தற்காலத்தில் ஜோதிடம் பற்றிய அறிவு மிகமிக வளர்ச்சி பெற்றுள்ளது. ஜோதிட விழிப்புணர்வும் அதிகரித்துள்ளது. அனேக மனிதர்கள் அடிப்படை ஜோதிட அறிவுடன் திகழ்கிறார்கள். இது மகிழ்ச்சியான விஷயமாகும்.
இந்த அதீத அறிவுத் தேடல், எல்லா விஷயங்களிலும் ஜோதிடத்தைப் பொருத்திப் பார்க்கிறது. முக்கியமாக, தொழில் தொடங்குவோர்- தொழில் முன்னேற்றம், வியாபார விரிவாக் கம் பொருட்டு தொழில் பங்கு தாரர்களைத் தேடுகின்றனர். அவ் வகையில் அந்தத் தொழில் பங்குதாரர் களுக்கும் இவர்களுக்கும் அனுசரணை யான பரிமாற்றமும், தொடர்பும் நீடிக்குமா என்பதை அறிய ஆவல் கொள்கின்றனர்.
இதனை எளிமையாகத் தெரிந்துகொள்ள, உங்கள் ராசிக்கு பங்குதாரரின் ராசி சஷ்டாஷ்டக மாக இல்லாதவாறு பார்த்து
தற்காலத்தில் ஜோதிடம் பற்றிய அறிவு மிகமிக வளர்ச்சி பெற்றுள்ளது. ஜோதிட விழிப்புணர்வும் அதிகரித்துள்ளது. அனேக மனிதர்கள் அடிப்படை ஜோதிட அறிவுடன் திகழ்கிறார்கள். இது மகிழ்ச்சியான விஷயமாகும்.
இந்த அதீத அறிவுத் தேடல், எல்லா விஷயங்களிலும் ஜோதிடத்தைப் பொருத்திப் பார்க்கிறது. முக்கியமாக, தொழில் தொடங்குவோர்- தொழில் முன்னேற்றம், வியாபார விரிவாக் கம் பொருட்டு தொழில் பங்கு தாரர்களைத் தேடுகின்றனர். அவ் வகையில் அந்தத் தொழில் பங்குதாரர் களுக்கும் இவர்களுக்கும் அனுசரணை யான பரிமாற்றமும், தொடர்பும் நீடிக்குமா என்பதை அறிய ஆவல் கொள்கின்றனர்.
இதனை எளிமையாகத் தெரிந்துகொள்ள, உங்கள் ராசிக்கு பங்குதாரரின் ராசி சஷ்டாஷ்டக மாக இல்லாதவாறு பார்த்துக்கொள்ளவேண்டும். அதாவது உங்கள் ராசியிலிருந்து எண்ணினால், அவரது ராசி எட்டாவது ராசியாக இருத்தல் ஆகாது. இந்த சஷ்டாஷ்டகம் என்பது, சஷ்ட, அஷ்டகம் எனும் சேர்க்கை 6, 8 வரும்படியாக இருவரின் ராசிகளும் அமைந்துவிடும். இது எப்போதும் சண்டை, மனஸ்தாபம், எரிச்சல், பிணக்கு, கைகலப்பு, அவமானம், வழக்கு போன்ற வற்றைக் கொடுக்கக்கூடியது. எனவேதான் சஷ்டாஷ்டக ராசிகளைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
இவ்விதம் ராசிகளை அடிப்படையாகக் கொண்டு தேர்ந்தெடுக்கும்போது, நீங்கள் மூன்று நட்சத்திரத்தில் பிறந்தவர்களை விலக்க வேண்டியிருக்கும். இதெல்லாம் நடைமுறையில் ஆகக்கூடிய விஷயமா? சிலருக்கு தொழில் பங்குதாரர்கள் கிடைப்பதே அரிதாக இருக்கும். இதில்போய் உன் ராசி சரியில்லை; பொருந்தி வராது என்றெல்லாம் பார்த்துக்கொண்டிருக்க முடியுமா? அதனால் உங்கள் நட்சத்திரத்திற்கு எந்த நட்சத்திரம் சரிப்படாது என்று மட்டும் பார்த்தால் போதுமானது.
உங்கள் பிறந்த நட்சத்திரமும், அதற்குக் கோளாறு ஏற்படுத்தும் நட்சத்திரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றைத் தவிர்க்கவும்.
அஸ்வினி- அனுஷம், பரணி- கேட்டை, கார்த்திகை- மூலம், ரோகிணி- பூராடம், மிருக சீரிடம்- உத்திராடம், திருவாதிரை- திருவோணம், புனர்பூசம்- அவிட்டம், பூசம்- சதயம், ஆயில்யம்- பூரட்டாதி, மகம்- உத்திரட்டாதி, பூரம்- ரேவதி, உத்திரம்- அஸ்வினி, ஹஸ்தம்- பரணி, சித்திரை- கார்த்திகை, சுவாதி- ரோகிணி, விசாகம்- மிருகசீரிடம், அனுஷம்- திருவாதிரை, கேட்டை- புனர்பூசம், மூலம்- பூசம், பூராடம்- ஆயிலயம், உத்திராடம்- மகம், திருவோணம்- பூரம், அவிட்டம்- உத்திரம், சதயம்- ஹஸ்தம், பூரட்டாதி- சித்திரை, உத்திரட்டாதி- சுவாதி, ரேவதி- விசாகம்.
மேலும் சில நட்சத்திரங்கள், ஒன்றுக் கொன்று பாதிப்பை ஏற்படுத்தும். இதனை முக்கியமாக திருமணத்திற்குக் கணக்கீடு செய்வார்கள். எனினும், நீங்கள் தொழில், வியாபாரம் ஆகிய வற்றை பங்குதாரருடன் சேர்ந்து செய்யும் போது, அடிக்கடி பாதிப்புகள், சங்கடங் களும் ஏற்பட்டுக் கொண்டிருந்தால், நிறைமனதுடன் தொழிலைத் தொடர முடியுமா? எனவே இந்த நட்சத்திரங்களையும் சற்று கவனித்தால் நல்லது. இதுவும் ஏறக் குறைய சந்திராஷ்டம கணக்கீடுபோலதான் வரும்.
அஸ்வினி- கேட்டை, பரணி- அனுஷம், கார்த்திகை- விசாகம், ரோகிணி- சுவாதி, திருவாதிரை- திருவோணம், புனர்பூசம்- உத்திராடம், பூசம்- பூராடம், ஆயில்யம்- மூலம், மகம்- ரேவதி, பூரம்- உத்திரட்டாதி, உத்திரம்- பூரட்டாதி, அஸ்தம்- சதயம்.
மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் மூன்றும் ஒன்றுக்கொன்று ஆகாது.
இதன்மூலம் தொழில் முன்னேற்றம், வியாபார விருத்திக்கு முயற்சிக்கும் போது, அவர்களின் நட்சத்திரத்தைக் கேட்டுத் தெளிந்து, அவர்களைப் பங்குதாரராக்கலாமா வேண்டாமா என முடிவுசெய்து கொள்ளவும்.
தொழில் என்பது ஒரு மனித னின் வாழ்வாதா ரப் பிரச்சினை.
அதனை நிம்மதி யாகக் கொண்டு சென்றாலே வாழ்க்கையின் ஓட்டம் நல்லபடியாகச் செல்லும். பங்கு தாரரைத் தேர்ந்தெடுக்கும்போது சற்று கவனத்துடன் இருந்தால்போதும்.
செல்: 94449 61845