Advertisment

பெண்ணின் ருது ஜாதக சூட்சுமம்! - மணி மொழி

/idhalgal/balajothidam/womans-rutu-horoscope-soot-mani-language

ந்த பூமியில் பிறக்கும் ஆண்- பெண்கள், இந்தப் பிறவி வாழ்வில் அனுபவிக்கப் போகும் நன்மை- தீமைகளை, அவரவர் பிறப்பு ஜாதக அமைப்பினைக்கொண்டு அறிந்துகொள்கிறோம். ஆண்களின் விதி நிலைமையை, பிறப்பு ஜாதகம் ஒன்றை மட்டும் கொண்டு தெரிந்து கொள்ளலாம். ஆனால், பெண்களின் இப்பிறவி வாழ்க்கைப் பலனை, அவளின் பிறப்பு ஜாதகம், ருது ஜாதகம் ஆகிய இரண்டு நிலையில் கணித்துப் பார்த்து பலனறிய வேண்டுமென்று ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

Advertisment

பெண்களின் பிறப்பு ஜாதகம் நல்ல யோகத்துடன் அமைந் திருந்தாலும், அவள் ருதுவான நாளன்று ருது ஜாதகத்தில் கிரக நிலைகள் யோகமில்லாமல் இருந்தால், அந்தப் பெண்ணின் வாழ்க்கை சிரமம் நிறைந்ததாக அமைந்துவிடும்.

Advertisment

ss

பெண்ணின் பிறப்பு ஜாதகத்தில், அவள் அதிர்ஷ்டத்தை அனுபவித்து வாழமுடியாத நிலையில் கிரக நிலை அமைந்திருந்தாலும், ருது ஜாதகத்தில் ராசி, லக்னம், கிரக நிலைகள் நல்ல யோக பலம் பெற்றிருந்தால் அவள் தன் வாழ்க்கையில் அனைத்து நன்மைகளையும் அடைந்து வாழ்வாள்.

இன்றையநாளில் பெண்களைப் பெற்றவர்கள் ருது ஜாதகம் எழுதி வைப்பதில்லை. அதற்கு முக்கியத்துவமும் தருவதில்லை. ஆனால் நமது முன்னோர்கள், பெண்களின் பிறப்பு ஜாதகத்தினைப் போன்றே ருது ஜாதகத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள்.

பெண்ணின் திருமண சமயத்தில், அந்தப் பெண்ணிற்கு பிறப்பு ஜாதகம் எழுதி வைக்காமலிருந்து, ருது ஜாதகம் மட்டும் இருந்தால், இதைக்கொண்டு பொருத்தம் பார்க்கும் வழக்கம் இருந்தது.

ஒரு பெண் ருதுவான நேரம் சரியாகத் தெரியாது; அதனால் ருது ஜாதகத்தில் சரியான லக்னம் அமைக்க முடியாதென்று சிலர் கூறிவிடுகின்றனர். அந்தப் பெண்ணின் கண்ணில் அல்லது பெற்றதாய், மற்றவர் கண்ணில் உதிரம் (ரத்தம்) பார்க்கப்படுகின்ற நேரத்தையே ருது கால நேரமாகக்கொண்டு, லக்னம் அமைத்து ஜாதகம் எழுதலாம். இதனால் ஜாதகப் பலனும் தவறாது; மாறாது.

ஒரு பெண் ருதுவான நா

ஒரு பெண் ருதுவான நாள், திதி, மாதம் கொண்டு, ருது ஜாதகப் பலனைத் தெரிந்துகொள்ளலாம்.

ருது மாதப் பலன்

பெண்கள் சித்திரை மாதத்தில் ருதுவானால் கணவனுக்காகாது. வைகாசியில் ருதுவானால் சுக சம்பத்துடன் வாழ்வாள். ஆனியில் ருதுவானால் புத்திர பாக்கியம், செல்வம் உடையவள். ஆடியில் என்றால் பலபேரை விரும்பும் குணமுள்ளவள். ஆவணி- அறிவிற் சிறந்த பிள்ளைகளைப் பெறுவாள். புரட்டாசி- அறிவு, ஆலோசனை. புத்தி விருத்தி யாகி பொன், பொருளுடன் இருப்பாள்.

