ரு இளம் தம்பதியினர், நாடியில் பலன்கேட்க வந்திருந்தனர். அவர்களை அமரவைத்து, "என்ன காரியமாகப் பலன்கேட்க வந்தீர்கள்' என்றேன்.

"எங்கள் இருவருக்கும், திருமணம் முடிந்து, ஐந்து வருடமாகின்றது. குழந்தை இல்லை. எங்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டா? இல்லையா? தடையாவதற்கு காரணம் என்ன என்பதை அறிந்துகொள்ள வந்தோம்'' என்றார்.

ஐந்து வருடம் குழந்தை பிறக்கவில்லையென்று கூறுகின்றீர்கள். ஜோதிடர்களைப் பார்த்தீர்களா? மருத்துவர் களைப் பார்த்தீர்களா? அவர்கள் என்ன கூறினார்கள் என்றேன்.

பெரிய, பெரிய ஜோதிடர்கள், சிறிய ஜோதிடர்கள், கிளி ஜோசியம், குடுகுடுப்பைக் காரர்கள், சாமியாடி குறி சொல்பவர்கள், மடாதிபதிகள், மலையாள பிரசன்ன ஜோதிட மும் என எல்லாரிடமும் பலன் பார்த்து அவர்கள் கூறிய கோவில்களுக்குச் சென்று பரிகார பூஜைகள், யாகங்கள் என அனைத் தையும் செய்தோம். ஆனால் பலன்தான் கிடைக்கவில்லை. மருத்துவர்கள், எங்கள் இருவருக்கும் உடலில் எந்தக் குறையும் இல்லை யென்று கூறிவிட்டார்கள். பணம்தான் தண்ணீராய் செலவானது. ஆனால் குழந்தை பாக்கியம்தான் கிடைக்கவில்லையென்று கண்ணீர் விட்டபடியே கூறினாள்.

ஜீவநாடி ஓலையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன். அகத்தியர் எழுத்துவடிவில் தோன்றி பலன்கூறத் தொடங்கினார்.

Advertisment

ss

இவர்கள் இருவரும் குழந்தை பாக்கியம் வேண்டி, இந்தியா முழுவதும் கோவில், கோவிலாகச் சென்று வந்ததாகக் கூறினார் கள். ஒன்றுடன் ஒன்று சேர்ந்தால், இரண்டு என்பது மனிதன் கணக்கு.

ஆண்- பெண் இரண்டு பேரும் இணைந்தால், மூன்றாவது ஒரு குழந்தை உண்டாகும். ஒரு செடியின் விதை, மண்ணில் விழுந்தால், மண்ணும் விதையும் ஒன்று சேர்ந்தால், மூன்றாவதாக இன்னொரு செடி முளைக்கும். இதுதான் இயற்கையின் விதி கணக்கு என்று மனிதர்கள் தெரிந்து, புரிந்து கொள்ளவேண்டும். கடவுளை வணங்கினால், பூஜைசெய்து, விரதமிருந்து, மந்திரம் கூறினால் குழந்தை பிறக்காது. கடவுளால் ஒரு செடியைக்கூட பூமியில் முளைக்க வைக்க முடியாது.

Advertisment

இவர்களுக்கு குழந்தை பிறக்காததற்கு காரணம், இவன் வீட்டிலேதான் உள்ளது. இவன் வம்சத்தில் இவன் முன்னோர் செய்த பாவமும், அதனால் உண்டான சாபமும்தான் காரணம். அந்த பாவ, சாபத்தைக் கூறுகின்றேன் அறிந்துகொள்ளட்டும்.

இவன் பாட்டனுடன், பிறந்த தம்பி ஒருவன், அதாவது இவனது, சிறிய பாட்டன். அவன் வாலிப வயதில், ஒரு பெண்ணுடன் பழகினான். இவர்களின் உறவால், அந்தப் பெண், கர்ப்பவதியானால். இவன் குடும்பத்தினர், அந்தப் பெண்ணை, தங்கள் மகனுக்குத் திருமணம் செய்துவைக்க மறுத்துவிட்டார்கள். இந்த பிரச்சினை ஊர்ப் பஞ்சாயத்திற்குச் சென்று, ஊரார் சேர்ந்து, அந்தப் பெண்ணை இவன் சின்னப் பாட்டனுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டார்கள்.

அந்தப் பெண்ணிற்கு ஒரு குழந்தை பிறந்தது.

இவன் குடும்பத்தார். அந்தப் பெண்ணை வீட்டைவிட்டு வெளியேற்ற ஒரு தந்திரம் செய்தார்கள். அதே சமயத்தில், இவன் சின்னப் பாட்டன் ஒரு சிறிய விபத்தில் சிக்கிவிட்டான். இதுதான் சரியான சமயம் என்று நினைத்த குடும்பத்தார், அவர்கள் ஊரில் வசித்த ஒரு ஜோதிடனிடம் சென்று, இந்தப் பெண்ணின் ஜாதகப்படி, கணவனுக்கு கண்டம், பிறந்த குழந்தையின் ஜாதகப்படி தந்தைக்கு ஆயுள் குறைவு என்று கூறும்படி, ஜோதிடனிடம் பணம் கொடுத்து, சொல்லும்படி கூறிவிட்டார்கள். இவர்கள் ஜோதிடம் பார்க்கச் சென்றபோது, இவர்கள் கூறியபடியே அந்த ஜோதிடனும் கூறிவிட்டு, இதற்கு பரிகாரம், இவன் மனைவி, குழந்தையுடன் சேர்ந்து வசிக்கக்கூடாது. அப்படி வாழ்ந்தால் இறந்துவிடுவான். பிரிந்துதான் வாழவேண்டும் என்று கூறிவிட்டான். இதையே காரணம் காட்டி, அந்த தாயையும், குழந்தையையும், அவள் பிறந்த வீட்டிற்கு அனுப்பிவிட்டார்கள்.

Advertisment

இவன் சின்னப் பாட்டன், மனைவியையும், மகனையும் பார்ப்பதை தடுத்துவிட்டார்கள். சிறிது காலம் சென்றபின்பு, அவனுக்கு வேறொரு பெண்ணை திருமணம் செய்துவைத்தார்கள். ஆனால் அந்த இரண்டாவது மனைவிக்கு குழந்தையே பிறக்கவில்லை. அவன் காலமும் முடிந்தது.

இவன் குடும்பத்தினரால் விரட்டப்பட்ட தாயும், குழந்தையும், தாங்கள் உழைத்து வாழ்ந்தார்கள். தன் மகன் அனாதையாக்கப்பட்டதை நினைத்து, நினைத்து வருந்தி, அந்த தாய்விட்ட சாபமும், பெற்ற மகனுக்கு செய்த பாவமும்தான் இப்பிறவியில், இவனுக்கு குழந்தை பாக்கியத்தை தடுத்துவருகின்றது என்றார் அகத்தியர்.

என் வம்சத்தில், முன்னோர்கள் என்ன தவறு செய்தார்கள் என்று எனக்குத் தெரியாது. அவர்கள் செய்த தவறுகள் என்னை எப்படி பாதிக்கும்? என்றார்.

மகாவிஷ்ணுவின் ஆத்மா, இராமர், கிருஷ்ணர், வேங்கடாசலபதி என பல அவதாரங்கள் எடுத்து மனித னாகப் பிறந்தார் என்று கூறுவதை நம்புகின்றீர்கள்.

ஆனால் மனிதனின் ஆத்மா, அடுத்தடுத்த பிறவிகள் எடுத்து பிறந்தான் என்று கூறினால் ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் என்றேன்.

ஓலையை மறுபடியும், பிரித்துப் படிக்கத் தொடங்கி னேன். இவன் வம்ச முன்னோர்களில் ஒருவன் விந்து, இரத்தம்தான், வம்சத்தில் வாரிசுகளை உருவாகும். அந்த சின்னப் பாட்டனின் ஆத்மாதான், இந்த பிறவியில், இவன், அவன் செய்த பாவங்களுக்கு தண்டனையை இவன் அடையவேண்டும் என்பது விதி. அந்த மகனுக்கு கொடுக்கவேண்டிய பாகச் சொத்தைக்கூட கொடுக்கவில்லை. இவனும், இவன் தந்தையும்தான் அனுபவித்து வருகின்றார்கள். இவர்கள் அனுபவிக்கும் சொத்து சாப சொத்து. முன்னோர்கள் தேடிய சொத்துகளை அனுபவிப்பவன்தான், அவர்கள் செய்த பாவத்தையும் அனுபவிக்க வேண்டும். குழந்தை பாக்கியம் தடையாவதற்கு இதுதான் காரணம். இவனுக்கு இன்னும் நம்பிக்கை வரவில்லை என்றால், இவன் தகப்பனிடம் சென்று, அனுமான் (அனுமந்தரால்) பெயர்கொண்ட ஒருவன் நமது குடும்பத்தில் இருந்தாரா? என்று கேட்கச் சொல். அவன் சொல்லுவான். அகத்தியன் கூறியது உண்மைதான் என்று கூறுவான்.

இந்த வம்ச சாபம், பாவம், தீர்த்து, எங்களுக்கு குழந்தைப் பாக்கியம் அடைய அகத்தியர்தான் வழி கூறவேண்டும் என்றாள் அந்தப் பெண்.

இவன் சின்னப் பாட்டனுக்குப் பிறந்த மகன், நீங்கள் வசிக்கும் ஊருக்கு அருகில்தான் வாழ்ந்துவருகின்றான்.

இவனும், இவன் தந்தையும், அவர்களைப் போய்ப் பார்த்து, நாள் சொல்வதைச் செய்யச் சொல். பாவம்- சாபம் நிவர்த்தியாகும். இவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் என்று கூறி, நிவர்த்தி செய்யும் வழிமுறைகளைக் கூறிவிட்டு ஓலையில் இருந்து மறைந்தார்.

கணவன்- மனைவி இருவரும், அகத்தியர் கூறியபடி செய்கின்றோம் என்று கூறிவிட்டு என்னிடம் விடைபெற்றுச் சென்றனர்.

செல்: 99441 13267