குருப்பெயர்ச்சி பொதுப் பலன்கள் அனைவர்க்கும் அதிர்ஷ்டம் தருமா? சப்தரிஷி நாடி ஜோதிட விளக்கம்! -மணிமொழி சப்தரிஷி நாடி ஜோதிடர் சென்ற இதழ் தொடர்ச்சி (060625)...

/idhalgal/balajothidam/will-general-benefits-gurupeyarchi-bring-luck-everyone-saptarishi-nadi

குரு + குரு

கோட்சார குரு உங்கள் பிறப்பு ஜாதகத்தில், குரு இருக்கும் ராசிக்கு, 1, 5, 9, 7, 2, 12-ஆவது ராசிகளில் கோட்சார நிலையில் சஞ்சாரம் செய்யும் காலங்களில் ஜென்ம குருவும் கோட்சார குருவும் இணைந்த நிலை உங்கள் வாழ்வில் நன்மைகளையே தரும். குடும்பம், தொழில், உத்தியோகம், கல்வி என எல்லாவற்றிலும் இருந்துவந்த தடை, தாமதம் என வாழ்க்கை பிரச்சினைகள் அனைத்தும் தீர்வுபெற்று மனதில் நிம்மதி உண்டாகும். நீங்கள் ஈடுபட்டு செய்யும் காரியம், செயல்களில் வெற்றியை அடைவீர்கள். நீங்கள் எடுத்து செய்யும் காரியங்கள் அனைத்தும் உங்கள் எண்ணப்படியே மனம்போல் வெற்றியாக அமையும். அந்த வெற்றியால் செல்வம் பெருகும். உங்கள் கைவிட்டுப்போன பொருள்கள், உறவுகள், நட்புகள் என அனைத்தும் திரும்ப உங்களுக்கு கிடைக்கும். சிரமம், கஷ்டம், பிரச்சினைகள் இல்லாத அமைதியான வாழ்க்கை அமையும் காலம் இது. நீங்கள் செய்யும் எந்தத் தொழிலாக, உத்தியோகமாக இருந்தாலும் அதில் உயர்வும், வருமானமும், பெயர், புகழ் உண்டாகும், பணப்பற்றாக்குறை நீங்கும், பணம் கையில் தாராளமாக புரளும், சரீரத்தில் இருந்த நோய் தாக்கம் நீங்கும், நண்பர்களாலும், உறவினர் களாலும், உதவி கிடைக்கும். அவர்களிடம் இருந்து மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். பொதுப் பிரச்சினைகளைத் தீர்த்துவைக்க பெரிய மனிதர் நிலையை அடைவீர்கள். உயர்ந்த அந்தஸ்து அதிகார பதவியில் இருப்பவர்கள், அறிஞர்களை சந்திக்கும் நிலையும், அவர்கள் நட்பும் உண்டாகும். வாழ்க்கையில் அந்தஸ்து, சமுதாயத்தில், தாங்கள் வசிக்கும் பக்தியில் பிரபல நிலையை அடைவீர்கள். இதுவரை இருந்த விரக்தி நிலைமாறும். எந்த காரியம் செயலையும், பதட்டமில்லாமல், மனக்குழப்பம் இல்லாமல், பொறுமை, புத்திசாலித் தனமாக சிந்தித்துச் செயல் படுவீர்கள். உங்கள் உதவியை நாடி, தேடிவந்தவர்களுக்கு அவர்கள் பிரச்சினைகள் தீர நல்லவழியை கூறுவீர்கள். குடும்பத்தில் மனைவி, குழந்தைகளின் அனைத்து ஆசைகளையும் அவர்களின் தேவைகளை தட்டாமல் நிறைவேற்றி வைத்து அவர்களை மகிழ்ச்சியாக இருக்கச் செய்வீர்கள். தேவையற்ற செயல்களில் ஈடுபடாமல் உங்கள் எதிர்கால வாழ்வை உயர்வாக அமைத்துக்கொள்ள அதற்கு

குரு + குரு

கோட்சார குரு உங்கள் பிறப்பு ஜாதகத்தில், குரு இருக்கும் ராசிக்கு, 1, 5, 9, 7, 2, 12-ஆவது ராசிகளில் கோட்சார நிலையில் சஞ்சாரம் செய்யும் காலங்களில் ஜென்ம குருவும் கோட்சார குருவும் இணைந்த நிலை உங்கள் வாழ்வில் நன்மைகளையே தரும். குடும்பம், தொழில், உத்தியோகம், கல்வி என எல்லாவற்றிலும் இருந்துவந்த தடை, தாமதம் என வாழ்க்கை பிரச்சினைகள் அனைத்தும் தீர்வுபெற்று மனதில் நிம்மதி உண்டாகும். நீங்கள் ஈடுபட்டு செய்யும் காரியம், செயல்களில் வெற்றியை அடைவீர்கள். நீங்கள் எடுத்து செய்யும் காரியங்கள் அனைத்தும் உங்கள் எண்ணப்படியே மனம்போல் வெற்றியாக அமையும். அந்த வெற்றியால் செல்வம் பெருகும். உங்கள் கைவிட்டுப்போன பொருள்கள், உறவுகள், நட்புகள் என அனைத்தும் திரும்ப உங்களுக்கு கிடைக்கும். சிரமம், கஷ்டம், பிரச்சினைகள் இல்லாத அமைதியான வாழ்க்கை அமையும் காலம் இது. நீங்கள் செய்யும் எந்தத் தொழிலாக, உத்தியோகமாக இருந்தாலும் அதில் உயர்வும், வருமானமும், பெயர், புகழ் உண்டாகும், பணப்பற்றாக்குறை நீங்கும், பணம் கையில் தாராளமாக புரளும், சரீரத்தில் இருந்த நோய் தாக்கம் நீங்கும், நண்பர்களாலும், உறவினர் களாலும், உதவி கிடைக்கும். அவர்களிடம் இருந்து மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். பொதுப் பிரச்சினைகளைத் தீர்த்துவைக்க பெரிய மனிதர் நிலையை அடைவீர்கள். உயர்ந்த அந்தஸ்து அதிகார பதவியில் இருப்பவர்கள், அறிஞர்களை சந்திக்கும் நிலையும், அவர்கள் நட்பும் உண்டாகும். வாழ்க்கையில் அந்தஸ்து, சமுதாயத்தில், தாங்கள் வசிக்கும் பக்தியில் பிரபல நிலையை அடைவீர்கள். இதுவரை இருந்த விரக்தி நிலைமாறும். எந்த காரியம் செயலையும், பதட்டமில்லாமல், மனக்குழப்பம் இல்லாமல், பொறுமை, புத்திசாலித் தனமாக சிந்தித்துச் செயல் படுவீர்கள். உங்கள் உதவியை நாடி, தேடிவந்தவர்களுக்கு அவர்கள் பிரச்சினைகள் தீர நல்லவழியை கூறுவீர்கள். குடும்பத்தில் மனைவி, குழந்தைகளின் அனைத்து ஆசைகளையும் அவர்களின் தேவைகளை தட்டாமல் நிறைவேற்றி வைத்து அவர்களை மகிழ்ச்சியாக இருக்கச் செய்வீர்கள். தேவையற்ற செயல்களில் ஈடுபடாமல் உங்கள் எதிர்கால வாழ்வை உயர்வாக அமைத்துக்கொள்ள அதற்குரிய வழிமுறைகளை ஆராய்ந்து அறிந்து செயல்பட்டு வாழ்வீர்கள். இதுவரை தங்களிடம் இல்லாத நீங்கள் கடைப்பிடித்து வாழாத இதுபோன்ற குணம், செயல், மனமாற்றம் உங்களிடம் உண்டாவதை நீங்களே அறியலாம். புதிய முயற்சிகளை, புதுமையான முறையில் செய்து வெற்றியை அடைந்து பிறர் பாராட்டு, புகழை அள்ளிச் சென்றுவிடுவீர்கள். உங்கள் வாழ்க்கை உயர்வதற்கு புதிய புதிய வாய்ப்புகள் உங்களை தேடிவரும். சரியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் அறிவு, உழைப்பு திறமையின் துணைக்கொண்டு, இப்போது வாழ்வில் உயர்வை அடைந்துகொள்ளுங்கள். உயர்வான வாழ்வினை அமைத்துக்கொள்ளுங்கள். இதுபோன்று அதிர்ஷ்ட காலம் இனி 12 வருடங்கள் சென்ற பின்தான் வரும். கவனமாக இருந்து செல்வந்தராக ஆகிக்கொள்ளுங்கள். குருவின் வரவால் இதுவரை உங்கள் மனதில் இருந்த மடத்தனம் மறையும், தவறான நம்பிக்கைகள், அதனால் உண்டான தவறான குணங்கள், அந்த குணத்தினால் உண்டான தவறான செயல்கள் உங்களைவிட்டு நீங்கிவிடும். பகுத்தறிவு வாழ்க்கை உயர்வுக்கு பயன்தரும். சிந்தனைகள் கொண்டு செயல்பட்டு வாழ்வீர்கள். இனிவரும் வாழ்வில் உங்களுக்கு நன்மை, செல்வம், வெற்றியைத் தரும். குணம் செயல்களை அறிந்துகொண்டு வாழ தொடங்கிவிடுவீர்கள். அதாவது சித்தர்கள் கூறிய தன்னையழிதல் போன்ற நிலையில் உங்களை நீங்களே அறிந்துகொண்டு வாழ்வீர்கள்.

gg

பரிகார நிவர்த்தி

குருவின் அருளால் வளமும், வாழ்வில் உயர்வும் உள்ள காலம் இது, நேரம் இது. நாளைக்கு வேண்டியதை இன்றே சம்பாதித்து சேமித்துக் கொள்ளுங்கள். மழைக்காலத்திற்கு வேண்டியதை வெயில் காலத்தில் சம்பாதித்து சேமித்துக்கொள்ளுங்கள். வயது முதிர்ந்த முதுமையான காலத்திற்கு வேண்டிய செல்வத்தை சொத்து, பணத்தை இளமையிலேயே சம்பாதித்து சேமித்துக்கொள்ளுங்கள், எந்த கிரகமும் எந்த விதியும் உங்கள் வாழ்க்கையில் வசந்தம் சேர்க்கும்.

குரு + சுக்கிரன்

கோட்சார குரு, உங்கள் பிறப்பு ஜாதகத்தில் சுக்கிரன் இருக்கும் ராசிக்கு 1, 5, 9, 7, 2, 12-வது ராசிகளில் கோட்சார நிலையில் சஞ்சாரம் செய்யும் வருடங்களில் குடும்பத்தில் சுபகாரியம் சுபச்செலவு உண்டாகும். மனைவியால் பெருமை உண்டாகும். மனைவிவழி உறவுகளால் நன்மையும், நெருக்கமும் உண்டாகும். குடும்பத்திலுள்ள பெண்களால், பெண் குழந்தைகளால் படித்த பெண்களுக்கு வேலை, உத்தியோகம் அமையும். வேலையிலுள்ள பெண்களுக்கு உத்தியோக உயர்வு உண்டாகும். வருமானமும் கூடும். தொழில், உத்தியோகத்தில் இருந்துவந்த பிரச்சினை, தடைகள் நீங்கும். இதுவரை சொந்த வீடுகூட இல்லாமல் இருந்தவர்கள், புதிதாக வீடு கட்டும் அமைப்பு ஏற்பட்டு வீடு கட்டுவீர்கள். வீடுகட்ட ஆரம்பித்து தடையாகி நின்றுபோன கட்டட, வீட்டு வேலை, திருமண மண்டபம், இவற்றை முழுமையாக கட்டி முடித்து விடுவீர்கள். சொந்த வாகனம் வாங்கி, அதில் செல்லவேண்டும் என ஆசைப்பட்டவர்களின் ஆசை நிறைவேறும். வாகனம் வாங்கி விடுவீர்கள். இன்னும் சிலர் பழைய வாகனத்தை மாற்றிவிட்டு புதிய வாகனம் வாங்குவீர்கள். அவரவர் பணவசதிக்கேற்ப வாகனம் வாங்குவீர்கள். தங்க நகைகள், வாகனங் களை வாங்கி சேமிப்பீர்கள். மனைவி, குழந்தைகளுக்கு அணிவித்து மகிழ்ச்சியடைவீர்கள். வீட்டிற்கு அழகுப் பொருட்கள், ஆடம்பரப் பொருட்கள், சொகுசுப் பொருட்கள் வாங்கி வீட்டை அழகுபடுத்துவீர்கள். பொதுவாக பணவருவாய் அதிகரிக்கும். அதனால் இதுவரை ஆசைப்பட்டு அனுபவிக்காதவற்றை, அடைந்து குடும்பத்தாருடன் சேர்ந்து குருபகவான் அனுபவிக்கச் செய்துவிடுவார். இதுவரை திருமணமாகாமல் இருந்த ஆண்களுக்கு திருமணம் நடக்கும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகளால் மனைவியைப் பிரிந்து வாழ்ந்த கணவன்கள், தங்கள் தவறை உணர்ந்து, மனைவிமீது பாசம்கொண்டு மனைவியை தேடிவருவார்கள். குடும்பம் ஒன்றுசேரும். இதுவரை தன் பெற்றோர்கள், சகோதரிகள் பேச்சைக்கேட்டு மனைவியின்மீது பாசம் இல்லாமல் ஒதுக்கிவைத்த ஆண்கள் தன் குடும்பத்தாரின் புத்தியை புரிந்துகொண்டு, மனைவியை அழைத்துக்கொண்டு தனிக்குடித்தனம் அமைத்து வாழத் தொடங்குவீர்கள். கணவன்- மனைவி தனிக்குடித்தனம் சென்றபின்பு உங்கள் வாழ்வில் செல்வம், செல்வாக்கு, சொத்துகளில் உயர்வு உண்டாகும். மனைவியால் உங்களுக்கு யோகம் உண்டாகும். தனிக்குடித்தனமாக வாழும்போது மனைவி யோகம் பலன் தரும். நமக்கு விதிப்படி அமைந்துள்ள ஒவ்வொரு யோகத்தையும், நாம் அடைந்துகொள்ள அது செயல்படும் சூட்சும வழியை அறிந்து அதன்படி நடைமுறையில் செயல்பட்டு வாழ்ந்தால்தான், முமுமையாக யோகத்தின் பலனை நாம் அடையமுடியும். யோகம்- யோகத்தினை நமக்கு உண்டாக்கி வைக்கும். இன்னும் இதுபோன்று பல வழிகளில் குருபகவான் உங்கள் குடும்பத்தில் உண்டான குழப்பங்களை நீக்கி, குறைவில்லா குடும்ப மகிழ்ச்சியை அடைவீர்கள். இதுவரை குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். கட்டிய கணவனால் பெண்கள் சந்தோஷமும், சுகமும் அடைவார்கள். கலைத் துறையில் உள்ளவர்களுக்கு தொழில் உயர்வு உண்டாகி வருமானம் உயரும். இதுவரை சாதாரண நிலையில், தங்கள் திறமை வெளியில் தெரியாமல் இருந்த கலைஞர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் சந்தர்ப்பங்கள் தேடிவரும். புகழ்பெற்ற பெரிய நிறுவனங்களில் தொழில் செய்யும் நிலை உண்டாகும்.

குரு + சனி

கோட்சார குரு, உங்கள் பிறப்பு ஜாதகத்தில் சனி இருக்கும் ராசிக்கு 1, 5, 9, 7, 2, 12-ஆவது ராசிகளில் சஞ்சாரம் செய்யும் வருடங்களில், இந்த குரு, சனி இணைவு தொழில் நிலையில் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் தரும் நிலையாகும். இதுவரை பல தொழில்களை செய்து ஒரு நிலையான தொழில் அமையாதவர் களுக்கு, குருபகவான் இப்போது ஒரு நிலையான தொழிலை அமைத்து தந்துவிடுவார். வாழ்க்கையில் நிலையான பணம் வருமானத் திற்கு ஒரு வழியை உண்டாக்கிவிடுவார். புதிதாக உத்தியோகம், வேலை தேடுபவர்களுக்கு உத்தியோகம், தொழிலை தந்துவிடுவார். இதுவரை உத்தியோகம், தொழிலில் தடை, தாமதங்களால் பதவி உயர்வை அடைய முடியாமல் இருப்பவர்களுக்கு தடைகளை நீக்கி உத்தியோக உயர்வை தந்து, வருமானத்தை உயர்த்தி வைத்துவிடுவார். அறிவு, திறமை, கடின உழைப்பு இருந்தும் செய்யும் தொழிலில் உயர்விணை அடையமுடியாமல் தவித்தவர்கள் இப்போது தங்கள் உழைப்பிற்கேற்ற உயர்வினை அடைந்துவிடுவீர்கள். வருமானம் உயரும். உங்கள் திறமை வெளிப்படும் காலம். உங்களை அதிகாரம், அந்தஸ்து உள்ளவர்கள் தேடிவந்து தொழில் செய்யும் வாய்ப்பை தருவார்கள். அவர்களால் உதவியும் கிட்டும், உயர்வும் கிட்டும். இதுவரை தொழிலில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வேலையாட்களால் உண்டான சிக்கல், சிரமங்கள் நீங்கும். உங்கள் தொழிலுக்கு தேவையான கருவிகள், சாமான்களை வாங்கி தொழிலை விரிவுப்படுத்துவீர்கள். இயந்திரங்களால் விரைய செலவு வராது. வருமானம் உயர்வதால் தொழிலுக்கு வாங்கிய கடனை எல்லாம் அடைத்துவிடுவீர்கள். கடன் தொல்லை தீரும். குடும்பத்தினர், நண்பர்கள் ஆதரவு உண்டாகும். தொழிலில் பணம், வருமானம் கூடுவதால் பணத்தட்டுபாடு விலகும். குடும்பத்தில் சந்தோஷம், சுகமும் கூடும். படிப்யை முடித்துவிட்டு, படிப்பிற்கேற்ற, தகுதிக்கேற்ற உத்தியோகம், வேலை அமையவில்லை, சம்பளம் குறைவாக உள்ளது என ஏதாவது ஒரு நொண்டி சாக்கு, போக்கு கூறி வேலைக்கு போகாமல், வீட்டில் சாப்பிட்டுவிட்டு வெட்டியாக அலைந்து கொண்டிருப்பவர்கள், இந்த தவறான எண்ணத்தைவிட்டு ஏமாற்றுவதை விட்டு விட்டு குறைவான சம்பளமாக இருந்தாலும், இப்போது ஏதாவது ஒரு வேலையில் சேர்ந்து வேலைக்கு செல்ல தொடங்குங்கள். இன்னும் இரண்டு வருடத்தில் உங்கள் படிப்பு, திறமை, உழைப்புக்கு ஏற்ற சம்பளமும், பதவி உயர்வும் உண்டாகி நல்ல பதவியில் இருப்பீர்கள். இப்போது வேலையில் இருப்பவர்களும், வேலையில் சேர்பவர்களுக்கும் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்கள், உயரதிகாரிகளின் அன்பும், ஆதரவும் கிடைத்து நிர்வாக பதவியை அடைவார்கள். இப்போது நீங்கள் ஈ.டுபட்டு செய்யும் தொழில் சம்பந்தமான எல்லா செயல்களிலும் வெற்றி உண்டாகும். இந்த வெற்றியை நீங்கள் பணம், பொருள் சொத்தாக மாற்றிக்கொண்டு எதிர்கால வாழ்க்கை வளமானதாக- வசதியாக அமைய அடித்தளம் அமைத்து கொள்ளுங்கள். கையில் பணம் வரும்போதும், சேரும்போதும் கொஞ்சம் சோம்பல் குணமும், திமிரும் சேர்ந்தே வரும். அதேபோல் கொஞ்சம் முன்கோப குணமும் முன்னால் வந்து நிற்கும். இந்த குணங்களுடன் நீங்கள் வாழ ஆரம்பித்தால் இவை உங்களுக்கு வரவேண்டிய நன்மைகளை தந்துவிடும் என்பதை புரிந்துகொள்ளுங்கள். அரசியல் தலைமையில் இருந்து அடிமட்ட தொழில் செய்பவர்கள் என அனைவரையும் இந்த குரு, சனி சேர்க்கை வாழ்வில் உயர்த்தி வைத்துவிடும். குருபகவான், சனிபகவான் தரும் பணத்தையும், பதவியையும் அலட்சிய குணத்தால் இழந்துவிடாதீர்கள். புத்தியும், யுக்தியும், உழைப்பும் மட்டுமே உங்களை உயர்த்தி வைக்கும் என்பதை எப்போதும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

(தொடரும்)

செல்: 93847 66742

bala060625
இதையும் படியுங்கள்
Subscribe