ரு கிரக பாவகத்தில் அசுபத் தன்மையடைந்த கிரகம் சேருவதைக்கொண்டு, அந்த ஜாதகர் எதற்கு சரிப்பட்டு வரமாட்டார் என்பதைக் கண்டறியலாம். கடந்த இதழில் நான்காம் பாவம்வரை கண்டோம். இனி தொடர்ந்து காண்போம்.

ஐந்தாமிடமும் அசுப கிரக சம்பந்தமும்

ஐந்தாமிடம்+சூரியன்: சூரியன் கெட்டு ஐந்தாமிடத்தில் அமர, இந்த ஜாதகர் சுறுசுறுப்பான மூளை, லட்சிய வெறி, பரம்பரை சொத்து ஆகியவற்றுக்கு சரிப்பட்டு வரமாட்டார். கும்பகோணம் திருலோக்கி கீழச் சூரியமூலை கோவில் சென்று வணங்கவும்.

ஐந்தாமிடம்+சந்திரன்: சந்திரன் அசுபராகி ஐந்தாமிடத்தில் சேர, ஜாதகர் நல்ல மனம், தெளிவான அறிவு, நல்ல பெண் குழந்தைகள் பிறத்தல், ஆரோக்கியமான கர்ப்பம் ஆகியவற்றுக்கு சரிப்பட்டு வர மாட்டார். குற்றாலநாதர் கோவில் சென்று வழிபடுவது நல்லது.

Advertisment

hh

ஐந்தாமிடம்+செவ்வாய்: செவ்வாய் கெட்டு ஐந்தாமிடம் சென்றிட, ஜாதகர் விளையாட்டுப் போட்டிகள், பரம்பரை மனை, பெருந்தன்மை போன்ற எதற்கும் சரிப்பட்டு வரமாட்டார். (பெண்களுக்கு இவ்வித அமைப்பிருந்தால் கருச்சிதைவு ஏற்படும்.) திருப்புல்லாணி கோவிலில் சந்தான கிருஷ்ணர் சந்நிதியில் பால் பாயசம் படைத்து வழிபடவும்.

ஐந்தாமிடம்+புதன்: புதன் கெட்டு ஐந்தாமிடம் போய்விட, ஜாதகர் நல்ல மனநிலை, தெளிவான அறிவு ஆகியவற்றுக்கு சரிப்பட மாட்டார். சிங்கிரிகுடி (புதுச்சேரி) சென்று நரசிம்மரையும் கனகவல்லித் தாயாரையும் வழிபடவும்.

Advertisment

ஐந்தாமிடம்+குரு: குரு கெட்டு ஐந்தாமிடம் சேர, நல்ல புத்திசாலித்தனம், நல்ல குழந்தைகள், ஒழுக்கம், ஆச்சாரம், குலதெய்வ வழிபாடு போன்றவற்றுக்கெல் லாம் சரிப்பட மாட்டார். தேவூர் சென்று வழிபடவும்.

ஐந்தாமிடம்+சுக்கிரன்: சுக்கிரன் அசுபராகி ஐந்தாமிடம் ஏறிட, ஜாதகர் அழகியல் விஷயம், கலை, திரைப்படம், அழகான குழந்தை, நல்ல காதல் போன்ற எதற்கும் சரிப்பட மாட்டார். கரிவலம்வந்த நல்லூர் சென்று வழிபடவும்.

ஐந்தாமிடம்+சனி: சனி கெட்டு ஐந்தாமிடம் ஏறிட, குழந்தைகள் இன்பம், ஒழுக்கமான காதல், குலதெய்வ அனுசரணை, நல்ல உடல்நலம் போன்ற எதற்கும் ஜாதகர் சரிப்பட மாட்டார். திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமியை வணங்கவும்.

ஆறாமிடமும் அசுப கிரக சம்பந்தமும்

ஆறாமிடம்+சூரியன்: சூரியன் கெட்டு ஆறாமிடம் அடைய, ஜாதகர் அரசு வேலை, கண் பாதுகாப்பு, அரசு கடன், வழக்கில் வெற்றி போன்றவற்றுக்கு சரிப்பட மாட்டார். பரிதியப்பர் கோவில் சென்று வழிபடவும். காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவிலும் நன்று.

ஆறாமிடம்+சந்திரன்: சந்திரன் அசுபராகி ஆறாமிடம் சாய, ஆரோக்கியமான தாய், தண்ணீர், விவசாயப் பெருக்கம், வேகமான வேலை, திறமை, சளித் தொந்தரவு இல்லாமை போன்றவை சரிப்படாது. தென்குடித்திட்டை சென்று வணங்கவும்.

ஆறாமிடம்+செவ்வாய்: செவ்வாய் ஆறா மிடம் செல்ல, விவசாயம், தோட்டவேலை, ரத்தம் சிந்தாமல்- காயப்படாமல் இருப்பது, கடனின்றி இருப்பது போன்றவை சரிப்படாது. திருச்சேறை சென்று வணங்கவும்.

ஆறாமிடம்+புதன்: புதன் கெட்டு ஆறாமிடம் போக, நல்ல நினைவாற்றல் இருத்தல், புத்திசாலித்தனமான வேலை, வட்டி, கடன் ஆகியவற்றை நல்லமுறையில் திரும்ப செலுத்துதல், நரம்புகள் பழுதின்றி இருத்தல் போன்றவை சரிப்பட்டு வராது. மதுரை- சிம்மக்கல் ஆதி சொக்கநாதரை வழிபடவும்.

ஆறாமிடம்+குரு: குரு அசுபராகி ஆறாமிடம் அமர்ந்திட, ஆன்மிக வேலை, பேர், புகழ் சொல்லும் பணி, கொழுப்பில் லாத நல்ல உடல் ஆரோக்கியம், வாங்கிய கடனை நாணயமாகத் திரும்பக் கொடுப்பது போன்றவையெல்லாம் சரிப்பட்டு வராது.

புளியங்குடி- தாருகாபுரம் தட்சிணா மூர்த்தியை வணங்கவும்.

ஆறாமிடம்+சுக்கிரன்: சுக்கிரன் கெட்டு ஆறாமிடம் செல்ல, நல்ல கலைத்தொழில், அழகான- நுணுக்கமான வேலை, சர்க்கரை நோய் இல்லாமலிருப்பது, மனைவியைப் பிரியாமலிருப்பது போன்றவற்றுக்கு ஜாதகர் சரிப்பட்டு வரமாட்டார். விருதுநகர்- திருத்தங்கல் சென்று கருடாழ்வாரை வழிபடவும்.

ஆறாமிடம்+சனி: சனி கெட்டு ஆறாமிடம் ஏறிட, ஒரே இடத்தில் ஒரே வேலையாக- சுறுசுறுப்பாகப் பொருந்தி இருப்பது, வாதநோய் வராமலிருப்பது, கடன் கிடைப் பது, நல்லவிதமாக சம்பளம் பெறுவது போன்றவை சரிப்பட்டு வராது. ஆம்பூர் சென்று அனுமனை வழிபடவும்.

(தொடரும்)

செல்: 94449 61845