Advertisment

இல்லற வாழ்வில் நிம்மதி இருக்குமா? -முனைவர் முருகு பாலமுருகன்

/idhalgal/balajothidam/will-there-be-peace-married-life-munaivar-murugu-balamurugan

ன்றைய சூழ்நிலையில் ஆண் என்றாலும் சரி; பெண் என்றாலும் சரி- இருவருமே வேலைக்கு செல்லக்கூடிய நிலை இருக்கிறது. ஒருவர் எந்த செயலைச் செய்யவேண்டும் என்றாலும் அவருடைய சுற்றுச்சூழல் சாதகமாக இருந்தால்தான் சிறப்பாக செயல்படமுடியும். ஒருவருக்கு திருமண வாழ்க்கை என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஒரு குறிப்பிட்ட வயதுக்குப்பிறகு அமைதியான வாழ்க்கை அமைந்து வாழ்க்கைத் துணையும் அனுசரனையாக இருக்கக்கூடிய நபராக இருந்தால்தான் அந்த நபர் அனைத்துச் செயலிலும் உற்சாகத்தோடு செயல்பட முடியும். குடும்பத்தில் ஒற்றுமை இல்லாத நிலை ஏற்பட்டால் அவர்கள் மற்ற செயலில் நிம்மதியுடன் செயல்படமுடியாது. கடந்த 20 வருடத்துக்கு முன்பெல்லாம் ஆணும் சரி; பெண்ணும் சரி- இளம்வயதில் திருமணம் செய்தனர். ஆண்கள் 25 வயதுக்குள்ளும், பெண்கள் 22 வயதுக்குள்ளும் திருமணத்தை செய்தனர். இன்று ஆண்களுக்கு 30 வயது கடந்தும், நிறைய இடங்களில் திருமணம் நடக்காமல் இருக்கிறது. அதுபோல பெண்களுக்கு 26, 27 கடந்துகூட திருமணம் கைகூடாமல் இருக்கிறது.

Advertisment

ss

அடுத்து திருமணம் எதற்காக செய்கிறோம் என்பதனை இன்றைய சமுதாயத்தில் உள்ளவர்கள் சரியாகப் புரிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள். படிப்பு, மேற்படிப்பு, வேலை, வெளிநாடு வாய்ப்பு, சொத்து சுகங்கள் எப்பொழுது வேண்டுமென்றாலும் கிடைக்கும். ஆனால் ஆண்- பெண் இருவருக்

ன்றைய சூழ்நிலையில் ஆண் என்றாலும் சரி; பெண் என்றாலும் சரி- இருவருமே வேலைக்கு செல்லக்கூடிய நிலை இருக்கிறது. ஒருவர் எந்த செயலைச் செய்யவேண்டும் என்றாலும் அவருடைய சுற்றுச்சூழல் சாதகமாக இருந்தால்தான் சிறப்பாக செயல்படமுடியும். ஒருவருக்கு திருமண வாழ்க்கை என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஒரு குறிப்பிட்ட வயதுக்குப்பிறகு அமைதியான வாழ்க்கை அமைந்து வாழ்க்கைத் துணையும் அனுசரனையாக இருக்கக்கூடிய நபராக இருந்தால்தான் அந்த நபர் அனைத்துச் செயலிலும் உற்சாகத்தோடு செயல்பட முடியும். குடும்பத்தில் ஒற்றுமை இல்லாத நிலை ஏற்பட்டால் அவர்கள் மற்ற செயலில் நிம்மதியுடன் செயல்படமுடியாது. கடந்த 20 வருடத்துக்கு முன்பெல்லாம் ஆணும் சரி; பெண்ணும் சரி- இளம்வயதில் திருமணம் செய்தனர். ஆண்கள் 25 வயதுக்குள்ளும், பெண்கள் 22 வயதுக்குள்ளும் திருமணத்தை செய்தனர். இன்று ஆண்களுக்கு 30 வயது கடந்தும், நிறைய இடங்களில் திருமணம் நடக்காமல் இருக்கிறது. அதுபோல பெண்களுக்கு 26, 27 கடந்துகூட திருமணம் கைகூடாமல் இருக்கிறது.

Advertisment

ss

அடுத்து திருமணம் எதற்காக செய்கிறோம் என்பதனை இன்றைய சமுதாயத்தில் உள்ளவர்கள் சரியாகப் புரிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள். படிப்பு, மேற்படிப்பு, வேலை, வெளிநாடு வாய்ப்பு, சொத்து சுகங்கள் எப்பொழுது வேண்டுமென்றாலும் கிடைக்கும். ஆனால் ஆண்- பெண் இருவருக்கும் ஒரு குறிப்பிட்ட வயதில் திருமணம் நடைபெறவிட்டால்- குறிப்பாக காலங்கடந்து நடக்கின்றபொழுது அதில் நிறைய பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். இளம்வயதில் திருமணம் நடைபெற்று இளம்வயதிலேயே ஒரு வாரிசு உண்டாகிவிட்டால் எதிர்கால வாழ்விற்கு மிகவும் சிறப்பாக இருக்கும். அதுபோல இன்றைய சமுதாயத்தில் திருமணமான பெண் ஆண்கள்கூட திருமணத்துக்குபிறகு குழந்தை பாக்கியத்தை பற்றி கவலைப்படாமல் அவர்களுடைய பணி, வருமானம், சொத்துகள் பற்றிதான் கவலைப் படுகிறார்கள். குறிப்பாக இளம் வயதிலேயே ஒரு பெண்ணுக்கோ ஆணுக்கோ குழந்தை பெற்றுக் கொள்வது என்பது எளிதான காரியமாக இருக்கும். அதுவே காலதாமதமாகின்றபொழுது நிறைய பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். அதனை இன்றைய சமுதாயத்திலுள்ள இளம் ஆண்- பெண்கள் சரியாகப் புரிந்து கொள்ளவேண்டும்.

Advertisment

இன்றைய சூழ்நிலையில் குறிப்பிட்ட காலத்தில் திருமணம் நடைபெறக்கூடிய அமைப்பு, நடைபெற்ற திருமணம் மகிழ்ச்சிகரமாக இருப்பதற்கு கிரக அமைப்புகள் எப்படி இருக்கவேண்டுமென பார்க்கின்றபொழுது அதற்கும் சில சூட்சுமங்கள் இருக்கிறது. மகிழ்ச்சியான மண வாழ்க்கை உண்டாகுவதற்கு ஆண்- பெண் இருவருக்கும் லக்னத்திற்கு 7-ஆம் வீடு என்பது திருமண வாழ்க்கையைக் குறிக்கக்கூடிய ஸ்தானமாகும். 2-ஆம் வீடு என்பது குடும்ப ஒற்றுமையைக் குறிக்கக்கூடிய ஸ்தானமாகும். 2, 7-ல் சுப கிரகங்கள் இருந்தாலும், 2, 7-க்கு அதிபதிகள் சுப கிரக சேர்க்கை பெற்றிருந்தாலும் அவர்களது மணவாழ்க்கை என்பது மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

2, 7-ஆம் வீடுகள் மட்டுமில்லாமல் ஒரு ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல நட்சத்திரத்தில் அமையப்பெற்று, அதுபோல பெண் ஜாதகத்தில் பெண்களுக்கு களத்திரகாரர்கள் செவ்வாய் சுப நட்சத்திரத்தில் அமையப்பெற்றிருந்தால் மட்டுமே வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். 2, 7-க்கு அதிபதியும் ஆண்களுக்கு சுக்கிரனும், பெண்களுக்கு செவ்வாயும் குரு, புதன் சேர்க்கை பெற்றிருந்தாலும், ஆண்- பெண் ஜாதகத்தில் சுக்கிரன் செவ்வாய் சேர்க்கை பெற்றிருந்தாலும் இல்லற வாழ்க்கை காலகாலத்தில் கைகூடி மகிழ்ச்சிகரமாக இருக்கக்கூடிய அமைப்பு உண்டாகும். அதுபோல ஆண் ஜாதகத்தில் சுக்கிரனும், பெண் ஜாதகத்தில் செவ்வாயும் சுபகிரக நட்சத்திர சாரம் பெற்றிருக்கின்றபொழுது இல்லற வாழ்க்கை மிகச்சிறப் பாக இருக்கக்கூடிய அமைப்பானது உண்டாகும்.

