Advertisment

உறவுகள் உதவாமல் போவதேன்? - மகேஷ் வர்மா

/idhalgal/balajothidam/will-relationships-help-mahesh-verma

ரு குடும்பத்திலிலிருக்கும் சகோதரர்களும் சகோதரிகளும் காலப்போக்கில் வெவ்வேறு திசைகள் நோக்கிப் பிரிந்து சென்று விடுகிறார்கள். கிட்டத்தட்ட அவர்களுக்கிடையே சரியான உறவுகூட இல்லாமற்போகிறது. இது ஏன்?

Advertisment

ஒரு ஜாதகத்தில் 2-ஆம் பாவத்தை குடும்ப ஸ்தானம் என்று கூறுவார்கள். அதற்கு அதிபதி கெட்டுப்போனால், அந்தக் குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்காது. உறவுகள் சரியாக இருக்காது.

ss2-ஆம் பாவத்தில் செவ்வாய், சூரியன் இருந் தால், அண்ணன்- தம்பி உறவில் பிரச்சினை இருக்கும். வாத- விவாதம் இருக்கும். ஜாதகர் 23-ஆம் வயதிலேயே தன் குடும்பத்தினரை விட்டுப் பிரிந்துசென்று, பணம் சம்பாதிக்க வேண்டிய நிலை இருக்கும். 2-ஆம் பாவத்தில் சூரியன், சுக்கிரன், செவ்வாய் இருந்தால், ஜாதகர் இளம்வயதிலேயே கஷ்டப்பட வேண்டியதிருக்கும். உறவினர்கள்கூட சரியாகப் பேசமாட்டார்கள். 2-ஆம் பாவத் தில் பாவகிரகம் இருந்து, அதை இன்னொரு

ரு குடும்பத்திலிலிருக்கும் சகோதரர்களும் சகோதரிகளும் காலப்போக்கில் வெவ்வேறு திசைகள் நோக்கிப் பிரிந்து சென்று விடுகிறார்கள். கிட்டத்தட்ட அவர்களுக்கிடையே சரியான உறவுகூட இல்லாமற்போகிறது. இது ஏன்?

Advertisment

ஒரு ஜாதகத்தில் 2-ஆம் பாவத்தை குடும்ப ஸ்தானம் என்று கூறுவார்கள். அதற்கு அதிபதி கெட்டுப்போனால், அந்தக் குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்காது. உறவுகள் சரியாக இருக்காது.

ss2-ஆம் பாவத்தில் செவ்வாய், சூரியன் இருந் தால், அண்ணன்- தம்பி உறவில் பிரச்சினை இருக்கும். வாத- விவாதம் இருக்கும். ஜாதகர் 23-ஆம் வயதிலேயே தன் குடும்பத்தினரை விட்டுப் பிரிந்துசென்று, பணம் சம்பாதிக்க வேண்டிய நிலை இருக்கும். 2-ஆம் பாவத்தில் சூரியன், சுக்கிரன், செவ்வாய் இருந்தால், ஜாதகர் இளம்வயதிலேயே கஷ்டப்பட வேண்டியதிருக்கும். உறவினர்கள்கூட சரியாகப் பேசமாட்டார்கள். 2-ஆம் பாவத் தில் பாவகிரகம் இருந்து, அதை இன்னொரு பாவகிரகம் பார்த் தால், பேச்சு காரணமாக குடும் பத்தினருடன் சரியான உறவிருக் காது.

லக்னத்தில் செவ்வாய், 7-ல் சனி, 8-ல் ராகு இருந்தால், ஜாதகர் தேவையற்றதைப் பேசுவார். காரணமே இல்லாமல் கோபத்தை வெளிப்படுத்துவார். எல்லாரு டனும் சண்டை போடுவார். அதனால் குடும்ப உறவு கெடும்.

Advertisment

ஜாதகத்தில் நீசச் செவ்வாய் லக்னத்தில் இருந்து, 4-ல் சூரியன் நீசமாக இருந்தால், உறவுகள் இருந்தும் அதனால் நன்மை இருக்காது. சில நேரங்களில் படிப்பு கூட பாதிக்கப்படும். கடுமை யாக உழைக்க வேண்டியதிருக்கும். அவ்வாறு உழைத்து பலருக்கு நன்மைகள் செய்தாலும், அவரை யாரும் பாராட்டமாட்டார்கள். வீணான சண்டைகள் வரும்.

4-ல் கேது, 7-ல் செவ்வாய், 12-ல் சந்திரன் இருந்தால், அவருடன் எல்லாரும் தேவையில்லாமல் சண்டை போடுவார்கள். தாய்- தந்தையுடன் உறவு சரியாக இருக் காது. பெற்றோர் அவரின் பேச் சைக் கேட்க மாட்டார்கள். குடும் பத்தில் சந்தோஷச் சூழல் இருக் காது.

