பிருகு முனிவர், வசிஷ்டர், விஸ்வகர்மா, விசாலாக்ஷன், அத்திரி, அநிருத்தன், பிரம்மா, வாசுதேவர், பிரஹஸ்பதி, சுக்கிரன், நந்தீஸ்வரர், நாரதர், நக்னஜித், மயன், சௌனகர், பர்கர், புரந்தரன், குமாரசுவாமி போன்ற முனிவர்கள் சிற்ப சாஸ்திரம் பற்றி உபதேசித்தவர்கள். இவர்கள் ஆலய நிர்மாணங்களுக்கும், அரசர்களின் மாளிகைகளுக்கும் முக்கியத்துவம் அளித்து விதிகளை வகுத்தனர். சாதாரண மானவர்களின் வசிப்பிடங் களுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. ஆனால் தற்போது கூரைவீடுகளுக்கும் வாஸ்து பார்க்கும் வழக்கம் வளர்ந்துவிட்டது.
பெரும்பாலான தெற்குப் பார்த்த கடைகளில்- நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் அல்லது அதன் உரிமையாளர்கள் பாதிக்கப்படுவதையும், பல தெற்குப் பார்த்த கடைகள் தொடர் நஷ்டத்தில் இயங்குவதற்கான காரணத்தைப் பற்றியும் இங்கு பார்ப்போம்.
தெற்கு என்பது எமன் திசையாகும். தெற்குப் பார்த்த வாயில்களை சுபவாயில்கள் என்பர். 'தெற்குப் பார்த்த வீடுகளில் வசிப் போர்க்கு தென்றலடிக்கு
பிருகு முனிவர், வசிஷ்டர், விஸ்வகர்மா, விசாலாக்ஷன், அத்திரி, அநிருத்தன், பிரம்மா, வாசுதேவர், பிரஹஸ்பதி, சுக்கிரன், நந்தீஸ்வரர், நாரதர், நக்னஜித், மயன், சௌனகர், பர்கர், புரந்தரன், குமாரசுவாமி போன்ற முனிவர்கள் சிற்ப சாஸ்திரம் பற்றி உபதேசித்தவர்கள். இவர்கள் ஆலய நிர்மாணங்களுக்கும், அரசர்களின் மாளிகைகளுக்கும் முக்கியத்துவம் அளித்து விதிகளை வகுத்தனர். சாதாரண மானவர்களின் வசிப்பிடங் களுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. ஆனால் தற்போது கூரைவீடுகளுக்கும் வாஸ்து பார்க்கும் வழக்கம் வளர்ந்துவிட்டது.
பெரும்பாலான தெற்குப் பார்த்த கடைகளில்- நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் அல்லது அதன் உரிமையாளர்கள் பாதிக்கப்படுவதையும், பல தெற்குப் பார்த்த கடைகள் தொடர் நஷ்டத்தில் இயங்குவதற்கான காரணத்தைப் பற்றியும் இங்கு பார்ப்போம்.
தெற்கு என்பது எமன் திசையாகும். தெற்குப் பார்த்த வாயில்களை சுபவாயில்கள் என்பர். 'தெற்குப் பார்த்த வீடுகளில் வசிப் போர்க்கு தென்றலடிக்கும்' என கிராமங்களில் பேச்சு வழக்குண்டு. தெற்குப் பார்த்த வக்ர தேவதைகள், ஆஞ்சனேயர், தட்சிணாமூர்த்தி, காளியம்மன் திருக்கோவில்கள் புகழ் பெறும்போது- பொருளாதார வகையில் வளம்பெறும்போது, தெற்குப் பார்த்த கடைகள், நிறுவனங்கள் நஷ்டத்தை சந்திப்பதேன்?
சுமார் ஆயிரம், இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் நிர்மாணிக்கப்பட்ட தெற்குப் பார்த்த திருக்கோவில்கள் இன்றளவும் புகழ்பெற்றவையாகவும், வளம் நிறைந்த வையாகவும் உள்ளன. ஆனால் நூறு, இருநூறு ஆண்டுகளுக்குமுன் கட்டப்பட்ட தெற்குப் பார்த்த திருக்கோவில்கள் சில வருடங்கள் புகழ் பெற்றவையாக இருந்தாலும், பெரும்பாலானவை வளம் குறைந்தவையாகவே உள்ளன. தெற்கு எமன் திசை என்றாலும், வாயில் அமைப்புகள், கடை, நிறுவனங்களின் நுழைவாயில்களின் குபேரதிசை காலியாக இருந்தாலும், கஜப் பிருஷ்ட, கூர்மப்பிருஷ்ட மனைகளாக இருந்தாலும் அந்தக் கடைகள், நிறுவனங் கள் வளம்பெறுகின்றன. இதர கடைகள் நஷ்டப்படுகின்றன. ஒருசில நிறுவனங்கள் காணாமல் போகின்றன.
தெற்கு என்பது பெண்களுக்கான திசை.
தெற்குப் பார்த்த கடைகள், நிறுவனங்களின் வாயில்கள் தவறாக இருந்தாலும், நாகப்பிருஷ் டம், தைத்யப் பிருஷ்ட மனை அமைப்பில் கட்டடம் கட்டப்பட்டிருந்தாலும் அந்த நிறுவனம், கடைகள் கண்டிப்பாக நஷ்டத்தை சந்திக்கும். மேலும் அவற்றை நிர்வகிக்கும் பெண்கள் அல்லது பெண் பணியாளர்களின் உடல்நிலை தொடர்ந்து ஐந்து வருடங்களில் பாதிக்கும். பத்து வருடங்களில் உடலில் பெரிய பாதிப்புகள் ஏற்பட்டு, அறுவை சிகிச்சை செய்யும் சூழ்நிலையும் உண்டாகின்றன.
தெற்குப் பார்த்த நிறுவனங்களின்முன் அதிக இடம் காலியாக இருந்தாலும் நஷ்டத்தை சந்திக்கும் வாய்ப்புள்ளது. கடைகள், நிறுவனங்களின் வடக்கு, கிழக்கு, மேற்கு திசைகளில் மிகக்குறைந்த காலியிடம் அல்லது இல்லாமலிருந்து, தெற்கில் மிக அதிகமான காலியிடம் இருந்தாலும் அவ்விடத்திலுள்ள கடைகள் மிகப்பெரிய பொருளாதார நஷ்டத்தை சந்திக்கின்றன. அதன் பெண் உரிமையாளர் அந்நிறுவனத் திலேயே தொடர்ந்து நிர்வகித்தாலோ அல்லது தொடர்ந்து அங்கு பணிபுரியும் பெண்களுக்கோ உடல்பாதிப்பு இருப்பதை அனுபவத்தில் உணரலாம்.
தெற்குப் பார்த்த கடைகள், நிறுவனங்கள் கண்டிப்பாக வாஸ்துப்படி இருந்தால்தான் வர்த்தகம் சிறக்கும். பெண்களுக்கும் உடல்நிலை பாதிக்காது.
விஸ்வகர்மா வாஸ்து சாஸ்திரத்தில் நகர அமைப்பு, கிராம அமைப்பு, நகர வீடுகள், கிராமத்து வீடுகள், கிணறு அமைப்பு, திருக்கோவில்கள் அமைப்பு, வியாபாரத் தலங்கள் அமைப்பு- அதனை நிர்மானிக் கும் முறைகள்பற்றி தெளிவாகக் கூறப் பட்டுள்ளது. ப்ராம்மீய சித்ரகாம சாஸ்திரம், ஸாரஸ்வத சித்ரகாம சாஸ்திரம், மானஸார நூல்கள் போன்ற பெரும்பாலான நூல்கள் அனைத்தும் திருக்கோவில் எவ்வாறு நிர்மாணிக்கப்படவேண்டும் என குறிப்பிடு கின்றன. ஆனால் ஒருசில நூல்களில் மட்டுமே அரண்மனைகள், வீடுகள், வியாபாரத் தலங்கள் அமைப்பது பற்றிய குறிப்புகள் உள்ளன.
எல்லா திசைகளும் நல்ல திசைகள்தான். ஆனால் தெற்குப் பார்த்த வாயில் அல்லது கேட் உள்ள நிறுவனங்கள், வணிக வளாகங்களை கவனமாக நிர்மானிக்க வேண்டும். தெற்குப் பார்த்த கடையின்முன் மரங்கள் இருந்தால் நஷ்டத்தைத் தவிர்க்கலாம். வாயில் அமைப்பு தவறாக இருந்தாலும், செப்டிக் டேங், பாதாள சாக்கடை தவறாக இருந்தாலும், வடக்கு மற்றும் கிழக்கை ஒட்டி வணிக நிறுவங்கள், கடைகள் இருந்தாலும் அல்லது மூலை மூடப்பட்டா லும் நஷ்டத்தை ஏற்படுத்தும். எனவே அம்மூலையை வெளிச்சம் வரும் வகையில் அமைக்கவேண்டும். அப்படி அமைத்தால் பரிகாரமாக அமையும். கடையில் மேடு பள்ளம் அமைத்தும் பரிகாரம் தேடலாம். எந்திரம், ராசிக்கல் போன்றவை தலைவலிக்கு மருந்தாகுமே தவிர நிரந்தரப் பலன் தராது.
எனவே எமன் திசை குறைக்கப்பட வேண்டும். குபேர திசையான வடக்கு காலியாக இருக்கவேண்டும். இந்திரன் திசையான கிழக்கும் காலியாக இருக்கவேண்டும். கருட மனைக்கான தரையின் மேடுபள்ளங்கள் சரியாக இருந்தால் லாபம் வந்துசேரும். வாஸ்துப்படி வீடுகள், வர்த்தக நிறுவனங் கள், வியாபாரத் தலங்களை அமைத்தால், லாபத்ததைத் தேடி நாம் அலையவேண்டாம்; லாபம் நம்மைத் தேடிவரும்.
செல்: 94434 80585