2, 7-ல் பாவ கிரகங்கள் இல்லாமல் களத்திர காரகனும் சிறப்பாக இருக்கின்றபொழுது இல்லற வாழ்க்கை மிகச்செழிப்பாக இருக்கும். ஒரு ஆண்- பெண் ஜாதகத்தில் 2, 7-ல் சனி, ராகு- கேது போன்ற பாவகிரகங்கள் இருந்தாலும், ஆண்கள் ஜாதகத்தில் சுக்கிரன்- கேது சேர்க்கை பெற்றோ, கேது நட்சத்திரத்தில் அமையப்பெற்றோ இருந்தாலும், அதுபோல பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய்- கேது சேர்க்கை பெற்றோ, கேது நட்சத்திரத்தில் இருந்தாலும் இல்லற வாழ்வில் ஒற்றுமைக் குறைவு, நிம்மதிக் குறைவுகள் உண்டாகிறது. 2, 7-ல் சனி ராகு- கேது போன்ற கிரகங்கள் அமையப்பெற்றிருந்தால் எந்த ஒரு ஆண்- பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றபிறகு வரக்கூடிய முதல் பத்து வருட காலங்கள் மிகமிக ஒரு முக்கியமான காலமாகும். அந்த காலத்தில் 2, 7-ல் அமையப்பெற்ற பாவ கிரகங்களின் தசை புக்தி நடைபெற்றால் அவர்களது வாழ்க்கையானது நிம்மதியற்றதாகவும், கணவன்- மனைவியிடையே ஒற்றுமைக் குறைவு ஏற்படக்கூடிய ஒரு சூழ்நிலையும் உண்டாகும். என்னுடைய அனுபவத்தில் பார்க்கின்றபொழுது ஒரு ஆண் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு ஏழாம் அதிபதியும் களத்திரகாரகன் சுக்கிரனும் நேர்கதியில் இருந்தால் நல்லபலன் உண்டாகிறது. 7-ஆம் அதிபதி வக்ரம்பெற்றோ, சுக்கிரன் வக்ரம்பெற்றோ இருக்கின்றபொழுது திருமண வாழ்வில் சில நெருடல்கள், நிம்மதியற்ற நிலை உண்டாகிறது. அதுபோல பெண்கள் ஜாதகத்தில் 2, 7-க்கு அதிபதி வக்ரகதியில் இருந்தாலும், செவ்வாய் வக்ரகதியில் இருந்தாலும் திருமண வாழ்வில் தேவையற்ற நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடுகிறது.

ஒரு ஆண் ஜாதகத்தில் 7-ஆம் அதிபதியோ, சுக்கிரனோ வக்ரம் பெற்றிருந்தால் அந்த ஆணுக்கு திருமணம் செய்கின்றபொழுது வரக்கூடிய வரன் ஜாதகத்தில் 7-ஆம் அதிபதியோ, செவ்வாயோ வக்ரம் பெற்றிருந்தால் ஓரளவுக்கு ஒற்றுமை இருக்கிறது.

அப்படி இல்லாதபட்சத்தில் தேவையற்ற பிரச்சினைகள், தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகிறது.

அதுபோல ஒரு ஆண் ஜாதகத்தில் 7-ஆம் அதிபதி அல்லது சுக்கிரன், கேது நட்சத்திரத்தில் அமையப்பெற்று இருந்தால் வரக்கூடிய வரன் ஜாதகத் தில் ஏழாமதிபதியோ, செவ்வாயோ கேதுசாரம் பெற்றிருந்தால் ஓரளவுக்கு ஒற்றுமை நன்றாக இருக்கிறது.

அப்படி இல்லையென்றால் கேது நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணாக இருந்தாலும் ஓரளவுக்கு நன்றாக இருக்கிறது. அப்படி இல்லாதபட்சத்தில் நிறைய பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடுகிறது.

திருமணமான கணவன்- மனைவி ஜாதகங்களில் திருமணத்துக்குப் பிறகு வாரிசு யோகம் என்பது மிகமிக முக்கியமான ஒன்றாகும். ஆண்- பெண் இருவருக்கும் 5-ஆம் வீட்டில் நல்ல கிரகங்கள் அமையப்பெற்று, குரு நல்ல கிரக சேர்க்கை பெற்றிருந்தால் திருமணத்திற்குபிறகு ஒரு குறிப்பிட்ட காலத்தில் குழந்தை பாக்கியம் ஏற்படக்கூடிய யோகமானது உண்டாகிறது. அதுவே 5-ல் கேது அமையப்பெற்றாலும், குரு, சனி, கேது போன்ற கிரக சேர்க்கை பெற்றிருந் தாலும், குரு வக்ரகதியில் இருந்தாலும் குழந்தை பாக்கியத்தில் நிறைய இடையூறுகள் ஏற்படுகிறது. கணவன்- மனைவி ஜாதகத்தில் குரு 5-ஆம் அதிபதி வக்ரம் பெற்றிருந்தாலும், ஆணின் ஜாதகத்தில் 3-ஆம் அதிபதி வக்ரம் பெற்றிருந்தாலும் குழந்தை பாக்கியம் ஏற்படுவதில் தேவையற்ற இடையூறுகள் ஏற்படுகிறது.

bala170125
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe