Advertisment

பெண் சாபம்! மேல்மருவத்தூர் எஸ். கலைவாணி

/idhalgal/balajothidam/woman-curse-melmaruvathur-s-kalaivani

ஜாதகம் என்பது பலவிதமான யோகங்களையும், தோஷங்களையும், இணைத்து அதன்வழி பெறப்படும் விளைவினை, நம் வாழ்வியல் பலனாக அனுபவிப்பதே ஆகும்.

Advertisment

பல்வேறு யோகங்கள் பலன் அளித்து சுபிட்சத்தை தருவதுபோல, பலவிதமான தோஷங்களும், ஆறாத காயங்களையும், மாறாத ரணங்களையும் தந்து செல்கின்றது.

பிரசன்னத்திலும் சரி, ஜாதகத்திலும் சரி, கணக்கிடப்படும் தோஷங்களில் 18 தோஷங்கள் மிகவும் சக்திவாய்ந்ததாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றது. அவற்றுள் பெண் தோஷமும் குறிப்பிடத்தக்கது.

சக உயிரான பெண்ணை உடலியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் வன்முறைக்கு உட்படுத்துவதோடு, ஏமாற்றும் சூழலில் பயணித்த, ஒருவரது ஜாதகத்திலும், அவர்களின் வம்சாவளியி னரின் ஜாதகத்திலும், இந்த தோஷம் பலமாக காணப்படுகின்றது.

Advertisment

ww

மேலும் அவர்களின் வீட்டில் பெண் வாரிசுகள் சொல்லில் அடங்காத பல இன்னல்களையும், துயரங்களையும், அனுபவிப்பதை கண்கூடாகக் காண முடிகின்றது.

காற்று நுழைய முடியாத இடத்திலும் கர்மவினை நுழைந்துவிடும், கர்மவினை எள்ளளவும் சிதறவிடாமல் இந்தப் பெண் சாபம் வாழ்வ

ஜாதகம் என்பது பலவிதமான யோகங்களையும், தோஷங்களையும், இணைத்து அதன்வழி பெறப்படும் விளைவினை, நம் வாழ்வியல் பலனாக அனுபவிப்பதே ஆகும்.

Advertisment

பல்வேறு யோகங்கள் பலன் அளித்து சுபிட்சத்தை தருவதுபோல, பலவிதமான தோஷங்களும், ஆறாத காயங்களையும், மாறாத ரணங்களையும் தந்து செல்கின்றது.

பிரசன்னத்திலும் சரி, ஜாதகத்திலும் சரி, கணக்கிடப்படும் தோஷங்களில் 18 தோஷங்கள் மிகவும் சக்திவாய்ந்ததாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றது. அவற்றுள் பெண் தோஷமும் குறிப்பிடத்தக்கது.

சக உயிரான பெண்ணை உடலியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் வன்முறைக்கு உட்படுத்துவதோடு, ஏமாற்றும் சூழலில் பயணித்த, ஒருவரது ஜாதகத்திலும், அவர்களின் வம்சாவளியி னரின் ஜாதகத்திலும், இந்த தோஷம் பலமாக காணப்படுகின்றது.

Advertisment

ww

மேலும் அவர்களின் வீட்டில் பெண் வாரிசுகள் சொல்லில் அடங்காத பல இன்னல்களையும், துயரங்களையும், அனுபவிப்பதை கண்கூடாகக் காண முடிகின்றது.

காற்று நுழைய முடியாத இடத்திலும் கர்மவினை நுழைந்துவிடும், கர்மவினை எள்ளளவும் சிதறவிடாமல் இந்தப் பெண் சாபம் வாழ்வின் வளங்களையும், இன்னும் பல யோக தசையினால் கிடைக்கப்பெறும் வாய்ப்புகளையும், அழித்து நெருடலின் வசம் பயணிக்க வைக்கும்.

பெண் சாபமுள்ள ஜாதகரின் குடும்ப நிலையானது தசா புக்திக்கு ஏற்றவாறு யோகப் பலனை அளிப்பதில்லை, மாறாக பகை அல்லது பாதக தசையில் அவற்றின் துர்பலனை அதிகமாக அளித்துவிடுகின்றது.

இவர்களின் குடும்பங்களில் காலாகாலத்தில் நிகழக்கூடிய சுப நிகழ்வுகளான திருமணம், வேலை, குழந்தை பேரு, வீடு, வாகனம் அமைதல், நிம்மதியான இருப்பு, கல்வி, வியாபாரம், உறவினர் இடையிலான ஒற்றுமை போன்ற அனைத்திலும் கைவைத்து விடுகின்றது.

அதோடு மட்டுமல்லாமல் அந்த வம்சாவளியில் பெண்களின் நிலை துயரத்துக்கு உட்பட்டதாக அமைந்து, இளம் விதவைகள், கணவனுடன் சரியான குடும்ப வாழ்வில் ஈடுபடமுடியாத சூழ்நிலையில் இருக்கும் பெண்கள், அந்த குடும்பத்திற்கு திருமணம் செய்துவந்த பெண்களின் நிலை போன்ற எல்லாவற்றிலும் பெண்களின் நிலையில் பெரும் இடர்ப்பாடினை உருவாக்கி விடுகின்றது.

கிரகங்களில் சந்திரன் வயது முதிர்ந்த பெண்ணாகவும், புதன் இளம் வயது பெண்ணாகவும், சுக்கிரன் மத்திம வயதுப் பெண்ணையும் குறிக்கும்.

இந்த கிரகங்களுடன் தோஷத்தையும், மாந்திரீகத்தையும், மாரகத்தையும், சுட்டிக் காட்டும் மாந்தியின் தொடர்பானது ஜாதகத்திலும், பிரசன்னத் திலும் பெண் சாபம் இருப்பதை சுட்டிக்காட்டும்.

மேலும் சனி, சந்திரன், தொடர்புலி அதாவது சனியின் நட்சத்திரத்தில் சந்திரனும், சந்திரனின் நட்சத்திரத்தில் சனியும், நிற்கும்பொழுது இதுவும் பெண் தோஷமாக எடுத்துக் கொள்ளப்படுகின்றது. ஏழில் ராகு விதவையின் சாபத்தை சுட்டிக்காட்டும்.

அதோடு மட்டுமல்லாமல் சுக்கிரன்- கேது, சந்திரன்- கேது போன்றவையும் இந்த சூழ்நிலைக்கு வழிவகுக்கும்.

நம் வழக்கத்தில் இன்றும் பூவாடைக்காரியை வழிபடும் வழக்கம் உண்டு. அதாவது ஒரு குடும்பத்தில் பிறந்த பெண் பூப்பெய்வதற்குமுன்பே இறந்திருந்தால், அந்த ஆன்மாவை தேவதையாக நினைத்து காதோலை, கருகமணி, புதுத்துணி போன்றவற்றை வைத்து வழிபடும் வழக்கம் நிறைய குடும்பங்களில் உண்டு.

இந்த சூழ்நிலையே அந்த ஜாதகத்தில் சுக்கிரன், புதன், சந்திரன், இவர்களுடன் மாந்தி தொடர்பிருந்தால் மட்டுமே இந்த வழிபாட்டினை மேற்கொள்ளமுடியும்.

இந்தப் பிரார்த்தனையும் வழிபாடுமே சில குடும்பத்தை உயர்த்தியுள் ளதைக் காணமுடிகின்றது. மேலும் அப்படி வழிபாட்டை நிறுத்தியவர்கள் சங்கடப்படுவதையும் காணமுடிகின்றது.

இந்தப் பெண் தோஷத்தின் வீரியம் அறிந்திடவே நம் மக்களிடையே பூவாடைக்காரி வழிபாட்டை நம் முன்னோர்கள் நிலை நிறுத்தி வைத்துள்ளார்கள்.

மேலும் பிரசன்னத்தில் மகா பாதகாதிபதியுடன் மாந்தி, சுக்கிரன் மற்றும் மகா பாதகாதிபதியுடன் புதன், மாந்தி, மேலும் பாதகாதிபதியுடன் சந்திரன், மாந்தி இணைவுகள் இந்த தோஷத்தை ஆணித்தரமாக நூறு சதவிகிதம் சுட்டிக்காட்டும்.

அதோடு மட்டுமல்லாமல் இந்த தோஷமுள்ள ஜாதகரின் வம்சாவளியில் உடல் உறுப்புகளை இழந்த நபர்கள் இருப்பார்கள்.

மேலும் புதன் பாதித்திருந்தால் நரம்பு மற்றும் தோல் வியாதி இவர்களை ஆக்கிரமித்திருக்கும். சுக்கிரன் சம்பந்தப்படும்போது நீரிழிவு, சிறுநீரக பாதிப்பு, கர்ப்பப்பை பாதிப்பு போன்ற நோய்கள் இவர்களை பதம் பார்க்கும்.

சந்திரன் சம்பந்தப்படும்பொழுது மனரீதியான பல இன்னல்களைத் தந்து பிரச்சினைகளின் வசம் பயணிக்கச் செய்யும்.

இந்த தோஷங்களிலிருந்து விடுபடுவதற்கு சந்திரன் பாதித்தவர்கள் தாயின் வயதுள்ள பெண்மணிக்கு புத்தாடை வாங்கிதருவதன் மூலமாகவும், புதன் பாதித்தவர்கள் பூப்பெய்தாத குழந்தைகளுக்கு உணவு மற்றும் புது துணி வாங்கித் தருவதன் மூலமாகவும். சுக்கிரன் பாதித்தவர்கள் கன்னிப் பெண்களுக்கு புத்தாடை மற்றும் மஞ்சள் கயிறு வாங்கித் தருவதன்மூலமாகவும் இந்த தோஷத்திலிருந்து சற்று காத்துக்கொள்ளலாம்.

மேலும் வளர்பிறை பஞ்சமியன்று பூஜையறை அல்லாத வேறிடத்தில் இரவு 9 மணிக்குமேல் வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், கண்ணாடி வளையல், அரைத்த மருதாணி, ஏதேனும் ஒரு இனிப்பு பலாகராம், மஞ்சள், குங்குமம், நெற்றிக்கு இட்டுக்கொள்ளும், சாந்துப்பொட்டு, காதோலை கருகமணி போன்றவற்றை வைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டு, ஒரு பெரிய பாத்திரத்தை படையல் போட்ட பொருளின்மீது கவிழ்த்து வைத்து அதன்மேல் ஒரு பாரத்தை வைக்கவும். மறுநாள் காலையில் இந்த படையலை எடுத்து குளம் அல்லது ஏரியில், சேர்த்துவிட வேண்டும். இதன்மூலம் பெண் தோஷம் நீங்கி வாழ்வில் வளம் பெறுவதைக் கண்கூடாக பல ஜாதகத்தில் காணமுடிகின்றது.

செல்: 80563 79988

bala031123
இதையும் படியுங்கள்
Subscribe