எதிர்பாராத பண இழப்பு எதனால்? -மகேஷ் வர்மா

/idhalgal/balajothidam/why-unexpected-cash-loss

ருவர் பொருளாதாரரீதியாக வீழ்ச்சியைச் சந்திப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றுள் முக்கியமானது அவரின் ஜாதகத்திலிருக்கும் 2-ஆம் பாவமும், 11-ஆம் பாவமும் சரியில்லாமல் இருப்பது. அதன் காரணமாக அவருக்குப் பண விஷயத்தில் மிகப்பெரிய வீழ்ச்சி உண்டாகும்.

bb

அதிலும் முக்கியமானது ஏழரை நாட்டுச்சனி நடக்கும்போது, சனி தசையில் செவ்வாய் புக்தி அல்லது சனி தசையில் சந்திர புக்தி நடந்தால், அவருக்கு பணவிஷயத்தில் மிகப்பெரிய வீழ்ச்சியுண்டாகும். அதேபோல நடக்கும் தசையின் அதிபதியும், அந்தர தசையின் அதிபதி யும் 6, 8, 12-ல் இருந்தால், அவருக்கு திடீரென்று பொருளாதார வீழ்ச்சி உண்டாகும்.

அஷ்டமச்சனி நடக்கும்பொழுது குரு பகவான் கோட்சாரத்தில் சரியில்லாமல் இருந்தால், அந்த ஜாதகர் வசித்துக்கொண்டிருக்கும் வீட்டைவிட்டே வெளியேறவேண்டிய நிலைமை உண்டாகும்.

ஒருவருக்கு 8-ஆம் அதிபதியின் தசை நடக்கும்போது, 6-ஆம் அதிபதி அல்லது 11-க்கு அதிபதியின் அந்தர தசை நடந்தால், அவருக்கு எதிர்பாராத வீண்செலவுகள் உண்டாகும். சிலருக்கு கடுமையான நோய்கள் வந்துசேரும். அதனால் பணக் கஷ்டம் உண்டாகும்.

ஜாதகத்

ஜாதகத்தில் சந்திரன் நீசமாக இருந்து, ராகு பகவான் 8-ல் இருந்தால், அவருக்கு திடீரென பணக் கஷ்டம் உண்டாகும்.

ஜாதகத்தில் சுக்கிரன் நீசமாக இருந்தால் அல்லது அஸ்தமனமாக இருந்தால், அவருக்கு சுக்கிர தசை நடக்கும்பொழுது சுக்கிர தசையில் சனி புக்தி, சூரிய புக்தி, செவ்வாய் புக்தி கடுமையாக இருக்கும். அப்பொழுது அவருக்கு பெரியளவில் பொருளாதார வீழ்ச்சி உண்டாகும்.

சுக்கிரன் 6 அல்லது 8-க்கு அதிபதியாக இருந்து, சுக்கிர தசை நடந்தால், அவருக்கு அப்பொழுது நோயின் பாதிப்பு உண்டாக வாய்ப்பிருக்கிறது. சுக்கிர தசை நடக்கும்பொழுது ஜாதகருக்கு ஏழரை நாட்டுச் சனி அல்லது அஷ்டமச் சனி நடந்தால், அவர் பொருளாதாரத்தில் மிகப் பெரிய வீழ்ச்சியைச் சந்திப்பார்.

ஒருவருக்கு பாவகிரகத்தின் தசை நடக்கும்பொழுது, இன்னொரு பாவகிரகத்தின் அந்தரம் நடக்கும்பொழுது, அந்த பாவகிரகம் 6, 8, 12-ல் இருந்தால், அவருக்கு எதிர்பாராத செலவுகள் வந்துசேரும். ஏதாவது விபத்து நடப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. பணக் கஷ்டம் பெரியளவில் உண்டாகும்.

ஜாதகத்தில் 12-ல் செவ்வாய், சனி இருந்தால், அந்த ஜாதகருக்கு சனி தசையில் குரு புக்தி அல்லது குரு தசையில் சனி புக்தி வரும்போது, அவருடைய நண்பர்கள் அவருக்குப் பணக் கஷ்டத்தை உண்டாக்குவார்கள்.

ஜாதகத்தில் சூரிய பகவான் 4-ல் இருந்து, அந்த சூரியனை 7-ல் இருக்கும் சனி பகவான் தன்னுடைய 10-ஆவது பார்வையால் பார்ப்பார். அதனால், அந்த ஜாதகர் கடுமையான உழைப்பாளியாக இருந்தாலும், பண விஷயத்தில் பிரச்சினைகள் உண்டாகும். கடன் தொல்லைகள் உண்டாகும். உடல்நலம் கெடும். இதயத்தில் பிரச்சினை வருவதற்கு வாய்ப்பிருக்கிறது.

ஜாதகத்தில் சுக்கிரன் தன் வீட்டிலிருந் தாலும், உச்சமாக இருந்தாலும், சனி பகவான் சுயவீட்டிலோ, உச்சத்திலோ இருந்து, அந்த ஜாதகருக்கு சுக்கிர தசையில் சனி புக்தி நடந்தால், அவர் அரசக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், கடன் வாங்கவேண்டிய சூழல் உண்டாகும். பணக் கஷ்டத்தில் சிக்கி சிரமப்படுவார்.

சுக்கிரன் 2-ல், சனி பகவான் 6-ல் இருக்கும் ஜாதகருக்கு சுக்கிர தசை நடக்கும்பொழுது சனி அந்தரம் வந்தால், அவருக்குப் பெரியளவில் பணக் கஷ்டம் உண்டாகும்.

ஒருவர் பிறக்கும்பொழுது சந்திரன் 11-ல் இருந்து, அந்த ஜாதகத்தில் சனி பகவான் லக்னத்திலிருந்து 6-ல் இருந்தால், அவருக்கு அஷ்டமச்சனி நடக்கும்பொழுது பெரியளவில் பணக்கஷ்டம் உண்டாகும்.

சூரிய பகவான் 9-ல் புதனுடன் இருந்து, அந்த ஜாதகத்தில் சனி பகவான் 3 அல்லது 7-ல் இருந்தால், அவருக்குப் பணவிஷயத்தில் பெரியளவில் பாதிப்புண்டாகும்.

ஜாதகத்தில் பாதகாதிபதி கிரகம் உச்சமாக இருப்பவருக்குப் பணக் கஷ்டம் ஏற்படும்.

வீட்டின் பிரதான வாசல் நீசமாக இருப்ப வருக்கு எதிர்பாராத பொருளா தாரப் பாதிப்புண்டாகும்.

வீட்டின் பிரதான வாசல் தென்மேற்கில் இருந்து, அந்த வீட்டின் அதிபதி வீட்டின் வடகிழக்கில் படுத்தால், அவருக்கு ராகு தசை அல்லது சூரிய தசை நடக்கும்பொழுது பெரியளவில் பணக் கஷ்டம் உண்டாகும்.

வீட்டின் தென்மேற்கு திசை காலியாக இருந்து, அந்த வீட்டின் வடகிழக்கில் காற்று வரக்கூடிய வசதி இல்லாமலிருந்தால், அங்கிருப்பவருக்குப் பணக் கஷ்டம் ஏற்படும்.

வீட்டின் தென்மேற்கு, வடகிழக்கு திசை களில் கழிவறை அல்லது குளியலறை இருந்தால், அங்கிருப்பவருக்கு பித்ரு தோஷம் உண்டாகும். அதனால், எதிர்பாராத பொருளாதார வீழ்ச்சியுண்டாகும். நோய் வருவதற்கும் வாய்ப்பிருக்கிறது.

பணப் பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்கு இந்தப் பரிகாரங்களைச் செய்யவேண்டும்...

தினமும் காலையில் கண்விழித்தவுடன் இரு உள்ளங்கைகளையும் சேர்த்துவைத்து, அதில் லட்சுமி, சரஸ்வதி, விஷ்ணு ஆகிய கடவுள்களைப் பார்க்கவேண்டும். எழுந்து பூமியில் கால்வைத்து பூமாதேவியை வணங்கவேண்டும். "ஓம் பூமாதேவியே நமஹ' என்னும் மந்திரத்தைக் கூறவேண்டும்.

முன்னோர்களை வணங்கவேண்டும்.

குலதெய்வத்தை வழிபடவேண்டும்.

சூரியனுக்கு நீர் விடவேண்டும். நீரில் குங்குமத்தைச் சேர்த்திருக்க வேண்டும். அதைச் செய்யும்போது "ஓம் சூரிய நாராயணாய நமஹ' என்னும் மந்திரத்தையோ, காயத்ரி மந்திரத்தையோ கூறவேண்டும்.

வீட்டின் வடகிழக்கைச் சுத்தமாக வைத்திருக்கவேண்டும்.

குரு அல்லது பெரியவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெறவேண்டும்.

திங்கட்கிழமையிலிருந்து சனிக்கிழமை வரை அரச மரத்திற்கு நீர்விடவேண்டும். சனிக்கிழமை மாலையில் அங்கு ஒரு தீபமேற்றி வைக்கவேண்டும்.

ஞாயிற்றுக்கிழமை சூரியன் மறைந்தபிறகு, பைரவர் ஆலயத்திற்குச் சென்று தீபமேற்றவேண்டும்.

கறுப்பு நிற ஆடையை அணியக்கூடாது.

தன் லக்னாதிபதி, 9-க்கு அதிபதியின் ரத்தினத்தை அணியவேண்டும்.

செல்: 98401 11534

bala140820
இதையும் படியுங்கள்
Subscribe