Advertisment

புத்திமானே பலவான்! -அஸ்ட்ரோ லட்சுமிதேவி

/idhalgal/balajothidam/wise-strong-astro-lakshmi-devi

வகிரகங்களிலேயே புதன் சிறிய கிரகம் எனவே சிறுவர்களை குறிக்கும் கிரகமாக புதன் இருக்கிறது. சூரியனுக்கு அடுத்துள்ள கிரகமாக இருக்கக் கூடியது என்பதால் சூரிய ஒளி நேரடியாக படும் பெரும் கிரகம் புதன். அது போல் நம் உடலில் சூரிய ஒளி அதிகம் படக்கூடிய இடமாக இருக்கக்கூடியது தோல். எனவே தோலை குறிக்கக்கூடிய கிரகமாக புதன் இருக்கிறது. சூரியனை விட்டு என்றும் விலகாமல் அதன் அருகிலேயே நட்பு பாராட்டி கொண்டிருக்கும் அதனால் தான் புதன் நட்பை குறிக்கிறது.

Advertisment

புதன் எப்பொழுதும் சூரியனுடன் இணைந்தே இருக்கும். எனவே இணைப்பைக் குறிக்கும் கிரகமாகவும் புதன் இருக்கிறது. இதன்படி மனிதர்கள் எங்கெல்லாம் இணைகிறார்களோ அல்லது கூடி இருக்கிறார்களோ அந்த இடங்கள் அனைத்தும் புதனுக்குரிய இடங்களாகும். அதனால் தான் இணைந்தே பயணம் செய்யக் கூடியவர்களாக காதலர்கள் அல்லது நண்பர்கள் இருக்கும்

வகிரகங்களிலேயே புதன் சிறிய கிரகம் எனவே சிறுவர்களை குறிக்கும் கிரகமாக புதன் இருக்கிறது. சூரியனுக்கு அடுத்துள்ள கிரகமாக இருக்கக் கூடியது என்பதால் சூரிய ஒளி நேரடியாக படும் பெரும் கிரகம் புதன். அது போல் நம் உடலில் சூரிய ஒளி அதிகம் படக்கூடிய இடமாக இருக்கக்கூடியது தோல். எனவே தோலை குறிக்கக்கூடிய கிரகமாக புதன் இருக்கிறது. சூரியனை விட்டு என்றும் விலகாமல் அதன் அருகிலேயே நட்பு பாராட்டி கொண்டிருக்கும் அதனால் தான் புதன் நட்பை குறிக்கிறது.

Advertisment

புதன் எப்பொழுதும் சூரியனுடன் இணைந்தே இருக்கும். எனவே இணைப்பைக் குறிக்கும் கிரகமாகவும் புதன் இருக்கிறது. இதன்படி மனிதர்கள் எங்கெல்லாம் இணைகிறார்களோ அல்லது கூடி இருக்கிறார்களோ அந்த இடங்கள் அனைத்தும் புதனுக்குரிய இடங்களாகும். அதனால் தான் இணைந்தே பயணம் செய்யக் கூடியவர்களாக காதலர்கள் அல்லது நண்பர்கள் இருக்கும்பொழுது அவர் களையும் குறிக்கும் கிரகமாக புதன் இருக்கிறது. மேலும் மனிதர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளும்பொழுது இணைப்பு அடையாளமாக கைகுலுக்கிக் கொள்கிறார்கள் உடல் உறுப்புகளில் இவ்வாறு இணைந்து இருப்பவை விரல்களாகும். எனவே கைகள் மற்றும் கைவிரல்களை குறிப்பது புதனாகும். உடலில் தலைப்பகுதியையும் உடல் பகுதியையும் இணைப்பது கழுத்தாகும். எனவே கழுத்தைக் குறிப்பது புதனாகும்.

ba

புதன் தன்னுடைய சொந்த வீடான கன்னியில் 15-ஆவது பாகையில் உச்சமடைகின் றார். அதேபோல் குருவின் வீடான மீனத்தில் ரேவதியில் நீசமடைகிறார் ஆனால் இங்கு நீசம் என்பது தன்னுடைய சொந்த நட்சத்திரத்தில் நிகழும். மேலும் ரேவதி நான்காம் பாதத்தில் நீசமடையும் நிலையில் அங்கு வர்க்கோத்தமடையும்.

புதன் உச்சமடையும் நட்சத்திரம் ஹஸ்தம் இதன்அதிபதியாக வரக்கூடிய து. சந்திரன் புக்திக்கு காரகன் புதன். மனதில் தோன்றும் உணர்ச்சிகளையும் ஆசா பாசங்களையும் குறிப்பவர் சந்திரன். பொதுவாக புத்தி என்னும் அறிவு உணர்ச்சிகளோடு இணைந்து செயல்படுவதில்லை. உணர்ச்சிகளோடு இணைந்து அறிவு செயல்படுமானால் அதைவிட உயர்ந்த நிலை வேறு எதுவும் இல்லை. புதன் இந்த அஸ்த நட்சத்திரத்தில் உச்சம் அடைவதே சிறப்பு.

எந்த லக்னமாக இருந்தாலும் லக்னத்தில் இருக்கும் புதன் ஜாதகருக்கு தெளிவான சிந்தனையையும், கணிதத் திறன், இளமையான அமைப்பு போன்ற விஷயங்களைத் தரக்கூடிய நிலையில் இருப்பார். இரண்டாம், பத்தாம் நான்காம் இடம் தொடர்பு கொள்ளும் நிலையில் அறிவார்ந்த துறைகளில் ஜாதகர் ஜொலிக்க முடியும். எட்டாம் இடத்தில்கூட புதன் பெரும்பாலும் மறைவதில்லை. அமானுஷ்யம் சார்ந்த விஷயங்களை ஜாதகருக்கு அதிகம் வழங்கும். புதன் தரும் யோகங்களில் சிறப் பானது பத்ரயோகமாகும். சுக்கிரன் அணி லக்னங்களுக்கு பத்ர யோகம் மிக பெரும் யோகத்தை வழங்கக் கூடியதாக இருக்கும்.

புதன் தசை என்பது ஒரு ஜாதகருக்கு கடன் தரக்கூடிய அமைப்பிலேயே பொதுவான அமைப்பாக இருக்கும்.

புதன் திசை காலகட்டத்தில் ஒருவருக்கு கல்வி, புத்தகம், ஜோதிடம் கம்ப்யூட்டர், கணக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் இருக்கக்கூடிய அமைப்பைத் தரும். கடன் சார்ந்த அமைப்புகள் தோல் நோய் சம்பந்தப்பட்ட அமைப்புகள், வழக்குகள் சார்ந்த விஷயங்களையும் பொதுவான காரகப் பலனாகப் புதன் திசை தருகிறது.

விருச்சிக லக்னத்திற்கு, மேஷ லக்னத் திற்கு ஆகாத திசையாக புதன் சொல்லப் பட்டாலும்கூட அந்த லக்னத்திற்கும் சந்திரா அதியோக அமைப்பினாலோ அல்லது உபஜெய ஸ்தானங்களான மூன்று ஆறு, பத்து, பதினொன்றாம் இடத்தில் நட்பு நிலையில் இருக்கும்பொழுது புதன் நல்ல பலன்களை வழங்குவதை நடைமுறையில் காண்கிறோம்.

ஒரு மனிதனுக்கு எவ்வளவு மோசமான சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் அவனுடைய தெளிவான புத்தியே அவனைக் காப்பாற்றும்.

புத்திமானே பலவான் என்ற அமைப்பின்படி புதன் வலுப்பெறுவது ஒரு மனிதனுக்கு மிகமிக இன்றிமையாதது.

புதன் தோஷம் ஒருவருக்கு புத்தி குறைபாடு, சித்தபிரம்மை பிடித்தல், தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் ஏற்படுதல், தீராத கடன் சுமை, அதிக ஞாபக மறதி நோய் போன்ற விஷயங்களை தரக்கூடியது.

புதன் தோஷத்திலிருந்து காத்துக்கொள்ள பித்தளையால் செய்யப்பட்ட டாலர் அல்லது காப்பினை அணிந்து கொள்ளலாம் அடிக்கடி பெருமாள் கோவிலுக்குச் சென்று துளசி சாற்றி வழிபடலாம். பச்சை பருப்புப் பாயாசம் பிரசாதமாக விநியோகம் செய்யலாம். புதன்கிழமைகளில் பச்சைப்பயிறு தொடர்ச்சியாக சாப்பிட்டு வர புதனின் கடுமை படிப்படியாகக் குறையும்.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் சென்று வருவதும், திருவெண்காடு புதன் கோயிலுக்கு சென்று வருவதும் சிறந்த கோயில் பரிகாரமாகும். புதனை பலப்படுத்தி புத்தியுடன் வாழ்வோம்.

bala020224
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe