Advertisment

சந்திர கிரகணம் சங்கடம் தீர்க்குமா?எஸ். விஜயநரசிம்மன்

/idhalgal/balajothidam/will-lunar-eclipse-solve-dilemmas-vijayanarasimhan

ம்முறை ஏற்படக்கூடிய பகுதி சந்திர கிரகணம் உலகின் கீழ்க்கண்ட பகுதிகளில் தெரியும். ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரே-யா, வட அமெரிக்கா, தென் அமெரிக்காவின் பெரும் பகுதி, பசிபிக், அட்லாண்டிக், இந்து மகா சமுத்திரம், ஆர்க்டிக், அண்டார்டிகா மற்றும் நமது இந்திய பகுதிகளில் தெரியும். பகுதி சந்திர கிரகணம் இந்த சோபக்கிருது ஆண்டு ஐப்பசி மாதம் 12- ஆம் தேதி (அக்டோபர் 28 மற்றும் 29 தேதிகளில்) சனி- ஞாயிற்றுக் கிழமை நள்ளிரவு மணி 01-53-35 அன்று பௌர்ணமி திதி, 01.05 மணிக்கு பகுதி சந்திர கிரகணம் ஆரம்பமாகிறது. சிவப்பு நிலவாகத் தெரியும். 1.44-க்கு பூரண கிரகணம் ஏற்படும். அப்போது நிலவு- நிழலின் மத்தியில் இருக்கும். 2.22-க்கு பகுதி நேர கிரகணம் முடிவடைகிறது. நமது தலைநகர் புது டெல்லியில், மேஷ ராசியில் அஸ்வினி நட்சத்திரத்தில் சம்பவிக்கிறது. இது இந்தியாவில் எங்கும் தெரியாது.

Advertisment

dd

கிரகண சக்தியானது மிகுந்த உச்ச சக்தியாக பரிணமிக்கிறது. அல்லாமல் கிரகணம் தெரியக் கூடிய சம்பந்தப்பட்ட பகுதிகளில் பிரபஞ்சத்தின்மீதான, இயற்கையின்மீதான அதன் தாக்கங்களும் சில காலங்களுக்கு தொடர்கின்றன. சந்திர கிரகணத் தால் ஏற்படும் தாக்கங்கள் உடனடியாக பாதிப்புகளை அளித்தாலும், சூரிய கிரகணத்தால் ஏற்படும் பாதிப்பு சில மாதங்கள் தாமதமாகவே ஏற்படுகிறது அல்லது உணரப்படுகிறது.

ஒளி கிரகங்களான சந்திர, சூரியர்கள் கிரகணம் அடையும்போது பயிர் சேதம், நாட்டின் அரசருக்கு ஆபத்து ஆகியவை ஏற்படலாம். மேலும் இந்த கிரகண சுற்றை அசுபர்கள் செவ்

ம்முறை ஏற்படக்கூடிய பகுதி சந்திர கிரகணம் உலகின் கீழ்க்கண்ட பகுதிகளில் தெரியும். ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரே-யா, வட அமெரிக்கா, தென் அமெரிக்காவின் பெரும் பகுதி, பசிபிக், அட்லாண்டிக், இந்து மகா சமுத்திரம், ஆர்க்டிக், அண்டார்டிகா மற்றும் நமது இந்திய பகுதிகளில் தெரியும். பகுதி சந்திர கிரகணம் இந்த சோபக்கிருது ஆண்டு ஐப்பசி மாதம் 12- ஆம் தேதி (அக்டோபர் 28 மற்றும் 29 தேதிகளில்) சனி- ஞாயிற்றுக் கிழமை நள்ளிரவு மணி 01-53-35 அன்று பௌர்ணமி திதி, 01.05 மணிக்கு பகுதி சந்திர கிரகணம் ஆரம்பமாகிறது. சிவப்பு நிலவாகத் தெரியும். 1.44-க்கு பூரண கிரகணம் ஏற்படும். அப்போது நிலவு- நிழலின் மத்தியில் இருக்கும். 2.22-க்கு பகுதி நேர கிரகணம் முடிவடைகிறது. நமது தலைநகர் புது டெல்லியில், மேஷ ராசியில் அஸ்வினி நட்சத்திரத்தில் சம்பவிக்கிறது. இது இந்தியாவில் எங்கும் தெரியாது.

Advertisment

dd

கிரகண சக்தியானது மிகுந்த உச்ச சக்தியாக பரிணமிக்கிறது. அல்லாமல் கிரகணம் தெரியக் கூடிய சம்பந்தப்பட்ட பகுதிகளில் பிரபஞ்சத்தின்மீதான, இயற்கையின்மீதான அதன் தாக்கங்களும் சில காலங்களுக்கு தொடர்கின்றன. சந்திர கிரகணத் தால் ஏற்படும் தாக்கங்கள் உடனடியாக பாதிப்புகளை அளித்தாலும், சூரிய கிரகணத்தால் ஏற்படும் பாதிப்பு சில மாதங்கள் தாமதமாகவே ஏற்படுகிறது அல்லது உணரப்படுகிறது.

ஒளி கிரகங்களான சந்திர, சூரியர்கள் கிரகணம் அடையும்போது பயிர் சேதம், நாட்டின் அரசருக்கு ஆபத்து ஆகியவை ஏற்படலாம். மேலும் இந்த கிரகண சுற்றை அசுபர்கள் செவ்வாய், சனி பார்க்குமேயானால் நாட்டில் பசி, பட்டினி, பஞ்சம் மற்றும் கொள்ளை நோய்கள் ஏற்படும். இது பகுதி கிரகணமாக அமைவதால் நம் நாட்டில் மற்றும் மேற்சொன்ன நாடுகளில் சில பாதிப்புகள் இருக்கும் என்று வராகமிகிரர் குறிப்பிடுகிறார்.

சர ராசியில் ஏற்படும் கிரகணத்தின் பாதிப்பு ஒருசில மாதங்களுக்கு இருக்கும் என்றும் குறிப்பிடுகிறார். (சுமார் 4, 5 மாதங்கள் மட்டும்) மேஷம் நெருப்பு இராசியாவதால், இரயில், விமான விபத்துகள், ரயில்வே தொழிலாளர்கள் போராட்டம் ஆகியவை ஏற்படலாம். மேஷத்தின் அதிபதியான அசுபர் செவ்வாயின் வீடு ஆவதால், நாட்டின் எல்லைகளில் சில பிரச்சினைகள் ஏற்படலாம். தீவிரவாதிகள், தொல்லைகள் தாக்குதல்கள் ஆகியவையும் ஏற்படலாம். ஆளும் கட்சியில் பிளவு ஏற்படும். குண்டு வெடிப்பு மற்றும் அழிவுகள் ஏற்படும். அஸ்வினி நட்சத்திரம் குறிகாட்டும் வடகிழக்கு திசையில் இந்த நிகழ்வுகள் ஏற்படலாம். பொதுவாக மக்களுக்கு ஏற்படும் இன்னல்களைவிட ஆள்பவர்களுக்கு அதிகமாக இருக்கும்.

பண்டைய ஜோதிட நூல்களில், மிக நெருக்கமான காலங்களில் அல்லது அரை மாத கால இடைவெளியில் ஏற்படும் சூரிய, சந்திர கிரகணங்கள் போர் அழிவுகளுக்கு நிமித்தமாகக் கொள்ளப்படுகிறது. (சூரிய கிரகணம் அக்டோபர் 14 ஆம் தேதி ஏற்பட்டது) மேலும், வணிக விலை இறங்கப் போக்கு, பின்னடைவு, சரிவு, விலை மந்தம், வியாபார சுணக்கம் ஆகியவற்றால் பொருளாதார மந்த நிலை, தொழில் பின்னடைவு ஆகியவையும் ஏற்படலாம்.

சந்திர கிரகணம் செவ்வாயை அதிபதியாகக் கொண்ட கால புருஷனுக்கு முதல் பாவமான சரம் மற்றும் நெருப்பு ராசியுமான மேஷ ராசியில் ஏற்படுகிறது. இது பாஞ்சாலம், உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம் மேற்கு பகுதி கலிங்கம், (தெலுங்கானா, ஆந்திரப்பிரதேசம் வடகிழக்குப் பகுதி, ஒடிசா, மத்திய பிரதேசத்தில் சில பகுதிகள் சௌரஸ்வனா (மதுரா), வேட்டைகாரர்கள், காட்டுவாசிகள், மலைவாழ் மக்கள் மற்றும் தீ, வெப்பத்தில் பணிபுரிபவர்கள் ஆகியோருக்கு இன்னல் கள் ஏற்படும்.

மேஷத்தின் அதிபதியான செவ்வாய் தைரிய பாவமான மூன்றாம் இடத்தில் உள்ளார். எனவே, ரயில், விமான விபத்துகள் ஏற்படலாம் அல்லது அதில் பணிபுரிபவர்கள் வேலை நிறுத்தம் செய்யலாம். லக்னத் தில் உள்ள சந்திரன் ராகுவுடன் இணைந்து பாதிப்பில் உள்ளது. எனவே, நாட்டில் சுகாதாரமின்மை, மன அழுத்தம், நிலையற்ற தன்மை ஆகியவை ஏற்படும். நெருப்பு ராசியில் இடம்பெற்றுள்ள ராகு எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும்.

Advertisment

dd

இதன் காரணமாக போர் மேகங்கள் சூழும், இயற்கை சீற்றங்கள், கொள்ளை நோய்கள், நிலநடுக்கம், அரசியல் இடையூறுகள், கூட்டு மரணங்கள், குற்றங்கள் அதிகரித்தல், கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற சமூக சீர்கேடுகள் அதிகரிக்கும். விபத்து, குண்டு வெடித்தல், தீ, எல்லைத் தகராறுகள் போன்றவற்றிற்கு மூன்றாமிட செவ்வாய் காரணமாகிறார். களத்திர பாவ பாதிப்பால் வெளிநாட்டு பிரச்சினைகள், முக்கிய பிரமுகர்கள் வாழ்க்கையில் விவாகரத்து போன்றவற்றால் குடும்பத்தில் புயல் உருவாகக் கூடும். 5-ஆம் அதிபதி 7-ல் நீசமடைதல் பங்குச்சந்தை, 5 ஆம் பாவத் தொடர்புடைய காரகங்கள், கேளிக்கைத் துறைகள் ஆகியவை பாதிப்படையும். புதன் பாதிப்பு வெளிநாட்டு ஒப்பந்தங்கள், வணிக மற்றும் வியாபார ஒப்பந்தங்கள் முறிவடையும். ஊழல், விவாகரத்து, பெண்களுக்கு எதிரான விவகாரங்கள் ஆகியவை சுக்கிரன் பாதிப்பு நிகழும். இன்றைய வேதை நாள் சனியாகி, அதன் அதிபதி சனி 6-ஆம் அதிபதியாகி 7-ல் தன் ஆட்சி வீட்டில் அமர்ந்துள்ளது பொதுவான மகிழ்ச்சி மட்டுமன்றி நாட்டின் சந்தோஷ நிலையும் அதிகரிக்கும். லக்னத்தில் உள்ள சுக்கிரன் வக்ர சனி மற்றும் வக்ர குருவின் பார்வை பெறுவதால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங் கள் அதிகரிக்கும். இந்த நிலை சுக்கிரனால் ஏற்பட்டாலும், சுபர் குருவின் பார்வையால் நல்லதே நடக்கும்.

லக்னாதிபதி சூரியன் மூன்றில் நீசப்பட்டு, ராகு, கேது அச்சுக்கிடையே கிரகணமாகி உள்ளார். எனவே, 3-ஆம் பாவ சம்பந்தப்பட்ட காரகங்கள் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். நமது இரு அண்டை நாட்டினர் மூலம் தொல்லைகள் அதிகரிக்கும். ரயில்வே, கம்யூனிகேஷன், மீடியா மற்றும் படைப்பாளர்களுக்கு வழக்கு விவகாரங்கள் ஆகியவை ஏற்படலாம்.

பாதிக்கப்பட்ட சூரியன் மிக முக்கிய நபரின் மறைவை உணர்த்துகிறது. பாதிக்கப்பட்ட செவ்வாய் விபத்துகள், தீ விபத்துகள், எல்லை மோதல்கள், புதன், பிரபலமான எழுத் தாளரின் உடல் நலக் குறைவு அல்லது மறைவை உணர்த்துகிறது. 3-ல் கேது இருப்பது எல்லையில் ஏற்படும் குற்றங்களையும், மோசடிகளையும், சதி திட்டங்களையும், ரகசிய திட்டங்களையும், வஞ்சனை செய்பவர்களையும், ஏமாற்றுக்காரர்களையும் குறிகாட்டுகிறது.

9-ஆம் இடம் என்னும் பாக்கிய பாவம் சட்டம், மதம், கப்பல் துறை, விஞ்ஞானம் மற்றும் கண்டுபிடிப்புகளைக் குறிக்கிறது. இவ்விடத்தில் பாதிப்பு அடைந்த சந்திரன் இருப்பது பெண்களுக்கு பிரச்சினைகளையும், வெளிநாட்டுக் கொள்கைகள் தோல்வியையும் ஏற்படுத்துகிறது. பாதிப்படைந்த குரு- மதம் சம்பந்தமான வழக்கு விவகாரங்களையும், இனக் கலவரங்களையும், பொருளாதார பின்னடைவுகளையும், அதிக செலவினங்களையும் ஏற்படுத்துகிறது.

செவ்வாய், சனியால் பார்க்கப்பட்ட ராகுவின் பாதிப்பு, அரசு மற்றும் அரசியல் பாதிப்புகள், உடன்பாடு, ஒப்பந்தங்கள் மற்றும் வெளிநாட்டு உறவுகள் பிரச்சினைகள் ஆகியவை ஏற்படும். வெளிநாட்டுத் தூதுவர்களால் அரசுக்கு எதிரான சதி திட்டங்கள் தீட்டப்படும்.

ஜனன ஜாதகத்தில் செவ்வாய்மீது ஏற்படும் கிரகணமானது நச்சு நிறைந்தது, கொடுமையானது எனலாம். ஜனன செவ்வாய் மீது சந்திர கிரகணம் ஏற்பட்டபோது மகாத்மா கொல்லப்பட்டார். அதேநிலை அப்ரகாம் லிங்கனுக்கும் ஏற்பட்டது. சூரிய கிரகணப் புள்ளியில் செவ்வாய் வந்த சில மாதங்களில் கென்னடியும், ஜனன சூரியனுக்கு எதிரில் ரிஷபத்தில் கிரகணம் ஏற்பட்ட ஐந்தாவது மாதத்தில் இந்திரா பிரியதர்ஷினியும் கொல்லப்பட்டனர்.

இரண்டாவது உலகப் போர் நிகழ்ந்த காலத்தே சர ராசிகளில் நான்கு அசுப கிரக இணைவுகள் காணப்பட்டது போலவே தற்போது நான்கு அசுப கிரகங்கள் சர ராசியில் இருக்கிறனர்.

14-10-2023 அன்று ஏற்பட்ட கங்கண சூரிய கிரகணம் நம் நாட்டில் தெரியவில்லை அதனால் நமது நாட்டுக்கு பெரிய பாதிப்பில்லை.

செல் 97891 01742

bala031123
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe