ஜாதகத்தில் செவ்வாயில் நிலையைக் கொண்டு ஒருவரது உடல்நலம், அவர் தைரியமானவரா- அவருக்கு ஏதாவது விபத்து நிகழுமா போன்ற விவரங்களைக் கூறிவிடலாம். செவ்வாய் பூமிகாரகன். சகோதரர்களுக்கிடையிலான உறவையும் குறிக்கும்.
ஒரு ஜாதகத்தில் செவ்வாய் லக்னத்தில் சுய வீட்டில் அல்லது உச்சமாக இருந்தால், அந்த ஜாதகர் பூமி, வாகனத் துடன் மகிழ்ச்சியாக வாழ்வார். நண்பர் கள் பலர் அமைவார் கள். சிலர் பெரிய பதவி களில் இருப்பார்கள். பலர் இராணுவத்தில் பணியாற்றுவார்கள். பலசாலிகளாக இருப் பார்கள். செவ்வாய் பலவீனமாக அல்லது பாவகிரகத்துடன் இருந்தால் அல்லது பார்க்கப்பட்டால் அவரது வாழ்க்கையில் பல சிக்கல்கள் நேரும்.
பலருக்கு அடிக்கடி விபத்துகள் நிகழும்.
திருமண வாழ்க்கை யிலும் பிரச்சினைகள் ஏற்படும். சிலருக்கு மறுமணம் செய்யவேண்டிய சூழல் அமையும்.
சிலர் உரிய நேரத்தில் உணவருந்த மாட்டார் கள். தலைவலி, மூட்டுவலி உண்டாகும்.
லக்னத்திற்கு இரண்டாம் பாவத்தில் செவ்வாய் இருந்தால் அந்த ஜாதகருக்கு பலவித சந்தோஷங்களும் கிடைக்கும். அதிகமாக உணவருந்துவார். அதனால் வயிற்றில் கோளாறு ஏற்படும். செவ்வாய் பாவகிரகத்துடன் இருந்தால் அல்லது பார்க்கப்பட்டால் அவரது குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்படும். சிலருக்கு மறுமணம் செய்யும் நிலை உண்டாகும். செவ்வாய் பலவீனமாக இருந்தால் ஜாதகர் சரியாக சாப்பிடமாட்டார். வேலைக்காக அலைந்து கொண்டிருப்பார். சிலர் மற்றவர்களை ஏமாற்றிப் பிழைக்க நினைப்பார்கள். சிலருக்கு பித்தம், தோல்நோய் ஏற்படும்.
செவ்வாய் 3-ல் சுயவீட்டில் அல்லது உச்சமாக இருந்தால், அந்த ஜாதகர் அதிக தைரியம் கொண்டவராக இருப்பார். நன்கு உணவுண்பார். அந்த செவ்வாய் ராகு, சனியால் பார்க்கப் பட்டால் அவருக்கு சகோதரர்களுடன் உறவு சரியாக இருக் காது. சிலருக்கு டைஃபாய்டு காய்ச்சல் வரும். சிலரது உடல் மிகவும் பருமனாக இருக்கும்.
செவ்வாய் 4-ல் இருந்தால் அந்த ஜாதக ரின் குடும்ப வாழ்க்கையில் பல தொல்லை கள் ஏற்படும். பலருக்குத் திருமணத்தடை உண்டாகும். நிறைய பேசுவார்கள். ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 4-ல் செவ்வாய் இருந்தால் அவர் எப்போதும் சண்டை யிடுவார். கணவன்- மனைவியிடையே உறவு நன்றாக இருக்காது. அவர் நன்கு சாப்பிடுவார்; தூங்குவார். பிறருக்குத் தொல்லைகள் தருவார்.
செவ்வாய் ஐந்தாம் பாவத்திலிருந்து, அந்த செவ்வாயை பாவகிரகம் பார்த்தால் அவருக்கு வயிற்றில் நோய் ஏற்படும். குழந்தை பிறப்பதில் பிரச்சினை உண்டாகும். பெண்களுக்கு மாதவிடாய் சரியாக வராது. கர்ப்பப்பையில் பிரச்சினை, ரத்தக் குறைவு இருக்கும். உடலில் கால்சியம் குறைவாக இருக்கும்.
6-ல் செவ்வாய் இருந்தால் அந்த ஜாதகர் அதிகமாக கோபப்படுவார். செவ்வாய்க்கு சனியின் பார்வை இருந்து, ஜாதகருக்கு தசா காலங்கள் சரியில்லாமல் இருக்கும்போது யாரோ சூனியம் செய்துவிட்டதாக உணர்வார். அவர் மிளகாய், உப்பு, வறுத்த பொருட்களை அதிகம் உண்பார். அதனால் ரத்த கொதிப்பு உண்டாகும்.
7-ல் செவ்வாய் இருந்தால் ஜாதகருக்கு குடும்ப வாழ்வில் பல பிரச்சினைகள் ஏற்படும். செவ்வாயின் ஏழாம் பார்வை லக்னத்திற்கு இருப்பதால் ஜாதகர் ருசியாக உண்பார். கோபம் அதிகமாக வரும். இரண்டாம் பாவத்திற்கும் பார்வை இருப்பதால் தேவையற்றதைப் பேசுவார். அதிகம் உண்பார். அவரது காலில், வயிற்றில் பிரச்சினை ஏற்படும்.
8-ல் செவ்வாய் இருந்தால் சிலருக்கு ரத்தம் சம்பந்தமான நோய் இருக்கும். சிலருக்கு அடிக்கடி விபத்து நிகழும். செவ்வாய் சனியால் பார்க்கப்பட்டால், தீய தசாபுக்திகளில் சிலருக்கு உயிருக்கே ஆபத்து உண்டாகும். செவ்வாய் ராகுவுடன் இருந்தால் சிலருக்கு மறுமணம் நடக்கும். 8-ல் உள்ள செவ்வாய் இரண்டாம் பாவத்தையும் மூன்றாம் பாவத்தையும் பார்க்கும். சிலர் வீண் பேச்சால் பகைவர்களை உருவாக்கிக்கொள்வார்கள்.
9-ல் செவ்வாய் இருந்தால் அந்த ஜாதகர் யாரையும் மதிக்கமாட்டார். தந்தையுடன் உறவு சரியாக இருக்காது. உணவு விஷயத்தில் கட்டுப்பாடு இருக்காது. அந்த செவ்வாய் சனி, ராகுவுடன் இருந்தால் அவர் தன் பூர்வீக சொத்தை அழித்துவிடுவார். வீணாக சுற்றிக்கொண்டிருப்பார். மரியாதைக் குறைவானவர்களுடன் பழகுவார். சரியாக உணவுண்ண மாட்டார்.
10-ல் செவ்வாய் இருந்தால் அந்த ஜாதகர் புகழுடன் இருப்பார். குடும்பத்தின் குத்துவிளக்காக விளங்குவார். கடுமையாக உழைப்பார். சந்திரனுடன் செவ்வாய் இருந்தால் பெரிய அரசியல்வாதியாகத் திகழ்வார். நிறைய நிலங்கள் இருக்கும். குருவுடன் செவ்வாய் இருந்தால் சிலர் பிறரை ஏமாற்றுவார்கள். சொத்துகளை அபகரிக்க முயல்வார்கள்.
11-ல் செவ்வாய் இருந்தால் அந்த ஜாதகர் பணக்காரராக இருப்பார். செவ்வாய், சனி மற்றும் ராகுவுடன் இருந்தால் வயிற்றில் பிரச்சினை ஏற்படும்.
12-ல் செவ்வாய் இருந்தால் அந்த ஜாதகர் கோபகுணம் கொண்டவராக இருப்பார். செவ்வாய், சனியுடன் இருந்தால் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்காது. செவ்வாய் குருவுடன் இருந்தாலோ அல்லது குருவால் பார்க்கப்பட்டாலோ அவர் புகழுடன் விளங்குவார்.
பரிகாரங்கள்
வறுத்த உணவுப் பொருட்களை அதிகம் உண்ணக்கூடாது. செவ்வாய்க்கிழமைகளில் அசைவ உணவைத் தவிர்க்கவேண்டும். குலதெய்வ வழிபாடு அவசியம். தினமும் இரவில் தூங்குவதற்குமுன் சிறிது வெல்லம் சாப்பிடவேண்டும். செவ்வாய்க்கிழமையன்று ஆஞ்சனேயரை நான்குமுறை சுற்றிவந்து வணங்கவேண்டும். வெல்லம், வாழைப்பழம், பூந்தி ஆகியவற்றை அவருக்குப் பிரசாதமாகப் படைத்து, பின்னர் அவற்றை பிறருக்குத் தந்து தானும் உண்ணவேண்டும். சகோதரர்களுடன் இணக்கமாகப் பழக வேண்டும். படுக்கையறையில் சிவப்பு வண்ணத்தைத் தவிர்க்கவும். வீட்டின் தென் கிழக்கில் நீர்பிடித்து வைப்பதுகூடாது.
செல்: 98401 11534