்று காண்போம்.
தடம் மாறும் ஜாதக நிலைகள்
பெண்ணுக்கு 2, 4, 7-ஆமிடம் சிறப்பாக அமைந்துவிட்டால் அந்தப் பெண் அனைத்து சுகங்களும் பெற்று தடம் மாறாமல் வாழ்வாள்.என்னதான் மனிதனுக்கு பணம், புகழ் கிடைத் தாலும் தாம்பத்திய சுகமின்றி வாழமுடியாது. 2, 4, 7-ஆமிடங்கள் கெட்டு 9-ஆமிடமும் கெட்டால், சமூகக் கட்டுப்பாடுகளை மீறி சுகம் பெறுவாள். தடம் மாறுவதில் ஒன்பதாமிடம் மிக முக்கியமாக இருப்பதற்குக் காரணம், கலாச்சாரத்தை மீறும் அமைப்பை தைரியத்தை ஒன்பதாமிடமே தருவதால்தான். ஒன்பதாம் இடத்தில் செவ்வாய், சனி இணைவு, பார்வை, செவ்வாய், சுக்கிரன் வலுத்து பாவகிரக வலிமை பெறுதல், குரு பார்வை இல்லாமல் இருத்தல் போன்ற அமைப்புகள் தடமாறத் தூண்டுகின்றன. 2-ஆமிடம் கெட்டால் குடும்பத்தை மீறுவார். 5-ஆமிடம் வலுத்தால் எல்லைமீறும் தைரியம் வரும், 7-ஆமிடம் பலமிழந்தால் இஷ்டப்படி சுகம் அனுபவிப்பார். பொதுவாகவே ஒரு ஜாதகர் சமூகத்திற்கு முரணான செயல்களில் தைரியமாக ஈடுபடுகிறார் என்றால் அவருக்கு ராகு, கேது தசை, அசிங்கப்பட 6, 8-ஆம் அதிபதி தசை, நஷ்டப்பட 12-ஆம் அதிபதி தசை, சனி பாதிப்புள்ள பெயர்ச்சிகள் காரணமாக அமைகின்றன. ஏழரைச் சனியில் பெரும்பாலான வர்கள் சபலத்தில் விழுந்தே எழுகிறார்கள். பெண்களின் சிறிய சபலம்கூட வாழ்க்கையை மாற்றிவிடும் என்பதை மறக்கக்கூடாது.
தடுமாறும் ஆண்கள்
இன்று திருமணத்திற்குப் பெண்கள் குறைவாக இருப்பதால் பல ஆண்களுக்குப் பெண் கிடைப்பதில்லை. அவரவர் இனத்தில் அவர்களின் எதிர்பார்ப்புக்கேற்றபடி வரன் அமைவது சிரமமாக உள்ளது. இன்றைய தலைமுறையினர் அழகான, அமைதியான, பணக்கார, பெற்றோர் இல்லாத, உடன்பிறந்தவர் தொல்லையில்லாத வரனை எதிர்பார்க்கிறார் கள். பெண் கிடைத்தால் போதுமென கூறி விட்டு, பெண் வீட்டில் கொடுக்கும் வரதட்சணை, சம்பாதிக்கும் அழகான பெண் என பார்த்துப் பார்த்து திருமணம் செய்துவிட்டு, திருமணம் முடிந்ததும் "என்னைப் புரிந்து கொள்ளவில்லை, பெற்றோர் கட்டாயத் திற்காக திருமணம் செய்ததால் மனம் ஒன்ற மறுக்கிறது. கடமைக்காக திருமணம் செய்து வாழ்வதால் அன்யோன்யமில்லா வாழ்க்கை யாய் இருக்கிறது' என்று மனைவியைப் பற்றி புகார்களை அள்ளி வீசுகிறார்கள். வெகுசிலருக்கு ஆண்மைக் குறைவிருந்தும் திருமணம் செய்து பெண்களை சித்ரவதை செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
மேலும் பல இடங்களில் திருமணமான அடுத்த நாளே பெண்ணின் நகையைப் பறித்து அடகு வைப்பதில் ஆரம்பித்து பெண்களை ஆண்கள் படாதபாடு படுத்துகிறார்கள். சந்தேக புத்தி கொண்டு வார்த்தைகளால் காயப்படுத்தி, குடிப்பழக்கத்திற்கு அடிமை யாகி, அதற்கு மனைவியே காரணமென அசிங்கப் படுத்தி, நோயாளியாக மாறி, அதற்கும் செலவுகளை உண்டாக்கி குடும்பத்தையே மனரீதியாகவும் பொருளாதார ரீதியாக வும் நிர்மூலப்படுத்தி விடுகிறார்கள். இத்தகைய பெற்றோர்களின் சண்டையில் பிள்ளைகள் வாழ்க்கை பல குடும்பங்களில் கேள்விக்குறியாகிவிடுகிறது. திருமண வாழ்க்கையில் ஏமாற்றமடையும்போது இயலாமை கோபமாகி தம்பதிகள் ஒருவருக்கொருவர் மனப் பிரிவை அடைகி றார்கள்.
தடுமாறும் ஜாதக நிலை
ஆண்களுக்கு சுக்கிரன் பாவகிரகங்களுடன் இணைவு, பார்வை பெற்றுக் கெட்டுப் போதல், களத்திரகாரகனான சுக்கிரன் பலவீனப் படுதல் இந்திரியத்தைக் கெடுத்து தாம்பத்திய நாட்டமின்றி செய்யும். கேது பார்வை, சேர்க்கை, ஏழாமிடத்திற்கு ஏற்பட்டாலும் ஜாதகரின் மனதையும், உடலையும் கெடுத்து இல்லற வாழ்க்கையைக் கெடுக்கிறது. சுக்கிரன் நீசம், 4, 6, 7, 12-ஆமிடத் தொடர்பு, சேர்க்கையானது விலைமாதர் தொடர்பைத் தந்துவிடுகிறது. சுக்கிரன், ஏழாம் அதிபதியுடன் கேது சேர்ந்து கெட்டால் ரகசியக் காதல் செய்வர். சுக்கிரன் உச்சம், சனியின் சேர்க்கை, சுக்கிரன், ராகு இணைவு, செவ்வாய், சனி பார்வை, ராகு, கேது சம்பந்தம் போன்ற அமைப்பு கொண்டவர்கள் சமூகக் கட்டுப்பாடுகளை நினைக்காமல் தன் சுகத்தைப் பூர்த்தி செய்துகொள்வர். ஏழாமிடம் பாவகிரகத் தொடர்புபெற்று, பாதிப்படைந்து குரு பார்வை பெற்றுவிட்டால் தடுமாறும் யோசனை வந்தாலும் நடக்காது.
பரிகாரம்
இன்று பெண்கள் குடும்பத்திற்காகப் பொருளீட்ட பணிக்குச் செல்கிறார்கள்.
அங்கே தங்கள் குடும்பக் கஷ்டங்களை சக ஆண் பணியாளர்களிடம் தெரிவிக்கவேண்டிய சூழல் ஏற்பட்டுவிடுகிறது. தன் கஷ்டங்களைக் காது கொடுத்து கேட்கும் நபர்களிடம் இயற்கையாகவே நல்ல அபிப்பிராயம் வந்துவிடுகிறது. அங்குதான் பிரச்சினை தொடங்குகிறது. அவர்களும் தங்கள் மனைவி படுத்தும் கொடுமைகளை விவரிக்கிறார்கள். "உங்களைப் போன்ற அன்பான நல்லவரைத் திருமணம் செய்திருந்தால் நான் பாக்கியவான்' என ஒருவரை ஒருவர் புகழ்ந்து பேசி, தவறான உறவுக்குள் நுழைகிறார்கள். தங்களுடைய முறையற்ற உறவுக்காக ஒவ்வொருவரும் ஒவ்வொரு முடிவுகளை எடுத்து அசிங்கப்பட்டு, கடைசியில் வாழ்க்கையை நரகமாக்கிக் கொள்கிறார்கள்.
கணவரைவிட்டு விலகிவரும் பெண்களுக்கு "ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்' முடிந்ததும், ஆண்களால் கேட்கப்படும் கேள்வி, "இப்படி எத்தனை ஆண்களுடன் இருந்தாய்? உன் கணவனைவிட்டு வந்த நீ என்னைவிட்டு இன்னொருவருடன் செல்லமாட்டாய் என்பதற்கு உத்திரவாதம் உண்டா?' என்பதே. பெற்ற பிள்ளைகளாலும் அவமானப்பட்டு, ஒதுக்கப்பட்டு, "ஏன் இந்தத் தவறைச் செய்தோம்' என்று நொந்து இறப் பதே அதிகம் நடந்துவிடுகிறது. ஆண்களைப் பொருத்தவரை பெரிய பாதிப்புகள் ஏற்படுவதில்லை. பெரும்பாலான மனைவிகள் மன்னித்து விடுகிறார்கள். இல்லையெனில் பிள்ளைகளுடன் அதிக அவமானமின்றி, சொத்துகளை கையில் வைத்துக் கொண்டு கடைசி காலங்களைக் கடத்திவிடுகி றார்கள்.
ஆதலால் பெண்கள் தடம் மாறக் கூடாது. ஏனென்றால் பெண்களை இங்கே தெய்வமாய் மதிக்கும் ஆண்மகன்கள் அதிகம் இருப்பதால்தான் பெண்ணின் ஒழுக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் தருகிறார்கள். நம் நாட்டில் மட்டுமே இறந்த பெற்றோர்களை மதித்து தெய்வமாய் வழிபடும் பழக்கம் உள்ளது. மற்ற நாடுகளில் நடைமுறையில் உள்ள கலாச்சாரத்தை நம்மால் பின்பற்ற முடியாததற்குக் காரணம், பல ஆண்களுடன் இருக்கும் பாட்டியின் படத்தை வைத்து சாமி என நம்மால் கும்பிட முடியுமா?
செல்: 96003 53748