பல வீடுகளில் பெண்கள் அதிக கோபம் கொண்டவர் களாகவும், ஆவேசத்துடன் செயல்படக் கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். அதனால் கணவர்கள் பல துன்பங்களை அனுபவிக்கிறார்கள். சில மனைவிகள் கணவர்களை அடிக் கக்கூட செய்கிறார்கள். பெண்கள் இவ்வாறு இருப்பதற்குக் காரணமென்ன?
ஒரு ஆண் ஜாதகத்தில் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கைக்கு 2-ஆம் பாவமும், 2-ஆம் பாவத்திலுள்ள கிரகங்களும், அதைப் பார்க்கும் கிரகங்களும்தான் காரணம்.
ஒருவருக்கு வரக்கூடிய மனைவி கோப குணம் கொண்ட வளாகவும், சண்டைபோடக் கூடியவளாகவும், வீட்டிலிருக்கும் பொருட்களை வீசியெறியக் கூடியவளாகவும் இருப்பதற்குக் காரணம்- ஆணின் ஜாதகத்திலிருக்கும் 7-ஆவது பாவமும், 7-ஆம் பாவத்திற்கு அதிபதியும், 7-ஆவது பாவத்திலிருக்கும் கிரகங்களும்தான்.
ஒரு ஆண் ஜாதகத்தில் 2-ஆவது பாவத்தில் செவ்வாய், சூரியன், சனி இருந்தால், அவருக்கு வரும் மனைவி கோபகுணம் கொண்டவளாக இருப்பாள். சரியாக சமைக்கமாட்டாள். தேவையில்லாமல் சண்டை போடுவாள். சில மனைவிகள் கணவரின் சரீரத்தில் காயத்தை உண்டாக்குவார்கள்.
லக்னத்தில் சூரியன், 2-ல் சனி, கேது இருக்க, சுக்கிரன் நீசமாக இருந்தால், ஜாதகரின் மனைவி எப்போதும் சண்டை போடுவாள். உடலுறவு விஷயத்தில் கணவனுக்கு ஒத்துழைக்க மாட்டாள். நகத்தால் கணவனை காயப் படுத்துவாள். கணவன்மீது பொருட்களை வீசியெறிவாள்.
8-ல் சுக்கிரன், செவ்வாய், சனி இருந்தால், ஜாதகருக்கு மனைவியுடன் உறவு சரியாக இருக்காது. இருவரும் இரவில் தனித்தனியாகப் படுப் பார்கள். கணவர் அருகில் இருக் கும்போது, அவரைத் தாக்குவாள். இருவருக்கு மிடையே அடிக்கடி விவாதங்கள் நடக்கும்.
ஒரு ஆண் ஜாதகத்தில் 2-ல் ராகு, சனி, சுக்கிரன் இருந்து, 7-ல் பலவீன சந்திரன் இருந்தால், மனைவிக்கு கணவன்மீது நம்பிக்கை இருக்காது.
அவரை கடுமையான வார்த்தை களால் திட்டுவாள். இருவருக்கு மிடையே அடிக்கடி சண்டை நடக்கும்.
4-ல் செவ்வாய், சனி இருந்து, 7-ல் ராகு இருந்தால் ஜாதகருக்குத் திருமணத்தடை இருக்கும். திருமணம் நடந் திருந்தால், வரும் மனைவி யாரையும் மதிக்கமாட்டாள். வீட்டில் யாருடனும் பழக மாட்டாள். அடிக்கடி சண்டை நடக்கும். சிலர் மனைவியை விட்டு விலகி வாழவேண்டிய சூழ்நிலை உண்டாகும்.
ஒரு ஜாதகத்தில் 7-ல் குரு, 8-ல் சூரியன்- சனி, 12-ல் செவ் வாய் இருந்தால், அவருக்கும் அவருடைய மனைவிக்கு மிடையே கருத்து வேறுபாடு இருக்கும். வீட்டில் மனைவி யாரையும் மதிக்கமாட்டாள். மாமனாருடன் சண்டை போடுவாள். அதன்காரணமாக கணவர் பிரிந்துவிடலாம் என்று நினைப்பார்.
லக்னத்தில் கேது, 4-ல் சூரியன், 7-ல் செவ்வாய் இருந்தால், ஜாதகருக்கும் மனைவிக்குமிடையே எப்போதும் சண்டை நடக்கும். சிலர் மனைவியைவிட்டுப் பிரிந்து விடுவார்கள்.
4-ல் கேது, 7-ல் செவ்வாய், 10-ல் சனி இருந் தால் ஜாதகர் தேவையற்றதைப் பேசுவார். அதன் காரணமாக அவருடைய மனைவி சண்டை போடுவாள். ஒருவரையொருவர் பிரிந்து வாழும் சூழல்கூட உண்டாகும்.
லக்னத்தில் நீசச், செவ்வாய், 4-ல் நீச சூரியன், 7-ல் சனி இருந்தால், ஜாதகருக்கு இரண்டா வதாகவும் ஒரு திருமணம் நடக்க வாய்ப்பிருக் கிறது. அவர் வீண் செலவுகள் செய்வார். அதனால் கடன் உண்டாகும். அதனால் அவருக்கும் மனைவிக்குமிடையே உறவு பாதிக்கப்படும். மனைவியால் காயம் உண்டாகும்.
லக்னத்தில் செவ்வாய், 3-ல் நீசச் சந்திரன், 7-ல் சனி இருந்தால், ஜாதகர் அவசியமற்ற விஷயங் களைப் பேசுவார். அதனால் மனைவியுடன் சண்டை ஏற்படும்.
7-ல் சனி, 8-ல் ராகு, 9-ல் சூரியன் இருந்தால், ஜாதகர் சில தவறுகளைச் செய்ய, அதை மனைவி தெரிந்துகொள்வாள். அதனால் சண்டை உண்டாகும்.
3-ல் சுக்கிரன், ராகு, 4-ல் சூரியன், 9-ல் சனி, 8-ல் செவ்வாய் இருந்தால், அவருக்கு மனைவியுடன் சண்டை நடக்கும். மாரகாதிபதி தசை நடந் தால், மனைவியுடன் மிகப்பெரிய பிரச்சினை உண்டாகும். பணக்கஷ்டம் இருக்கும்.
ஒரு வீட்டின் படுக்கையறையின் தெற்கு திசை யில் முகம் பார்க்கும் கண்ணாடி இருந்தால், அந்த வீட்டில் எப்போதும் சண்டை நடக்கும்.
சமையலறை மேடை தெற்கு மத்தியப் பகுதியில் இருந்து, சமையல் செய்யும் மனைவி தெற்கு திசையைப் பார்த்து சமைத்தால், அந்த வீட்டில் எப்போதும் சண்டை இருக்கும்.
பரிகாரங்கள்
தினமும் சிவனுக்கு பால், நீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யவேண்டும். "நமசிவாய' மந்திரத்தைக் கூறவேண்டும்.
கருப்பு நிற ஆடையைத் தவிர்க்கவும்.
தினமும் முன்னோர்களை வழிபடுவது சிறப்பு. படுக்கையறையின் தெற்கு திசையிலும், வடமேற்கிலும் முகம் பார்க்கும் கண்ணாடி இருந்தால் அகற்றிவிடவும்.
சமையலறையின் மேடை சூரியனைப் பார்க்கும்படி இருக்கவேண்டும்.
தென்கிழக்கில் நீர்த்தொட்டி இருக்கக் கூடாது.
வீட்டின் பிரதான வாசல் நீச வாசலாக இருக்கக்கூடாது. அதுவும் தென்கிழக்கில் இருக்கக்கூடாது. தென்மேற்கு திசையிலும் இருக்கக்கூடாது.
வெள்ளிக்கிழமை விரதமிருக்க வேண்டும். துர்க்கை ஆலயத்திற்குச் சென்று, தீபமேற்றி, சிவப்பு மலரால் அர்ச்சிப்பது நன்மை தரும்.
செல்: 98401 11534