ரு லக்னத்திற்கு எட்டுக்குரியவரே அஷ்ட மாதிபதியாவார். அந்த அஷ்டமாதிபதியும், அஷ்டமத்தில் நின்ற கிரகங்களும் ஒருவருக்கு யோக, அவயோகத்தைத் தருகின்றன.

Advertisment

ஒருவர் ஜாதகத்தில், பூர்வஜென்மத்தில் செய்த பாவகாரியத்தைக் குறிக்கும் இடம் 8-ஆம் பாவகமாகும். ஜாதகத்தில் 8-ஆம் பாவக அதிபதி, 8-ல் நின்ற கிரகங்களே ஒருவருக்கு எதிர் பாராத துன்பம், அவதூறுகளைத் தருபவர்கள். ஒருசிலர் தான் உண்டு; தன் வேலையுண்டு என்று இருந்தாலும் பிரச்சினை தேடிவரும். வம்பு, பொய்வழக்கு, அவமானம், கண்டம், விபத்து போன்றவையும் தேடிவரும். அதற்கான காரணங் களைப் பார்க்கலாம்.

ஒரு வினையை நடத்த ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் சம்பந்தம்பெற வேண்டும்.

ஒருவருக்கு சாதகமான வினை நடந்தால், அந்த ஜாதகருக்கு நல்வினையை நடத்து பவருக்கும், 1, 5, 9 பாவகங்களுக்கும் சம்பந்தம் இருக்கும். துன்பம் தரும் வினை நடந்தால், அந்த ஜாதகருக்கு துன்பவினையை நடத்து பவருக்கும், 8-ஆம் பாவகத்துக்கும் சம்பந்தம் இருக்கும். சாதகமற்ற வினை ஒருவரிடம் இருந்து வந்தால், அந்த எதிராளி உங்கள் ஜென்ம லக்னத்திற்கு 8-ஆம் பாவகத்தை லக்னமாகவோ, ராசியாகவோ கொண்டவர். அல்லது உங்கள் ஜென்ம லக்னத்திற்கு 8-ஆம் பாவக அதிபதியின் தசையை நடப்பு தசையாக கொண்டவர்மூலமே துன்பம் வரும்.

துன்பம் வராத மனிதர்கள் இல்லை என்றாலும், வரும் துன்பத்தால் ஒருவருக்கு பாதிப்பு ஏற்படுமா என்பதை ஜோதிட ரீதியாக அறியமுடியும். அதன்படி- 8-ஆம் அதிபதி 1, 5, 9-ல் இருத்தல். 8-ஆம் அதிபதி லக்னாதிபதியுடன் இணைதல் அல்லது பார்த்தல்.

8, 10-ஆம் அதிபதிகள் இணைவு அல்லது பார்வை.

மேலேகூறிய அமைப்புகள் இருந்தால் துன்பம் தேடிவரும்.

Advertisment

8-ஆம் அதிபதி பன்னிரு பாவகங்களில் நிற்பதால் ஏற்படும் பலனைப் பார்க்கலாம்.

8-ஆம் அதிபதி லக்னத்தில் நின்றால்:

உடல்நலக்குறைவு, தற்கொலை எண்ணம், தாழ்வு மனப்பான்மை, தொடரும் துரதிர்ஷ்டம், தனிமையுணர்வு, ஒட கொடுக்கவேண்டிய நிலை, தீராத கடன், விபத்து, வழக்குகள், தலைமறைவாக வேண்டிய சூழல் ஆகியவை வரும். தலை, முகம் தொடர்பான பாதிப்பும் வரலாம். எதிரிகள் மத்தியில் வாழும் சூழல் ஏற்படும். நாத்திகம் பேசுவார்.

8-ஆம் அதிபதி இரண்டில் நின்றால்:

வறுமை, பேச்சால் பெருநஷ்டம், குடும்பத் தைப் பிரிதல், கண் பார்வைக்குறைவு ஏற்பட லாம். இழந்த பொருள் திரும்பக் கிடைக் காது.

8-ம் அதிபதி மூன்றில் நின்றால்:

Advertisment

பயவுணர்வு, செவித்திறன் குறைவுபடலாம். இளைய சகோதரத்தால் நஷ்டம் ஏற்படும். கீழ்ப்படியாத வேலையாட்கள் கிடைப் பார்கள்.

8-ஆம் அதிபதி நான்கில் நின்றால்:

தாய்க்கு கண்டம், தாயுடன் பிரிவு, வீடுவாசல் இழப்பு, வாகனத் திருட்டு, படிப்பில் ஓரிரு கல்வி யாண்டு வீணாதல் அல்லது பாதியில் நின்று போதல் ஏற்படும்.

8-ஆம் அதிபதி ஐந்தில் நின்றால்:

குழந்தையின்மை, அபார்ஷன், அவப்பெயர், அவமானம், மன நிம்மதியின்மை, முடிவெடுக்கும் திறன் இன்மை, உயில் சொத்து, பாலிசி பணம் இழத்தல் ஆகியவை ஏற்படும். மேலும், பெரும் நஷ்டம், தற்கொலை எண்ணங்கள், வறுமை ஏற்படும்.

8-ஆம் அதிபதி ஆறில் நின்றால்:

தாய்மாமனுக்கு கண்டம், தீராத நோய், தத்துப் புத்திர யோகம் ஏற்படும். பெண்ணானால் கணவருக்கு ருண, ரோக, சத்ரு தொல்லை அல்லது திருமண தாம்பத்திய வாழ்வில் சிக்கல் ஏற்படும்.

8-ஆம் அதிபதி ஏழில் நின்றால்:

இரண்டு திருமணம், தொழில் கூட்டாளி பிரச்சினை, நண்பர்களால் வம்பு, வழக்கு, திருமண வாழ்வில் பிரிவு, தீயவருடன் இணைந்திருக்கும் நிலை ஏற்படலாம். விபத்து நடக்கலாம்.

8-ஆம் அதிபதி எட்டில் நின்றால்:

p

லக்னாதிபதி பலம் குறைந்தால் ஆயுள்பங்கம் ஏற்படும். வாழ்நாள் முழுவதும் ஏதாவது பிரச்சினையில் சிக்கித் தவிப்பார். நோய்கள், எதிரிகள் தொல்லை, தாங்கமுடியாத கடன் தொல்லை இருக்கும். வம்பு, வழக்கு, விபத்து ஏற்படும். தனிமையில் தவிப்பார். ஆறுதலாய் இருக்க முன்வருபவரையும் நோகடித்து விலக்குவர்.

8-ஆம் அதிபதி ஒன்பதில் நின்றால்:

தந்தைக்கு கண்டம் அல்லது தந்தையுடன் பிரிவு, தந்தைவழி சொத்து நஷ்டமாதல், தொழில் இழப்பு- சேமிப்பும் கைகொடுக்காத நிலை ஏற்படும். வெளியூர் அல்லது வெளிநாட்டில் சிக்கித் தவித்தல், வெளிநாட்டுத் தொடர்பு களால் சிறைத்தண்டனை- பெரும் நஷ்டம் ஏற்படும். மதத்தை இழிவுபடுத்துவர். மற்றவர் சொத்தை அபகரிப்பர் அல்லது பிறருடைய சொத்து தானே தேடிவரும்.

8-ஆம் அதிபதி பத்தில் நின்றால்:

தொழிலில் அடிக்கடி நஷ்டம், தொழிலுக்காக அதிக உழைப்பு, துன்பங்களை சந்திக்கநேரும்.

8-ஆம் அதிபதி பதினொன்றில் நின்றால்:

மூத்த சகோதரத்துக்கு கண்டம், மூத்த சகோதரத்தால் பொருள் இழப்பு ஏற்படும்.

8-ஆம் அதிபதி பன்னிரண்டில் நின்றால்:

மகா கஞ்சனாக மாறலாம். சரியாக உண்ணமுடியாத- தூங்கமுடியாத நோய் பாதிப்பு ஏற்படலாம். தாம்பத்திய வாழ்வில் சிக்கல் வரலாம். ஆயுள்குறைவு, வழக்குகளில் தோல்வி வரலாம்.

ஒருசிலர் வம்பைத் தேடி விலைகொடுத்து வாங்குவார்கள். விலைகொடுத்து வாங்கப் போனால்கூட வம்பு அவர்களை விட்டு விலகியோடும். தவறே செய்தால்கூட அதன் விளைவு சரியாகவே இருக்கும்.

எட்டாம் பாவகம் சில நன்மைகளையும் செய்யும். 8-ஆம் பாவகத்திற்கு, 8-ல் நின்ற கிரகத்திற்கு லக்னசுபர், குருவின் பார்வை இருந்தால் சுபயோகம் பெற்று உயில் சாசனம் மூலமாக சொத்துசுகங்கள், மனைவிவழி சொத்துகள், சூது, ரேஸ், லாட்டரி, புதையல் போன்றவற்றாலும் திடீர் தனலாபம் கிடைக்கும்.

8-ஆமிடம் அவயோக பாவமானால் கோர்ட் விவகாரங்கள், சண்டை சச்சரவுகள், வீண்செலவுகள், பணம், பொருள் நஷ்டமாதல், தீராத வியாதி, மரணம், விபத்துகள் ஏற்படும்.

பொதுவாக, லக்னத்திற்கு 8-ஆமிடம் கடக மாகவோ, சிம்மமாகவோ, மகரம் அல்லது கும்பமாகவோ இருந்தால், 8-ஆமிடம் தப்பாமல் வேலை செய்யும்.

மேற்கண்ட அமைப்புகளிலுள்ள கிரகங்கள் உச்ச பலன் அடைந்தால் ஊழ்வினை தப்பாமல் நடக்கும்.

8-ஆம் பாவகத்தினால் ஏற்படும் நோய்களை சரம், ஸ்திரம், உபயம் அறிந்து பலன்கூற வேண்டும்.

8-ஆம் பாவகம் சர ராசியானால் கபம், வாதம், புற்றுநோய், கல்லீரல், சிறுநீர்கோளாறு, வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். ஸ்திர ராசியானால் மார்புச் சளி, கல்லடைப்பு, மூச்சுத் திணறல், இதயம் நின்றுபோதல் ஆகியவை ஏற்படும். உபய ராசியானால் ஆஸ்துமா, நீரழிவு, குடல் நோய்கள் ஏற்படும்.

அஷ்டமாதிபதியால் துன்பம் வரும் காலம் 8-க்குடையவன் அல்லது 8-க்குடையவன் சாரத்தில் அல்லது 8-ல் நின்ற கிரகத்தின் சாரத்தில் ஒரு கிரகம் நின்று தசா நடத்தும் போதும், 8-க்குடையவன் கோட்சாரத்தில் லக்ன, கேந்திரங்களில் சஞ்சரிக்கும்போதும், 8-க்குடையவன் கோட்சாரத்தில் லக்னாதிபதி யுடன் இணையும்போதும் அல்லது லக்னாதி பதியைப் பார்க்கும்போதும், 8-க்குடையவன் கோட்சாரத்தில் 10-க்குடையவனுடன் இணையும்போதும் அல்லது 10-க்குடைய வனைப் பார்க்கும்போதும் அஷ்டமாதிபதி தோஷம் துன்பம் தரும்.

பரிகாரம்

8-ஆம் அதிபதி அல்லது 8-ல் நின்ற கிரகத் திற்கான நட்சத்திரத்திற்குப் பரிகாரம்செய்ய நல்ல பலன் தரும்.

தினமும் மாலை 4.30 முதல் 6.00 மணிவரை சிவ வழிபாடு செய்யவேண்டும்.

சனிப்பிரதோஷ நாட்களில் சிவ வழிபாடு, உளுந்து தானம் செய்யவேண்டும்.

முறையான பித்ருக்கள் வழிபாடு, தீராத பல பிரச்சினைகளுக்கும் தீர்வு தரும்.

செல்: 98652 20406