Advertisment

பெண்கள் பிறப்பு ஜாதக ரகசியம்! - மணிமொழி (சப்தரிஷி நாடி ஜோதிடர்)

/idhalgal/balajothidam/women-birth-horoscope-secret-manimozhi-sabhatarishi-nadi-astrologer

ந்த பூமியில் ஆண்- பெண் என்ற இரு பிரிவுகளாகவே உயிர்களை இயற்கை பிறப்பிக்கிறது. ஜோதிட முறையில் 12 ராசிகள், ஒன்பது கிரகங்களைக்கொண்டே பலன் கூறப் படுகிறது. பிறப்பு ஜாதகரீதியாக ஆண்- பெண்களுக்கு தனித்தனியே பிரித்துப் பலன் கூறவேண்டுமென ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

Advertisment

பெண்களின் ஜாதகத்தில், ஜென்ம லக்னத் தில் சனி, செவ்வாய், கேது ஆகியவற்றில் ஏதாவதொரு கிரகம் இருந்தால், கோப குணம், உடலில் உஷ்ணம், அதிக பித்தம், தலைவலி முதலான வியாதிகளால் கஷ்டப்படுவாள். ஆனால் சுப கிரகங்களான குரு, புதன், சுக்கிரன், வளர்பிறைச் சந்திரன் போன்றவை லக்னத் தைப் பார்த்தால், ஜாதகத்திலேயே கிரகப் பரிகாரமாகி, சிரமப் பலனை அனுபவிக்க விடாமல். தடுத்து, சுக சௌகரியத்தைத் தந்து விடும்.

wb

பிறப்பு லக்னத்தில் குரு, சுக்கிரன், புதன், வளர்பிறைச் சந்திரன் ஆகியவற்றில் ஏதாவதொரு கிரகம் இருந்தால், அந்தப் பெண் பிறந்த நாள்முதல், அவள் பிறந்த வீட்டில் தனம், தானியம், பூமி, பொன், வெள்ளி ஆபரணங்கள் மேன்மேலும் பெருகி செல்வம் குறையா

ந்த பூமியில் ஆண்- பெண் என்ற இரு பிரிவுகளாகவே உயிர்களை இயற்கை பிறப்பிக்கிறது. ஜோதிட முறையில் 12 ராசிகள், ஒன்பது கிரகங்களைக்கொண்டே பலன் கூறப் படுகிறது. பிறப்பு ஜாதகரீதியாக ஆண்- பெண்களுக்கு தனித்தனியே பிரித்துப் பலன் கூறவேண்டுமென ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

Advertisment

பெண்களின் ஜாதகத்தில், ஜென்ம லக்னத் தில் சனி, செவ்வாய், கேது ஆகியவற்றில் ஏதாவதொரு கிரகம் இருந்தால், கோப குணம், உடலில் உஷ்ணம், அதிக பித்தம், தலைவலி முதலான வியாதிகளால் கஷ்டப்படுவாள். ஆனால் சுப கிரகங்களான குரு, புதன், சுக்கிரன், வளர்பிறைச் சந்திரன் போன்றவை லக்னத் தைப் பார்த்தால், ஜாதகத்திலேயே கிரகப் பரிகாரமாகி, சிரமப் பலனை அனுபவிக்க விடாமல். தடுத்து, சுக சௌகரியத்தைத் தந்து விடும்.

wb

பிறப்பு லக்னத்தில் குரு, சுக்கிரன், புதன், வளர்பிறைச் சந்திரன் ஆகியவற்றில் ஏதாவதொரு கிரகம் இருந்தால், அந்தப் பெண் பிறந்த நாள்முதல், அவள் பிறந்த வீட்டில் தனம், தானியம், பூமி, பொன், வெள்ளி ஆபரணங்கள் மேன்மேலும் பெருகி செல்வம் குறையாமல் நல்ல பலனைத்தந்து மேன்மை யாக வாழச் செய்துவிடும்.

Advertisment

பிறப்பு லக்னத்திற்கு 9-ஆமிடத்தில் சனி, ராகு- கேது இருந்தால் நற்பலன் மாறி, இவள் பிறந்தது முதல் தாய்- தந்தை கையில் பணமில்லாமல் வறுமையில் வாடி, இனத் தோர், உறவுகள் பரிகாசம் செய்யும்படியான நிலையில் இருப்பார்கள்.

பெண்களின் ஜாதகத்தில் லக்னத்திற்கு 9-ஆவது ராசியில் சுக்கிரன், குரு, புதன், சந்திரன் இருந்தால், இவள் பிறப்பிற்குப் பின்பு, இவளைப் பெற்ற தந்தை மகா சாமர்த் தியத்துடன் தொழில், வியாபாரம் செய்து வீடு, நிலம், பொன், பொருள் சம்பாதித்து, ஆஸ்தி, அந்தஸ்துடன் பெருமையாய் வாழ்ந்திருப்பான்.

லக்னத்திற்கு 4-ஆவது ராசியில் சூரியன், செவ்வாய், சனி, ராகு- கேது ஆகியவற்றில் எந்தவொரு கிரகம் இருந்தாலும் அந்தப் பெண் தன் வாழ்க்கையில் சதாகாலம் துன்பம், துயரமடைந்து, வறுமையுடன், கஷ்டத்தையே அனுபவித்து பிறர் கீழாக எண்ணும் நிலையில் வாழ்ந்துகொண்டிருப்பாள்.

லக்னத்திற்கு 4-ஆமிடத்தில், சந்திரன், குரு, புதன், சுக்கிரன் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று இருந்தாலும் அல்லது பார்த்தாலும் தனம், தானியம், பொன், பொருள் சம்பத்து டன் உலகோர் மெச்சும்படியாக பெருமை யுடன் வாழ்வாள்.

பெண் ஜாதகத்தில் லக்னத்திற்கு 7-ஆமி டத்தில் சுக்கிரன், குரு, புதன், சந்திரன் ஆகிய நால்வரில் ஒன்றிருந்தால் இவள் ஏழையான தாய்- தந்தைக்குப் பிறந்திருந்தாலும், மேலே கூறிய கிரகங்கள் இருப்பதால், நல்ல கல்வி, தொழில், உத்தியோகத்தினால் சுயமாக வெகு பொருள் சம்பாதித்து, நல்ல கணவனை மணம்புரிந்து, பூமி, வீடு, பொன்னாபரணங்களை அனுபவித்து, வாழ்நாள் முழுவதும் மனம் மகிழ்ந்து வாழ்ந்திருப்பாள்.

லக்னத்திற்கு 7-ஆமிடத்தில் பாவ கிரகங்களான, சனி, ராகு- கேது, செவ்வாய் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு கிரகம் இருந்தால், இவளை மணம் புரியும் கணவன் சோம் பேறியாகவும், துஷ்டனாகவும், வாயாடி வம்பனுமாகவும் இருப்பான். உழைத்துப் பொருள் தேடி சம்பாதிக்க மாட்டான். குடும்பத்தில் கவலையும் வறுமையும் இருக்கும். பிறர் இவர்களைக் கீழாக எண்ணு வார்கள். இந்தப் பெண்தான் உழைத்து சம்பாதித்து, குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய நிலை உண்டாகிவிடும்.

7-ஆமிடத்தில் மேலே கூறியுள்ள பாவ கிரகங்கள் இருந்தாலும், குரு, புதன், சுக்கிரன் அந்த கிரகங்களுடன் சேர்ந்தாலும் பார்த்தாலும், பாவகிரகங்களுக்குப் பரிகாரமாகி நல்ல வாழ்க்கை தந்துவிடும்.

ஜென்ம லக்னத்தில் குரு, 6-ஆவது ராசியில் சனி, 9-ஆவது ராசியில் புதன், 7-ஆவது ராசியில் சந்திரன், 12-ஆவது ராசியில் ராகு என கிரக அமைப்பு ஒரு பெண்ணின் ஜாதகத்தில் இருந்தால், இவளை மணந்து கொள்ளும் கணவன், இவள் யோகத்தால் மகா சமர்த்தனாகி, திருமணத்திற்குப் பின்பு தொழில், வியாபாரம், உத்தியோகம் செய்து பொன், பொருள், பூமி, வீடு என சம்பாதித்து, சேமித்து பெருமையாய் வாழ்வான். இந்தப் பெண் பிறந்த வீட்டில் அனுபவிக்காத அனைத்து சுகங்களையும், கணவன் வீட்டில் அனுபவித்து வாழ்வாள்.

பெண் ஜாதகத்தில் லக்னம், 5-ஆமிடம், 9-ஆமிடம் ஆகியவற்றில் ஏதாவதொரு ராசியில், சனி, ராகு- கேது, குளிகன் ஆகிய நான்கில் ஏதாவதொரு கிரகம் இருந்தால், இவர்கள் புத்திர பாக்கியக் குறையுடன் வறுமையில் வாழ்ந்திருப்பார்கள்.

ஜென்ம லக்னத்தில் குருவும், 5-ஆமிடத்தில் சுக்கிரனும், 7-ஆமிடத்தில் சந்திரனும், 9-ஆவது ராசியில் புதனுமிருந்தால் அழகு, அறிவு, நல்ல ஞானம்கொண்ட அதிர்ஷ்ட மான புத்திரனைப் பெற்று, ஆயுள்வரை மகனின் ஆதரவுபெற்று, திரவிய சம்பத்துடன், பெருமையுடன் வாழ்ந்திருப்பாள்.

பெண்கள் பலரின் ஜாதகத்தினைப் பார்த்தபோது, இதுபோன்ற பலன்கள் ஓரளவு சரியாகவே நடந்துவருகிறது. திருமணப் பொருத்தம் பார்க்க வருபவர் களில், ஆணுக்கும் பெண்ணுக்கும் பிடித்திருந்து, இரண்டு குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் திருமணம் செய்ய விருப்பமிருந்தால், பெண்ணின் ஜாதகத்தில் சுப கிரகங்கள் அமைந்திருந்தால், பொருத்தம் பார்த்துக் கூறுவேன். அவர்களும் திருமணம் செய்து இன்றுவரை நன்றாகவே வாழ்கிறார்கள்.

பெண்களின் பிறப்பு ஜாதகத்தில் சனி, செவ்வாய், ராகு- கேது கிரகங்கள் பாதிப்பிருந்தால் அதற்குரிய காரணத்தை அறிந்து, முறையான பரிகாரத்தை சரியாகச் செய்து தீய கிரகத்தின் தாக்கத் தைத் தடுத்துக்கொள்ளலாம். திருமணத் தடை, கணவன்- மனைவி கருத்து வேறுபாடு போன்றவற்றைத் தீர்த்துக் கொள்ளலாம்.

செல்: 93847 66742.

bala260724
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe