ஒரு கிரக பாவகத் தில் அசுபத் தன்மை யடைந்த கிரகம் சேர்வதைக் கொண்டு அந்த ஜாதகர் எதற்கு சரிப்பட்டு வர மாட்டார் என்பதைக் கண்டறியலாம். கடந்த இதழ்களில் எட்டாம் பாவம்வரை பார்த்தோம். இனி தொடர்ந்து காண்போம்.
ஒன்பதாமிடமும் அசுப கிரக சம்பந்தமும் ஒன்பதாமிடம்+ சூரியன்: சூரியன் அசுப ராகி ஒன்பதாமிடத்தில் அமர, பெருமை, புகழ்மிக்க தந்தை, சூரிய வழிபாடு, ஆலயப் பணி, அரசியல் பதவி, அரசு வேலை, சட்டத் துறையில் பங்கெடுப்பு போன்ற எதற்கும் ஜாதகர் சரிப்பட்டு வரமாட்டார். விழுப்புரம்- திருப்புறவார் பனங்காட்டூர் சென்று வழி படவும்.
ஒன்பதாமிடம்+சந்திரன்: சந்திரன் கெட்டு ஒன்பதில் அமர, நல்ல ஆச்சாரமான- பக்தியான தாயார் அமைவது, நல்ல உணவுண்பது, நல்ல பெண் குழந்தைகள், அருமையான பேத்திகள் அமைவது, வெளி நாடு சென்று செல்வம் சேர்ப்பது போன்றவை எதுவும் ஜாதகருக்கு சரிப்பட்டு வராது. அவல் படைத்து கிருஷ்ணரை வணங்கவும்.
ஒன்பதாமிடம்+செவ்வாய்: செவ்வாய் கெட்டு ஒன்பதாமிடம் சேர, எந்த செயலையும் நன்கு யோசித்து திட்டமிட்டுச் செய்வது, அடிபடாத- அடிக்காத தந்தை அமைவது, நேர்வழியில் அதிர்ஷ்டம் கிடைப்பது, கள்ளத்தோணியில் வெளிநாடு செல்லாம-ருப்பது, நேர்மையாக மனை வாங்குவது போன்ற எதுவும் ஜாதகருக்கு சரிப்படாது. ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம் சென்னிமலை முருகனை வழிபடவும்.
ஒன்பதாமிடம்+புதன்: புதன் அசுபராகி ஒன்பதாமிடம் புகுந்தால், கோவி-ல் சரியாக மந்திரம் சொல்- அர்ச்சனை செய்வது, திட்டமிட்டு வியாபாரம் செய்வது, சரியாக வருமான வரி செலுத்துவது- செலுத்தச் செய்வது, பயன்தரும் யூக சிந்தனை, முறையான கல்வி, தீய சொற்கள் கலக்காத இனிய பேச்சு போன்றவை ஜாதகருக்கு சரிப்படாது. சென்னை- தாம்பரம் அருகில், ரத்தினமங்கலம் குபேரனை வழிபடவும்.
ஒன்பதாமிடம்+குரு: குரு கெட்டு ஒன்பதாமிடம் கூட, தயாள சிந்தனை, நல்ல தவநெறி, பெண்களை நாடாத சந்நியாசம், சட்டம், நீதி, அரசுப் பதவிகள், நல்ல குழந்தை கள், வெளிநாட்டுக் கல்விப் பயணம், ஆராய்ச் சிக் கல்வி, நல்ல தோற்றம் போன்றவை எவையுமே ஜாதகருக்கு சரிப்படாது. தஞ்சை- தென்குடித்திட்டை சென்று வழிபடவும்.
ஒன்பதாமிடம்+சுக்கிரன்: சுக்கிரன் கெட்டு ஒன்பதாமிடம் சேர, ஆடம்பரமற்ற அலங்காரம், ஒழுக்கமான கலை- நாட்டியம்- கலைத்துறை ஈடுபாடு, அழகான வீட்டில் வசிப் பது, தெய்வீக அருள் நிறைந்து சௌபாக்கிய மாகத் திகழ்வது, நல்ல வாகனம் கிடைப்பது, நேர்மையாகப் பணம் சம்பாதிப்பது போன்றவை எவையுமே ஜாதகருக்கு சரிப்படாது. ஸ்ரீரங்கம் ரங்கநாதரையும் கருடனையும் ராமானுஜரையும் வழிபடவும்.
ஒன்பதாமிடம்+சனி: சனி அசுபராகி மிகவும் கெட்டு ஒன்பதாமிடம் சார்ந்திட, சாய்ந்துகொள்ள- கரம்பற்ற தந்தையின் ஆதரவு கிடைப்பது, பிரசித்தமாக பெயர் எடுப் பது, உழைப்பால் பெரும்பேறு கிடைப்பது, குலதெய்வ அருள்பெறுவது, மேன்மையான தொழில் கிடைப்பது போன்ற எதற்குமே ஜாதகர் சரிப்பட்டு வரமாட்டார். திருவாரூர் ராமநாதசுவாமி ஆலயம் சென்று மங்கள சனீஸ்வரரை வழிபடவும்.
பத்தாமிடமும் அசுப கிரக சம்பந்தமும்
பத்தாமிடம்+சூரியன்: சூரியன் அசுபத் தன்மையடைந்து பத்தாமிடம் சேர, திறமையான நிர்வாகம், அரசுப் பதவி, அரசிய-ல் பங்கேற்பது, தந்தையின் கௌரவம் கிடைப்பது, ஆடம்பரமான தொழில், சிறந்த வியாபாரம், பிரகாசமான வருமானம், நாலு காசை கண்களால் பார்ப்பது போன்றவை எதற்கும் ஜாதகர் சரிப்பட மாட்டார். விழுப்புரம்- திருப்புறவார் பனங்காட்டீஸ்வரரை ஞாயிற்றுக் கிழமை வணங்கவும்.
பத்தாமிடம்+சந்திரன்: சந்திரன் கெட்டு பத்தாமிடம் சேர்ந்திட, உணவு சம்பந்தமான தொழில், அருந்தும் பானங்கள், பால் பொருட்கள் வியாபாரம், கட்டுமான வேலை, அரசியல் ஈடுபாடு, கலை நுணுக்கம், வெள்ளைநிறம் சார்ந்த வேலை போன்றவற்றுக்கு ஜாதகர் சரிப்பட்டு வரமாட்டார். திருப்பதி சென்று பெருமாளை வழிபடவும்.
பத்தாமிடம்+செவ்வாய்: செவ்வாய் கெட்டு பத்தாமிடம் சேர, தைரியம் தேவைப்படும் வேலை, மனை சம்பந்தமான தொழில், விவசாயப் பணி, தோட்டப் பணி, மண்சார்ந்த வேலை, உலோகம் சார்ந்த தொழில் போன்றவை எதற்கும் ஜாதகர் சரிப்பட மாட்டார். பழனி சென்று முருகனை வணங்கவும்.
பத்தாமிடம்+புதன்: புதன் கெட்டு பத்தாமிடம் புகுந்திட, வியாபாரம், கணக்கு, கல்வி, புத்தி சா-த்தனம், நுணுக்கமான வேலை போன்ற எதற்கும் ஜாதகர் சரிப்பட்டு வரமாட்டார். சுசீந்திரம் தாணுமால யன் ஆலயம் சென்று வழிபடவும்.
பத்தாமிடம்+குரு: குரு கெட்டு பத்தாமிடம் சேர, அறிவுசார்ந்த தொழில், கற்பிக்கும் வேலை, ஆன்மிகப் பணி, பணம் எண்ணும் வேலை, ஜோதிட வேலை, பொறுப் பான எந்த தொழில், வேலைக்கும் ஜாதகர் சரிப்பட மாட்டார். திருச்சி- திருப்பட்டூர் சென்று வழிபடவும்.
பத்தாமிடம்+சுக்கிரன்: சுக்கிரன் கெட்டு பத்தாமிடம் சேர்ந்தால், ஜாத கருக்கு அழகு, கலை நுணுக்கம், திரைப்படம், தொலைக்காட்சி, வானொ-, கட்டடம் கட்டுவது, வியாபாரம், அழகுசார் தொழில்கள் போன்ற எவையும் சரிப்பட்டு வராது. ஸ்ரீரங்கம் சென்று வழிபடவும்.
பத்தாமிடம்+சனி: சனி கெட்டு பத்தாமிடம் செல்ல, தொழில், வேலை என ஒரு மனிதனின் உணவுக்கு வழிசெய்யும் தடங்கள் எல்லாம் மூடப்பட்டுவிடும். எனவே ஜாத கருக்கு உழைப்பென்பதே சரிப்பட்டு வராது. குலதெய்வத்தை வணங்கவும் அல்லது பைரவரை வழிபடவும்.
(தொடரும்)
செல்: 94449 61845