குருப்பெயர்ச்சி பொதுப் பலன்கள் அனைவர்க்கும் அதிர்ஷ்டம் தருமா? சப்தரிஷி நாடி ஜோதிட விளக்கம்! -மணிமொழி சப்தரிஷி நாடி ஜோதிடர் சென்ற இதழ் தொடர்ச்சி (130625)...

/idhalgal/balajothidam/will-general-benefits-gurupeyarchi-bring-luck-everyone-saptarishi-nadi-0

குரு + ராகு

கோட்சார குரு உங்கள் பிறப்பு ஜாதகத்தில் ராகு இருக்கும் ராசிக்கு 1, 5, 9-ஆவது ராசிகளில் சஞ்சாரம் செய்யும் வருடங்களில், தீய நண்பர்களின், தீமையான குணம் கொண்டவர்களின் நட்பு உண்டாகும். உங்கள் நல்ல குணம் மாறும். இதுவரை மனதில் அடக்கி வைத்திருந்த ஆசைகளை எல்லாம் எப்படியாவது அடைந்து அனுபவித்து விடவேண்டும் என்ற ஆர்வ வெறியால் தீமையான செயல்களை துணிந்து செய்ய தொடங்கிவிடுவீர்கள். உங்கள் மனம் போன போக்கில் நன்மை- தீமையென உணர்ந்து பார்க்காமல் எதையும் செய்வீர்கள். உங்களுக்கு நல்லது- கெட்டது அறிந்து செயல்படும் நல்லறிவு இல்லாமல் போய்விடும். உங்களுக்கு நல்லதை சொல்பவர்கள் உங்கள் கண்களுக்கு எதிரியாக தெரிவார்கள்.

தீய நண்பர்களின் உறவால், தொடர்பால் சட்டத்திற்கு புறம் பான தொழிலை செய்து பணம் சம்பாதிக்க தொடங்கி விடுவீர்கள். எப்படியாவது எதை செய்தாவது வாழ்வில் உயர்வை அடையவேண்டும். நிறைய பணம் சம்பாதித்து பெரிய ஆளாக வேண்டும் என்ற எண்ணத்தில் தவறுகளை செய்வீர்கள். வெளியில் நல்லவர்கள்போல் நடித்து பணத்திற்காக கீழ்த்தரமான செயல்களைச்

குரு + ராகு

கோட்சார குரு உங்கள் பிறப்பு ஜாதகத்தில் ராகு இருக்கும் ராசிக்கு 1, 5, 9-ஆவது ராசிகளில் சஞ்சாரம் செய்யும் வருடங்களில், தீய நண்பர்களின், தீமையான குணம் கொண்டவர்களின் நட்பு உண்டாகும். உங்கள் நல்ல குணம் மாறும். இதுவரை மனதில் அடக்கி வைத்திருந்த ஆசைகளை எல்லாம் எப்படியாவது அடைந்து அனுபவித்து விடவேண்டும் என்ற ஆர்வ வெறியால் தீமையான செயல்களை துணிந்து செய்ய தொடங்கிவிடுவீர்கள். உங்கள் மனம் போன போக்கில் நன்மை- தீமையென உணர்ந்து பார்க்காமல் எதையும் செய்வீர்கள். உங்களுக்கு நல்லது- கெட்டது அறிந்து செயல்படும் நல்லறிவு இல்லாமல் போய்விடும். உங்களுக்கு நல்லதை சொல்பவர்கள் உங்கள் கண்களுக்கு எதிரியாக தெரிவார்கள்.

தீய நண்பர்களின் உறவால், தொடர்பால் சட்டத்திற்கு புறம் பான தொழிலை செய்து பணம் சம்பாதிக்க தொடங்கி விடுவீர்கள். எப்படியாவது எதை செய்தாவது வாழ்வில் உயர்வை அடையவேண்டும். நிறைய பணம் சம்பாதித்து பெரிய ஆளாக வேண்டும் என்ற எண்ணத்தில் தவறுகளை செய்வீர்கள். வெளியில் நல்லவர்கள்போல் நடித்து பணத்திற்காக கீழ்த்தரமான செயல்களைச் செய்வீர்கள், மான அவமானம் பார்க்க மாட்டீர்கள்.

guru

சிலர் சூதாட்டம், ரேஸ் என ஈடுபட்டு சொத்தை அழிப்பார்கள். இன்னும் சிலர் மந்திரம், தந்திரம், பில்லி, சூனியம் என தொழில் செய்து மற்றவர்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்க தொடங்கு வீர்கள். இன்னும் பலர் இதுபோன்ற போலி மனிதர்களிடம் சிக்கி பணத்தையும் இழப்பீர் கள். ஏமாற்றுபவர்களும் இவர்கள்தான், ஏமாறுபவர்களும் இவர்கள்தான். நல்லவர்கள் உங்களைவிட்டு விலகி விடுவார்கள். தீயவர் நட்பு, தீமையான செயல்கள் என வாழ்க்கை திசை மாறிவிடும்.

பெண்களையும் இந்த கிரக இணைவு கொஞ்சம் பாதிக்கவே செய்யும். குடும்பத்தில் கஷ்டம் தீர நல்லது நடக்கவேண்டும் என்று காளி, மாரி, துர்க்கை என கோவில் கோவிலாகவும் இரவு பூஜை அமாவாசை பூஜை, பௌர்ணமி பூஜை என அலைய வைத்துவிடும். இன்னும் சிலர் போலி நபர்கள், போலி சீட்டு கம்பெனிகளில் பணத்தை போட்டு ஏமாறுவீர்கள்.

போலி சீட்டு கம்பெனி, கள்ளநோட்டு, கஞ்சா, சாராயம் போன்ற பொருள்களை வைத்து வியாபாரம், தொழில் செய்து மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிப்பீர்கள். ஆன்மிகவாதிகள் என்ற பெயரில் குரு பீடம், மடம், அன்னதானம் என்று எதையாவது மக்களிடம் கூறி, மக்களை ஏமாற்றி பணம், பொருளை பறித்து வாழ்வீர்கள். சிலர் அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகளாக இருந்து மக்கள் பணத்தை சொத்துகளை கொள்ளையடித்து வாழ்வார்கள்.

பரிகார நிவர்த்தி

பிறப்பு ஜாதகத்தில் குரு, ராகு, இணைவு, சம்பந்தம் பெற்றிருந்தால், அவரின் வம்ச முன்னோர்கள் கால வாழ்வில், முன்னோர்கள் வசித்த வீட்டிலேயே ஒரு துர்மரணம் நடந்திருக்கும். குடும்பத்தில் பாதிக்கப்பட்டு துர்மரணம் அடைந்த ஆத்மாவின் கோபதாக்கம் இப்போது செயல்பட்டு, கண்டம், கஷ்டம், பிரச்சினைகளை உருவாக்கி அனுபவிக்கச் செய்யும். இதற்கு முறையான நிவர்த்திகளைச் செய்து பாதிக்கப்பட்ட ஆத்மாவின் கோபத்தை சாந்தி செய்து கொள்ளவேண்டும்.

குரு + கேது

கோட்சார குரு உங்கள் ராசிக்கு பிறப்பு ஜாதகத்தில் கேது இருக்கும் ராசிக்கு 1, 5, 9-ஆவது ராசிகளில் கோட்சார நிலையில் சஞ்சாரம் செய்யும் காலங்களில், இந்த குரு, கேது இணைவால் மனதில் குழப்பம் உண்டாகும். சரீர நலன் கெடும். உலக வாழ்வில் உற்சாகமாக ஈடுபட்டு செயல்பட மனம் ஒத்துழைக்காது. நீங்கள் ஈடுபட்டு செய்யும் காரியங்களில் தடை, தாமதங்கள் உண்டாகிவிடும். உங்கள் எண்ணம்போல் எதுவும் நடக்காது. நீங்கள் எதிர்பார்ப்பதுபோல் காரியம் சட்டென முடியாது; இழுக்கும். உங்கள் உழைப்பு, அறிவு, திறமை, சொத்து, பணம் இவற்றை பிறர் அனுபவித்து விடுவார்கள். உங்களை அனுபவிக்க முடியாமல் செய்துவிடும். தொழில், வியாபாரத்தில் தடைகளைத் தந்து வருமானத்தைக் குறைத்துவிடும். மனதில் விரக்தி நிலையை உண்டாக்கி வைத்துவிடும்.

சிலர் அனைத்தையும் இழந்து பிறர் தயவில் வாழ நேரிடும். பிறர் ஆதரவு பெரிதாக இராது. இதுவரை உங்களால் நன்மைகள், உதவிகள் அடைத்து வாழ்வில் உயர்வை அடைந்த நண்பர்களும், உறவினர்களும் நன்றி கெட்டவர்களாய் நடந்துகொள்வார்கள். உதவி பெற்றவர்கள் உங்களைவிட்டு ஒதுங்கிவிடுவார்கள். சொன்ன வாக்கை காப்பாற்ற முடியாத சூழ்நிலை வாயைவிட்டு எதைச் சொன்னாலும் அந்த காரியத்தை செய்ய முடியாத நிலை உருவாகி விடும். குடும்பம், குழந்தைகளுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்ய முடியாமல் போய்விடும். கும்பலுக்குள் சென்றாலும், விசேஷ நிகழ்ச்சிகளுக்கு சென்றாலும், அந்த மகிழ்ச்சியில் ஈடுபட மனம் இராது. உண்ணும் உணவு, உறங்கும் உறக்கம் குறையும்.

சிலர் வாழ்க்கையில் இப்போது உண்டாகும் சிரமம், தடை பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள பரிகாரம் செய்கின்றேன் என்று கூறி பணத்தை விரையம் செய்து அழிப்பார்கள். இன்னும் சிலர் கோவில், கோவிலாக அலைந்து கொண்டிருப்பார்கள். இன்னும் சிலர் புண்ணிய நதி, தீர்த்தம் சென்று குளித்துவிட்டு வருவார்கள். குரு, மகான், பீடம் சித்தர்களின் ஜீவபீடம் என அலைந்து கொண்டிருப்பார்கள். மனதிற்கு நிம்மதி தேடி மலை மலையாக ஏறி இறங்கி வருவார்கள். இன்னும் சிலர் மந்திரவாதிகளை நம்பிக் கொண்டு அவர்களை நாடி ஓடுவார்கள்.

இந்த குரு, கேது இணைவு காலத்தில் எதை செய்தாலும் பலன் அளிக்காது. பரிகாரம் பலன் தராது. பணம்தான் செலவாகும். வழிபாடுகளால் வாழ்க்கை பிரச்சினைகள் தீராது. வேண்டுதல் பலிக்காது, எதைச் செய்தாலும், எவ்வளவு பணம் செலவு செய்தாலும் நன்மையான பலன்கள் கிடைக்காது. இப்போது உங்கள் கையில் உள்ள சொத்து, பணத்தை கவனமாக காப்பாற்றிக்கொள்ளுங்கள். கருத்தும் கவனமும் மட்டுமே உங்களைக் காப்பாற்றும்.

செல்: 93847 66742

bala130625
இதையும் படியுங்கள்
Subscribe