லக்னத்தில் பலவீனமான சூரியன் பாவகிரகத்துடன் இருந் தால் அல்லது சூரியன், ராகு வுடன் சேர்ந்து லக்னத்தில் இருந் தால், அவருக்கு இளம்வயதில் குடும்பத்தினரால் சந்தோஷம் கிட்டாது. உறவினர்களால் பிரச்சினைகள் உண்டாகும். தேவைப்படும் நேரத்தில் அவர்கள் உதவமாட்டார்கள்.

4-ல் சூரியன், 7-ல் சனி, 8 அல்லது 12-ல் பலவீன சந்திரன் இருந்தால், அண்ணன்- தம்பிக் கிடையே சொத்துப் பிரச்சினைகள் உண்டாகும்.

வீட்டில் உள்ளவர்களுடன் சண்டை ஏற்படும்.

ஜாதகத்தில் புதன் அஸ்தமனம் அல்லது நீசமடைந்தால், அவருக்கு சகோதரிகளுடன் நல்ல உறவிருக்காது.

ஒருவர் ஜாதகத்தில் சனி கெட்டுப்போனால், அவரால் சொந்த வீடு வாங்க முடியாது. அவருக்கு சித்தப்பா, தாய்மாமனுடன் உறவு சரியாக இருக்காது.

ஜாதகத்தில் 3-ஆம் பாவாதிபதி நீசமடைந் தால் அல்லது பலவீனமாக இருந்தால் அல்லது 3-ஆம் பாவத்தில் கேது இருந்து அதை சனி பார்த்தால், அவருக்கு எப்போதும் தம்பி களால் பிரச்சினை இருக்கும். அவரிடமிருந்து எதையாவது அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டேயிருப்பார்கள். பணம் கடன் வாங்கியிருந்தால், அதைத் திரும்பத்தர மாட்டார்கள். அதனால் உறவு கெடும்.

ஜாதகத்தில் 11-ஆம் பாவாதிபதி பலவீனமாக அல்லது அஸ்தமனமாக இருந்தால் அல்லது தேய்பிறைச் சந்திரனாக இருந்தால், அவருக்கு தன் அண்ணனுடன் உறவு சரியாக இருக்காது.

ஒருவர் வாழும் வீட்டில் வடகிழக்கில் சமை யலறை இருந்தால் அந்த வீட்டில் பிரச்சினை இருக்கும். வீட்டின் மத்திய பகுதி அல்லது தெற்கு மத்திய பகுதியில், தெற்கு திசையைப் பார்த்தவாறு சமையல் மேடை இருந்தால் அந்த வீட்டில் சந்தோஷம் இருக்காது. அண்ணன்- தம்பி உறவு சரியாக இருக்காது. ஒருவரை யொருவர் பிரிந்து வாழ்வார்கள். நேருக்குநேர் பார்க்க நேர்ந்தாலும் பேசமாட்டார்கள். அவரு டைய ஜாதகத்தில் 9-ஆவது பாவத்தில் 2-க்குமேல் பாவகிரகங்கள் இருக்கும். அல்லது இரண்டு பாவகிரகங்கள் இருந்து, அதை சனி அல்லது ராகு பார்க்கும்.

பரிகாரங்கள்

குடும்பத்தில் சந்தோஷச்சூழல் நிலவ அந்த வீட்டின் தலைவர் தினமும் காலையில் வெல்லம் அல்லது வெல்லம் கலக்கப்பட்ட பொங்கலை 43 நாட்கள் தொடர்ந்து ஆஞ்சனேயருக்குப் பிரசாதமாக வைத்துவிட்டு, பின்னர் அதை ஏழைகளுக்குத் தரவேண்டும். திங்கட்கிழமை யிலிலிருந்து சனிக்கிழமைவரை அரச மரத்திற்கு தீபமேற்ற வேண்டும்.

வீட்டின் சமையலறை தென்கிழக்கில் இருக்கவேண்டும். படுக்கும் அறையின் வடக்கு அல்லது தெற்கு திசையில் முகம் பார்க்கும் கண்ணாடி இருக்கக்கூடாது.

வருடத்திற்கொருமுறை வீட்டில் வாஸ்து சாந்தி ஹோமம் செய்வது நல்லது. ஏழுவகை யான தானியங்களைக் கலந்து தினமும் பறவை களுக்கு அளிக்கவேண்டும். ஒவ்வொரு சனிக்கிழமையும் ஏழைகளுக்கு உளுந்தால் செய்த உணவுப்பொருளை தானமளிப்பது நன்று. குலதெய்வத்தையும் முன்னோர்களையும் வழிபடவேண்டும்.

செல்: 98401 11534

bala260719
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe