பெண்கள் நாட்டின் கண்களாகக் கருதப்படுகிறார்கள். பெண்மை என்ற சொல்லுக்கே மென்மை என்றுதானே பொருள். தாய்மை என்னும் வரம் பெண்களுக்கே உரித்தானது.

Advertisment

குடும்பத்தைப் பேணிக்காத்து, குழந்தைகளைப் பெற்றெடுத்து, உற்றார்- உறவினர்களை அனுசரித்து வீட்டின் குலவிளக்காக விளங்குபவர்கள் பெண்கள். தற்போதுள்ள பரபரப்பான சூழ்நிலையில் பணிக்குச் செல்லக்கூடிய கட்டாயத்திற்கும் உள்ளாகியுள்ளார்கள். எல்லா துறைகளிலும் சிறந்து விளங்கும் ஆற்றலைப் பெற்று பொருளாதார ரீதியாகவும் குடும்பத்திற்கு உதவியாக இருக்கிறார்கள். இவ்வளவு சிறப்பு வாய்ந்த பெண்களுக்கு மணவாழ்க்கை என்பதும் மகிழ்ச்சிகரமாக அமையவேண்டும். பெண்களின் ஜாதகத்தில் நவகிரகங்களில் செவ்வாயின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கிறது.

ammanதிருமணரீதியாக ஜென்ம லக்னத்திற்கும், சந்திரா லக்னத்திற்கும் 7-ஆம் வீடு களத்திர ஸ்தானமாகும். லக்னத்திற்கு குடும்ப ஸ்தானமான 2-ஆம் வீடும், சுகஸ்தானமான 4-ஆம் வீடும், களத்திர ஸ்தானமான 7-ஆம் வீடும், ரகசிய உறவு ஸ்தானமான 8-ஆம் வீடும், கட்டில் சுகஸ்தானமான 12-ஆம் வீடும் ஒருவரது திருமண வாழ்வை நிர்ணயம் செய்கிறது. ஆண்களுக்கு சுக்கிரனும், பெண்களுக்குச் செவ்வாயும் களத்திர காரகனாக விளங்குகிறது.

பெண்கள் ஜாதகத்தில் 2, 4, 7, 8, 12-ஆம் வீடுகளை சுபகிரகங்கள் பார்வை செய்து, களத்திர காரகனான செவ்வாய் பலம் பெற்று அமையப் பெற்றால் மிகவும் மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை உண்டாகும். 2, 4, 7, 8, 12-க்கு அதிபதிகளும், செவ்வாயும் பலம் பெறுவதுடன் அசுபர் பார்வை மற்றும் சேர்க்கை இல்லாமல் இருந்தால் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும். சுபகிரகமான குருவின் பார்வை 7-ஆம் வீட்டிற்கும் செவ்வாய்க்கும் இருந்தால் மணவாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

Advertisment

நவகிரகங்களில் சூரியன், சனி, ராகு, கேது போன்ற பாவிகள் 7-ல் அமைந்திருந்தாலும், செவ்வாயுடன் இணைந்திருந்தாலும், 7-ஆம் வீட்டையும் செவ்வாயையும் பார்வை செய்தாலும், 7-ஆம் வீட்டையும் செவ்வாயையும் இருபுறமும் பாவிகள் சூழ்ந்திருந்தாலும் இல்லற வாழ்வில் பிரிவு, பிரச்சினை உண்டாகிறது.

பெண்களுக்கு ஜென்ம லக்னத்திற்கு 8-ஆம் வீடு மாங்கல்ய ஸ்தானமாகும். 8-ஆம் வீட்டில் பாவிகள் அமையப் பெற்றாலும், 8-ஆம் வீட்டிற்கு பாவிகள் பார்வை உண்டாகி செவ்வாயைப் பாவிகள் பார்த்தாலும் வாழ்க்கைத் துணைக்கு உடல் உபாதை, கண்டத்தை எதிர்கொள்ளும் அமைப்பு உண்டாகிறது.

பெண்களுக்கு களத்திரகாரகனான செவ்வாய் சுபகிரகச் சேர்க்கை பெற்றிருந்தாலும் நல்லதொரு இல்லற வாழ்க்கை உண்டாகிறது. செவ்வாய் மேஷம், விருச்சிகத்தில் ஆட்சியும், மகரத்தில் உச்சமும் அடையும். சுபகிரகச் சேர்க்கை, பார்வை பெற்று செவ்வாய் பலம்பெற்றிருந்தால் இல்லற வாழ்வில் அதிக ஈடுபாடு ஏற்படும்.

Advertisment

செவ்வாய் பலம்பெறுவது நல்லது என்றாலும், செவ்வாய் அதிக பலம்பெற்றாலும், சுக்கிரன் மற்றும் 7-ஆம் அதிபதியுடன் இணைந்திருந்தாலும் இல்லற சுகத்தில் அதிக ஈடுபாடு இருக்கும். செவ்வாய்- ராகு சேர்க்கை பெற்று 7-ஆம் அதிபதியுடன் தொடர்பு உண்டாகி சுபர் பார்வையின்றி இருந்தால் கலப்புத் திருமணம், காதல் திருமணம், மதம்மாறித் திருமணம் செய்து கொள்ளும் அமைப்பு உண்டாகிறது. செவ்வாய்- சனி சேர்க்கை பெற்று 7-ஆம் அதிபதியின் தொடர்போ, 7-ஆம் வீட்டின் தொடர்போ பெற்றிருந்தால் வயதான ஆணை அல்லது தோற்றத்தில் முதியவராக உள்ளவரைத் திருமணம் செய்துகொள்ளும் சூழ்நிலை உண்டாகிறது. செவ்வாய்- கேது சேர்க்கைப் பெற்று 7-ல் அமைந்தோ, அல்லது 7-ஆம் அதிபதியுடன் தொடர்பு பெற்றோ இருந்தால் காதல் திருமணம், கலப்புத் திருமணம் உண்டாகிறது.

12-ஆம் வீடு கட்டில் சுகஸ்தானமாகும். 12-ஆம் வீட்டை பாவிகள் சூழ்ந்திருந்தாலும் 12-ஆம் அதிபதி பாவிகள் பார்வை பெற்றிருந்தாலும் கட்டில் சுகத்தில் பாதிப்பு ஏற்படுகிறது.

செவ்வாய் உஷ்ண கிரகம் என்பதால் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் (ஜாதகப்படி) ரத்தத்தை பரிசோதித்ததில் ஆர்.எச்.நெகடிவ் என்ற வகை ரத்தம் அநேகருக்கு இருப்பதாகத் தெரிகிறது. இந்த ரத்த வகை அனைவருக்கும் இருக்காது. இந்த வகை ரத்தம் மற்ற வகை ரத்தத்துடன் சேரும்போது ஒற்றுமை சிறப்பாக இருக்காது.

திருமண வாழ்க்கைக்கு முக்கியப் பங்கு வகிக்கக்கூடிய ஸ்தானங்களான 2, 4, 7, 8, 12-ல் செவ்வாய் அமைவது செவ்வாய் தோஷம் என்பதால், அவருக்கு அதேமாதிரியான ஜாதகம் அமையப் பெற்றவரைத் திருமணம் செய்து வைப்பதால் மணவாழ்க்கை மகிழ்ச்சியாகவும், கட்டில் சுகவாழ்வு திருப்தியாகவும் இருக்கும்.

செவ்வாய் தோஷம் உள்ளவருக்கு செவ்வாய் தோஷம் இல்லாத நபரைத் திருமணம் செய்துவைத்தால் மணவாழ்வில் திருப்தியற்ற நிலை, கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடு உண்டாகும்.

ரத்த ஓட்டம் சிறப்பாக இருந்தால் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். அதிலும் குறிப்பாக பெண்களின் ரத்த ஓட்டத்திற்குக் காரகனான செவ்வாய் பலமாக இருப்பது நல்லது. செவ்வாய் பெண்களுக்கு களத்திர காரகனாகவும், கருமுட்டை, கருப்பை, மாதவிடாய்க்குக் காரகனாகவும் உள்ளார். பெண்களுக்கு மாதவிடாய் சரிவர இருந்தால் நல்ல உடல் ஆரோக்கியம் உண்டாகும். இதனால் பெண்களுக்கு ரத்தகாரகன் செவ்வாய் பலம்பெற்றிருப்பது மிகவும் முக்கியம்.

பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் நீசம்பெற்றோ, வக்ரம் பெற்றோ, பாவிகள் சேர்க்கை பெற்று 6, 8-ல் மறைந்தோ, சனி போன்ற பாவிகள் பார்வை பெற்றோ இருந்தாலும், செவ்வாயின் வீடுகளான மேஷம், விருச்சிகத்தில் சனி, ராகு போன்ற பாவிகள் இருந்தாலும், அதிலும் குறிப்பாக விருச்சிக ராசி என்பது காலபுருஷ தத்துவப்படி 8-ஆவது ராசி என்பதால் சனி, ராகு போன்ற பாவிகள் விருச்சிகத்தில் இருந்தால் கருப்பையில் பிரச்சினை, மாதவிடாய்க் கோளாறு, வயிறு கோளாறு போன்றவை ஏற்படும்.

செல்: 72001 63001