ஐப்பசியில் ருதுவானால், திறமைமிக்க பிள்ளைகளைப் பெறுவாள்; ஆனால் விதவை யாவாள். கார்த்திகை மாதமானால் எல்லாரிட மும் கடுகடுத்து கோபமுடன் பேசுவாள்; அன்பாகப் பேசி அனுசரிக்கமாட்டள். மார்கழியெனில் இவளுக்கு அறிவிற் சிறந்த, உத்தமமான பிள்ளைகள் பிறப்பார்கள். தை மாதம் ருதுவானாள், பிறரை அனுசரித்து, அன்பாக இருப்பாள்; பிறருக்கு உதவுவால். பூஜை, விரதங்கள் இருப்பாள். மாசி மாதம்- பொருள் சேர்க்கும் யோகத்தினால் வீடு, பூமி, பொன், வெள்ளி ஆபரணங்கள் சம்பாதித்து சுகமாக வாழ்வாள். பங்குனி மாதம் ருதுவானால், அதிக குழந்தைகளைப் பெற்று, உறவுகள் ஆதரவுடன் எல்லார்க்கும் நல்லவளாகப் பெருமையாய் வாழ்வாள்.

ருது நாள் பலன்

ஒரு பெண் ஞாயிற்றுக்கிழமை பூப்பெய்தி னால் அவள் வியாதியால் சிரமத்துடன் வாழ்வாள். திங்கள்கிழமையானால், பதிவிரதை, பத்திணித்தன்மையானவள். செவ்வாய்க்கிழமை என்றால் பல சிரமங்களுடன் வாழ்வாள். புதன் கிழமை பொன், பொருள், பூமி யோகம் உடைய வள். வியாழன்கிழமை வெகு பாக்கியசாலியாக இருப்பாள். வெள்ளிக்கிழமை. பத்தினி யாவாள். சனிக்கிழமை ருதுவானால் பலவித துன்பம், துயரத்தை அனுபவிப்பாள்.

ருது திதிப் பலன்

பிரதமை திதியில் ருதுவானால் துர்க் குணமுடையவள். அதிக பாவங்கள்செய்து, தன்னலம் கொண்டு வாழ்வாள்.

துவிதியை திதியானால் தனம், தானியம், சம்பத்துடன் வாழ்வாள்.

திரிதியை திதியானால் விசேஷமான பிள்ளைகளைப் பெற்று பெருமையுடன் வாழ்வாள்.

சதுர்த்தி திதியானால், பலரை இச்சித்து வாழ்வாள்.

பஞ்சமி- பாக்கியவதி. குடும்ப பொறுப்பு, கணவன், பிள்ளைகளுடன் மகிழ்ச்சியுடன் வாழ்வாள். சப்தமி திதியில் ருதுவானால் கணவனுக்குப் பிரியமானவள்.

சஷ்டி, அஷ்டமி, நவமி ஆகிய திதி நாட்களில் ருதுவானால் பலவித துன்பம், துயரத்துடன், கணவன் மற்றும் அவள் குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடு கொண்டு வறுமையில் கலங்கி வாழ்வாள்.

தசமி, திரயோதசி திதியானால் பொன், பொருள், பூமிகளைப்பெற்று, புத்திர பாக்கியத்துடன் அனைவரும் மெச்சும்படியாக சுகத்துடன் வாழ்வாள்.

துவாதசி, பௌர்ணமி, அமாவாசை திதியானால், பூர்வீக சொத்துகளாக இருந்த பூமி, வீடு, பொன், பொருட்களை இழந்து, பிறர் பழித்துப் பேசும் நிலையில் வறுமையில், துயரத்துடன் வாழ்வாள்.

வளர்பிறை, தேய்பிறை என வரும் எந்த திதியில் பெண் ருதுவானாலும் இந்தப் பலன்கள் நடைபெறும்.

ருது லக்னம், கிரகநிலை

பெண்கள் ருது, ஜாதகத்தில் அமைந்துள்ள லக்னம், கிரக நிலைகள் தரும் பலன்களை அறிந்துகொள்வோம்.

பெண்கள் ருது லக்னம் மிதுனமாகி, அதில் புதன் ஆட்சியாகவும், கடக ராசியில் சந்திரன் ஆட்சியாகவும், தனுசு ராசியில் குரு ஆட்சி யாகவும் அமர்ந்திருந்தால், அந்தப் பெண் தனது அறிவு, உழைப்பு, சாமர்த்தியத்தினால் பொன், பொருள், நிலம் சேர்த்து, பெரிய செல்வந்தனான நல்ல கணவனை மணந்து பெருமையுடன் சுகமாக வாழ்வாள்.

ஒரு பெண், எந்த லக்னத்தில் ருதுவாகி இருந்தாலும், அந்த ஜென்ம லக்னத்தில் குரு இருக்க, லக்னத்திற்கு 4-ஆவது ராசியில் சுக்கிர னும், 6-ஆவது ராசியில் சனியும், 7-ஆவது ராசியில் சந்திரனும் இருந்தால், முகப் பொலிவு, அழகான தோற்றத்துடன், நல்ல குணம் கொண்டு அனைவரும் புகழ்ந்து பேசும்படியானவளாக இருப்பாள். மேலும் அறிவு, ஆளுமைத் திறன், அழகு, சாமர்த்தியமுடைய செல்வந்தனை மணம்புரிந்து சகல சம்பத்துடன் வாழ்வாள்.

கன்னி லக்னமாகி, லக்னத்திலேயே சூரியனும் புதனும் இருந்து, 9-ஆமிடமான ரிஷபத்தில் சந்திரன் உச்சம் பெற்றிருக்க, 6-ஆமிடமான கும்பத்தில் சனி, ராகு இருவரு மிருந்தால் அவள் சுயஅறிவு, புத்தக்கூர்மையால் உழைத்து, வெகு பொருள், சொத்துகள், ஆபரணங்களை சம்பாதித்து, தன் உறவுகள் ஆச்சரியப்படும்படி ஒரு ராணியைப்போல் பெருமையுடன் வாழ்வாள்.

ருது ஜாதக லக்னம் கும்பமாக இருந்து, ரிஷபத்தில் சந்திரன் உச்ச பலத்துடனும், மேஷத்தில் சூரியன் உச்சம் பெற்றும், குரு மீனத் தில் உச்சமாகவும் இருந்தால், அந்த ஜாதகி மிகப்பெரும் செல்வம், உடையவளாக, தமது உறவுகளையும்விட குபேர யோகத்துடன், அனைவரும் மெச்சும்படியாக வாழ்வாள்.

ருது லக்னம் மேஷமாகி, அதில் செவ்வாய் ஆட்சியாகவும், சிம்மத்தில் சூரியன் ஆட்சி பெற்றும், ரிஷபத்தில் சுக்கிரன் ஆட்சி பலம் பெற்றும் இருந்தால், இந்த ஜாதகிக்குப் பிறக் கும் மகன், இந்த தாயின் யோகத்தால் மிகவும் திறமையுடன் செயல்பட்டு, ஏராளமான பொன், பொருள், வீடு, நிலம் சம்பாதித்து செல்வந்தனாக இருப்பான். இந்தத் தாய், மகன் தேடிய செல்வத்தால் மற்றவர்கள் புகழும்படி வாழ்வாள். இவள் பெற்ற மகனுக்கு இவள் ருது ஜாதகப் பலனால் யோகமும், பெற்ற மகனால் இவளுக்கு நன்மையும் உண்டாகும்.

தனுசு ருது லக்னமாக இருந்து, அதற்கு 4-ஆவது ராசியான மீனத்தில் சூரியன், சந்திரன், புதன், குரு இருந்தால், அந்த ஜாதகிக்குப் பிறக்கும் பிள்ளைகள் மகா சாமர்த்தியசாலிகளாக, கல்வியில் தேர்ச்சி பெற்று உயர்ந்த உத்தியோகத்திலும், வியாபாரத்திலும் வெகு பணம், சொத்துகளை சம்பாதித்து, தாயை தெய்வமாக மதித்து ஆயுள்வரை சந்தோஷமாக வாழச் செய்வர். பிறர் புகழும்படி இவள்பெற்ற பிள்ளைகள் வாழ்வார்கள். இந்த பெண் ஏழ்மை. வறுமையுடன் வாழ்ந்திருந்தாலும், பிள்ளைகள் பிறந்தபின்பு அவர்களால் தனவதியாவாள்.

ருது ஜாதக லக்னம் கடகமாகி, அதில் குரு உச்சம் பெற்றும், அதற்கு 5-ஆவது ராசி விருச்சிகத்தில் சந்திரனும் இருந்தால், அவளுக்குப் பிறக்கும் பெண் குழந்தைகள் அழகான தோற்றத்துடன், ஐஸ்வரிய அதிர்ஷ்ட முடையவர்களாக இருப்பார்கள். இவள் தன் மகள்களை பெரும் செல்வந்தர்களுக்குத் திருமணம் செய்து வைப்பாள். இவள் பெற்ற மகள்கள் வெகு மேன்மையாய் வாழ்ந்திருப்பார்கள்.

ருது லக்னம் ரிஷபமாகி, அதிலேயே சுக்கிரன் ஆட்சி பெற்றிருக்க. அதற்கு 5-ஆமிடமான கன்னியில் சந்திரனும் புதனுமிருந்தால். அவள் அதிர்ஷ்டமான மகள்களைப் பெற்று. பெரிய செல்வந்தர்களுக்கு மணம் முடித்து வைப்பாள். இவள் பெற்ற பெண்கள் கணவன்வீட்டார், உறவுகளின் அன்பு, ஆதரவைப் பெற்று, இல்லையென்ற குறையில்லாமல் வளத்துடன் வாழ்வார்கள்.

பெண்ணின் ருது லக்னம் தனுசு ராசியாகி, அதற்கு 2-ஆமிடமான மகரத்தில் செவ்வாய் உச்சம் பெற்றிருந்தால் அந்த ஜாதகிக்கு பிறக் கும் மகன் பிறர் புகழும்படி பெருமையாக வாழ்வான். இவள் பெற்ற மகனால், அவள் குடும்பமே கீர்த்தி பெரும்.

பெண்கள் ருது ஜாதகத்தில், ஜென்ம லக்னத்திற்கு 7-ஆவது ராசியில் சனி, சூரியன், ராகு இருந்தால், கெட்ட குணமுடையவனை மணந்து, உணவு, உடை, இருப்பிடத்திற்குப் பஞ்சமாகி, பலவிதமான துயரத்துடன் வாழ்வாள்.

ருது ஜாதக லக்னம் மேஷமாகி, 7-ஆவது ராசியில் சூரியன், சந்திரன், சுக்கிரன் இருந்து, 8-ஆவது ராசியில் சனி இருந்தால் இவள் திருமணமாகாமல், பலரை நம்பி வாழ்ந்து அவர்களால் ஏமாற்றப்பட்டு, கலங்கித் தவித்து வறுமையுடன் வாழ்வாள்.

பெண் ருது ஜாதக லக்னம், 5, 9-ஆவது ராசிகளில் சனி, ராகு, கேது இருந்தால், அவள் புத்திரர்கள் இல்லாதவளாக இருப் பாள்.

ருது ஜாதக லக்னத்தில் அல்லது அதற்கு 5, 9-ஆவது ராசிகளில் சனி, ராகு, கேது இருந்தால், தனது முற்பிறவியில் தன் விருப்பப் படி வாழ்ந்து, கர்ப்பத்தைக் கலைத்து தன் சிசுவைக் கொன்ற பாவத்தினால், அவள் குடும்பத்தினர் இவள்மீது வெறுப்புக்கொண்டு மனம் வெறுத்து விட்ட சாபத்தால், இந்தப் பிறவியில் இவள் புத்திர பாக்கியமில்லாமலும், கர்ப்பம் கூடினாலும் கருச்சிதைவு ஏற்படும் படியான நிலையில் பரிதவித்து அலைவாள்.

செல்: 93847 66742

bala160824
Advertisment
Show comments
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe