சரிப்பட்டு வராது! யாருக்கு-எது? -ஆர். மகாலட்சுமி

/idhalgal/balajothidam/will-not-be-adjusted-whom-what-r-mahalakshmi

ரு கிரக பாவகத்தில் அசுபத் தன்மையடைந்த கிரகம் சேர்வதைக்கொண்டு அந்த ஜாதகர் எதற்கு சரிப்பட்டு வரமாட்டார் என்பதைக் கண்டறியலாம். கடந்த இதழ் களில் பத்தாம் பாவம்வரை பார்த்தோம். கடைசி இரண்டு பாவங்களை இங்கு காண்போம்.

பதினொன்றாமிடமும் அசுப கிரக சம்பந்தமும்

பதினொன்றாமிடம்+சூரியன்: சூரியன் கெட்டு பதினொன்றில் அமைந்தால் மூத்த சகோதரம் சரிப்பட்டு வராது. மருத்துவ சம்பந்தம், அரசு சன்மானம், தந்தை தரும் லாபம், நெருப்பு சார்ந்த தொழில்கள், வெளிச்சம் தரும் வேலை போன்ற எதுவுமே ஜாதகருக்கு சரிப்படாது. கும்பகோணம்- கீழச் சூரியமூலை கோவிலிலுள்ள சூரியகோடி பிரகாசரை வணங்கவும்.

பதினொன்றாமிடம்+சந்திரன்: சந்திரன் கெட்டு பதினொன்றாமிடம் சேர்ந்திட, மூத்த சகோதரி விஷயம் சரிப்படாது. தண்ணீர் சார்ந்த தொழில், பானங்கள் விற்பது, பயணம் சார்ந்தவை, வெளியூர், வெளிநாடு, வீடு- மனை லாபம், தாய்மூலம் கிடைக்கும் சொத்து போன்றவை சரிப்படாது. ஏன்- சிலருக்கு ஒரு பழைய சைக்கிள்கூட சரிப்பட்டு வராது. மயிலாடுதுறை- திருவிந்தளூர் ஆலயம் சென்று வழிபடவும்.

dd

பதினொன்றாமிடம்+செவ்வாய்: செவ்வாய் கெட்டு பதினொன்றாமிடம் செல்ல, செங்கல்லை வைத்து செய்யப்படும் தொழில், சீருடைப் பணி, அதிகார வேலை, ரத்தம் சார்ந்த மருத்துவத் தொழில், ப

ரு கிரக பாவகத்தில் அசுபத் தன்மையடைந்த கிரகம் சேர்வதைக்கொண்டு அந்த ஜாதகர் எதற்கு சரிப்பட்டு வரமாட்டார் என்பதைக் கண்டறியலாம். கடந்த இதழ் களில் பத்தாம் பாவம்வரை பார்த்தோம். கடைசி இரண்டு பாவங்களை இங்கு காண்போம்.

பதினொன்றாமிடமும் அசுப கிரக சம்பந்தமும்

பதினொன்றாமிடம்+சூரியன்: சூரியன் கெட்டு பதினொன்றில் அமைந்தால் மூத்த சகோதரம் சரிப்பட்டு வராது. மருத்துவ சம்பந்தம், அரசு சன்மானம், தந்தை தரும் லாபம், நெருப்பு சார்ந்த தொழில்கள், வெளிச்சம் தரும் வேலை போன்ற எதுவுமே ஜாதகருக்கு சரிப்படாது. கும்பகோணம்- கீழச் சூரியமூலை கோவிலிலுள்ள சூரியகோடி பிரகாசரை வணங்கவும்.

பதினொன்றாமிடம்+சந்திரன்: சந்திரன் கெட்டு பதினொன்றாமிடம் சேர்ந்திட, மூத்த சகோதரி விஷயம் சரிப்படாது. தண்ணீர் சார்ந்த தொழில், பானங்கள் விற்பது, பயணம் சார்ந்தவை, வெளியூர், வெளிநாடு, வீடு- மனை லாபம், தாய்மூலம் கிடைக்கும் சொத்து போன்றவை சரிப்படாது. ஏன்- சிலருக்கு ஒரு பழைய சைக்கிள்கூட சரிப்பட்டு வராது. மயிலாடுதுறை- திருவிந்தளூர் ஆலயம் சென்று வழிபடவும்.

dd

பதினொன்றாமிடம்+செவ்வாய்: செவ்வாய் கெட்டு பதினொன்றாமிடம் செல்ல, செங்கல்லை வைத்து செய்யப்படும் தொழில், சீருடைப் பணி, அதிகார வேலை, ரத்தம் சார்ந்த மருத்துவத் தொழில், பூமியால் கிடைக் கும் லாபம், மனை விற்பது- வாங்குவது போன்ற தொழில், அதிகாரமுள்ள ஊழியம், சகோதர ஆதாயம், தாய்மாமன் தரும் லாபம், செம்பு, பித்தளை லாபம் போன்ற எதுவும் ஜாதகருக்கு சரிப்பட்டு வராது. சிலருக்கு ஒரு செங்கல் வாங்கும் யோகம்கூட அமையாது. திருவாரூர்- திருப்புகலூர் சென்று வழிபடவும்.

பதினொன்றாமிடம்+புதன்: புதன் கெட்டு பதினொன்றாமிடம் போய்விட, தாய்மாமனால் லாபம், கல்வி- வேள்வி வருமானம், கணக்கு வருமானம், நுணுக்க வேலை தரும் லாபம், நகைச்சுவை தரும் புகழ், அறிவு தரும் வருமானம், யூக லாபம் என எவையுமே ஜாதகருக்கு சரிப்பட்டு வராது. சிலர் ஒரு ரூபாய் லாபம் சம்பாதிக்கக்கூட சரிப்பட்டு வரமாட்டார். திருப்புளியங்குடி அல்லது திருக்கோஷ்டியூர் சென்று வணங்கவும்.

பதினொன்றாமிடம்+குரு: குரு பதினொன்றாமிடம் செல்ல, கம்பீரம், தேஜஸ் என்பதே சரிப்படாது. மரியாதை யான தொழில் மேன்மை, ஆன்மிகப் பணி லாபம், சட்டம்- கல்வி- வங்கி லாபம், பொறுப்பாக நிர்வாகம் செய்து பணம் சம்பாதிப்பது, உயரிய லட்சியத்தை அடைவது, விதவிதமாக தங்கநகை அணிந்து அழகு பார்ப் பது, தங்க வியாபாரம் செய்து அதிக லாபம் பெறுவது, மஞ்சள் பயிரிட்டு பணபலம் அடைவது போன்றவற்றுக்கு ஜாதகர் சரிப்பட்டு வர மாட் டார். சூரியனார்கோவில் சென்று வணங்கவும்.

பதினொன்றாமிடம்+சுக்கிரன்: சுக்கிரன் கெட்டு பதினொன்றாமிடம் சேர, மூத்த சகோதரி அனுசரணை, நல்ல வீடு, நேர்த்தியான வாகனம், வாகனம்- வீடு தரும் வருமானம், விவசாயம் நல்கும் லாபம், பெண்கள் ஆதரவு, கலைத் தொழிலில் கோடிகோடியாக சம்பாதிப்பது, அழகியல் சார்ந்த வருமானம், இரண்டாவது மனைவி போன்றவையெல்லாம் ஜாதகருக்கு சரிப்பட்டு வராது. கும்பகோணம்- நாச்சியார்கோவில் சென்று வழிபடவும்.

பதினொன்றாமிடம்+சனி: சனி கெட்டு பதினொன்றாமிடம் செல்ல, வாழ்வில் முன்னேற் றம், பணத்தைக் கண்ணால் பார்ப்பது, தொடர்ந்து ஒரு வேலையில் பணியாற்றுவது, நோயில்லாமல் இருப்பது, வாழ்வில் உயர் வென்னும் ஒரு நிலையை அடைவது, வழக்கு தொடுத்தால் அதில் வெற்றிபெறுவது- இதில் எவையுமே ஜாதகருக்கு சரிப்பட்டு வராது. வலியில்லாத கால் என்பது சரிப்படவே படாது. ஏரிக்குப்பம் சனிபகவானை வழிபடவும்.

பன்னிரண்டாமிடமும் அசுப கிரக சம்பந்தமும்

பன்னிரண்டாமிடம்+சூரியன்: சூரியன் கெட்டு பன்னிரண்டாமிடம் சேர்ந்திட, தந்தை யுடன் "கெமிஸ்ட்ரி' ஒத்துப்போவது, விலகிப் போகாத தந்தை, முகம் பிரகாசமாக இருப்பது, கால் எலும்புகள் சீராக இருப்பது, அரசு விருந் தாளியாக இருப்பது போன்றவை ஜாதகருக்கு சரிப்படாது. திருவலஞ்சுழி சடைமுடிநாதர் ஆலயம் சென்று வணங்கவும்.

பன்னிரண்டாமிடம்+சந்திரன்: சந்திரன் அசுபத் தன்மையடைந்து பன்னிரண்டாமிடம் சேர, தாய் நல்லவிதமாக இருத்தல், தாயின் அன்பு- அரவணைப்பு கிடைத்தல், வேற்றூர்- வேறு நாட்டுக்குச் செல்லுதல், வயல்- தண்ணீர்- கல்வி ஆகியவற்றால் வருமானம், சளிபிடிக் காமல் இருத்தல் போன்றவை ஜாதகருக்கு சரிப் பட்டு வராது. கிருஷ்ணரை, குருவாயூரப்பனை வணங்கவும்.

பன்னிரண்டாமிடம்+செவ்வாய்: செவ்வாய் தீதாகி பன்னிரண்டாமிடம் சென் றிட, ஜாதகர் நல்லன செய்து சுகமாக இருத்தல், ரத்த காயம்- சிறையில் அடி- அச்சடித்த சோறு வாங்காமல் இருப்பது, ரவுடித்தனம் செய்யாமல் இருப்பது, அடுத்தவர் தோட்டத்தை அபகரிக்காமல் இருப்பது, நீதிமன்ற தண்டனைக் குக் காத்திருக்காமல் இருப்பது போன்றவற் றுக்கு ஜாதகர் சரிப்பட்டு வரமாட்டார். தஞ்சை பெரியகோவிலிலுள்ள வராஹி அம்மனை வழிபடவும்.

பன்னிரண்டாமிடம்+புதன்: புதன் கெட்டு பன்னிரண்டாமிடம் ஏறிட கௌரவ மாக இருப்பது, தாம்பத்திய நிறைவு, பலர் போற்றுமளவுக்கு அறிவுடைமை, கணித நுணுக்கம், மதிநுட்பம், கல்வி சிறப்பு, உளறாமல் சாமர்த்தியமாக இருப்பது போன்றவை எதற்கும் ஜாதகர் சரிப்பட மாட்டார். புதுச்சேரி- சிங்கிரிகுடி தல நரசிம்மரை வழிபடவும்.

பன்னிரண்டாமிடம்+குரு: குரு கெட்டு பன்னிரண்டாமிடம் சேர, சுபச்செலவுகள், நான்கு பேர் மரியாதையுடன் மதிப்பது, நல்ல ஆடை உடுத்துவது, நல்ல அன்னம் புசிப்பது, சுபகாரிய உணவுண்பது, தங்கத்தைக் கண்ணால் பார்ப்பது, கல்வி யோகம், குடும்பம் என்ற ஒன்று இருப்பது, அதிர்ஷ்டம் என்றால் என்னவென்று தெரிவது போன்றவை எவையும் ஜாதகருக்கு சரிப்பட்டு வராது. அருகிலுள்ள சிவன்கோவில் சென்று வழிபடவும். மதுரை திடியன்மலை சென்றும் வணங்கலாம்.

பன்னிரண்டாமிடம்+சுக்கிரன்: சுக்கிரன் கெட்டு பன்னிரண்டாமிடம் சேர, திருமணம், குழந்தைகள், காது குத்துவது உள்ளிட்ட இன்னும் பல விசேஷங்களும் ஜாத கருக்கு சரிப்படாது. (இதற்குக் காரணம் ஜாதகர் திருமண வாழ்க்கைக்கு சரிப்படாமல் தனிமரமாக இருக்கக்கூடும். அல்லது தீய பழக்கங் கள் காரணமாக இவரை பலரும் ஒதுக்கி, முகம் சுளிக்க வைக்கும்படி ஆக்கியிருக்கும்.) தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் சென்று வழிபடவும்.

பன்னிரண்டாமிடம்+சனி: சனி கெட்டு பன்னிரண்டாமிடம் செல்ல, ஊரைப்போல- நாட்டைப்போல ஒரு சராசரி வாழ்க்கை ஜாத கருக்கு சரிப்பட்டு வராது. பிச்சைக்காரர், நித்ய நோயாளியே பரவாயில்லை என்று சொல்லும் படியாக வாழ்க்கை இருக்கும். எல்லாரிடமும் ஏமாறாமல் இருப்பது, நித்யகண்டம் இல்லாம லிருப்பது போன்றவை ஜாதகருக்கு சரிப்பட்டு வராது. திருவாலங்காடு சென்று வணங்கவும்.

செல்: 94449 61845

bala200821
இதையும் படியுங்கள்
Subscribe